Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் அமைச்சர் டக்ளசை பிரத்தியேகமாக சந்திப்பதை தவிர்த்தார்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-10-11 08:20:03]

Douglas-Devananda_150FGH.jpg

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா சென்றிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் இரண்டு கட்டங்களாக தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆனால் ஈபிடிபி கட்சியின் பொதுச்செயலரும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு அவர் நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்று அறியப்படுகிறது.

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் நேற்று முன்தினம் மாலை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நேற்றையதினம் நண்பகல் மூன்று தமிழ்க்கட்சிகளின் தலைவர்களை கொழும்பில் உள்ள பிரத்தியேக சந்திப்பிடத்தில் ரஞ்சன் மத்தாய் சந்தித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தலைவர் தி.சிறிதரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த இரண்டு சந்திப்புகளின் போதும், வடக்கு,கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்ட வரும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு காண்பதில் சிறிலங்கா அரசாங்ங்கம் கடைப்பிடித்து வரும் அக்கறையற்ற போக்கு குறித்தும் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் விபரித்துக் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயை தனியாகச் சந்திப்பதற்கு ஈபிடிபி கட்சியின் பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தாவுக்கோ அந்தக் கட்சியின் பிரதிநிதிகளுக்கோ நேரம் ஒதுக்கப்படவில்லை. முன்னதாக வடக்கு,கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தாமும் தமது கட்சியின் பிரதிநிதிகளும் ரஞ்சன் மத்தாயிடம் விரிவாக எடுத்துக் கூறவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.

ஆனால் இந்திய வெளிவிவகாரச் செயலருடன் தனியான சந்திப்புக்கு ஈபிடிபி கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து டக்ளஸ் தேவானந்தா மட்டும் இந்திய வெளிவிவகாரச் செயலரைச் சந்தித்துள்ளார். ரஞ்சன் மத்தாயை சந்திக்கும் தனது குழுவில் டக்ளஸ் தேவானந்தாவை கடைசிநேரத்தில் சிறிலங்கா அதிபர் சேர்த்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.seithy.com/breifNews.php?newsID=50681&category=TamilNews&language=tamil

கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை மன்னன் டக்ளசை வளர்த்துவிட்டவர்கள், பாதுகாத்து வருபவர்கள் அவனை வெளிப்படையாகச் சந்திக்கவில்லை எனினும் தொடர்புகள் நெருங்கியதாகவே உள்ளது.

கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை மன்னன் டக்ளசை வளர்த்துவிட்டவர்கள், பாதுகாத்து வருபவர்கள் அவனை வெளிப்படையாகச் சந்திக்கவில்லை எனினும் தொடர்புகள் நெருங்கியதாகவே உள்ளது.

ஒம் தொலைபேசியில் விபரமாகப்பேசியபின் ஏன் நேரடியாகப்பேசவேண்டுமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.