Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த சூனிய பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைகளை இந்தியா, அமெரிக்கா பார்த்தன: விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

wikileaks-logo_1_2_7-150x140.jpg

யுத்த சூனியப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் விமானத் தாக்குதல் மூலமும் நீண்ட தூர ஆட்டிலரி மற்றும் ஷெல்களின் தாக்குதல் மூலமாகவும் படுகொலை செய்யப்பட்டதை இந்தியாவும் அமெரிக்காவும் செய்மதி மூலம் கவனமாக பார்த்துக் கொண்டிருந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதற்கு 2 கிழமைகளுக்கு முன்பு அமெரிக்க பிரதித் தூதுவராகக் கடமையாற்றிய ஆர்.மூரே ஒரு தூதரகச் செய்தியை அமெரிக்க ராஜாங்க செயலாளருக்கும் வெள்ளை மாளிகைக்கும் அனுப்பினார். அதில் யுத்த சூனிய பகுதியில் நிலவிய சம்பவங்கள் பற்றிய செய்மதிப் படங்களைப் பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷவோடும் அப்போதைய வெளிநாட்டு செயலர் பாலித கொஹனவோடும் பகிர்ந்து கொண்டதாக கூறியிருந்தார். அந்த நேரத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவும் பதிலுக்கு இந்தியாவும் இலங்கை இராணுவத்திற்கு செய்மதி மூலம் உதவிகளை செய்து வருவதாக அமெரிக்க ராஜதந்திரிக்கு கூறினாராம்.

இலங்கை அரசு ஏப்ரல் 27க்குப் பின் அறிவித்த யுத்த சூனியப் பிரதேசத்தில் புதிய ஷெல் தாக்குதல்கள் ஏற்படுத்திய சேதத்தை பற்றிய செய்மதி படங்களை மே 5 ஆம் திகதி ராஜபக்ஷவுடனும் வெளியுறவு செயலர் பாலித கொஹனவுடனும் நடந்த கூட்டத்தில் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உதவி வழங்கும் நாடுகளின் ராஜதந்திரிகளின் கூட்டத்தில் வைத்து கொள்வதின் நிமிர்த்தம் தாம் தனிப்பட்ட ரீதியில் இதை செய்ததாகவும் மூரே தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு பின்பு பெரிய ஆயுதங்கள் மூலம் யுத்த சூனிய பகுதியில் தாக்குதல் ஒன்றும் இடம்பெறவில்லையென முன்னர் ஜனாதிபதி கூறியிருந்தமை குறிபிடத்தக்கது. ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு முன்பும் பின்பும் யுத்த சூனிய பகுதியில் இடம்பெற்ற சேதம் குறித்த படங்களை ஜனாதிபதிக்கும் வெளியுறவு செயலருக்கும் காட்டுமாறும் தமக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் மூரேகூறியிருந்தார்.

நாடுகளின் தூதுவர்களின் மாநாட்டுக்கு முன்பதாக தற்போதைய நிலவரம் பற்றி தன்னிலும் பார்க்க உங்களுக்கு களநிலைமை பற்றி அதிகம் தெரியுமென தன்னிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார் எனவும் மூரே தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக ஜனாதிபதி தனது களத் தளபதிகளிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு கள நிலைவரங்களை கேட்டறிந்தாராம். இந்தியாவிடம் செய்மதிகள் இருப்பதால், கள நிலைவரங்களை பார்க்க முடிகிறது என ராஜபக்ஷ பெருமை கொண்டாராம். நாங்களும் இதை பார்த்துக் கொண்டிருந்தோம் என்பதை இப்போது இலங்கை அரசுக்கு தெரிய வேண்டுமென மூரே பதிலுக்கு கூறியதாக விக்கிலீக்ஸ் செய்தியில் கூறியுள்ளது.

ஜனவரிக்கு பின்பு ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதையும் காயப்பட்டுள்ளதையும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றபோதும் அமெரிக்காவினால் சேதங்களை சரியாக கணிக்க முடியாது என்றும் ஆனால் சேதங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதியாக கூற முடியும் என்றும் கூறும்.

மூரேரயின் தகவலின்படி, அப்போது ஜனாதிபதி இனி அரச படைகள் சிவிலியன்களைத் தாக்க மாட்டார்ளென்றும் ஆனால் யுத்த சூனியப் பகுதியில் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு இயக்குவதாகவும் இவர்கள் மண் அணைகளை மக்களை கொண்டு இடித்து சிவிலியன்களை பாதுகாப்பாக வெளியேற உதவுவார்களெனவும் கூறியிருந்தார்.

