Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை அவமதிக்கும் வகையில் கொழும்பு விழாவில் பேசிய பிஜேபி தலைவர் முரளி மனோகர் ஜோஷி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

resize_20111005214203.jpg

ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை அழிக்க காங்கிரஸ் அரசுதான் துணை புரிந்தது!’என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க… இந்திய எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யிடம் நியாயம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் பிரிட்டன் ஈழத் தமிழர்கள். அடுத்து, பி.ஜே.பி. ஆட்சிக்கு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், அவர்களாவது தமிழர்களின் நியாயத் துக்காக நிற்க வேண்டும் என்பதை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

p45a-300x208.jpgகடந்த மாதம் டெல்லிக்கு வந்த ‘பிரித்தானிய தமிழர் பேரவை’யின் தலைவர்களில் ஒருவரான பத்மநாதன் தலைமையிலான குழுவினர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் பி.ஜே.பி-யின் முன்னணித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலரையும் சந்தித்துப் பேசினர்.

இதற்கிடையில், இலங்கை வருமாறு சுஷ்மா சுவராஜுக்கு அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்திருந்தது. ‘போர் பாதிப்புகளை சுதந்திரமாகப் பார்வையிட வெளிநாட்டு ஊடகங்கள், தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு மறுக்கும் நிலையில்… சுஷ்மா அங்கு சென்றால் போர்க் குற்றம் சாட்டப்படும் அரசுக்கு ஆதரவாக அமைந்துவிடும்’ என்று பிரிட்டன் தமிழர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதை ஏற்றுக்கொண்ட சுஷ்மா, உடனே இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்துவிட்டார்.

ஆனால், பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, திடீரென இலங்கைக்குப் பயணம் செய்தார். சிங்கள இன வெறியர்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் ‘அனகாரிக தர்மபாலா’ என்ற புத்த மார்க்கவாதியின் நினைவு நிகழ்வில் ஜோஷி விரிவுரை ஆற்றினார். இலங்கை பிரதமர் ஜெயரத்ன, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் உள்பட பலருடனும் பேசினார்.

பிp45.jpgன்னர் பேசிய ஜோஷி, ”வன்முறை நீங்கிய அமைதி தவழும் நாடாக இலங்கை மாற வேண்டும். அதற்கு ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என அனைத்து இலங்கையர்களும் பணியாற்ற வேண்டும்!” என்கிறபடி கருத்து வெளியிட, புலம்பெயர் ஈழத் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு! ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இருந்து ஆதரவுக் குரல் கொடுத்துவரும் இந்து ஆதரவு அமைப்புகள் தனி ஈழ நாட்டுக்கு ஆதரவளித்து வந்த நிலையில்… ஜோஷியின் கொழும்புப் பேச்சு புலம்பெயர் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

”ஏதோ ஒரு காரணத்துக்காக ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களைக் கருவறுத்துக் கொன்றதற்கு காங்கிரஸ் கட்சி துணையாக நின்றது. படுகொலைக்கு எதிராகவும், ஈழத் தமிழருக்கு ஆதரவாகவும் நடந்துகொண்ட பி.ஜே.பி., இப்போது காங்கிரஸ் வழியிலேயே செல்கிறதா? கட்சியின் நிலைப் பாட்டுக்கு மாறாக மூத்த தலைவரான ஜோஷி பேசலாமா?” என அடுத்தடுத்து கேள்விகளை அள்ளி வீசுகிறார்கள், பிரிட்டன் தமிழர்கள். பி.ஜே.பி. மூத்த தலைவர்களை சந்தித்துவிட்டுச் சென்ற பிரித்தானிய தமிழர் பேரவையின் பத்மநாதனிடம் நாம் இதுபற்றி கேட்டோம்.

”இலங்கைத் தீவில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு முன்பே, ஈழத் தமிழருக்கு தனியான அரசு செயல்பட்டது. சிங்களர்களின் கையில் அதிகாரம் வந்ததும் தமிழரின் அரசாட்சி பறிபோனது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி ஆட்சி என அமைதி முறையில் தமிழர்கள் போராடினர். எதையுமே தர சிங்களத் தரப்பு முன்வரவில்லை. அன்று முதல் இன்று வரை திட்டமிட்ட இனப் படுகொலைகளை நடத்திவருகிறது. ஈழத் தமிழர்களை எங்களின் பாரம்பரியப் பிரதேசங்களைவிட்டு அகற்றி, அந்த நிலத்தை இலங்கை அரசு தனதாக்கிக்கொண்டு வருகிறது. புத்த மதத்தைப் பின்பற்றாத தமிழ் மக்களின் நிலங்களில், புத்த சின்னங்களை அமைத்து, ஈழத்தை சிங்கள பவுத்தமயமாக்கி வருகிறார்கள்.

இது ஒரு முழுமையான இன அழிப்பு. போர் முடிந்த பிறகும் ஈழத்தில் தமிழர்களின் துன்பம் தீரவில்லை. ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், இலங்கை அரசு செய்த இனப் படுகொலை, போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக சுதந்திரமான விசாரணைக் குழு வேண்டும் என்கிறார், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். ஐரோப்பிய நாடாளுமன்றமும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியாவும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆறரை கோடி தமிழ் மக்களும் வாழும் பாரதத்தை ஆளப் போகிறவர்கள், இதை முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும். வரலாற்றில் இருந்த தனி ஈழ அரசையும் மீட்டுத்தர வேண்டும். ஈழத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அவாவும் இதுதான்!” என்று முடித்தார் பத்மநாதன்.

http://www.tamilthai.com/?p=27956

பி. ஜே. பி. இன் வட இந்தியத் தலைவர்கள் ஹிந்தி வெறியர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு இந்தியாவின் மூத்த மொழியான தமிழ் கசப்பானது. எனவே அவர்களை நாம் பயன்படுத்த வேண்டுமே ஒழிய நம்பவே கூடாது. சில்லறைக் காசு கூட கொடுக்கக் கூடாது. இந்த ஹிந்தி (ஹிந்து) வெறியர்களுக்கும் ஈழத்தமிழரின் பணம் மேல் ஒரு கண் உண்டு.

எலும்புத் துண்டை காட்டி (கொடுக்கவே கூடாது) இவர்களை பின்னால் அலைய வைத்தால் பிரித்தானியத் தமிழரின் முயற்சி வெற்றிபெறும்.

சுஷ்மாவின் பயணத்தை பிற்போடுவதால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பமுடியாது. முடிந்தளவு விரைவாக சென்று அழிவுகளை பார்ப்பதே நல்லது. ஆனால் அரச பயங்கரவாதிகளின் பிரசன்னம் இல்லாமல், சுதந்திரமாக யாழில் 3 தினங்கள், கிளிநொச்சி - முல்லைத்தீவில் யாழில் 2 தினங்கள், பூநகரி - மன்னாரில் 2 தினங்கள், மட்டக்களப்பு - பொத்துவில்லில் 3 தினங்கள் கட்டாயம் தங்கி (கூட்டமைப்பினர், பல்கலைக்கழக மாணவர் உதவியுடன்) மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும், கார் / வானில் மட்டும் செல்லவேண்டும் (வான் மார்க்கமல்ல) என்று கூறி இவர்களை அனுப்புவது நல்லது. அரச கைக்கூலிகளை பற்றிய விளக்கமும் கொடுக்கப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.