Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மக்களும் ஏற்கும் அரசியல் தீர்வே எட்டப்படும் ; சம்பந்தன்

Featured Replies

வியாழக்கிழமை, 06 அக்டோபர் 2011 04:42

இனப்பிரச்சினைக்கு காணப்படவுள்ள அரசியல் தீர்வானது தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும் அது ஏற்றுகக் கொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே எமது முயற்சியாக இருக்கும். தீர்வு குறித்த அரசுடனான பேச்சின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் அதிக கவனம் எடுத்து செயற்படும் எனத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சம்பந்தன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது. இப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் பலம் எமக்கு இல்லாமல் இருப்பினும் இப்பிரதேச மக்களின் நலன்களுக்காக பயன்தரமிக்க பங்களிப்பை வழங்க முடியும் என்பதை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதைத் தேர்தல் மூலம் தெரியப்படுத்தலாம்.

மேலும் தமிழ் வாக்காளர்கள் ஒன்றுபட்டு நின்று நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஒருமனதாக ஆதரிக்கின்றோம் என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும்.

யுத்தம் மற்றும் பேரழிவிற்குப் பின்னர் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்ற தேவை பொருத்தமான இடங்களில் வழமைக்கு மாறான முக்கியத்துவத்துடன் உருவாகியுள்ளது.

நாட்டின் எதிர்கால நலன் குறித்த ஏனைய முக்கிய பிரச்சினைகளானவை, தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு காணுவதுடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.

ஜனநாயகம், அடிப்படை மனித உரிமைகள், அனைவரையும் உள்ளடக் கும் தன்மை, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் அடிப் படையில் தான் இவற்றை அடையலாம். தமிழ் மக்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும் போது மேற்கூறப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் வாக்குகளை அளிக்கும்போதுதான் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதான தீர்வைக் காணக் கூடியதாக இருக்க முடியும், அத்துடன் அவர்களுக்கு சமமான பிரஜைகள் என்ற அந்தஸ்தை வழங்குவதாகவும் அது அமையும்.

தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை உருவாக்கு முகமாக அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளூராட்சித் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்ட மைப்புக்கு பலமான ஆதரவை நல்கியது டன் தங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு ஒன்றை பேச்சுவார்த்தை மூலம் காணும்படி தெளிவான ஜனநாயக ஆணையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுமுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப் பணியை செய்து முடிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளது. இப்பணியைச் செய்து முடிப்பதற்கான பலத்தை தமிழ் வாக் காளர்கள் தமிழ்த் தேசியக்டி கூட்டமைப்புக்கு மீண்டும் உறுதிப்படுத்தி வெளிக்காட்டுவது கட்டாயமானதாகும்.

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதானதும் நியாயமானதும் நேர்மையானதுமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். முஸ்லிம் சகோதரர்களின் அக்கறைகள் குறித்து நாம் குறிப்பாக கரிசனை கொண்டுள்ளோம். காணப்படவுள்ள அரசியல் தீர்வானது தமிழ் மக்களால் ஏற்றுகொள்ளக்கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும் ஏற்றுகொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே எமது முயற்சியாக இருக்கும்.

சிங்கள சகோதரர்களின் நியாயமான உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையாது வடக்கு கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழ் பேசும் மக்களின் பொதுவான அக்கறைகளான எமது தனித்துவம், எமது பாதுகாப்பு, பிரதேச வளங்கள் மற்றும் எமது பொருளாதார, சமூக, கலாசார நலன்களைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இலக்குகளை அடைவதற்கு நாம் தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

இந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படும் நாள் விரைவில் வந்தேயாகும். எதிர்வரும் கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்று மக்களை நாம் வேண்டு கின்றோம்.

http://www.sankamam.com/beta/index.php/news/eelam-srilanka/7931-2011-10-06-04-47-41.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.