Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து உதவி வழங்கும் நாடுகள் அறிந்திருந்தன – விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து உதவி வழங்கும் நாடுகள் அறிந்திருந்ததாக விக்கிலிக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதித் தருவாயில் படையினர், பொதுமக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் தெரிந்துகொண்டிருந்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தகவல்களை உதவி வழங்கும் நாடுகள் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தவில்லை.

2009ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவை, அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஒ பிளக் சந்தித்த போது இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரொபர்ட் ஓ பிளக் சுமத்திய குற்றச்சாட்டுக்களை, பெசில் ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

எவ்வாறெனினும், யுத்த சூன்ய வலயங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், தற்பாதுகாப்பு நோக்கில் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான பேரவலம் தொடர்பில் கருத்து வெளியிடப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை உதவி வழங்கும் நாடுகளான ஜப்பானும், நோர்வேயும் எதிர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென நோர்வே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வலியுறுத்தி வந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

நன்றி: பி.பி.சீ.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

வன்னிப் படுகொலைகள் குறித்து அறிக்கை வெளியிடும் முயற்சியை நோர்வேயும் யப்பானும் தடுத்தன!

2009 ம் ஆண்டு வன்னிப்போரின்போது அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்புத் தேடி தஞ்சமடைந்த பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் கனரகப் பீரங்கித் தாக்குதல் நடத்தியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் அறிந்திருந்தன என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

இருந்தபோதிலும், இப் பீரங்கித் தாக்குதில் தொடர்பாக தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதை உதவி வழங்கும் நாடுகள் விரும்பவில்லை என்றும் இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக மோசமான மனிதநேய பேரழிவு குறித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் கேட்கப்பட்டதை, ஜப்பான், நோர்வே ஆகிய உதவி வழங்கும் நாடுகள் எதிர்த்ததாகவும், வன்னிக்கு உணவுகளை வழங்குவதற்கான பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகளை, அவர்களை விமர்சிக்கும் வகையிலான பகிரங்க அறிக்ககைகள் பாதிக்கலாம் என்று நோர்வே வாதிட்டதாக அமெரிக்க தூதரகத்தின் கசிந்த தகவல் கூறியுள்ளது.

2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்தும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்கு மத்தியஸ்தம் செய்த நோர்வே, வடக்கில் அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக தாம் விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுப்பதாக இணைத்தலைமை நாடுகளுக்கு கூறியிருந்தது எனவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பி.பி.சி தமிழோசை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாதுகாப்பு வலயப் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்த விவகாரத்தை, தான் இலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ச அவர்களிடம் எழுப்பியதாக கொழும்புக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளேக் அவர்கள், 2009 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி நடந்த சந்திப்பு ஒன்றில் இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இணைத்தலைமை நாடுகளிடம் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீது தொடர்ச்சியாக சில நாட்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து வந்த நம்பகமான தகவல்கள் பற்றிய தூதுவரின் கரிசனைகளுக்கு, பசில் ராஜபக்ச அவர்கள், வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவில்லை என்று அமெரிக்க தூதரகத்தால் மார்ச் 5 ஆம் திகதி அனுப்பப்பட்ட தகவல் கூறுகிறது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதாக சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் மீண்டும் உறுதி வழங்கியிருந்தது.

'பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் இலங்கை பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல்களை எதிர்த்து பாதுகாப்புப் படையினர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்ததாக பசில் ராஜபக்ச அவர்கள் கூறியுள்ளார்.

ஆனால், பதில் தாக்குதலாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள் பல பொதுமக்களைக் கொன்றதாகவும், அத்தகைய தாக்குதல்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற இலங்கை அரசாங்கத்தின் கடப்பாட்டை மீறுவதாக உள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகம் வாசிங்டனுக்கு அனுப்பியிருந்த ஆவணங்கள் கூறுகின்றன.

இந்தத் தகவல்கள், இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றிகொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவிப்பதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டிருந்தன.

பகிரங்கமாக கூறும் அறிக்கைகளுக்கு மாறாக, தாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக இலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நாடுகளுக்கு கூறியிருந்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்ச அவர்களுடனான இரு அண்மைய சந்திப்புக்களின் போது இலங்கைப் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக பசில் ராஜபக்ச அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அந்த விடயத்தைப் பேசுவதில் அவர் அவ்வளவு விருப்பமில்லாதவராக இருந்தார் என்றும் நோர்வே தூதுவர் கூறியிருக்கிறார்.

ஆனால், மிக மோசமான மனித நேய பேரழிவு குறித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் கேட்கப்பட்டதை, ஜப்பான், நோர்வே ஆகிய உதவி வழங்கும் நாடுகள் எதிர்த்ததாகவும், பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குவதற்கு அப்பால், தமது முன்னைய கரிசனைகள் பலவற்றுக்கு இலங்கை சாதகமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த நாடுகள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இலங்கைப் படைகள் புதிய பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் ஒன்றை அறிவித்தன.

விடுதலைப்புலிகளுடன் சிக்குண்ட பொதுமக்களுக்கு மனித நேய உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு உதவியாகவே பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டதாக இராணுவம் கூறியிருந்தது.

2002 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்தும் இடையில் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்கு மத்தியஸ்தம் செய்த நோர்வே, வடக்கில் அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக தாம் விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் கொடுப்பதாக இணைத்தலைமை நாடுகளுக்கு கூறியிருந்தது.

மேலும் உணவுகளை வழங்குவதற்கான பசில் ராஜபக்சவின் நடவடிக்கைகளை, அவர்களை விமர்சிக்கும் வகையிலான பகிரங்க அறிக்ககைகள் பாதிக்கலாம் என்று நோர்வே வாதிட்டதாக அமெரிக்க தூதரகத்தின் கசிந்த தகவல் கூறியுள்ளதாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={9E49AB5F-3106-4A07-AE0C-AA99BDB4A6DE}

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உதவிவழங்கும் நாடுகள் மூதூர் இயக்கம் பிடித்த போது பெருமழவு அழுத்தம் கொடுத்து இயக்கத்தை பின்வாங்கும் படி பணித்தனர் இவர்களின் நடவடிக்கைகளில் அப்போதே நடுநிலை இருக்கவில்லை பின்னர் அரசாங்கத்தின் அத்துமிறல்களை கண்டிக்க தவறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.