Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம்

Featured Replies

நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம்: சிறப்புத்தளபதி நகுலன்

சிறிலங்காவின் அனைத்து படைப்பலத்தையும் வெல்லக்கூடிய சக்திவாய்ந்த படைக்கட்டமைப்புக் கொண்ட நவீன புலிகளாக இன்று உருவெடுத்துள்ளோம் என சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதி நகுலன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான இராணுவப் பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

அன்புக்குரிய மக்களே, நாங்கள் கடந்தகால வரலாறுகளை மறந்துவிட முடியாது எங்களுடைய விடுதலைப் போராட்டத்தையும், எங்களுடைய உண்மையான நிலைப்பாடுகளையும் சர்வதேச சமூகம் எங்களுக்கு முன்னால் வந்து நின்று கொண்டு நீதியாக தீர்க்குமென்று இனியும் கனவு காணமுடியாது.

ஏனெனில் மன்னார்ப் பகுதியில் ஒரு சிறுவனுடன் குடும்பத்திற்கு நடந்த கதியும், யாழ்ப்பாணத்தில் குறுகிய நாட்களுக்குள் அந்த கோரச் சம்பவங்களை கூட தட்டிக்கேட்காத சர்வதேச சமூகம் எமது முழுப்பிரச்சினையில் எவ்வாறு தீர்வுகாணும்? இவ்வாறு நாளுக்கு நாள் எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடுமைகளை நாங்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டியவர்களாக இன்றைய கால கட்டத்தில் உள்ளோம்.

உங்களுக்குத் தெரியும் இந்த கிளிநொச்சி மண்ணை மீட்டெடுப்பதற்காக எமது போராளிகள் கொடுத்த உயிர் தியாகங்களும் சிந்திய குருதியும் தான் இன்று நாங்கள் இந்த இடத்தில் நின்று கதைக்கக்கூடிய நிலை உருவாக்கியது.

அனால் இன்று இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் ஒவ்வொரு நாள் பொழுதுகளும் நிம்மதியாக இல்லை. இன்று உயிருடன் இருப்பானா? நாளைக்கு இருப்பானா? நாளைக்கு சூரிய உதயத்தை பார்ப்பானோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இன்று மக்கள் படையாக பயிற்சி எடுக்க வந்திருக்கும் உங்களிடம் நாங்கள் கேட்பது உங்களின் இராணுவப் பயிற்சியின் ஊடாக நீங்கள் அனைவரும் நாங்கள் பாதுகாத்து நின்ற நீண்ட கிலோமீற்றர் தூரத்தை நீங்கள் வந்து காத்து நிற்பீர்களா இருந்தால் நாங்கள் அதற்கு அப்பால் போய் எமது மண்ணில் தரித்து நிற்கும் சிங்கள காடையரை சுக்குநூறாக்கி எமது தாயகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு காடையருக்கும் சமாதியைக் கட்டுவோம்.

நீங்கள் எங்கள் தலைவரையும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். எங்களுடைய தலைவரை வென்று விட வேண்டும் என்பதற்காகவும் அழித்துவிட வேண்டுமென்பதற்காகவும் முயற்சித்தவர்கள். தங்களுடைய இறுதிக்காலத்தில் தமது இயலாமையால் எமது தலைவரைப் புகழ்ந்த வரலாறுகள் உண்டு. இதற்கு இந்தியா கூட விதிவிலக்கல்ல இந்தியாவின் டிக்சிட் தொடக்கம் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் ரத்வத்தை கூட எமது தலைவரை புகழ்பவர்களாகத்தான் உள்ளார்கள். ஏனெனில் தலைவர் தனது மதிநுட்பமான செயற்பாடுகளால் சிறிலங்கா இராணுவத்திற்கும் சர்வதேசத்திற்கும் தகுந்த பதிலலைக் கொடுத்தார்.

இன்று சிறிலங்கா இராணுவமோ சிறிலங்கா அரசோ விடுதலைப் புலிகளை கடந்த காலப் புலிகளாக கருதுபவர்களாக இருந்தால் அது அவர்களுக்குரிய சாவு மணியாகத்தான் இருக்கும். இந்த 2006 ஆம் ஆண்டிலே நவீன புலிகளால் எந்த ஒரு சிறிலங்கா படைப்பலத்தையும் வெல்லக்கூடிய சக்தி வாய்ந்த படைக்கட்டமைப்பைக் கொண்ட நவீன புலிகளாக நாங்கள் இன்று உருவெடுத்துள்ளோம். இன்று எமது மண்ணில் இருக்கின்ற சிங்களப் படைகளை அழித்தொழிப்பதற்கான அந்த நாட்களை மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருக்கின்றோம்.

