Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா: உலகத் தமிழர் பேரவையின் கூட்டம்

Featured Replies

பொதுக் கூட்டம்

முன்னுரிமைச் செயல் திட்டங்களும் கனேடியத் தமிழரின் பங்களிப்பும்.

தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான

உலகத் தமிழர் பேரவையின் கூட்டம்

நாள்: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்த்து 28, 2011

நேரம்: மாலை 6:30 மணி

இடம்: கனடா கந்தசாமி கோவில்

(பேர்ச்மவுண்ட், எக்லிங்ரன் சந்திக்குத் தெற்கே)

சிறப்புப் பேச்சாளர்கள்

 வண. எஸ். ஜே. இமானுவேல் அடிகள், தலைவர், உ.த. பேரவை

 சுரேன் சுரேந்திரன், பேச்சாளர், உ.த. பேரவை

அனைவரும் வருக!

உங்கள் கருத்துக்களைத் தருக!

தொடர்புகளுக்கு: info@globaltamilforum.org | 647-292-4323

Edited by akootha

  • தொடங்கியவர்

SENIOR REPRESENTATIVES OF GLOBAL TAMIL FORUM TO VISIT CANADA

The Global Tamil Forum’s President, Rev. Dr S.J. Emmanuel and Spokesperson, Suren Surendiran, will visit Canada this month to highlight the work of GTF and issues relating to Sri Lanka.

They will be meeting with members of the Tamil community in Toronto to discuss the need for an independent, international investigation into the credible allegations of war crimes in Sri Lanka and the continuing plight of the Tamil people on the island.

Speaking in relation to his forthcoming visit, GTF’s President said, “I am delighted to be visiting Canada from 26th-31st August. Canada, as a leading member of the international community, has an important role to play in holding the Government of Sri Lanka to account for its actions. Canada, and the Toronto area in particular, has embraced the Tamil community and I look forward to meeting with the large Canadian Tamil diaspora in the area, which has played such a crucial part in highlighting the atrocities in Sri Lanka.”

Rev. Dr Emmanuel and Suren Surendiran will be participating in a public event to highlight the initiatives of the Global Tamil Forum and to discuss how Canadian Tamils and other interested parties can participate in future GTF projects. They would be delighted if as many people as possible were able to attend.

Events details:

Place: Yarl co-op Building, 2584 Rugby Raod, Mississauga.

Date and Time: Sunday 28th August at 10:00 am (local time).

Place: Kanthasamy Temple, 733 Birchmount Road, Scarborough.

Date and Time: Sunday 28th August at 6.30pm (local time).

Contact : info@globaltamilforum.org | 647-292-4323

  • தொடங்கியவர்

நேற்று நடந்த நிகழ்வுக்கு நானும் சமூகம் தந்திருந்தேன்.

முதலில் தலைவர் வண. இமானுவேல் அடிகளாரும், பின்னர் பேச்சாளர் சுரேன்திரனும் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி-பதில்கள் நடந்தது.

எழுபத்தியொரு வயதுடைய உலகத்தமிழர் பேரவையின் தலைவர் என்னை பலவழிகளிலும் வியப்புக்குள்ளாக்கினார் என்னை வெட்கப்படவைத்தார். முள்ளிவாய்க்கால் காலத்தின் பின்னர் சக்கரம் போல எமக்காக சுழலும் ஒரு வீரனைக்கண்டேன். அசையாத நம்பிக்கையயும் தளராத முயற்சியையும் அவரில் கண்டேன்.

பிரச்சாரம் ...

அவர் தனது பேச்சில் இன்று சிங்கள அரசு ஆட்டம் காணத்தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டு நாம், புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் ஒரு பிரச்சார போராளியாக மாற வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். சிங்களம் தனது அறுபத்தி ஐந்து தூதுவர்கள் மூலமாக செய்வதை நாம் ஒவ்வொருவரும் செயல்பட்டால் இலகுவாக முறியடிக்கமுடியும் என்றார்.

தாயக மக்களுக்கான உதவிகள்...

