Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டே லீடர் பத்திரிகையை கொள்வனவு செய்ய மகிந்த முயற்சி

Featured Replies

சண்டே லீடர் பத்திரிகையை கொள்வனவு செய்ய மகிந்த முயற்சி! - லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் செய்தி

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக தன்னுடன் மிக நெருக்கமாகவுள்ள பிரபல வர்த்தகரான அசங்க செனிவிரத்னவை சிறிலங்கா அரசாங்கம் அணுகியுள்ளதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் 75 சதவீதமான பங்குகளைக் கொள்வனவு செய்வதற்காக 375 மில்லியன் ரூபா அரச வங்கி ஊடாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'வெள்ளைக் கொடி விவகாரம் குறித்து சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட செய்திகளும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நீதிமன்ற விசாரணைகளாலும் இப்பத்திரிகை வாசகர்களிடம் பெற்றிருந்த நன்மதிப்பை இழந்து விட்ட நிலையில், இந்நிறுவனம் தற்போது கடுமையான நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.

அத்துடன், சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் சிறிலங்காவின் அமைச்சர் மேர்வின் சில்வாவினால் தாக்கப்படப் போவதாக வெளியிடப்பட்ட செய்தி தவறானது எனத் தெரிய வந்ததாலும், இப்பத்திரிகை வாசகர்கள் மத்தியில் கொண்டிருந்த நன்மதிப்பை இழந்துள்ளது. இத்தகைய காரணங்களால் தினமும் 2500 பத்திரிகைகளை விற்பனை செய்வதற்கே இந்த ஊடக நிறுவனம் மிகவும் சிக்கல்படுகின்றது.

இந்நிறுவனத்தின் ஊடகவியலாளர்களுக்கான ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளைக் கூட இப்பத்திரிகையை விற்பனை செய்யும் முகவர்களிடமிருந்தே பணத்தைப் பெற்று மேற்கொள்ள வேண்டியிருப்பதாகத் தெரிய வருகின்றது.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தனது நெருங்கிய நண்பரும், பிரபல வர்த்தகருமான அசங்க செனிவிரத்ன ஊடாக சண்டே லீடர் பத்திரிகை நிறுவனம் எதிர்நோக்கும்; நிதி நெருக்கடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பங்குச் சந்தை வர்த்தகத்தில் 17 வருட அனுபவம் கொண்ட பிரபல வர்த்தகரான அசங்க செனிவிரட்ன தற்போது ஆசிய மூலதன முதலீட்டு வங்கியின் இயக்குனராக பணியாற்றுகின்றார்.

இதற்கு முன்னரும் தேசிய நிறுவனம் ஒன்று அத்தகைய நிதி நெருக்கடியைச் சந்தித்த போது மத்திய வங்கி தலையிட்டு அதன் உரிமத்தை அசங்க செனிவிரட்னவிற்கு மாற்றம் செய்திருந்தமை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் அசங்க செனிவிரட்ன எவ்வளவு நெருக்கமாக இருக்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது.

இதனிடையில், இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவடைந்ததும் கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளை விற்பனை செய்யும் அதிகாரத்தை சிறிலங்கா அரசாங்கம் அசங்க செனிவிரட்னவுக்கு வழங்கியிருந்தது.

இதற்காக பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளைப் பார்வையிட உலங்கு வானூர்தி உட்பட எல்லா வசதிகளும் இவருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், சிறிலங்காவின் படைத்துறை அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவும் இவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியிருந்தார்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனுக்கு ரகர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரும், ரக்பி மற்றும் உதைபந்தாட்டச் சங்கத்தின் உப தலைவராகவும், துடுப்பெடுத்தாட்ட சபையின் இடைக்கால நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இவர் உள்ளதுடன், நாமல் ராஜபக்சவின் ஆதரவுத் இவருக்கு இருக்கின்றது.

இந்நிலையில், சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் 75 சதவீதமான பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு இவரோ இல்லது மகிந்த ராஜபக்ச அரசாங்கமோ தமது சொந்த நிதியைப் பயன்படுத்தவில்லை. இதற்கான முழு நிதியும் அரச வங்கியால் வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் நிதியமைச்சராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இருப்பதும், வங்கிகள் அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட்டு வருவதும் இந்நடவடிக்கையை மேலும் இலகுபடுத்தியுள்ளது. அதேவேளை, சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் 25 சதவீதமான பங்குகளை தொடர்ந்தும் அதன் இயக்குனரான லால் விக்ரமதுங்க கொண்டிருப்பார்.

இந்நிலையில், இப்பத்திரிகையின் தற்போதைய ஆசிரியரான பிரட்றிக்கா ஜான்ஸின் நடவடிக்கைகளால் சண்டே லீடரின் நன்மதிப்பு பாதிப்படைந்துள்ளதாக கூறப்பட்டு அப்பத்திரிகையின் பெயரையும், ஆசிரியரையும் மாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இப்பத்திரிகையின் புதிய ஆசிரியர் தொடர்பில் பிரபல்யமான ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இரண்டு இலட்சம் ரூபா ஊதியமும் மற்றும் கொடுப்பனவுகள், சலுகைகளும் வழங்கப்படும் என அவருக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

சண்டே லீடர் நிறுவனத்தின் கொள்வனவு தொடர்பிலான பணப்பரிமாற்றம் குறித்து அசங்க செனிவிரட்னவிடம் கேட்ட போது அவர் அது குறித்து கூற மறுத்துவிட்டார். இக்கொள்வனவிற்காக அரச வங்கியில் இருந்து கடன் பெறப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்ட போது, இது தன்னுடைய வர்த்தகத் தேவைகளுக்காக பெறப்பட்டதாக தெரிவித்தார். அதேவேளை, இது தொடர்பில் சண்டே லீடர் வெளியிட்டுள்ள செய்தியில், தமது பத்திகை தொடர்பாக வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை எனவும்,நிறுவனத்தின் இயக்குனராக லால் விக்ரமதுங்க தொடர்ந்தும் பணியாற்றுவார் எனவும் குறிப்பிட்டுள்ளது' என லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. ..

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={E816003B-9D48-4696-A552-944F4A6E0CD4}

  • தொடங்கியவர்

மகிந்த சிந்தனையில் ஊடகத்துறை அரசமயமாக்கப்பட்டு எல்லாமே ஏரிக்கரை பத்திரிகைகளாகி அவர் புகழ் பாடவேண்டும்

(கொழும்பு தினக்குரல் தினசரியை 3 மாதங்களில் மூடிவிடுவதற்கு திட்டம்? ஊழியர்கள் மீது அச்சுறுத்தல்! [url="http://www.yarl.com/forum3/index.php?showtopic=91105 )

அதேவேளை அரச பணத்தில் தனியார் பங்குகளை வேண்டும் சிங்களத்தின் பங்குகளை மேற்குகலம் வேண்டி வருகின்றது :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.