எனவே இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள அப்பான எமது தாயக உறவுகளே, நீங்கள் அனைவரும் குறிப்பிட்ட காலத்திற்குள் பாதுகாப்பான எமது பகுதிக்குள் வந்து அந்த மண்ணை நீங்கள் வீடுவிப்பீர்களாக இருந்தால் நாங்கள் குறுகிய காலத்திற்குள் அவற்றை மீட்டெடுத்து தரக்கூடிய ஏது நிலையை ஏற்படுத்தித்தர வேண்டுமென நாங்கள் இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏனெனில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் தன்னுடைய இறுதிக்கால கட்டத்திலே தனது ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் பயன்படுத்தி தமது தாயக மண்ணில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுவதற்கான ஒரு இறுதிக்கட்டப் போராட்டத்திற்கு தயாராகுகின்ற போது அனைத்து மக்களும் அங்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இவை அனைத்தையும் தலைமை தாங்கி எந்த ஒரு சவாலையும் எதிர்கொண்டு எந்தப் படையையும் வெல்லக்கூடிய எமது தலைவருடைய படைப்பலத்திற்கு நீங்களும் தோள் கொடுப்பீர்களாக மாறுவீர்களாக இருந்தால் எமது இறுதிப் போராட்டத்தின் அந்த உச்ச கட்ட நடவடிக்கை மூலம் நாங்கள் எமது பகுதிகளில் உள்ள சிங்களக் காடையரை வெளியேற்றி எமது மண்ணில் நாங்கள் சுதந்திரமாக வாழ வழிசமைக்க முடியும் எனவும் நகுலன் தெரிவித்தார்.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் ஆயுதப்பயிற்சி பெறுவது- தேசக் கடமை: கா.வே.பாலகுமாரன்

தமிழீழ மக்கள் ஆயுதப் பயிற்சி பெறுவது என்பது ஒரு தேசக் கடமை, அரசியல் கடமை என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மற்றும் தாயகத்தின் ஏனை பகுதிகளில் பொதுமக்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பயிற்சியை தொடங்கி வைத்து விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய சிறப்புரை:

மிகத் தெளிவாக அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தலைவர் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அன்று கடற்கரைச்சேனையில் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் கடைசியாக கூறினார்கள்... ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டியதுதான்.. யோசிக்க என்ன இருக்கிறது? சாவுக்குள் எமது வாழ்வை நாங்கள் நுழைத்துவிட வேண்டும் என்று.

வீழ்ந்தால் எமது சாவு வீரச்சாவாக இருக்க வேண்டும். களச்சாவாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் அறைகூவல் விடுத்தனர். இன்று நாம் இங்கே கூடியிருப்பதன் பிரதான நோக்கம் எங்களுடைய சாவை நாங்கள் தடுக்க வேண்டும். எங்களுடைய சாவை நாங்கள் தடுக்காமல் யார் தடுப்பது?

எங்களுடைய தேசத்தை, எங்களுடைய உயிரை, எங்களுடைய வாழ்வை, எங்களுடைய வளத்தை நாங்கள் தான் தடுக்க வேண்டும். உங்களுக்காகவே ஒரு காலகட்டத்திலே ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மக்கள் படை என்ற கட்டுமாணத்தினுடைய அடிப்படை நாடாக விளங்கும் வியட்நாமிலே அதனுடைய முன்னாள் தலைவர் சியாம் அவர்கள் கூறுவார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு அடிப்படை ஆயுதப் போராட்டம். அதற்கு அடிப்படை போராளிகள். அவர்களுக்கு அடிப்படை மக்கள். அன்று அவர்கள் அங்கே நிரந்தரப் படை, குடிப்படை, பிரதேசப்படை, தற்காப்புப்படை என்று பலவிதமான படைகளை மக்களுக்கு ஊடாக உருவாக்கிக் காட்டினார்கள்.

