Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் கிறிஸ் மனிதர்கள்- துலங்கும் மர்மங்கள்!

Featured Replies

ஈழத்தின் ஆயுதப் போராட்ட வரலாற்றினை உற்று நோக்கினால், காலதி காலமாக அராஜகத்திற்கும், இனவாதக் கொள்கைக்கும் பெயர் போனவர்களாக விளங்கும் ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்கள் மீது தமது முழுமையான பலத்தினைப் பிரயோகித்து அவர்களை அடக்கி, அம் மக்களின் முழுமையான உணர்வுகளை தம் வல்லாதிக்கப் பிடியினுள் நசுக்கி வாழ வேண்டும் எனும் வெளி உலகிற்குத் தெரியாத, எழுதப்படாத விதியினைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். சிறுபான்மை மக்கள் மீது நிழல் யுத்தம் ஒன்றினை ஆரம்பித்து, அம் மக்களின் உணர்வுகள் ஊடாகக் குளிர் காய்வது தான் இன்று ஆட்சியில் உள்ளோரின் பிரதான வேலையாக இருக்கின்றது.

Mukamoodi.jpg

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீதான அரச படையினரின் தாக்குதல்கள் தவிர்ந்த; இராணுவக் கட்டுப்பாட்டினுள் வாழும் மக்கள் மீதான இனவாத தாக்குதல் நடவடிக்கைகளுக்குச் சான்றாக இதுவரை காலமும் விளங்கிய வெள்ளை வான் கடத்தல்கள், கப்பம் கோருதல், கொலை செய்தல் முதலிய செயற்பாடுகளிலிருந்தும் சற்று மாறுபட்டதாக அமைந்துள்ளது தான் இந்தக் கிறிஸ் மனிதர்கள் விவகாரம்.

வெள்ளைவான் கடத்தல்கள் பற்றி மேலும் அறிய விரும்புவோருக்காக என் பழைய பதிவின் லிங்கினை இங்கே இணைத்துள்ளேன்.

http://www.thamilnattu.com/2011/06/blog-post_13.html

2009ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை வேரோடு அழித்ததாக மார்தட்டிக் கொள்ளும் இலங்கையின் இறமை உள்ள அரசாங்கமானது, மீண்டும் மக்களை அச்சத்தில் உறைய வைக்கும் நோக்கிலும், தமிழ் முஸ்லிம் மக்களைத் தம் காலடியின் கீழ் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்கின்ற தொடர்ச்சியான கொள்கையின் அடிப்படையிலும் தற்போது அரங்கேற்றி வருகின்ற நாடகம் தான் இந்த கிறிஸ் மனிதர்கள் விவகாரம். இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட புலிப் போராளிகள் சிலரைக் கைப் பொம்மைகளாக்கி, அவர்களை வலுக்கட்ட்டாயப்படுத்தி தமது பொது மக்களை அச்சமூட்டும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு செலுத்தும் நோக்கினை நிறைவேற்றலாம் என கனவு கண்டார்கள் அரச தரப்பினர்.

முன்னாள் புலிப் போராளிகளின் கையில் ஆயுதங்களைக் கொடுத்துக் கொலை, கொள்ளை, கப்பம் கோருதல் முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட வைத்து குடாநாட்டில் மீண்டும் புலிகள் இருக்கிறார்கள்- ஆதலால் மக்கள் மீதான எமது சோதனை நடவடிக்கைகள அதிகரிக்க வேண்டும் எனும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியிலும், இவ் வருட ஆரம்ப காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் படு தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து மேற்படி சம்பவங்களோடு தொடர்புடைய சீருடைத் தரப்பினரும், யாழில் இயங்கி வரும் அரசோடு சேர்ந்தியங்கும் ஓர் கட்சியும் பாரியளவில் மூக்குடைபட்டிருந்தார்கள்.

Munnal+Porali.jpg

நிரூபனின் நாற்று வலை

தற்போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கான போராட்டிதினைத் தொடரக் கூடிய புலிகள் அமைப்பானது இல்லாத காரணத்தினால் மஹிந்த ராஜபக்சே அவர்களால் காலாவதியான நிலையில் நீக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தினை மீண்டும் நடை முறைக்குக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கிலும், தமிழ் மக்களில் யாராவது இன்னோர் விடுதலைப் போராட்டம் பற்றிச் சிந்திக்க கூடாது எனும் நோக்கிலும் தான் இந்தக் கிறிஸ் மனிதர்கள் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தின் ஆட்சிக்குத் தீங்கு விளைப்போரை, ஜனநாயக நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டங்கள், பேரணி மூலம் குழப்ப முயல்வோரை, புரட்சிகரமான விடுதலைச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை, அரசதரப்பிற்கெதிராக எழுதும் ஊடகவியலாளர்களை அடக்கி கைது செய்த்து கால வரையற்ற ஜெயில் தண்டனை வழங்க இந்த அவசர காலச் சட்டம் நடை முறையில் உள்ளது.

