Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.

"அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.

நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?

நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார்.

அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.

சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.

வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.

ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.

அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.

கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...

அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.

அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான். உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்!

அம்புலிமாமா

எல்லாம் பார்ப்பவனின் கண்களில் தான் உள்ளது. இணைப்புக்கு நன்றி.

'Beauty is in the eye of the beholder'

Beauty is in the eye of the beholder means that different people will find different things beautiful and that the differences of opinion don't matter greatly.

கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...

அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.

இதபோயி ஒரு கதை என்று எழுதிய அம்புலி மாமா காரன என்ன பண்ணலாம்?

வாசிக்கவே மனசு நோகுதே!

இந்த நாதாரிக்கு பேர் எழுத்தாளாராம்!

பைதவே உடையாரண்ணா............ மறுபடியும் தப்பு பண்ணிட்டீங்களே...............

இது கதை கதையாம் பகுதில வந்திருக்கணுமா? இல்லியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...

அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிருவனைப் பார்த்துக் கேட்டான்.

இதபோயி ஒரு கதை என்று எழுதிய அம்புலி மாமா காரன என்ன பண்ணலாம்?

வாசிக்கவே மனசு நோகுதே!

இந்த நாதாரிக்கு பேர் எழுத்தாளாராம்!

பைதவே உடையாரண்ணா............ மறுபடியும் தப்பு பண்ணிட்டீங்களே...............

இது கதை கதையாம் பகுதில வந்திருக்கணுமா? இல்லியா?

அறிவிலி நன்றி சுட்டிக் காட்டியதிற்கு, next time....

பைதவே நீங்க Auditing Department லா வேலை. அந்த மாதிரி கண்டுபிடிக்கிறிங்க

அறிவிலி நன்றி சுட்டிக் காட்டியதிற்கு, next time....

பைதவே நீங்க Auditing Department லா வேலை. அந்த மாதிரி கண்டுபிடிக்கிறிங்க

இத கண்டுபுடிக்க ஸ்காட்லாந்து போலீசா வரும்?

நீங்க படித்தவர்ன்னு எல்லாருக்குமே தெரியும்...ஆனா பதிவு செய்யும்போதுதான் ... சின்ன குழப்பம் உங்களுக்கு வருது!

அத சுட்டிகாட்டினேன்! தப்பா? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அத சுட்டிகாட்டினேன்! தப்பா? :(

நான் தப்பா நினைக்கவில்ல சும்மாதான் கேட்டனான், குறைநினைக்க வேண்டாம், அவசரத்தில் மாறி இனைத்துவிட்டேன்,

நீங்க ஒரு முடிவேடதான் களத்தில் இறங்கியிருக்கிறீங்க,

ஏன் எப்பும் ஸ்காட்லாந்து போலீசா இழுக்கிறிங்க, எனக்கு Police கண்டாலே பிடிக்கா, இங்கு Speed Camera உடன் வழியில் நின்றால், மற்ற பக்கதில் இருந்து வருகிறவர்களுக்கு headlight போட்டு காட்டுவது வழக்கம், Police car வந்த அவை பின்னால் சும்மா அதே speed போறது வழக்கம், எல்லாம் Sri Lankan Police ஆல் வந்த விணை, எங்க போனாலும் அந்த வெறுப்பு வந்து கொண்டே இருக்கு,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.