ஒரு கட்டத்தில் பொதுமக்களுக்கு போர்க்கலை கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள். போர் தொடர்பான அறிவும் ஆயுதங்களை கையாளும் ஆற்றலும் இறுதியில் பொதுமக்களிடம் தஞ்சம் புக வேண்டும் என்று சியாம் கூறினார். அதனால் தான் ஆனானப்பட்ட பத்து லட்சம் படையைக் கொண்ட அமெரிக்காவை தூசியென தூக்கியெறிந்தார்கள்.

இன்று நாங்கள், உலகம் என்று கூறும் போது நீங்கள் யோசிக்கலாம் யார் இங்கே இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது. இங்கே நாம் நடக்கிற ஒவ்வொரு நிமிடமும் உலகத்தின் கண்களுக்கு சென்று கொண்டே இருக்கின்றது. செய்மதிக்கு ஊடாகக் கூட எங்களுடைய இந்த நடமாட்டங்கள் யாவும் உலகத்தினுடைய தலைமைச் செயலகங்களுக்கு போய்க் கொண்டிருக்கின்றன.

இன்று என்றும் இல்லாத அளவுக்கு உலகத்தினுடைய பார்வை எங்கள் மீது இருக்கிறது. கிளிநொச்சி மண்ணிலே நீங்கள் கூடிநின்று கை உயர்த்திக் கூறிய அந்தக்குரல் உலகத்தின் கடைசி குடிமகனின் செவிவரைக்கும் எட்டும்.

நீங்கள் இங்கே சும்மா கூடி நிற்கவில்லை. ஒரு தேசத்தினுடைய குரலாக கூடுவதற்கு கிளிநொச்சி மண்ணுக்கு ஒரு வாய்ப்பு வாய்த்திருக்கிறது. ஒரு பெரிய அற்புதமான காலம் கனிந்திருக்கிறது. நாங்கள் 97-களில் பயிற்சியை ஆரம்பித்த போது, கிளிநொச்சி மண் எமது கட்டுப்பாட்டில் இல்லை.

இன்று இந்த ஏ௯ பிரதான வீதிக்கு ஊடாக நாங்கள் பயிற்சி எடுத்து ஓடும் போது இந்த உலகம் பார்க்கப் போகின்றது. தன்னுடைய கடைசி வாய்ப்பை இழந்துவிட்டோம் என்பது உலகத்திற்கு தெரியப் போகின்றது.

இன்று நாங்கள் இந்த இடத்தில் கூடி எங்களுடைய சாவை தடுப்பதற்காக நாங்கள் தற்காப்புப்பயிற்சி எடுக்கிறோம். எங்களை கொல்ல எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவோ, அதே ஆயுதங்களை நாம் கைகளில் ஏந்தி எங்களை காக்கப்போகின்றோம்.

எந்த சாதாரண சிங்கள பொதுமகன் பயிற்சி எடுத்து இராணுவமாக மாறி எங்களைக் கொன்றானோ, அதே இராணுவத்தை நாங்கள் எதிர்கொள்ளப் போக்றோம். இன்று நாங்கள் விடுதலைப் போரிலே எழுச்சியும், முதிர்ச்சியும் பெற்று எங்களுடைய சிக்கலை நாங்களே கையாள தயாராகிவிட்டோம். அதுதான் இன்றைய கிளிநொச்சி பயிற்சி ஊடாக உலகத்திற்கு நாங்கள் கூறவுள்ள செய்தியாக இருக்கின்றது.

நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். இன்று உள்ள நிலமை என்னவெனில், மிகத் தெளிவாக நாங்கள் கூறுகிறோம். கடைசி வாய்ப்பைக் கூட நாங்கள் இப்போது வழங்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்த வாய்ப்பு என்பது எங்களுடைய பலத்தின் அடிப்படையில், எங்களை தயார்படுத்தலின் அடிப்படையில் நாங்கள் செய்ய வேண்டியதாக உள்ளது.

