Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்-4 போர்க்குற்ற ஆவணப்படம் கனடிய பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் திரையிட முயற்சி! சிறிலங்காவுக்கு மேலும் கனடிய நெருக்கடி எழலாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[sunday, 2011-09-25 13:12:27]

Parliament_Hill_ottawa150_250911.jpg

சனல்-4 வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணத் திரைப்படத்தைக் கனடியப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் வாரங்களிற்குள் திரையிட மனிதவுரிமை கண்காணிப்பகம் நேரடியாக முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரியவருகிறது. மனிதவுரிமை கண்காணிப்பகம் ஆரம்ப காலத்தில் விடுதலைப்புலிகளை தீவிரமாக எதிர்க்கும் ஒரு மனித அமைப்பாக செயற்பட்டு வந்தது. குறிப்பாக கனடாவில் விடுதலைப் புலிகளையும் உலகத் தமிழர் இயக்கத்தையும் தடை செய்வதற்காக நேரடியாக அது முழு மூச்சாக ஈடுபட்டது.

மேற்படி விடுதலைப்புலிகளின் தடை தொடர்பான ஆவணத்திலும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளைக் கனடாவில் தடை செய்வதாக கொன்சவேட்டிவ் அரசு அறிவித்திருந்தது.

அதே அமைப்பு சிறீலங்காவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வகையிலான ஆவணத்தை திரையிட முன்வந்தது உண்மையிலேயே ஒரு சாதகமான மாற்றமாகவே பார்க்கப்படுகிறது.

jo-becker-150_news250911_001.jpg

திருமதி ஜோ பெக்கர்..

மனிதவுரிமைக் கண்பாணிப்பகம் விடுதலைப்புலிகளைக் கனடாவில் தடைசெய்ய முழு மூச்சாக உதவியதற்கான காரணமாக அதன் இணைப்பாளர் திருமதி ஜோ பெக்கர் தமிழர்கள் அதிகமாக வாழும் கனடாவின் ஸ்காபரோ நகரில் வைத்த கருத்தரங்கை விடுதலைப்புலிகளின் ஆதரவு அரசியற் செய்றபாட்டாளர்கள் கூக்குரலிட்டு அது இடம்பெறாமல் குழப்பியடித்தார்கள் என்றும் மேற்குலகிலலேயே இவ்வாறு விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் செய்தால் இவர்கள் சிறீலங்காவில் எவ்வாறு மக்களிற்கெதிரான செயற்பாட்டை மேற்கொள்வார்கள் என்ற ஒரு கருத்தை ஏற்படுத்தக் கூடியவகையில் இந்த பண்பற்ற மலினச் செயற்பாடு வழிவகுத்ததுடன், அமைப்புக்களைத் தடை செய்யவும் காரணமாயிற்று.

குறிப்பாக விவேகமற்ற செயற்பாடுகளின் மூலம் ஒரு மனிதவுரிமை அமைப்பை கோபப்படுத்தி விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு வழி செய்ததே அதற்கு உதவுவதாக தங்களை மக்களிற்கு அடையாளம் காட்டியவர்களே அமைந்தது ஈழத் தமிழர்களின் வாழ்வியலில் என்றுமே மறக்கமுடியாத மாபெரும் துன்ப நிகழ்வாகும்.

இந் நிலையில் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் உச்சமடைந்ததையடுத்து அது தனது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது. குறிப்பாக யுத்தக் குற்ற விசாரணை தொடர்பான அழுத்தங்களைக் கொடுப்பதற்கு அது தன்னாலான வகையில் செயற்பட்டு வருகிறது. இந்த மாற்றம் நிச்சயமாக தமிழர்கள் குறித்த சர்வதேசப் பார்வையை மாற்றி வருகிறது.

இதன் ஒரு அங்கமாகவே பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் தயாரிப்பான கொலைக்களம் என்ற ஆவணம் எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள கேட்போர் கூடங்கள் ஒன்றில் திரையிடப்படவுள்ளது.

தமிழர்களிற்கு ஆதரவாகச் செயற்படும் சிறீலங்காவிற்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திச் செயற்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=50233&category=TamilNews&language=tamil

HRWச்சேர்ந்த இந்த அம்மையார், ஜோ பெக்கர், மற்றையவர்களுடன் சேர்ந்து இந்த ஆவணப்படத்தை திரையிட முயன்றால் அதற்கு நாம் நிச்சயம் நன்றிக்கடமைப்பட்டவர்கள்.

