Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நிலபரங்களை வெளியுலகிற்கு கொண்டுவர சனி அன்று உண்ணாவிரதம்

Featured Replies

இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமயத் துறவிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த 2 வாரகாலமாக நிலவிவரும் பதற்ற சூழ்நிலை தொடர;பாக விரிவாக விவாதிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

மர்ம மனிதர்கள் என்று அழைக்கப்படும் அநாமதேய நபர்களின் நடமாட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதன் தொடர் விளைவாக பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்களை துரத்தி பிடிப்பதில் ஈடுபட்ட பொதுமக்கள் மோசமாக தாக்கப்பட்டு குடாநாடு முழுவதும் பயப்பிராந்தியின் பிடியில் சிக்கி இருப்பது பற்றியும் மக்களின் இயல்பு வாழ்வு மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் தொpவித்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன

1. குடாநாட்டிலும் மற்றும் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும், மலையகத்தின் சில இடங்களிலும் மற்றும் புத்தளத்திலும் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐனாதிபதியை நோpல் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதுடன், இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாண சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமயத் தலைவர்கள், அறிவுஜீவிகள், அரசியல் நடவடிக்கையாளர்கள் என்போரை உள்ளடக்கிய ஒர் குழு கலந்து கொள்ள வேண்டும்.

2. எதிர்வரும் செவ்வாய்க்கிமை (2011-09-06) ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற கூட்ட நடவடிக்கைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்குகிழக்கின் குறிப்பாக குடாநாட்டில் இன்றைய நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

.

3. குடாநாட்டின் இன்றைய நிலைமையில் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அரசாங்கத்திற்கும் வெளியுலகத்திற்கும் எடுத்துரைக்கும் நோக்குடன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை யாழ் குடாநாட்டில் உள்ள ஒர் ஆலய முன்றலில் எதிர்வரும் சனிக்கிழமை (2011-09-10) மேற்கொள்ளுவது.

.

இக் கூட்டத்திற்கு நல்லையாதீன முதல்வர், தென்னிந்திய திருச்சபை பேராயர், பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ. சரவணபவான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், எம்.கே. சிவாஐpலிங்கம், என் .சிறீகாந்தா, தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். எக்ஸ். குலநாயகம், சூழவியலாளர் பொ. ஐங்கரநேசன், யாழ் மாவட்ட உள்ளுராட்சிச் சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மனிதவுரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மூலம்

Edited by உமை

மக்களின் உணர்வுகளை ஏற்று சமூக - அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்திற்கு அப்பால் சென்று நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சிங்களம் 'மர்ம மனிதர்களை' கட்டுப்படுத்தும். இதுவே சர்வதேச தலையீட்டுக்கு கூட வழி சமைக்கலாம்.

அதேவேளை தாயகத்தில் அண்மைக்காலமாக கூறப்பட்டுவந்த சமூக சீரழிவுகள், குறிப்பாக அதில் ஈடுபட்ட இளையோர், கூட இன்றைய அரசியல் யதார்த்தத்தை புரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

... இன்று இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றிய ஓர் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கு பற்றிய சிறிதரனும், மாவை சேனாதிராஜாவும் ... சிங்களம் உருவாக்கியிருக்கும் கிறிஸ் மனிதர்களின் நடவடிக்கைகள், கிறிஸ் மனிதர்களினால் வடகிழக்கு மக்கள் குறிப்பாக பெண்கள் எதிர் நோக்கும் பிரட்சனைகள்/அவலங்களை ... தெளிவாக கூறினார்கள்!!!

... ஆனால் இந்த சிங்கள அரசின் கிறிஸ் மனிதர்களினால் ஏற்படும் அவலத்துக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்வது? கூட்டமைப்பு என்ன செய்யப்போகிறது? சர்வதேசத்துக்கு இந்த புதிய அவலங்களை எவ்வாறு கொண்டு செல்லப்போகிறது? ... போன்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை!

கிறீஸ் பூத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தாமாக அடங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளார்...

இலங்கையில் கிறீஸ் பூத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தாமாக அடங்க வேண்டும் அன்றில் சர்வதேசம் இதில் தலையிட்டு அவர்களை அடக்கும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அவசர கால சட்டத்தை நீக்குமாறு சர்வதேசம் வலியுத்தியதைத் தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்தியது போல இதற்கும் சர்வதேசம் கூறினால்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேசம் கூறினால்தான் இதனை அரசு கேட்கும் என்றால் அதனை நாம் சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல தயார் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளுராட்சி சபைத் போட்டியிட்டு வெற்றி பெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை அராலி மேற்கு முத்தழிழ் சனசமூக நிலைய கலையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பிரேமசந்திரன் உரையாற்றினார்.

யுத்தம் முடிவுற்ற நிலையில் பூதங்கள் புறப்பட்டு மக்களை குறிப்பாக பெண்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த பூதங்கள் போர்வையில் இதனை யார் செய்கின்றார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மலையகத்தில் தொடங்கிய இந்த பூதவிவகாரம் கிழக்கு மாகாணம் முழுவதும் மக்களை பீதி கொள்ள வைத்தது.

இப்போது வடக்கு வாழ் மக்களை வதைக்கின்றது மட்டுமல்ல தழிழ் மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களே அங்கெல்லாம் அவர்களை இலக்கு வைத்து இந்த பூத நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் காங்கேசன்துறை வரையில் இந்த பூத விவகாரத்தை தனி மனிதனால் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். நிச்சயமாக இதனை ஓர் பெரிய பலமுள்ள அமைப்பினால் தானே இதனை செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9188

இந்த கிறிஸ் மனிதன் போர்வையில் மீதமிருக்கும் தமிழ் மக்களையும் கொன்றொழிப்பதற்காகவா? தமிழ் பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவத்தினரை நிலைகொள்ள வைத்திருக்கின்றனர்.

தாம் தம்மை பாதுகாத்துக்கொள்ளமுடியும், இராணுவத்தினரை இங்கிருந்து அனுப்பக்கூறுங்கள் என்று பொது மக்கள் கூறுகின்றனர் இதற்கு அரசாங்கம் என்ன பதில் கூறப்போகின்றது என்றும் கேள்வி எழுப்பினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.