போரைத் தடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சாவைத் தடுக்க நீங்கள் விரும்பினால் போர் செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும். போர் செய்ய ஆயத்தமானால்தான் போரைக்கூட தடுத்திட முடியும். போர் வந்தாலும் தடுத்திட முடியும். இந்த முடிவை இந்த தேசம் எடுத்துவிட்டது என்பதற்காக ஏற்கனவே இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட, கிளிநொச்சியில் மண்ணில் நாங்கள் மிக முக்கியமாக சர்வதேசத்தின் கவனத்தின் ஈர்ப்பாக, நீங்களே கூடி உங்களுடைய கரங்களை ஒன்றிணைத்து பயிற்சியளித்து நாங்கள் ஒரு முடிவை நோக்கி நகர்வதற்காக நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம்.

மிகப்பெரிய பலத்தோடு நாங்கள் இன்று எழுந்து நிற்கிறோம். அந்த பலத்தினை ஒன்றுபடுத்தி முகிழ்த்தெடுத்து திரட்டிக்கொடுப்தற்கான சகல ஆயத்தங்களையும் நாங்களே செய்ய வேண்டும். எங்களுக்காக நாங்களே எங்களுடைய போராட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் நாங்கள் இன்று கூடி நிற்பதற்கு ஊடாக எங்களுடைய குரலை ஒருமித்து ஒலிப்பதற்கு ஊடாக நாங்கள் ஒரு முடிவை உலகத்திற்கு கூறிக்கொள்கிறோம். அந்த முடிவின் செயற்பாட்டின் அடிப்படையில் எங்களுடைய பெருந்தலைவர் எடுக்கக்கூடிய அந்த முடிவினுடைய செயற்பாட்டின் வேகத்தில், எங்களுடைய விடுதலையை வெல்லும் போது இந்த மண்ணிலே நாங்கள் கூடி நின்று மீண்டும் கைகளை உயர்த்தி எங்களுடைய சுதந்திரப் பிரகடனத்தை வாசிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த ஆனானப்பட்ட மகிந்தரைக்கூட வல்லமை வாய்ந்த நாடுகளில் கூட நாங்கள் இன்று தலைபணிய வைத்து ஒரே ஒரு விடயம்தான் நாம் கேட்கிறோம். இன்று இங்கே வந்தவர்களுக்கு கூறினோம். உலகத்தினுடைய பேரவலமான ஆழிப்பேரலையின் போதும் கூட, சிறிதும் மனமிரங்காத இந்த சிங்களம் இனி எப்போது இரங்கும் என்பதற்கான வாய்ப்பை எவராலும் தரமுடியுமா என்று கேட்டால் எவனும் வாய் பொத்தி நிற்கிற உருவத்தை நங்கள் பார்க்கிறோம்.

இந்த அற்புதமான வாய்ப்பு எங்களுக்கு வாய்த்திருப்பதற்கு ஊடாக, அடிமைத் தளையை அறுக்கக்கூடிய ஒரேயொரு சந்தர்ப்பத்தை இந்த தேசத்தில் வாழ்கின்ற உங்களுக்கு இந்தக்காலம் தந்திருக்கின்றமையால், மனமுவந்து இந்த தற்காப்புப் பயிற்சியைப் பெற்று, பயிற்சி எடுத்து போராடச் செல்வோம். ஒரு சாதாரண கல் பயிற்சி பெறுவதற்கு ஊடாக சிற்பியின் உளிபடுவதற்கு ஊடாக அந்த வலியை, உணர்வதற்கு ஊடாக தாங்குவதற்கு ஊடாக தெய்வச்சிலையாக மாறுகிறது.

பொதுமக்களும் பயிற்சி எடுக்கும் போது, புனிதமான புலிப்படையாக மாறி,தேசத்தினுடைய ஆன்மாவாக மாறி தேசத்தினுடைய எதிர்காலத்தை நீங்களே தீர்மானிக்கக்கூடிய அந்த மாபெரும் பொறுப்பு உங்களுக்காக வருகிறது.

தொடக்கமாக நீங்கள் இங்கே திகழ்கிறீர்கள். ஆகவே வாரந்தோறும் இந்த இடத்தில் கூடி வீதியில் சென்று இந்த செய்தியை காற்றில் உலகெல்லாம் பரப்பி, பரப்புரைப் போரிலே இந்த உலகத்தினுடைய கவனத்தை ஈர்த்து செய்தியை உலகத்திற்கு கூறி, இந்த இராணுவப் பயிற்சி ஊடாக உலகத்திற்கு ஒரு அரசியல் செய்தியை கூறி, நாங்கள் எங்களுடைய இறுதிப் போருக்கான சகல ஆயத்தங்களையும் செய்வதற்காக இங்கே கூடி நிற்கிறோம்.

