Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இனத்தின் போராட்ட வடிவங்கள் மாறின ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SAM_0375-140x140.jpg

எமது இனத்தின் போராட்டம் என்பது வரையறுக்கப்பட்டதல்ல. சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் கல்விக்கான உமைப்போராட்டமாக ஆரம்பித்து இறுதியில் ஒட்டுமொத்த தேசத்தினை மீட்கும் போராக பரிணாமம் பெற்றதை எவரும் மறுதலிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகர சபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் தெவித்ததார்.

மன்னார் நகரசபை மண்டபத்தில் நடை பெற்ற என்.எல்.எச்.கல்வி நிலையத்தின் ஓராண்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்விற்கு மேற்படி கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் இராஜ்மோகன் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோக ராதலிங்கம் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக மன்னார் நகரசபை தலைவர் ச.ஞானப்பிரகாசம், உபதலைவர் ஜேம்ஸ் யேசுதாசன் மற்றும் வவுனியா மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ரதன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று இம் மண்டபத்தில் நாங்கள் கூடியிருப்பது ஒரு கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்விலேயே ஆகும். ஒரு சமூகத்தின் கண் கல்வி என நாம் உணர்கிறோம்.

மன்னார் மாவட்ட கல்வித் தரம் தற்போது வேகமாக அதிகத்து வருகின்றது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இம்மாவட்டதில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் தொகை அதிகத்துள்ளது.

அண்மையில் வெளியாகிய புலமைப் பரிசில் பட்ரீசையில் மன்னார் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியும் அதிகத்துள்ளது.

இதற்கு பாடசாலைகளும் தனியார் கல்வி நிறுவனங்களும் பெரிதும் துணை நிற்கின்றன.

எங்கள் இனம் இன்று யாவற்றையும் இழந்து நிற்கின்றது. 60 வருடங்களுக்கு மேலாக நாம் போராடுகின்றோம். போராட்ட வடிவங்கள் மாறின. ஆனால் போராட்ட இலட்சியங்கள் மாறவில்லை. 1972 ஆம் ஆண்டு தனிச்சிங்களச்சட்டம் கொண்டு வந்தார்கள். அதனால் தமிழினம் பாதிக்கப்பட்டது.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் தமிழினத்தின் மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவ்வாறு கல்வியில் எமது இனம் புறக்கணிக்கணிப்பட்டமையால் தான் எமது போராட்டம் மண்ணை மீட்பதனை நோக்கமாகக் கொண்டு தாயகத்தின் தேசத்தின் விடுதலை போராட்டமாக மாறி 30 வருடகால தந்தை செல்வாவின் அகிம்சை வழியிலான போராட்டம் அதன்பின் 30 வருடகால ஆயுதப்போரும் எமக்கு புதிய உத்வேகத்தை தந்துள்ளது.

எமது இனம் கல்வியிலும் யாருக்கும் சோடைபோன இனம் அல்ல என்பதை அண்மையில் வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் நாம் நிரூபித்துள்ளோம்.

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற முல்லைத்தீவு நெத்தலியாறு பாடசாலை மாணவன் சேதுராகவனை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. மிகவும் கஷ்டப்பட்ட சூழ்நிலையில் பிறந்த இம் மாணவன் தரம் ஒன்றில் கற்கும் போது செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீதான தாக்குதலில் உயிழந்த சிறார்களைப் பார்த்தவன்.

தரம் இரண்டில் கற்கும்போது இறுதி யுத்தத்தின் செல்வீச்சினையும் பல்குழல் பீரங்கிகளின் சத்தத்தையும் கேட்டான். தரம் மூன்றில் புதுமாத்தாளன், வலைஞர் மடம், பொக்கணை, இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை சென்று 2009 இல் மே மாதம் அடைக்கப்பட்ட முட்கம்பி வேலிக்கு மத்தியில் செட்டிக்குளம் நலன்பு முகாமில் வசித்து வந்தான்.

இறுதியில் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையில் அடிப்படை வசதிகளின்றி குப்பி விளக்கில் கற்று இம்மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைபடைத்தமை எமது தேசத்தின் வரலாறு மிகுந்த நிகழ்வாகும்.

அயராத ஊக்கத்தினால் பெற்றோரின் கடும் முயற்சியினால் எமது இனத்திற்கும் மண்ணிற்கும் இம் மாணவன் பெருமை சேர்த்துள்ளான். நாம் இதனை அரசியல் ரீதியாக நோக்கவில்லை. இம் மாணவனை புகழின் உச்சத்திற்கு கொண்டுசென்று அழிக்க விரும்பவில்லை. உண்மையைக் கூறுகிறோம். யதார்த்தத்தை விளக்குகின்றோம்.

அண்மைக்காலங்களாக பல பத்திரிகைகளில் மன்னாரில் நடைபெறும் கலாசார சீரழிவுகள் தொடர்பாக பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

பஸ் நிலையத்தில் ஏற்படுகின்ற சீரழிவுகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் செல்லும் மாணவர்களின் நிலைப்பாடுகள் என பல செய்திகள் வெளிவருகின்றது.

எமது இனத்தினைச் சார்ந்த வடகிழக்கு இணைந்த எமது தாயகத்தின் அத்தனை மாவட்ட உறவுளும் எமது மண்ணின் விடுதலைக்காக இழந்த உயிழப்புகள் தியாகங்கள் என்பவற்றை நினைவில் கொண்டு கலாசாரத்தை கட்டி காக்கின்றவர்களாக மாற வேண்டும்.

கல்வியில், கலாச்சாரத்தில் நாம் விழுவோமானால் அது எமது தேசத்தை கூறு போட நினைப்பவர்களுக்கு வாய்ப்பாகிவிடும். எனவே இச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என்றார்.

இறுதியாக வவுனியா நகரசபையின் உப தலைவர் எம்.எம்.ரதனின் பன்னிரண்டு வருடகால ஆசிய பணிகளையும் இந்து நாரீககம் சார்ந்த நூல் வெளியீட்டுப் பணிகளையும் பாராட்டி மன்னார் கல்விச் சமூகத்தின் சார்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் மற்றும் மூன்றாம்பிட்டி அ.த.க.பாடசாலை அதிபர் ல. அமலகுமார் ஆகியோனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

http://www.tamilthai.com/?p=27444

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.