Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் அலரிமாளிகை நாடகம் - அனைத்துலக சமூகத்தை திசைதிருப்பும் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Release.jpg

[ சனிக்கிழமை, 01 ஒக்ரோபர் 2011, 03:13 GMT ] [ தா.அருணாசலம் ]

அதிகரித்து வரும் அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க முன்னாள் போராளிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனைவதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அலரிமாளிகையில் வைத்து நேற்று 1800 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வு, அனைத்துலக சமூகத்தின் ஆதரவை இலக்கு வைத்து நடத்தப்பட்டதே என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளை வெளிநாட்டு இராஜதந்திரிகளையோ, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு உள்ளிட்ட அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளின் பிரதிநிதிகளையோ பார்வையிட அனுமதிக்காத சிறிலங்கா அரசாங்கம், இப்போது வெளிநாட்டு இராஜதந்திரிகளின் முன்னிலையில் அவர்களை விடுதலை செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Release1.jpg

Release2.jpg

Release3.jpg

நேற்றைய நிகழ்வில் இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றெனிஸ், மற்றும் பல்வேறு நாடுகளின் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

புனர்வாழ்வின் போது தொழிற்பயிற்சிகளை நிறைவு முன்னாள் போராளிகளுக்கான சான்றிதழ்களையும் வெளிநாட்டு இராஜதந்திரிகளே வழங்கியுள்ளனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்திலும், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் நியுயோர்க்கில் நடத்திய சந்திப்புகளின் போதும், சிறிலங்கா அரசு கடும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

போர்க்குற்ற விசாரணைகள் குறித்த அனைத்துலக அழுத்தங்களை சமாளிப்பதற்கும், இந்தமாத இறுதியில் பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில், அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை தவிர்ப்பதற்குமே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பிய கையோடு அனைத்துலக இராஜதந்திரிகளின் முன்னிலையில் பெருமளவு முன்னாள் போராளிகளை விடுதலை செய்துள்ளதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கருத்து வெளியிட்டுள்ளன.

http://www.puthinapp...?20111001104789

புனர்வாழ்வு பெற்ற 1800 முன்னாள் போராளிகள் விடுவிப்பு – எஞ்சியோர் மீது சட்டநடவடிக்கை? [ சனிக்கிழமை, 01 ஒக்ரோபர் 2011, 02:29 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] MR-release.jpgபோரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த 1800 முன்னாள் போராளிகளை சிறிலங்கா அரசாங்கம் நேற்று விடுதலை செய்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான அலரி மாளிகையில் பல்வேறு நாடுகளினதும் இராஜதந்திரிகள் முன்னிலையில், 1800 முன்னாள் போராளிகளையும் விடுதலை செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

புனர்வாழ்வு பெற்று விடுதலையாகும் முன்னாள் போராளிகளின் இறுதி அணி இதுவே என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் சிறிலங்கா படையினரின் புனர்வாழ்வு முகாம்களில் மேலும் நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

MR-release1.jpg

Tamil%20parents.jpg

புனர்வாழ்வு அளிக்கப்ப்படும் முன்னாள் போராளிகள் அனைவரும் இந்த ஆண்டு இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.

இந்தநிலையில், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் இறுதி அணியே நேற்று விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இன்னமும் தடுப்பில் உள்ள முன்னாள் போராளிகளின் உறவினர்கள் மத்தியில் கவலையையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த சுமார் 12,000 போராளிகளில் சுமார் 800 வரையானோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்தது.

கடந்தவாரம் நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 2000 முன்னாள் போராளிகள் மீது நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

இதனால் புனர்வாழ்வு அளிக்கப்படும் ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் மீதும் சிறிலங்கா அரசாங்கம் சட்டநடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20111001104788

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.