Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிருக்காகப் போராடும் தமிழ் அரசியல் கைதி ஜெகதீஸ்வரனின் உயிரைக் காப்பாற்றுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சகல மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

உயிருக்காகப் போராடும் தமிழ் அரசியல் கைதி ஜெகதீஸ்வரனின் உயிரைக் காப்பாற்றுங்கள்.

jega.jpg

போரின்போது படுகாயமடைந்ததால் இரத்தமாற்று நோய்க்கும் சிறுநீரக வியாதிக்கும் ஆளான திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த இராஜேந்திரம் ஜெகதீஸ்வரன் (32 வயது) என்ற தமிழ் அரசியல் கைதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றார்.

கொழும்பு விளக்க மறியல் சிறைச்சாலையில் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற யுத்தத்தில் படுகாயமடைந்து கப்பல் மூலமாக திருகோணமலை வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது 2009.09.21 இல் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் (சிறை இல : 1981)

இவருடைய மனைவியான ரஜீதா என்பவரும் போரின்போது காயப்பட்டு ஒரு காலை இழந்த நிலையில் தற்போது வவுனியாவில் வசித்து வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

2009 இல் வன்னியில் இடம்பெற்ற குண்டுவீச்சினால் இவர் படுகாயமடைந்தபோது சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் அரச புலனாய்வினரால் கைதுசெய்யப்பட்டதனால் சிகிச்சையை தொடர முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டார் இதன் பின்பு இவரின் இரண்டு சிறுநீரகங்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் யூ பிரிவு சிறுநீரகம் அவசரமாக மாற்ற வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கைகளில் விலங்கு பூட்டப்பட்டு சிறைச்சாலை காவலாளிகளின் பாதுகாப்பிலேயே இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் அத்துடன் உறவினர்கள் இவரைப் பார்வையிடுவதற்கும் பாதுகாப்பு தரப்பினர் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக உறவினர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள இந்தக் கைதி எவ்வாறு வன்முறையில் ஈடுபட முடியும் அப்படி இருக்க ஏன் இவரின் கைகளில் விலங்கு போட்டு சிகிச்சை அளிப்பதற்கு இடையூறான செயற்பாடுகளில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுகின்றனர்.

மேலும் இவருக்கு சிறுநீரகம் புதிதாக மாற்றப்படுமானால் இவரை தகுந்த சுகாதார வசதிகளுடன் பராமரிக்க வேண்டும் அவ்வாறாயின் கைதியான இவர் சிறைச்சாலையில் இருந்துகொண்டு எவ்வாறு பராமரிக்கப்படுவார் எனவே இந்த சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை இவருக்கு மேற்கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கு முன் இவர் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே போரினால் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டுவந்த ஒருவரை பயங்கரவாத சந்தேகத்தின் பெயரில் சிறையில் அடைத்து அவரின் நோய்க்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சையை தடுத்து அவரை கொலை செய்ய நினைப்பது ஒரு நீதியான விடயமாகுமா?

எனவே குறித்த கைதியை விடுதலை செய்வதற்கும் அவருக்கு சுதந்திரமான முறையில் சிகிச்சை அழிப்பதற்கும் வேண்டிய சூழ்நிலையை உருவாக்க சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.