Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன்-பிளேக் திங்கள் சந்திப்பு

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ. பிளேக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி சந்தித்து உரையாடவுள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் 12 ஆம் திகதி காலை 7.10 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பற்றி இராஜாங்க செயலாளருடன் சம்பந்தன் உரையாடவிருப்பதாக தெரியவருகிறது.

கடந்த மாத பிற்பகுதியில் வரவிருந்த பிளேக், தவிர்க்க முடியாத காரணத்தினால் இலங்கை விஜயத்தை ஒத்திவைத்தார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கண்டறிவதற்கு வருகை தரும் பிளேக் இலங்கையில் தாம் சந்திக்கவுள்ள நிகழ்ச்சிப்பட்டியலில் இரா.சம்பந்தனை சந்திப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விடயமென தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பின் போது தமிழ் பேசும் மக்களின் பல்வேறு விடயங்கள் பற்றி சம்பந்தன் விரிவாக பேசவுள்ளதாக தெரியவருகிறது.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஆஸ்பத்திரியிலை இருக்கிறார், எண்டு ஆரோ.. சொன்னாங்கள்.

இப்ப குணமாயிட்டாரா?

பிளேக் சம்பந்தரை சந்திப்பது என்பது சிங்களத்திற்கு கசப்பான செய்தி. இது மகிந்த மீது அமெரிக்கா (மேற்குலகம்) நம்பிக்கையை இழந்துள்ளதை வெளிப்படையாக காட்டுகின்றது.

சந்தர்ப்பத்தை சம்பந்தன் ஐயா அவர்கள் நழுவவிடக்கூடாது. மக்களின் துயரங்களை, எண்ணங்களை சொல்ல வேண்டும். மேலும் ஐ.நா. மனித உரிமைகள் தொடரில் சிங்கள தேசத்தை போர்குற்றங்கள் மீது விசாரிக்க கோரல்வேண்டும். தேவையெனில் இந்தியாவையும் மீறி அமெரிக்காவை உதவ கோர வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அவராவது, மசிரைப் புடுங்குவதாவது.

இப்பிடி.. எத்தனை சந்தர்ப்பத்தை தவற விட்ட ஆமைத்தலையன்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா ஈழம் ஈன்றெடுத்த கருணாநிதி!

நீங்கள் யாராவது நினக்குமாப்போல் சம்பந்தர் கேட்பதையெல்லம் துணியிலே முடிச்சு போட்டு செய்து கொடுக்க பிளேக் அப்படியொன்றும் இலகுவான சின்னமாமாவல்ல. வன்மம் நிறைந்த தான் தோன்றி பேர்வழி.

சம்பந்தர் எப்போதுமே தான் மக்களால்தான் தெரியபட்டவர். த.தே.கூ அமைப்பு தலைவரால் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கபட்டது என்பதற்க்காக இந்த பிளேக், த.தே.கூஉடன் பேச மறுத்துவிட்டு JVPயுடன் பேச விரும்ம்பியவர். JVP இவரை சந்திக்க மறுக்க அவர்களின் காரியாலயம் சென்று பேசியவர்.

இவருக்கு இலங்கை அரசு வரவேற்பு கொடுக்காமலிருக்க இவர் ஐறீனை சாட்டிக்கொண்டு நின்றவர். இவர் இந்தியாவில் கடமையாற்றியவர். இலங்கையில் 6 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிவிட்டர். இரண்டு நாடுகளையும் வைத்து இவரால் எதையும் செய்ய முடியவில்லை. இவர்தான் அமெரிக்க சரித்திரத்தில் மிக கூடிய தோல்விகண்ட வெளிநாட்டு உறவுத்துறை அதிகாரி என்ற பட்டம் எடுக்க போகிறார்.

தமிழர்கள் யாரையும் உதாசீனம் செய்யும் நிலையில் இப்போது இல்லை. ஆனால் இவருடன் பேசுவதால் ஒரு பயனும் இருக்காது. எப்படி மகிந்தாவிடம் பேசி ஆனந்தசங்கரியும் சுமந்திரனும் கிறிஸ் மனிதர் விவகாரத்தை கோட்டை விட்டார்களோ அதே மாதிரித்தான் சம்பந்தர் பிளேகிடம் பேசி செய்யும் அலுவல்கள் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தவறு! பிளேக் ஒரு தோல்வியடைந்த ஒரு ராஜதந்திரி அல்ல! தமிழ் ஈழத்தின் காவல் படையை அழிக்கும் திட்டம், நோர்வேயின் சமாதானப் பேச்சு வார்த்தை ஒப்பந்தமிட்ட அன்றே தொடங்கப் பட்டு விட்டது. அதை மிகவும் லாகவமாகச் செய்துh முடித்தவர் இந்த மனிதர்.இதை நிறைவேற்ற , இவர் இந்தியா உள்ளிட்ட சகல வளங்களையும் பயன் படுத்தினார். நோக்கம் நிறைவேறிய பின்பு, எதோ ஒரு நோக்கத்தை அடைய இப்போது முயல்கின்றார்! . அது எமக்குச் சாதகமாக இருக்கலாம்!!!

உண்மை புங்கையூரான்,சந்தர்ப்பங்களையும்,பூகோள அரசியல் மாற்றங்களையம், எமக்குச்சாதகமக்கிக்கொள்வதுதான் இன்றைய கட்டாயமாகும்.

தவறு! பிளேக் ஒரு தோல்வியடைந்த ஒரு ராஜதந்திரி அல்ல! தமிழ் ஈழத்தின் காவல் படையை அழிக்கும் திட்டம், நோர்வேயின் சமாதானப் பேச்சு வார்த்தை ஒப்பந்தமிட்ட அன்றே தொடங்கப் பட்டு விட்டது. அதை மிகவும் லாகவமாகச் செய்துh முடித்தவர் இந்த மனிதர்.இதை நிறைவேற்ற , இவர் இந்தியா உள்ளிட்ட சகல வளங்களையும் பயன் படுத்தினார். நோக்கம் நிறைவேறிய பின்பு, எதோ ஒரு நோக்கத்தை அடைய இப்போது முயல்கின்றார்! . அது எமக்குச் சாதகமாக இருக்கலாம்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.