ஆயிரம் குழந்தைகள் வரை தமது அமைப்பு சிங்கள அரசுக்கு தமது பெயரை வெளியே சொல்லாமல் வேறு அமைப்புக்களூடாக உதவ முயசித்ததாயும் ஆனால் நிதிச்சிக்கல்கள் காரணமாக குறைந்தளவு சிறுவர்களுக்கு உதவுவதாக கூறினார்.

போர்க்குற்றம்..

தமது அமைப்பு எவ்வாறு செரபிரிநிர்சா, ருவாண்டா போன்ற நாடுகளில் நடந்த போர்க்குற்றங்கள் வெளியே கொண்டுவரப்பட்டன என ஆராய்ந்து அதன் படி துறை சார் வல்லுனர்களை அணுகி சிங்களவர்களிடம் இருந்து ஆதாரங்களை பெற்றதாக கூறினர்.

ஐ.நா. மனித உரிமை தொடர் பற்றி..

மேற்குலகம் சிங்கள நாட்டிற்கு தரப்பட்டுள்ள காலக்கெடு இந்த மார்கழியுடன் நிறைவுபெற்று அடுத்த வருட மாசி மாதம் தொடங்கும் தொடரில் சிங்களம் மீதான குற்றங்கள் சுமத்தப்படலாம் எனக்கூறினர்.

Edited by akootha

  • தொடங்கியவர்

முதமைச்சர் பற்றி கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில்....

நாங்கள் ஒபமாவை கூட சந்திக்க முயலுகின்றோம். அதேவேளை தமிழக முதலமைச்சர் அவர்களை கூட சந்திக்க பலவழிகளால் முயன்று கொண்டு இருக்கின்றோம். முதலில் இந்திய தலைவர்களை சந்திக்க முயலுகின்றோம். ஏனெனில், இந்திய வல்லரசில் நிலைப்பாட்டில் மாற்றம் வந்தால் அது மேற்குலக மாற்றத்திற்கு

இலகுவாக இருக்கும்.

பிரச்சாரம் பற்றி கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில்....

ஒவ்வொரு மேற்குலக தமிழ் குடிமகனும் தனது நாட்டு வெளிவிவகார அமைச்சில் தனது தாயகம் பற்றி விளக்கங்களை சொல்ல உரிமை கொண்டவன் எனவும் நாம் அந்த முயற்சிகளை மேற்கொள்ளுவது இல்லை எனவும் கூறினர்.

அதேவேளை கனடாவின் தலைநகரில் உள்ள சிங்கள நாட்டிற்கு ஆதரவான தூதுவராலயங்களில் வெளிவிவகார கொள்கைகளுக்கு சம்பந்தமானவர்களை யாரும் சந்திக்க முயலலாம் எனவும் கூறினர்.

இளையோர் பற்றி கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில்....

இத்தாலியில் ஐ.நா. சம்பந்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பொழுது பல ஐரோப்பிய புலம்பெயர் இளையோர் தமது நாட்டு மக்கள் படும் அவலங்கள் பற்றி கூறியதையும், எமது தாயகம் பற்றி தானே ஒரு வயதானவர் கூறியதையும் குறிப்பிட்டார்.

பெற்றோர் இவை பற்றியும் தமது பிள்ளைகள் ஊடாக ஊக்குவித்து எமது மக்கள் அவலங்கள் பற்றி எடுத்துச்சொல்லவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

  • தொடங்கியவர்

நிதி உதவி கேட்கப்பட்டது

தான் பல தொப்பிகளை அணிந்துள்ளதாக கூறிய வண. இமானுவேல் அடிகளார், தனது திருச்சபையில் அதன் தேவைகளுக்காக நிதி கேட்பது போன்று தாம் உலகத்தமிழர் பேரவைக்கு நிதி கேட்பதாக கூறினார்.

சிங்களம் பல மில்லியன்களை செலவழித்து பிரச்சாரம் செய்வதால் தமிழர் தரப்பும் அதை எதிர்கொள்ளவேண்டிய தேவையுள்ளதாக கூறினார். தான் உட்பட பலரும் தமது சொந்த நிதியை செலவழிப்பதையும் சுட்டிக்காட்டினார்.