எல்லாச் சிரமங்களையும் பாராது நீங்கள் மனமுவந்து முன்வந்து இதனை ஒரு அரசியல் கடமையாக தேசக் கடமையாக புனித பணியாக மேற்கொண்டு வெல்ல வேண்டும் என்பதற்காக உழைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன் என்றார் கா.வே. பாலகுமாரன்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

வட- தென் தமிழீழத்தில் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்கப்படும்: துணைத் தளபதி றமணன்

வட தென் தமிழீழப் பகுதிகளில் ஒரே நேரத்தில் யுத்தம் தொடங்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மற்றும் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் பொதுமக்களுக்கான தற்காப்பு பயிற்சிகள் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (17.01.06) நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்க விழாவில் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி றமணன் ஆற்றிய உரை:

உலகத்திலே இருக்கின்ற எந்த சக்தியாலும் வெல்ல முடியாத இராணுவமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயார் நிலையில் இருக்கின்றார்கள்.

எங்களது போராட்டத்தை பொறியிலே சிக்க வைக்க கடந்த அரசியல் கால கட்டத்தில் சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. எங்கள் தலைவருடைய இராஜதந்திரமான செயற்பாட்டால் அந்தச் சூழலை மாற்றப்பட்டு நாம் இறுதி உரிமையைப் பெறுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்தச் சூழலை வெல்வதற்காக இந்த இராணுவப் படையோடு மக்கள் படை திரண்டு பொங்கி எழ வேண்டிய காலம் இது. கடந்த யுத்த காலங்களில் சிறிலங்கா இராணுவத்துக்கு பல நாடுகள் பல பயிற்சிகளையும் தளபாடங்களையும் வழங்கினார்கள். அவற்றை எதிர்கொண்டு எங்கள் தலைவரின் நெறிப்படுத்தலில் அந்த யுத்தத்தை முறியடித்த போரில் மக்கள் எழுச்சி கொண்டதை வரலாறு மறந்துவிடாது.

ஜயசிக்குறு சண்டை காலத்தில் நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தபோது அங்கிருந்த போராளிகளின் எண்ணிக்கை 350. அகற்றப்பட்ட இராணுவ முகாம்கள் 45. வட தமிழீழத்திலும் தென் தமிழீழத்திலும் ஒரே காலத்தில் யுத்தம் தொடங்க வேண்டும் என்பதுதான் இன்று எங்களுடைய தலைவரின் திட்டம். அன்று 350 போராளிகள் இருந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பல போராளிகள் குட்டிசிறி மோட்டார் படையணியில் தமது பயிற்சிகளை எடுத்துவிட்டு தலைவரின் கட்டளைக்குக் காத்திருக்கிறார்கள்.

அங்கு இருக்கக் கூடிய படையினரது எணிக்கை 4 ஆயிரம். ஒரு டிவிசனுக்கும் குறைவானது. விசேட அதிரடிப்படையினரின் எண்ணிக்கை 900. அவர்கள் போருக்குத் தயார்படுத்தப்பட்டவர்கள் அல்ல. 96 ஆம் ஆண்டு விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது சந்திரிகா மீது படையினர் வழக்குத் தொடர்ந்தனர். பெரும் யுத்தத்துக்கு தயார்படுத்தப்பட்டவர்கள் அல்ல நாங்கள். எங்களை போரிலே ஈடுபடுத்துவது பிழையான விடயம். நாங்கள் ஏரியா கொமாண்டோக்கள் மட்டுமே என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மட்டக்களப்பிலே இருக்கக் கூடிய இராணுவத்தினரது தொகையை நாங்கள் இலகுவாக வெற்றி கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்று உருவாகிறது. வட தமிழீழத்தில் 4 டிவிசன்கள் உள்ளன. அதை எதிர்கொள்ள மக்கள் படை தயாராக வேண்டும்.

இந்த விடுதலைப் போராட்டம் கெரில்லா அமைப்பாக இருந்த போது நீங்கள் உணவூட்டியஇ சிறகால் காப்பாற்றிய போராளிகளே இன்று உள்ளனர். அதே உணர்வோடு இன்றும் மக்கள் செயற்பட வேண்டும்.

