Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் தொடரும் உள்நாட்டுப் போர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச அரங்கிலும் உள்நாட்டு மீடியாக்களிலும் அதிகம் பேசப்படாத தொடர்ச்சியான உள்நாட்டுப் போர் இந்திய நாட்டில் நடக்கிறது. நக்சலைற்றுகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் இடதுசாரிகள் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போரை நடத்துகின்றனர்.

மேற்கு வங்காள நக்சல்பாரி கிராமத்தில் நடந்த கிளர்ச்சி காரணமாக நக்சல், நக்சலைற், நக்சல்வாதி என்ற பெயருடன் நிலமற்றோர், சாதிக் கொடுமைக்கு ஆளானோர், பொலிஸ் மற்றும் இராணுவ வன்முறையால் பாதிக்கப்பட்டோர், வேலையற்றோர் போன்றவர்களின் கூட்டு நடவடிக்கையாக இந்தப் போராட்டம் தொடர்கிறது.

நக்சல்பாரி கிராமத்தில் 1967ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்னும் ஒயவில்லை. ஏனென்றால் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்கள் களையப்படவில்லை. அவை கூடுகின்றன ஒழியக் குறையவில்லை. இந்தியாவின் சாபக்கேடு இதுதான்.

நக்சல்பாரி கிராமத்தில் நிலமற்றோர் பரம்பரை நிலப்பிரபுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். மே 18, 1967ம் நாள் சில்குரி கிசான் (விவசாயிகள்) சபாத் தலைவர் ஜங்கல் சாந்தல் ஆயுதப் போர் மூலம் நிலப் பங்கீடு செய்யப் போவதாக அறிவித்தார். கிசான் சபாத் தலைவர்களைக் கைது செய்வதற்காக நக்சல்பாரி கிராமத்திற்கு ஒரு பொலிஸ் படை வந்து சேர்ந்தது.

ஜங்கல் சாந்தல் (Jangal Santhal) தலைமையிலான கிராமவாசிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினர். வில்லும் அம்பும் தான் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள். ஒரு பொலிஸ் அதிகாரி தாக்குதலில் கொல்லப்பட்டார். மிகுதிப் பேர் காயங்களுடன் தப்பிவிட்டனர்.

இந்த வெற்றிச் செய்தி பரவியதால் பிற இடங்களிலும் இது போன்ற போராட்டங்கள் வெடித்தன. சிவப்புப் பயங்கரவாதம், இடது தீவிரவாதம் என்று இந்திய மத்திய அரசு இந்தப் போராட்டத்தைக் கண்டிக்கிறது. சிவப்புச் சூரியன் (Red Sun) என்ற தலைப்பில் ஆய்வு நூல் எழுதிய சுதிப் சக்கரவர்த்தி (Sudhip Chakravarthy) மாவோயிஸ்டுகளுடன் வாழ்ந்து நூல் முடிவுகளை எடுத்தார்.

அவர் கூறுகிறார் ‘இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் மாவோயிசம் அல்ல……ஏழ்மை, செயலற்ற அரசு, அநீதி, ஊழல் ஆகியவைதான்”

அவர் தொடர்ந்து கூறுகிறார்’ மாவோயிஸ்டுகள் தனி நாடு கோரவில்லை. ஏற்கனவே அது அவர்களிடம் இருக்கிறது. ஆனால் அது அவர்கள் நினைத்தது போல் இல்லை என்பது தான் முக்கிய விஷயம்”

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஆதிவாசிகள் காட்டுப்புற மக்கள், பிற்படுத்தப்பட்டோர் வாழும் கனிம வளம் நிறைந்த மலைப்பகுதிகள், அடர்ந்த காடுகளைப் பறிமுதல் செய்து பல்தேய தொழில் நிறுவனங்களுக்கு அரசு வழங்குகிறது என்கிறார் சமூக ஆர்வலர் அருந்ததி ராய்.

மாவோயிஸ்ட் இயக்கம் தொடக்கத்தில் மேற்கு வங்காளத்தில் நிலை கொண்டிருந்தது. பிறகு கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவின் சட்டிகார், ஒறிசா, ஆந்திரா மாநிலக் கிராமப் புறங்களுக்குப் பரவியது.

இந்தியாவின் 626 மாவட்டங்களில் (Districts) 180ல் மாவோயிஸ்ட் இயக்கம் பலமான நிலையில் உள்ளது. இந்திய நாட்டின் முழுத் தரைப்பரப்பில் 40 விழுக்காடு மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மேற்கு வங்காளம் தொட்டு ஆந்திரா வரையிலான அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசம் சிவப்பு ஒடுங்கல் பிரதேசம் (Red Corridor) என்று அழைக்கப்படுகிறது. இதில் 92.000 கி.மீ நிலப்பரப்பு உள்ளடக்கம்.

இந்தியாவின் றோ உளவமைப்பு (Raw) வெளியிட்ட அறிக்கை ஆயுதம் தரித்த 20,000 முன்னணிப் போராளிகளும் 50,000 துணை வீரர்களும் செயற் படுவதாகக் கூறுகிறது.

மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. பீகார், மேற்கு வங்காளம், ஒறிசா மாநிலங்களில் அவர்கள் மாவோயிஸ்டுகள் என்றும் ஆந்திராவில் மக்கள் போர்க் குழு (Peoples War Group) அல்லது மாவோயிஸ்ட் என்றும் அழைக்கப் படுகின்றனர். நக்சலைற்றுகள் என்று பொதுவாக அழைக்கப் படுவதுண்டு.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளைப் பிரதமர் மன்மோகன் சிங் 2009ல் வர்ணித்தார். அதற்கு எதிராகப் போராடுவதற்கு மத்திய அரசு தீர்மானித்தது.

சட்டிகார்,ஒறிசா, ஆந்திரா, மகாறாஷ்திரா, ஜார்க்கன்ட், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகியவற்றை உள்ளடக்கிய போர்த் திட்டம் வகுக்கப்பட்டது.

2009ம் ஆண்டுப் பிற்பகுதியில் நடவடிக்கைகள் ஆரம்பித்தன. அதற்கு ஒப்பரேசன் கீறீன் ஹன்ற் (Operation Green Hunt) அதாவது பச்சை வேட்டை நடவடிக்கை என்று பெயரிடப்பட்டது. மாவோயிஸ்டுகள் எதிர்க்காமல் காடுகளுக்குள் மறைந்து விட்டனர்.

உள்நாட்டு அமைச்சர் சிதம்பரம் மாவோயிஸ்ட் இயக்கம் அழித்தொழிக்கப்படும் என்று அடித்துக் கூறுகிறார். 2010 மே 05ம் நாள் இந்தியன் எக்பிறஸ் பத்திரிகைக்கு அவர் மாவோயிஸ்டுகள் ஜனநாயக நீரோட்டத்திற்குள் வர வேண்டும் என்றும் தேர்தல்களைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னார்.

இரண்டு மூன்று வருடங்களில் மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என்ற சிதம்பரத்தின் கூற்றில் அர்த்தமில்லை என்கிறார் அரசியல் ஆய்வாளர் பினோய் காம்ப்மார்க் ( The Maoist Insurgency in India Binoy Kampmark. bkampmark@gmail.com)

கெரில்லாப் போராளிகளாக இருந்தவர்கள் படிப்படியாக மரபுபபடையினராக உருவாகின்றனர். வடக்கு கிழக்கு மாநிலங்களில் நிலவும் எழை எளிய மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்திய அரசு மறுக்கிறது.

அது எடுக்கும் இராணுவ மற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் புரட்சித் தீயை அணைய விடாது பாதுகாக்கும். இந்தியாவின் எழுத்தாளர்களும் புத்திஜீவிகளும் எழுதிக் கொண்டிருப்பார்கள். இது புரட்சிக்கு உரமூட்டும் என்கிறார் பினோய் காம்ப்மார்க்.

மிகக் கொடிய பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பிரச்சினைகள் இருக்கும் வரை எதிர்ப்பியக்கங்கள் தோன்றவும் வளரவும் செய்யும் என்பது பொதுவான முடிவு. ஆளும் வர்க்கமும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய மாநில அரசுகளும் தமது ஆயுதப் படைகளை நிலமற்றோர், ஆதிவாசிகள்,தலித்துக்கள் ஆகியோருடன் போரிடத் தூண்டுகின்றன.

நக்சலைற்றுகள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயற்படுத்துவதாகக் கூறம் மத்திய அரசை யாரும் நம்பத் தயாரில்லை.

மாறாகச் சல்வா யூடும் (Salwa Judum) என்ற அரச பயங்கரவாத இயக்கத்தை மத்திய அரசு மக்கள் மீது ஏவியுள்ளது. தொடக்கத்தில் அது கிராம அபிவிருத்திக்கான மக்கள் இயக்கமாக அரசால் உருவாக்கப்பட்டது. பிறகு அது அரச பயங்கரமாக மாற்றப்பட்டது.

நக்சலைற்றுகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக கிராமவாசிகளுக்கிடையில் முரண்பாடுகளையும் விரோதத்தையும் அரசும் உளவுப் பிரிவும் வளர்க்கின்றன. அரச படைகள் கிராமவாசிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குகின்றன.

அரசு தூண்டிய கிராமவாசிகளின் போரினால் 420 கிராமங்களைச் சேர்ந்த 15,000 மக்கள் உள்நாட்டு அகதிகளாக இராணுவம் உருவாக்கிய கூடாரக் கிராமங்களில் வாழ்கின்றனர். சில குடும்பங்களில் பாதி உறுப்பினர் நக்சலைற் படையிலும் மிகுதிப் பேர் சல்வா யூடும் இயக்கத்திலும் போரிடுகின்றனர்.

தன்னை ஒரு ஜனநாயக நாடாக உலகிற்கு காட்ட இந்தியா விரும்பினால் குடும்பங்களைப் பிரிப்பதையும் பொது மக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவதையும் நிறுத்த வேண்டும். மாவோயிஸ்டுகளைப் பயங்கரவாதிகள் என்று கூறும் அரசு தானே பயங்கரவாதியாக மாறக் கூடாது.

இப்படியான இழிசெயல்கள் இந்திய அரசியல் சாசனத்தையும் 1948ம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தையும் உதாசீனம் செய்கின்றன. இந்திய சமூக பொருளாதார மேம்பாடு அடித்தட்டு மக்கள் வரை செல்லாதிருப்பதால் ஒரு பாரிய புரட்சி வெடிப்பதற்குக் காத்திருக்கிறது.

ஈழம் பிரஸ் 07/10/2011

http://www.eelampres.../2011/10/37318/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.