தமது லண்டன் அலுவலகத்திற்கு மாதம் ஒன்றிற்கு 12000 பவுண்ட்ஸ் தேவை என்றும் அங்கே ஒரு முன்னைநாள் அமைச்சு அதிகாரி ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளதையும் குறிப்பிட்டார்.

தம்மால் முடிந்த தொகையை, மாதம் பத்தோ இருபதோ எல்லோரும் தந்து உதவ கோரப்பட்டது.

இதற்காக கனேடிய வங்கியில் ஒரு கணக்கு உலகத்தமிழர் பேரவையின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கணக்கில் காசோலையாக மாதம் வைப்பிடலாம் எனவும் இல்லை உலகத்தமிழர் பேரவையின் இணையத்தளம் ஊடாகவும் செய்யலாம் என கூறப்பட்டது.

http://www.globaltam.../content/donate

வருட முடிவில் ஒரு மூனறாம் தர கணக்காளர் நிறுவனம் ஊடாக கணக்குகள் உறுதிப்படுத்தப்பட்டு சகல தரப்பினருக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

உதாரணத்திற்கு வரும் மாதங்களில் நடக்க இருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் நிகழ்ச்சி அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதாகவும் தான் அங்கே போய்வர நிலைமைகளை ஆராய ஒரு சட்டவல்லுனர்கள் குழுவை மகிந்த அனுப்பியுள்ளதையும் கூறினர்.

இதை தடுத்து நிறுத்த உலகத்தமிழர் பேரவை சம்பந்தப்பட்டவர்களை அழைத்து ஒரு மாநாடு நடாத்த விரும்புவதாகவும் அதன் மூலம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல தொடரும் அவலங்கள் பற்றி கூறி மகிந்தவை வராமல் தடுக்கலாம் எனவும் கூறப்பட்டது.

அதேபோன்று ஆபிரிக்க யூனியன், அரபு லீக் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் மத்தியில் சிங்களம் போர்க்குற்றம் பற்றி கூறுகையில் 'இது மேற்குலக ஆதிக்கம்' என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளுவதாக கூறப்பட்டது. இது உடைக்கப்பட அந்தந்த நாடு தமிழ் மக்களுடன் தாமும் இணைந்து செயல்பட நிதியும் தடையாக இருப்பதாக கூறப்பட்டது.

Edited by akootha

  • தொடங்கியவர்

சனல் நாலு ஆவணப்படம் மற்றும் ஹெட்லைன்ஸ் ருடே ஆவணப்படம்

இவற்றின் மூலக்கொப்பிகள் தம்மிடம் இருப்பதாயும் இவை உங்கள் நாடுகளில் உள்ள தேசிய இல்லை பிராந்திய இல்லை எமது தமிழ் தொலக்காட்சிகளில் ஒளிபரப்ப தம்மால் இந்த பிரதிகளை தந்துதவ முடியும் என சுரேன் அவர்களால் கூறப்பட்டது. அவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம் (என்னிடம் உள்ளது).

அதேவேளை தேசிய, மாநில அரசியல்வாதிகளுக்கு மனித உரிமை அமைப்புக்களுக்கு இந்த ஆவணத்தை காட்ட விரும்புவர்களும் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டது.

இந்தியாவில் காட்டப்பட்டது மூலம் ஒரு சிறிய மாற்றத்தை சிங்கள நாட்டிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டது.

  • தொடங்கியவர்

புறக்கணிப்பு போராட்டம் பற்றி....

தமது ஒரு பிரிவினர், குறிப்பாக அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ளவர்களால் புறக்கணிப்பு போராட்டம் அதிகமாக முன்னெடுக்கப்படுவதாக கூறினர். அமெரிக்க நிறுவனங்களான காப் (GAP) போன்ற சிங்கள நாட்டில் ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதாக கூறினர். வேறு சில நாடுகளிலும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒரு சிறுதொகை மக்களே காணும் எனவும் சில பிரச்சார துண்டுப்பிரசாரங்களுடன் யாரும் செய்யலாம் எனவும் கூறப்பட்டது.