அதேவேளை இந்த அம்மையார் 'சிறுவர்களை இயக்கத்தில் சேர்ப்பது, நிதி சேர்த்தார்கள்' என்ற இரு குற்றச்சாட்டுக்களை தீவிரமாக முன்னெடுத்தவர். கனடாவின் முன்னணி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை சந்தித்து தடை செய்யக்கோரி ஆசிரியர் தலையங்கம் எழுத வைத்தவர். பல கருத்தரங்குகளை முன்னெடுத்தவர். டொராண்டோ காவல்துறை அதிகாரியை சந்தித்து பணம் சேர்ப்பவர்களை கைது செய்யவேண்டும் என வேண்டியவர். இதனால் பலரும் இன்றும் சிறையில் உள்ளனர். தடை இன்றும் உள்ளது.

ஆனால், ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படும் பொழுது அமைதி காத்தார். அதன் பின்னர் மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு இன்றுவரை அமைதி காத்தார். அதனால் தமிழர்களில் ஒரு பகுதியினர் கோபம் கொண்டது உண்மையே, அதுவும் நியாயமாக தெரிகின்றது.

Channel 4 Documentary "Sri Lanka's Killing Fields" screened at Canadian Parliament

Emotions were high at the conclusion of the screening of Channel 4 documentary "Sri Lanka's Killing Fields" in Canadian Parliament today. Approximately 20 MP's along with their staff were present for the screening. The attendees who watched the Channel 4 documentary were all shocked at what they had just witnessed and had never imagined such horrendous events would take place on the tiny island of Sri Lanka. From the many conversations that were taking place afterwards, it was clear that perpetrators had to be held accountable and Canada indeed has to take a leadership role.

NDP MP Rathika Sitsabaiesan (Scarborough-Rouge River), Conservative Party MP Patrick Brown (Barrie) and Liberal Party MP John McKay (Scarborough-Guildwood) co-hosted the screening.

Elaine Pearson, Deputy Director (Asia Division) of Human Rights Watch who presented the event said "only an independent investigation from the international community, not one held by LLRC will bring justice and accountability of the Sri Lankan government. Canada must lobby other like minded nations, like India, Indonesia in the upcoming UN Human Rights Council in March 2012."

“I’m very pleased that all parties came together to host this event. This issue runs deeper than political ties, and it is very important we all work together to raise awareness of this issue and to engage in an open dialogue concerning the atrocities that took place in Sri Lanka.” said Rathika Sitsabaiesan MP for Scarborough-Rouge River.

Conservative Party MP for Barrie, Patrick Brown said he has been aware of the situation in Sri Lanka through his constituents and will continue to advocate for accountability and justice.

"I have watched the documentary several times, and it has always been difficult to watch. Canada is a nation that values human rights and Canada bears responsibility to the 300,000 Tamil Canadians here." said John McKay, Liberal Party MP for Scarborough-Guildwood.

Some photos from the event

ch4_ottawa1.jpg

ch4_ottawa3.jpg

ch4_ottawa2.JPG

ch4_ottawa4.jpg

ch4_ottawa5.jpg

http://www.tamilcana...om/article/6172

Edited by akootha

இலங்கையின் கொலைக்களங்கள் விவரணத்தை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வை!

கனேடிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் இலங்கையின் கொலைக்களங்கள் விவரணம் திரையிடப்பட்ட நிகழ்வில், சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது உதவியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

அவர்கள், அந்த விவரணத்தில் காண்பிக்கப்பட்ட விடயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள்.

அனைத்துலக சமுகம் நடத்தும் சுதந்திரமான விசாரணை ஒன்றின் மூலம்தான், இல்ஙகையில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த எலைன் பியர்சன் தனது உரையில் தெரிவித்தார். ஒருமித்த கருத்தைக் கொண்ட நாடுகளின் ஆதரவை இதற்குக் கனடா திரட்டவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

கனேடியத் தமிழர் தேசிய அவையின் வேண்டுகோளின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் பட்றிக் பிறவுண் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ராதிகா சிற்சபைஈசன், ஜோன் மக்கே ஆகியோரும் பட்றிக் பிறவுணுடன் இணைந்து இந்த நிகழ்வின் ஏற்பாடுகளில் பங்கெடுத்தார்கள்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9457

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.