இன்றைய சிறிலங்கா அரசாங்கம் சமாதானத்துக்கான எந்த ஒரு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. கடந்த மாவீரர் நாள் உரையிலே தலைவர் கால அவகாசத்தை கொடுத்தார். ஆனால் எந்த ஒரு தீர்வுத்திட்டத்தையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கம் பல நாடுகளில் சென்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்கிறது. ஜே.வி.பி.யினரும்இ ஜாதிக ஹெல உறுமயவினரும் சிறிலங்கா இராணுவத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

நாங்கள் எங்கள் கால்களிலே- தலைவரின் வழியில்- தலைவரின் காலத்தில்தான் உரிமையை வென்றெடுக்க முடியும்.

தமிழர்களுடைய கடந்த கால வரலாறுகளில் மக்களை வழிநடத்த ஒரு தலைவர் இல்லாமல் அல்லோகலப்பட்டோம். இன்று கூட உலகத்திலே பல நாடுகள் ஒரு தலைமைத்துவம் இல்லாமல் சின்னாபின்னமாக அலங்கோலமாக தத்தளிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். எங்கள் தேசத்துக்கான தலைவர் எந்த சக்தியாலும் வாங்கி விட முடியாதவர். பல நாடுகளின் விடுதலை யுத்தங்கள் குரங்கின் இடுப்பில் கயிற்றைப் போட்டு ஆட்டுவதைப் போல் ஆட்டுவிக்கப்படுகின்றன. ஆனால் எங்கள் தலைவரிடம் அது எடுபட்டதா? எங்களை யாரும் அசைக்க முடியாது. எங்களுக்கு யாரும் எல்லை போட முடியாது. எங்களுக்கு யாரும் அழுத்தத்தைப் போட முடியாது என்ற நிலையைத்தான் தலைவர் உருவாக்கி வைத்துள்ளார். அதனால் நாங்கள் தனித்துவமாக இருக்கிறோம்.

ஆயுதங்களை வைத்துவிட்டு சர்வதேசம் சொல்வதற்கு ஆடினால் சமாதானம் வரும் என்கிறார்கள். இதுதான் சர்வதேச நிலைப்பாடு. அது சமாதானம் அல்ல. 17இ903 மாவீரர்கள் எதற்காக உயிர்நீத்தார்கள்? பல ஆயிரம் மக்கள் இந்த மண்ணிற்காக தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். சொத்துகளை இழந்திருக்கிறார்கள். இப்படி நாங்கள் இழந்துவிட்டு அவர்கள் சொல்வதைப் போல் ஆயுதங்களைக் கையளிப்பதா? அவர்கள் கூறுகிற சமாதானத்தை ஏற்றுக்கொள்வதா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாங்கள் எதிர்கொள்ளப் போகிற- வெற்றி கொள்ளப் போகிற யுத்தத்தை எல்லோரும் இணைந்து எழுச்சியோடு போராடுவோம்.

சிங்களத்தின் இடுப்புஇ நெஞ்சுஇ தலைப்பகுதி என எல்லாப் பகுதியிலும் அடி விழ வேண்டும். மகிந்த ராஜபக்ச போடுகிற திட்டம் முட்டாள்தனமான திட்டம். சிங்களதேசம் அனுபவிக்கப் போகிற துன்பங்களை நாங்கள் பார்க்கப் போகிறோம். நாங்கள் நிச்சயம் வெல்வோம்.

யாராலும் அசைத்துவிட முடியாத அத்திவாரங்களாக எங்கள் மாவீரர்கள் இருக்கிறார்கள். அந்தத் தியாகத்தினூடாகஇ தெய்வங்களினூடாக விடுதலையை வென்றெடுப்போம்.

கடந்த காலங்களில் எப்படி படைகளை உடைத்து தகர்த்து சிதறடித்து ஓடவைத்தோமோ அதேபோல் இப்போதும் இருக்கிற இரானுவத்தை சிதறடித்து ஓட விரட்டி சர்வதேசம் வியந்து பார்க்கிற தமிழீழத்தை- உலகத்திலே சிறந்த இனமாக- நாடாக வளர்த்தெடுக்க உறுதி பூணுவோம் என்றார் றமணன்.

தகவல்:புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.