மேலும், ஒரு மில்லியன் புலம்பெயர் மக்கள் உள்ள நாடுகளில் சில இலட்சம் சமையலைறைகள் உள்ளன எனவும் எமது தாய்மார்களே 'அப்பா மறக்காமல் மலிபான் பிஸ்கெட் வாங்கி வாருங்கள்' எனக்கூறுவதை நிறுத்தவேண்டும் என அன்புடன் வேண்டிக்கொண்டனர்.

அதேவேளை எங்களில் ஒரு பகுதியினர் 'எயர் லங்காவை' புறக்கணி எனக்கூறுகிறோம். ஆனால் இன்னொரு பகுதியினர் அதே சேவையை பயன்படுத்துகின்றனர். இதை முடிந்தளவு கவனத்தில் கொண்டு ஆதரவு தரும்படி வேண்டினர்.

மேலும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பற்றி குறிப்பிடும்பொழுது இவை எமது மக்களை (வியாபாரிகளை) பாதிக்காத வகையில் சரியான கலந்துரையாடல், திட்டமிடல் அடிப்படையில் முன்னெடுக்கப்படல் வேண்டும் என கூறப்பட்டது. அதாவது மாற்றீடு பொருட்களை கொள்விலை/இலாபம்/தரம் அடிப்படையில் ஆய்வு செய்து சந்தைப்படுத்தல் வேண்டும் என கூறப்பட்டது.

Edited by akootha

  • தொடங்கியவர்

பல்வேறு அமைப்புக்களும் இலட்சியமும்.......

பல கேள்விகள் உலகத்தமிழர் பேரவைக்கும் மற்றைய அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்புகள், உறவுகள் பற்றி கேட்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டு ஆவணி மாதம் இந்த பேரவை ஆரம்பிக்கப்பட்டது, அதனுடைய இணையத்தளத்தில் இதன் கொள்கை, பார்வை பற்றி விபரமாக கூறப்பட்டுள்ளது என்றார்கள். அதேவேளை இதன் யாப்பும் அதில் உள்ளது என்றார்கள்.

யாப்பின் பிரகாரம் ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதியாக ஒரு அமைப்பே இடம்பெறலாம், அந்த ரீதியில் கனடாவின் மூத்த அமைப்பான 'கனேடிய தமிழர் பேரவை' உலகத்தமிழர் அமைப்பின் கனேடிய பிரதிநிதியாக உள்ளது. ஆனால் அதன் காரணமாக வேறு அமைப்புக்களுடன் தாம் இணைந்து மக்களுக்காக செயல்பட முடியாது என இல்லை எனவும் கூறப்பட்டது. அந்த வகையில் நாடு கடந்த அரசு, கனேடிய தமிழர் பேரவை உட்பட்ட அமைப்புக்களுடனும் தாம் தாயக உறவுகளின் விடுதலைக்காக உழைப்பதாக கூறினர்.

தமது அமைப்பு உட்பட எல்லா அமைப்புக்களும் தாயக மக்களின் விடுதலைக்காகவே ஒழிய அமைப்புக்களுக்காக மக்கள் இல்லை என கூறப்பட்டது. அந்த வகையில் பலவேறு அமைப்புக்கள் இருப்பது பலமே எனவும் கூறப்பட்டது.

எதிரி கூட அண்மையில் தனது முதலாவது எதிரி வண. இமானுவேல் அடிகளார் என்றும், இரண்டாவதாக சுரேன் சுரேந்திரன் எனவும், மூன்றாவதாக உருத்திரகுமாரன் என்றும், நாலாவதாக நெடியவன் என்றும் கூறியதும் நினைவுபடுத்தப்பட்டது.

தாம் (உலகத்தமிழர் பேரவை) எக்காரணம் கொண்டும் இன்னொரு அமைப்புக்கு ஒருகாலமும் தடையாக இருக்கமாட்டாது என உறுதிவழங்கப்பட்டது.

  • தொடங்கியவர்

நன்றிகள்....

கலந்துகொண்ட பலரும், புலம்பெயர் மக்கள் அதிகூடிய தொகையில் கனடாவில் வாழ்ந்தாலும்

பல முக்கிய பணிகளை பிரித்தானிய மக்கள் உலகத்தமிழர் பேரவை ஊடாக செய்வதாகவும் அதற்கு நாம் நன்றி தெரிவிப்பதையும் கூறினர். அதேவேளை கனடாவில் எமக்குள் உள்ள பிளவுகள் மற்றும் ஆளும் வலதுசாரி கட்சிகள் காரணம் என கூறப்பட்டன.