அவசர காலச் சட்டமும் பயங்கரவாத தடைச் சட்டமும் வெவ்வேறாகப் பெயரளவில் இருந்தாலும் இரண்டுமே ஒரே நோக்கத்தில் தமிழ் மக்களின் குரல் வளைகளை நெரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை எனலாம். வெளி நாட்டு இராஜதந்திர அமைப்புக்களுக்கு இலங்கையில் மீண்டும் பெயர் குறிப்பிடாத வன்முறையாளர்கள் கிறிஸ் மனிதர்கள் என்ற பெயரில் உலவுகிறார்கள் எனும் நோக்கில் ஓர் செய்தியினை வெளியிட்டு மக்கள் மீதான அரச படைகளின் கண்காணிப்பினை இறுக்கி வைத்திருப்பதற்கும் இந்த கிறிஸ் மனிதன் விவகாரமே உதவியாக இருக்கப் போகின்றது. அவசரகாலச் சட்டப் பிரேரணை பற்றிய விவாதம் இலங்கைப் பாராளுமன்றத்த்ல் கொண்டு வரப்பட்ட சமயம் பதுளையில் தொடங்கிய கிறிஸ் மனிதன் விவகாரம் தற்போது யாழ்ப்பாணம் வரை வந்து நிற்கிறது.

கிறிஸ் மனிதர்கள் எனப்படுவோர், உடலில் கிறிஸ் பூசித் தமது காரியங்களை நிறைவேற்றுவோர் அல்ல. ஆனால் மக்களிடம் பிடிபடமால் சிரூடைத் தரப்பினரின் உதவியோடு தப்பிச் செல்வதால் இவர்களுக்கான பெயர் கிறிஸ் மனிதன் என்பது நன்றாகவே பொருந்திக் கொள்கிறது. இலங்கையின் மத்திய மலை நாட்டுப் பிரதேசம், கிழக்கு மாகாணம், மன்னார், வன்னியின் வட்டக்கச்சி, யாழ்ப்பாணம், முதலிய பகுதிகளில் தான் இந்த கிறிஸ் மனிதன் நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாளடைவில் இது கொழும்பில் வாழும் தமிழர்களின் இல்லங்களிற்குப் பரவினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

Payankaravatha+Thadai+Saddam.jpg

கிறிஸ் மனிதர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகளின் மீது கத்தியால் கீறுதல், அவர்களின் வீடுகளுக்கு நடு இராத்திரி வேளையில் சென்று வீட்டின் வெளிப்புறத்தைக் கூட்டி அழகு பார்த்தல், பூங்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சுதல், தண்ணீர்ப் பைப்பினைத் திறந்து நீரினை விரயமாக ஓட விட்டு விட்டு, எஸ்கேப் ஆகி பொது மக்கள் மத்தியில் மர்ம மனிதர்கள் இருப்பது போன்ற விவகாரத்தினை உருவாக்குதல், தனியாகப் பெண்கள் உள்ள வீடுகளிற்குச் சென்று அவர்களின் மார்பகங்களைக் கத்தியால் குத்துதல், அங்க சேஷ்டை செய்து விட்டு அகப்படாமல் ஓடுதல் முதலிய செயற்பாடுகளில் தான் ஈடுபட்டார்கள்.

பெண்களின் மார்பு இரத்தம் மூலம் மஹிந்தரின் நீண்ட ஆயுள் வேண்டி யாகம் நடாத்துதல்!

இந்தக் கிறிஸ் மனிதர்கள் விவகாரத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் நோக்கில் எம் தமிழ் ஊடகங்கள் சிலவற்றால் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பல செய்திகளும் பரப்பட்டன. அது தான் மஹிந்த ராஜபக்ச அவர்களின் யாகத்திற்கு வேண்டிய 3001 தமிழ் பெண்களின் மார்பக ரத்தம் பற்றிய வதந்தியாகும். இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் பாலையூற்றுக் கிராமத்தில் மக்களின் முழுமையான எதிர்கால அம்சங்களைக் கணித்துக் கூறக் கூடிய, நான்கு வயதுச் சிறுமியின் சாத்திரம் மூலமே மஹிந்தருக்கு ஆயுள் குறைவு என்றும், இன்னும் இரண்டு வருட காலத்திற்குள் அவர் இறந்து விடுவார் என்றும் சாத்திரம் சொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்குப் பரிகாரமாக 3001 தமிழ் பெண்களின் இரத்தம் தேவை என்றும் புரளிகள் கிளப்பி விடப்பட்டன. இதனைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்ட கிறிஸ் மனிதர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பெண்களின் மார்புப் பகுதியில் கத்தியால் கீறி விட்டுச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.

