Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோரின் விபரங்கள் வெளியிடப்படும் என்கிறார் இமெல்டா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-GA-Imelda-Sukumar-150x150.jpg

‘யாழ். குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை தொடர்பான முறைப்பாடுகள் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறாக பெண்கள் மீது பாலியல் ரீதியல் துன்புறுத்தும் நபர்கள் குறித்த விபரங்களை எதிர்காலத்தில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடவுள்ளேன்’ என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்கிழமை காலை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் பாடசாலைகளிலும், பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு வருகின்றனர். இவை தொடர்பில் இதுவரையில் 126 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பான பெயர் விபரங்கள் எம்மிடம் உள்ளன. எதிர்காலத்தில் அவர்களின் பெயர் விபரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட் பாவனையும் அதிகரித்துள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான விழிப்புணர்வு தற்போது அவசியமாக இருக்கின்றது’ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.saritham.com/?p=35923

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து தயக்கம் இன்றி உடனே அந்த நல்ல காரியத்தை செய்யுங்கள்

இது இவ ஐ.நாவில் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில் சம்பந்தமான நடவடிக்கை. ஓடோடென்று ஓடிபோய் நின்று மூன்று நாலு காளைவாய்களினது பெயரை பிரசுரித்து, ஆமியையும் ஒட்டு குழுவையும் காப்பாத்தும் படி பணிக்கபட்டிருக்கிறா.

"யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் பாடசாலைகளிலும், பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு வருகின்றனர்." இந்த ஒரு வசனத்துடன் சகலரையும் காப்பாத்திவிட்டா. இப்போது பாடசாலை ஆசிரியர்களும், சாதாரண அலுவலக உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாணத்தில் உலக பிரபலமான பாலியல் குற்றங்களை செய்கிறார்கள் என்பது அம்மாவின் விளக்கம்.

மேலும் விளக்கமளிக்க போனல், இந்த பாடசாலை ஆசிரியர்களும், சாதாரண அலுவலக உத்தியோகத்தர்களும்தான் ஐ.நா சமாதானப்படைக்கு இலங்கையரை தெரிய விரும்பாததற்கு காரணம். இவர்கள்தான் இலங்கைக்கு ஆசியாவில் அதிக(கோமணத்தொழிலில்) வளர்ச்சி அடையும் நாடாக பெயரீட்டி கொடுத்திருக்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.