இதன் மூலம் யுத்த சூனிய பகுதிற்குள் அரசின் ஆழ ஊடுருவும் படை இயங்குவதை ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார். இங்கு அதிக மக்களும் அகப்பட்டு கொண்டனர். இதன் மூலம் உலக அரங்கில் ஆதிக்கங்களை கொண்டுள்ளவர்களின் அரசியல், இராஜதந்திர இரட்டை வேடங்கள் வெளிவருகின்றது குறிப்பிடத்தக்கது.

யுத்த குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளை உலக வல்லரசுகள் அறிந்தும் செய்திகளை பரிமாறியும் வந்துள்ளன என்பது இதன் மூலம் தெரிகிறது.

மனித உரிமைகளை பாதுகாக்குமாறு சர்வதேச மனித உரிமைகளை பேணுமாறு கோரும் அறிக்கைகளையும் இவை வெளியிட்டு வந்தமை இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த நாடுகளே இன்று மனித உரிமை மீறலுக்காக நீதியான சுதந்திர விசாரணைகளை கோருவது புதுமையானது. இவர்களிடம் இருக்கும் மிகவும் நுட்பமான செய்மதி படங்கள் சர்வவதேச நீதிமன்றத்தில் யுத்த குற்றம் புரிந்தோரை நிறுத்துவதற்கு தாராளமாக உதவும். இதைத்தான் ஐ.நா. செயலர் அறிக்கையும் புலப்படுத்துகிறது. ஐ.நா. வின் அரசியல் அமைப்புகளும் சபைகளும் சிவிலியன்களை பாதுகாப்பதற்கு தவறி விட்டதாக இதன் மூலம் உறுதிப்பட கூறலாம்.

தாங்கள் சிவிலியன்களை பாதுகாப்பதாகவும் ஐ.நா. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க காரியாலயங்களை பாதுகாத்துள்ளதாகவும் பகிரங்கமாகவும் தனியாகவும் கருத்து கூறும் மூத்த சர்வதேச அதிகாரிகள் அன்று பகிரங்கமாக சிவிலியன்களின் சேதங்களைத் தெரிவித்திருந்தால் வன்னியின் நிலைமை உலகுக்கு வெளிவரும்போது பொது மக்களைப் பாதுகாப்பதற்கான கோரிக்கை வலுப் பெற்றிருக்கும் இதை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது.

சர்வதேச மனித உரிமை மீறலுக்கோ அல்லது மனித உரிமைகள் மீறப்படுவதற்கோ கணக்கீட்டைக் கோருவது ஒரு அரசின் கொள்கையோ அல்லது தெரிவோ அல்ல ஆனால், இது உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் கடமையாகும். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மார்ச் 2011இல் வெளியிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.tamilthai.com/?p=26466

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் ஒரு திடுக்கிடும் தகவலா?...உலகத்திற்கே தெரிந்த உண்மை

ரதி அக்காவின் கருத்து உண்மை.

உண்மையலும் உண்மை என்னவென்றால் உலகின் பல வல்லரசுகள் சிறி அரசுடன் ஒன்று சேர்ந்தே எம் போராட்டத்தையும்,தலைமையையும் அழிக்க முற்பட்டு இறுதியில் மௌனிக்க வைத்தது.ஆனால் தமிழர்களுடைய உணர்வுகளையும், அரசியல் கலாச்சார பிரச்சனைகளையும்,சனல் 4 போன்ற உண்மையும் மனிதாபிமானமும் கொண்ட அமைப்புக்களின் ஆதாரங்களையும் இவர்களால் மௌனிக்க வைக்க முடியவில்லை.ஆகவே தற்பொழுது எம் கைவசமுள்ள துருப்புகளை வைத்து நாம் போராடவேண்டும்.கடுமையாக செயல்படவேண்டும், எமக்குச்சாதகமான அரசியல். பூகோள நிலைமைகள் மாறும் வரை.........

நன்றி

பணிவுடன் தமிழ்ச்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்குள் நாங்கள் புடுங்குப்படுவதுபோல் நாடுகள் தமக்கிடையே புடுங்குப்பட முடியாது. நிலமைகள் பாரதூரமாகும்போது சில நகர்வுகளைச் செய்வார்கள். அவை அவர்களது தேவைகளின் நிமிர்த்தமாகவும் இருக்கும். இவ்வாறு செய்யும்போது பிரச்சினைகள் படிப்படியாக அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துகொண்டிருக்கும். இறுதியில் Tipping point ஐ அடைந்துவிட்டால் நடவடிக்கைகள் பகிரங்கமாகத் தெரியவரும். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.