Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த வருடத்தின் இறுதிக்கு முன்பு பேச்சுக்களின் மூலம் தீர்வு

Featured Replies

இந்த வருடத்தின் இறுதிக்கு முன்பு பேச்சுக்களின் மூலம் தீர்வு கிட்டுமென மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டார்

அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வுகிடைக்குமென நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அரசியல் பணிமனை, பாண்டிருப்பு நற்பிட்டிமுனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

அரசுடன் மீண்டும் பேச்சு ஆரம்பிக்கப்பட்டமைக்கு, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தங்கள் காரணமெனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு பற்றிப் பேச வேண்டுமென அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதெனவும் மாவை சேனாதிராஜா கூறினார்.

இதற்கும் போர் குற்றங்களுக்கும் சம்பந்தம் இருந்தாலும் அதனை சம்பந்தப்படுத்தாமல் பேச்சுக்களுக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல், பேசவேண்டுமென விரும்புவதாகவும், தமது அடிப்படைக் கோட்பாடுகளிலோ, கொள்கைகளிலோ எந்தவித விட்டுக்கொடுப்புகளும் செய்யப்போவதில்லையெனவும் அவர் கூறினார்.

பேச்சு மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும், இல்லாவிட்டால், கிடைக்காவிட்டால் சர்வதேச அரங்கிலும், மக்கள் மத்தியிலும் கருத்துக்களை முன்வைத்து மக்களை ஜனநாயக ரீதியாக அணி திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கையில் இயங்கத் தயங்கப்போவதில்லையெனவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9336

//தமது அடிப்படைக் கோட்பாடுகளிலோ, கொள்கைகளிலோ எந்தவித விட்டுக்கொடுப்புகளும் செய்யப்போவதில்லையெனவும் அவர் கூறினார்.

//

மாவை அண்ணை நீங்கள் சொன்னதில உங்களுக்கே நம்பிக்கை இருக்கா? சம்பந்தர் மகிந்தவோடை என்ன கதைத்தார் எண்டு உங்களுக்காவது எதாவது சொன்னாரா?

  • தொடங்கியவர்

மக்களுடைய ஆணையை மீறி தமிழ்க் கூட்டமைப்பு நடக்காது; நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்

எந்த விடயத்திலும் மக்களுடைய ஆணையைத் தமிழத் தேசியக் கூட்டமைப்பு மீறி நடக்காது; எந்தப் பொறிக்குள்ளும் அது சிக்கவும் மாட்டாது இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட அரசியல் அலுவலகம் நேற்று முன்தினம் பாண்டிருப்பு நற்பிட்டி முனை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்தப் பணிமனைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வில்லியம் தோமஸ் தலைமையில் திறப்புவிழா நடைபெற்றது.

இதில் சுமந்திரன் தொடர்ந்து தெரிவித்ததாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பியசேன தமிழ் மக்களுக்கும் கட்சிக்கும் துரோகமிழைத்துச் சென்றதன் பின்னர் அம்பாறை மாவட்டத்துக்கு நாம் வருகை தந்து கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட பணிமனை ஒன்றை இங்கு திறந்து வைக்கவேண்டுமென ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எமது எட்டு மாவட்டங்களிலும் பத்து பணிமனைகளை திறக்க முடிவெடுத்துள்ளோம். யாழ்ப்பாணத்தில் இரண்டு, அம்பாறையில் இரண்டு ஏனைய மாவட்டங்களில் தலா ஒன்று என்ற அடிப்படையில் கட்சியின் மாவட்டப் பணிமனைகளைத் திறப்பதற்கு உத்தேசித்துள்ளோம். இதில் முதலாவது பணிமனை கல்முனையில் திறந்து வைக்கப்படுகிறது.

எடுத்துக் காட்டாகவும், முன்னோடியாகவும் இப்பணிமனை திகழ்வதுடன் இளைஞர்களது அபிலாசைகளும் இப் பணிமனை மூலம் நிறைவேற்ற வேண்டும். இது தவிர இன்று ஊடகங்கள் விநோதமான விடயங்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசோடு ஒரு பேச்சை நடத்தியது. அந்தப் பேச்சு முன்னேற்றம் இல்லையெனச் சொல்லியவுடன் நாங்கள் அதனை இடை நிறுத்தி அரச நிலைப்பாட்டை, அவர்களுடைய பதிலைத் தந்தால் தொடர்ந்து பேசுவோமெனச் செல்லியிருந்தோம். அந்த அடிப்படையில் திரும்பவும் நாங்கள் பேச்சை ஆரம்பித் திருக்கிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேச வேண்டும்; அந்தப் பேச்சின் இறுதி முடிவைத்தான், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் முடிவாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று தெட்டத் தெளிவாக சர்வதேச சமூகம் தெரிவித்து விட்டது

இவ்வேளையில் சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைந்து கிடக்கும் பொறிக்குள் விழப் போகின்றது; அதனை நாங்கள் காப்பாற்றி விட வேண்டும், பொறிக்குள் சிக்கப்போகிறார்கள் என்று தீடீரென அங்கலாய்க்கின்றனர்.

இவர்களது நற்சிந்தனைக்கு நன்றி கூறும் அதேவேளை இப்படியான எந்தவித பொறிக் குள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்காது என்பதையும் எடுத்துக் கூறவிரும்புகின்றோம்.

இன்று தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாக சர்வதேச சமூகமே கூட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அரசு கூட புறக்கணிக்க முடியாத அளவுக்கு, மக்களுடைய வாக்குப் பலத்தினால், தமிழ் மக்களுடைய அபிலாசைகளை எடுத்துக் கூறத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்றுள்ளது.

எனவே நாங்கள் செய்யும் கருமங்களைப் பொறுப்போடு செய்வோம். முதிர்ச்சியடைந்த, காலா காலமாக நீங்கள் அறிந்த தலைவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்குகின்ற கட்சி தான் நமது கட்சியாகும். விசேடமாக இளைஞர்கள் அணி திரண்டு கட்சிக்கு மெருகூட்டி மேலும் வலுவடை யச் செய்ய வேண்டும். என்றார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் செயலாளரும், நாடாளு மன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் ஹென்ரி மகேந்திரன், முதன்மை வேட்பாளர் கு.ஏகாம் பரம் ஆகியோரும் உரையாற்றினர்.

http://onlineuthayan...152571821380317

முதலில் மாவையின் புத்திரி/ புதல்வனை முன்னுக்கு போராட அனுப்பவும்....நாங்கள் பின்னால வாறம்...ஹீ..ஹீ..உங்கட மகள் இந்தியாவிலையாமே??? உண்மையா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.