Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருநெல்வேலியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் ஆயுதந்தரித்த நபர்கள் நுழைய முயற்சி-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆகஸ்ட் 2011

துரத்திச் சென்ற பொது மக்களுக்கும் இராணுவத் தினருக்கும் இடையே மோதல் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

திருநெல்வேலிப் பகுதியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் நுளைய முயன்ற ஆயுதந்தரித்த சில நபர்களை துரத்திச் சென்ற பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இன்றிரவு மோதல் உருவாகியுள்ளது.

மர்ம நபர் என்ற போர்வையில் இவ்வாறு வீடுகளுக்குள் நுளைய முயன்றவர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது, மக்களைத் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர்.

இதனையடுத்து படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் பதிலுக்கு இராணுவத்தினரை பொதுமக்கள் சிலர் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருநெல்வேலி பாரதிபுரத்தில் இன்றைய தினம் மாலையில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியிலிருந்து பொது மக்கள் தகவல் தருகையில்,

இன்றைய தினம் மதியம் சுமார் 12 மணியளவில் முகமூடியுடன் கறுப்பு உடை அணிந்தவர்களாக ஆயுதங்களோடு 3 மர்ம நபர்கள் பொதுமக்களது வீடுகளுக்குள் பிரவேசிப்பதற்காக வீட்டின் பின் பற்றைகளுக்கூடாக முன்னேறினர். இதன்போது ஆண்கள் யாரும் அங்கே இல்லாததாதல் பெண்கள் கூச்சலிட்ட போது அவர்கள் திரும்பி ஒடினார்கள்.

இதன்போது அங்கிருந்த குடும்பஸ்தர் ஒருவர் அவர்கள் மூவரையும் கலைத்துச் சென்றபோது மர்ம நபர்கள் போர்வையில் சென்றவர்;கள் ஆயுதங்களுடன் மக்கழளக் கலைத்துள்ளனர். பின்னர் பொது மக்கள் ஒன்று திரண்டதும் அவர்கள் ஒடி மறைந்தனர்.

இதன் பின்னர் இன்றைய தினம் இரவு 7 மணியளவில் வழமைக்கு மாறாக மர்ம நபர்கள் நடமாடிய பகுதிகளில் இராணுவத்தினர் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை இரவு 7.30 மணியளவில் திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதேநேரம் பெண்கள் தனிமையாக வசிக்கும் வீடுகளுக்குள் மீண்டும் மர்ம மனிதர்கள் உட்புக முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கூச்சலிட்டு கத்திய போது அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மர்ம நபர்களை கலைத்துச் சென்றுள்ளனர்.

மர்ம மனிதர்கள் ஒடிய திசையில் பொது மக்கள் அவர்களை கலைத்துச் சென்ற போது அதே திசையில் நின்ற இராணுவத்தினர் பொதுமக்கள் கைகளில் இருந்த தடி, பொல்லுகள் என்பவற்றைப் பறித்து அவர்களைத் துரத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே பொதுமக்களுக்கும் படையினருக்கும் மோதல் போக்கு உருவானது.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதிலும் இராணுத்தினர் குவிக்கப்பட்டு தொடர்ச்சியாக பொது மக்களது வீடுகளுக்கு முன்னால் இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு இராணுவத்தினரை தாக்கியவர்கள் யார்? என்று பொது மக்களிடம் இராணுவத்தினர் விசாரணை செய்ததாகவும் ஒரு சில வீடுகளின் கதவுகளை அவர்கள் தட்டி திறந்ததாகவும் தாக்கியவர்களை அடையாளம் காட்டாது விட்டால் நாளை அனைவரையும் சுற்றி வளைத்து தேடுதல் செய்து தாக்கியவர்களை பிடித்துக்கொண்டு செல்வோம் என்று இராணுவத்தினர் பயமுறுத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இதன் காரணமாக இன்றிரவு முழுவதும் நித்திரை இன்றி கடும் அச்சத்துடனேயே பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

ஒருசில மர்ம மனிதர்கள் காணாமல் போகும்போது இவை முடிவுக்கு வரும் சூழ்நிலை ஏற்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.