இருந்தும் உலகத்தமிழர் பேரவை உறுப்பினர்கள் வேற்றுமைகளை விடுத்து தனியாகவோ இல்லை சிறு குழுக்களாகவோ உணர்வாளர்களை தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டினர்.

Edited by akootha

  • தொடங்கியவர்

மலேசிய பயணம் பற்றி...

தாம் மலேசிய சென்றிருந்தபொழுது அங்கு முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் புலம்பெயர்ந்த சிறுவர்களை சந்தித்ததாகவும் அaவர்களில் ஒரு மாணவி ஒரு பாடசாலையில் இரண்டாவதாக வந்து சாதனை படைத்ததையும் நினைவுகூறி எமது சமுதாயம் திறமைவாய்ந்தது என்பதையும் நினைவு கூறினர்.

அதேவேளை அங்குள்ள தமிழர்களில் பலரும் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே வந்து அங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு மில்லியன் ரின்கெட்டை சேர்த்து உலகத்தமிழர் பேரவைக்கு தந்துதவியதை நன்றியுடன் நினைவுகூர்ந்தனர்.

.... இமானுவேல் அடிகளாரின் தலைமையில், ஓரிரு சிலரே இருக்கும் இந்த அமைப்பின் செயர்பாடுகள் வியக்கத்தக்கதாக உள்ளது. சொல்லை விட செயலில் ...

இங்கு எம்மவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் பதவிகளை தக்க வைக்கவும், ஏனைய அமைப்புக்களை முடக்கும் செயலுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டு செயற்படும் நேரத்தில், ...

1) நிதிப்பிரட்சனை ஒருபுறம்

2) இவர்களின் செயற்பாடுகளை தடுக்க நடக்கும் நடவடிக்கைகள் இன்னொரு புறம்

3) துரோகப்பட்டங்கள் வழங்குவோர் இன்னொரு புறம்

4) இவர்களை முழு முத்திரை குத்தி, தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயர்ச்சி, இன்னொரு புறம்

... இவைகளுக்கு மேலாக சிங்களத்தின் பாச்சல்கள் .... எல்லாவற்றையும் தாண்டி பயணிக்க வேண்டியுள்ளது இவர்களால்!!! ... அது இமானுவேல் அடிகளாரின் தலைமையிலான இவ்வமைப்பால் முடியும்!!! ... நாமும் எம்முதவிகளை சிறிதளவேனும் ...

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

நன்றி நெல்லையன் உங்கள் கருத்துக்களிற்கு.

நாம் எதிரிகளையோ இல்லை அவர்கள் செயற்பாடுகளையோ நேரடியாக கட்டுப்படுத்தமுடியாது. அதை செய்யக்கூடியவர்களை அடையாளம் கண்டு

அவர்களுடன் வேலைசெய்வது மூலம் மட்டுமே இதைச்செய்யமுடியும்.

அதேவேளை எமது எல்லா அமைப்புக்களும் நல்ல நோக்கத்துடன் தான் ஆரம்பிக்கப்பட்டன ஆனால் அவற்றை தொடர்ச்சியாக நிறைவேற்றுவதில் சிக்கல்கள் உள்ளன. மக்களாகிய நாம் விழிப்பாக இருந்து அவர்களுக்கு ஒத்தாசையாகவும் இருந்து விழிப்பாகவும் இருந்தால் மட்டுமே இலக்குகளை அடையமுடியும்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் பேரவையின் அவுஸ்திரெலியாபிரிவாக அவுஸ்திரெலியா தமிழ் காங்கிரஸ் இருக்கின்றது. இதில் நாடுகடந்த தமிழிழ அரசு, நாடு கடந்த ஜன நாயக அணி உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

Dear all,

The financial summary (year 2010 accounts) that GTF submitted to British Companies House is now available

This document is a confidential document. As you are a GTF 1000 Club donor the statement is being made available upon request.

Please email your request to ........................................................

Thanks!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.