Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏய்! கிறீஸ்பூதமே! நீ படைத்தவனைப் பதம் பார்க்காயோ!

Featured Replies

ஏய்! கிறீஸ்பூதமே! நீ படைத்தவனைப் பதம் பார்க்காயோ!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-08-17 10:15:40| யாழ்ப்பாணம்]

கிறீஸ் பூதம் பற்றிய செய்தியால் நாடு களேபரம்அடைந்துள்ளது.வடபுலத்தில் அந்தப் பயங்கரம் இன்னும் இல்லாமையால் அது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நாம் இருக்கின்றோம்.ஆனால் கிழக்கு மாகாணமும் மலையகமும் கிறீஸ் பூதத்தால் அதிர்ந்து போயுள்ளன.

முன்பெல்லாம் புளியமரத்தின் உச்சியில் பேய் நிற்பதான கதைகள் கூறப்படுவதுண்டு.இரவில் திரிபவர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்காக அந்தப் பேய்க் கதை கூறப்பட்டிருக்கலாம்.ஆனால், இப்போது கிறீஸ் பூதம் பற்றிய கதைகளால் மக்கள் நிம்மதியாக உறங்க முடியாத பரிதாபத்தில் உள்ளனர்.புளியமரத்தில் நின்ற பேய்களுக்கும் இப்போது பேசப்படும் பூதங்களுக்கும் இடையே தொடர்பு இருக்குமா? என்று யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை. அந்தப் பேய்கள் வேறு. இந்தப் பூதங்கள் வேறு.இந்தப் பூதங்கள் மனிதப் பூதங்கள். மனிதப் பூதங்களா எப்படி? என்று நீங்கள் கேட்கலாம்.ஆம்! சக்தியுள்ள மனிதர்களால் படைக்கப்பட்ட பூதங்களே இந்த கிறீஸ் மனிதப் பூதங்களாகும்.

இந்தப் பூதங்கள் தங்களுக்கு இடப்பட்ட வேலைகளைச் செய்தனவோ இல்லையோ மக்களிடையே ஒற்றுமையை-விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டன.ஆக, படைத்த பூதம் இட்ட கட்டளையை முடிக்காவிட்டாலும் படைத்தவனைப் பதம் பார்த்து விடும்போல் தெரிகிறது.

அசுரன் ஒருவன் சிவனை நோக்கி கடும் தவம் இருந்தான். தவத்தின் வலிமை கண்டு , சிவன் வரம் கொடுக்க அவன் முன் தோன்றினார்.மகனே! உன் தவ வலிமை கண்டு மகிழ்வுற்றோம். வரம் கேள் தருவோம் என்றார் சிவன். சுவாமி நான் எதைத் தொட்டாலும் அவை பற்றி எரிய வேண்டும். இந்த வரத்தை நீங்கள் தந்தருள வேண்டும் என அசுரன் கேட்டான்.சிவனும் எதையும் சிந்தியாது வரத்தைக் கொடுத்தருளினார். சிவன் கொடுத்த வரத்தை சோதிக்க வேண்டாமோ! என்று நினைத்த அசுரன் தனது முதல் சோதனையை வரம் கொடுத்த சிவன் மீது நடத்த முற்பட்டான்.நிலைமையைப் புரிந்துகொண்ட சிவன் வேகமாக ஓடத் தொடங்கினார். அசுரனும் சிவனைத் துரத்தினான். அசுரனின் பிடியிலிருந்து தப்புவதற்கு சிவன் கண்ணனின் உதவியை நாடவேண்டியிருந்தது.

இதுபோலத்தான் எங்கள் நாட்டு கிறீஸ் பூதத்தின் கதையும் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.ஏதோ நினைத்து கிறீஸ் பூதத்தைப் படைத்து விட, அதனால் மக்கள் கிளர்ந்தெழ, கிறீஸ் பூதம் தன்னைப் படைத்தவனைப் பதம் பார்க்க நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அந்தச் சிவனுக்கே அப்படியயன்றால் இந்த ‘சி’களுக்கு எப்படியிருக்கும்.சிவனுக்கு கண்ணன் உதவினான். இந்த ‘சி’களை சீனாவாலும் காப்பாற்ற முடியாது.

http://www.valampuri...ws.php?ID=21495

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டு சிங்களவன் என்று சும்மாவா... சொன்னார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு akootha, படைத்தவனை பதம் பார்க்கும் போது சொல்லுவார்கள், இது புலியின் வேலை என்று, திரும்பவும் தமிழ் பொடியளை தேடி தேடி பிடிபாங்க, Police க்கு பிறகு என்ன கசு மழை தான், எல்லாம் எங்களை நோக்கியே திருப்பிவிடப்படும்

பூதங்கள் பூதங்களைப் பதம் பார்க்க விரும்புமா?

ஊடகவியலாளர்களின் கற்பனைக்கு அளவே இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.