Mahidna+Jakam.jpg

தெளிவான செய்திகளை வெளியிடாத தமிழ் ஊடகங்கள் மூலம் அடிச்சது யோகம் அரச தரப்பினருக்கு. ஹி......ஹி....ஹி...

இறந்த பிரபாகரன் இரு ஆண்டுகளுக்குள் வருவார்.

நான்கு வயதுச் சிறுமியின் சாத்திரமானது மக்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் எனப் பல சேதிகளைச் சொல்லி நிற்கையில், இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தமக்கு மனதில் இன்னமும் புலி பற்றிய கிலி விலகி விடவில்லை எனும் உண்மையினை வெளிப்படையாகச் சொல்ல முடியாதவராக- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தினைக் காட்டி அவர் பற்றியும் சாத்திரம் கேட்டிருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பிரபாகரன் வெளியே வருவார் என்று சொல்லப்பட்டிருக்கும் சாத்திரம் மூலம் அச்சத்தில் வாழும் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட நாட்டின் தலைவரின் உள் மனம் அவசரகாலச் சட்டத்தினை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதற்கும் சான்றாக அமைவது தான் கிறிஸ் மனிதன் விவகாரம்.

Prabakaran.jpg

கிறிஸ் மனிதன் பற்றி வாய் திறந்தால் அவர் வதந்தியாளர்!

கிறிஸ் மனிதன் பற்றிய செய்திகள் போலியானவை என்றும், அவை பொதுமக்களால் அரச படையினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பயன்படுத்தப்படும் செய்திகள் என்றும் கூறும் இலங்கைக் காவல் துறையானது கிறிஸ் மனிதன் பற்றி யாராவது செய்தி கூறினால், அவர்களை வதந்தி பரப்புகின்றார் என்று கூறிக் கைது செய்து ஐயாயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடுவதில் குறியாக இருக்கிறது. பேஸ்புக்கில் கிறிஸ் மனிதன் விவாகரத்தினைத் தொடர்ந்து உருவாக்கபட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிறிஸ் மனிதர்கள் குழுமத்தினர் பற்றிய முழுமையான தகவல்களைப் பேஸ்புக் நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளது இலங்கையின் சைபர் கிரைம் போலிஸ் படை.

நிரூபனின் நாற்று வலை

குடாநாட்டில் சீருடைத் தரப்பினரால் கிறிஸ் மனிதர்களை கண்டால் தமக்கு அறிவிக்கும் படி கோரும் துண்டுப் பிரசுரங்கள் ஒவ்வோர் நாளும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. அரச தரப்போ கிறிஸ் மனிதன் என்ற ஒருவர் நாட்டில் இல்லை என்று மறுப்புரை வழங்கி வருகின்றது.

அப்படியானால் யார் இந்தக் கிறிஸ் மனிதர்கள்:

*நள்ளிரவு வேளையில் வீடுகளுக்குள் புகுந்து மக்களைக் கடித்துக் காயப்படுத்தும் செயலில் ஈடுபடுவோர், பொது மக்களால் கைது செய்யப்படும் வேளைகளில் சீருடைப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை ஏதுமின்றிக் கூட்டிச் செல்லப்படுகின்றார்கள்.

*கிறிஸ் மனிதனாக வீடுகளுக்குள் நுழையும் வேளையில் பொது மக்களால் விரட்டப்படுவோர் இராணுவ முகாமினுள் தான் ஓடி அடைக்கலம் தேடிக் கொள்கிறார்கள்.

நிரூபனின் நாற்று வலை

*பொது மக்களால் கைது செய்யப்பட்டு, அடித்து உதை வாங்கினாலும் வாயைத் திறந்து தமது நோக்கம் என்ன என்பதைச் சொல்லாது, மௌனமாக இருந்து விட்டு, சம்பவ இடத்திற்கு பொலிஸாரோ அல்லது படையினரோ வரும் சமயத்தில் அவர்களோடு போய் மறைகிறார்கள் இந்த கிறிஸ் மனிதர்கள்.

அப்படியானால் யார் இந்தக் கிறிஸ் மனிதர்கள்?

Crease+Man.jpg

ஹி....ஹி.....ஹி....விடை மேலே உள்ள மூன்று புள்ளிகளிலும் பொதிந்திருக்கிறது.

**************************************************************************

http://www.thamilnat...og-post_05.html

Edited by Nirupans

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.