Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல்வாதிகளின் சூதாட்டங்களுக்கு எதிராக உலக மக்கள்..

Featured Replies

அரசியல்வாதிகளின் சூதாட்டங்களுக்கு எதிராக உலக மக்கள்..

மக்களால் உலகத்தை புரட்டிப்போட முடியுமா..? தமிழ் மக்கள் ஆழமாக அவதானிக்க வேண்டிய உலகப் பொருளாதார சூறாவளிக்கண்..

கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள்,( occupy wall street ) முதலாளித்துவம், கம்யூனிசம், பயங்கரவாதம் ஆகியவற்றைத் தாண்டி உலக அரசியல்வாதிகளின் ஏமாற்று வித்தைக்கு எதிராக திசை திரும்பிவருகிறது.

உலக முதலாளித்துவம் தற்போது அறிவித்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் உண்மையாகவே ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் திட்டங்கள் அல்ல என்ற உண்மையை புரிந்து கொண்டு, பொருளியல் அறிவுள்ள மக்கள் உலகம் முழுவதும் வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள்.

இன்று ஏற்பட்டுள்ள உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு ஒவ்வொரு நாட்டிலும் இருந்த வங்கிகளும், அவைகளை சுற்றி நச்சுக் கொடிகளாக படர்ந்த மோசடிகளும் முக்கிய காரணமாகும். வங்கிகள் தமது கட்டுப்பாட்டுக்கு மீறி பணத்தை கடனாக தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பில்லியன் கணக்கில் கொடுத்து, உலக மக்களின் பணத்தை வெறும் ஒரு சிலருக்குள் திருட்டுத்தனமாக பங்கு போட துணைபோயுள்ளன.

இதற்கு ஏராளம் உதாரணங்களைத் தெரிவிக்கலாம். சமீபத்தில் டென்மார்க்கில் ஒரு கட்டிடங்களை அமைக்கும் நிறுவன உரிமையாளர் முப்பது வங்கிகளில் ஏழு பில்லியன் குறோணர்களை கடனாக வாங்கி ஏப்பம் விட்டுள்ளார். இதுபோல எங்கு பார்த்தாலும் பில்லியன்களை தனி நபர்கள் ஏப்பம் விட்டுள்ள கதைகளாகவே உள்ளன. டென்மார்க்கில் சென்ற வாரம் முறிவடைந்த மக்ஸ் பாங் இதே நபருக்கு 75 மில்லியனை கடனாக கொடுத்துள்ளது.

ஓர் ஏழைக்கு கடன் கொடுக்க எழு நூறு காரணங்களை கேட்டு விரட்டியடிக்கும் வங்கிகள் இவருக்கு 75 மில்லியனை கொடுத்தது என்றால் அதுபற்றி ஆழமாகவே சிந்திக்க வேண்டும்.

வயதான இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி தனது பிள்ளைகளை விட வயதில் குறைந்த இளம் யுவதிகளுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பல வழக்குகள் நடைபெறுகின்றன. பிரான்சிய அதிபர் ஸார்கோஸி மாடல் அழகியுடன் வலம் வருகிறார். அரசியல் தலைவர்களின் ஆடம்பர வாழ்வுக்கும், நடை முறை பொருளாதாரத்திற்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி வெளிப்படையாக தெரிகிறது.

வங்கித் தொழிலில் கடந்த பத்தாண்டு காலத்தில் உலகளாவிய ரீதியில் மாபெரும் மோசடிகள் நடைபெற்றுள்ளன. உலக பொருளாதார சுழர்ச்சிக்கு ஐ.எம்.எப், உலகவங்கி ஆகியன கட்டமைத்த பொருளாதார அடிப்படைச் சிந்தாந்தம் டைட்டானிக் கப்பல் போல துளை ஏற்பட்டு மூழ்கிக் கொண்டிருக்கிறது. இந்த முட்டாள்தனங்களை மூடி மறைத்துவிட்டு உலக அரசியல் தலைவர்களும், பொருளியல் நிபுணர்களும் வெத்துவேட்டு பிரசங்கங்களை நடாத்தி வருகிறார்கள் என்பதை மக்கள் தெளிவாக உணர ஆரம்பித்துள்ளார்கள். அடுத்து வரும் பத்தாண்டுகள் ஏழை பணக்காரர் இடைவெளியை பல மடங்கு அதிகரிக்கப்போகிறது.

occ5-198x300.jpg

இத்தகைய சமநிலையற்ற உலக பொருளாதார அவலத்திற்கு எதிராக அமெரிக்கா முதல் ஐரோப்பாவரை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதலாளிகளுக்கு வாய்ப்பாக இந்த பொருளாதார மந்தம் திசை திருப்பவிடப்பட்டுள்ளதை அடையாளம் காட்டவும், உலக ஆளும் வர்க்கத்தினர் மறைமுகமாக அதனுடன் கைகோர்த்து நிற்பதையும் இந்த ஆர்பாட்டங்கள் மக்கள் மன்றுக்கு கொண்டு வந்துள்ளன.

நேற்று அமெரிக்காவில் பல நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர், இத்தாலியில் பலத்த மோதல் நடைபெற்று எழுபதுபேர் படுகாயமடைந்துள்ளனர், டென்மார்க்கில் நேற்று கார்களை எரிக்குமளவுக்கு இதே அமைப்பினரின் போராட்டம் நடைபெற்றது.

இதை எளிமையாக விளங்க ஓர் உதாரணம் :

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யூரோ சோன் (Euro Zone) பொருளாதார உதவித்திட்டம் பல பில்லியன்களை கொண்ட பகாசுர நிதித் திட்டமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணய நாடுகளை காப்பாற்ற இந்த உதவி வழங்கப்படுகிறது. இந்தப் பணம் நேரடியாக வங்கிகளுக்கு போகிறது. வங்கிகள் மூன்றாண்டு காலத்திற்கு இப்பணத்தை தமது சொத்தாக மாற்றி வர்த்தகம் செய்ய வழி பிறந்துள்ளது. இப்பணத்தை எந்தெந்த வங்கிகளில் பைசல் செய்வதென்பது ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளது. இந்தப் பணம் போய்ச் சேர்ந்ததும், இந்த அரசியல்வாதிகளும் வங்கிகளும் திரை மறைவில் கை கோர்த்துக் கொள்ளுவார்கள். மறுபடியும் பணம் பில்லியன் கணக்கில் மோசடிக்குள்ளாகும், அரசியல் அழகிகளும், அரசியல் அழகன்களும் உல்லாசப் பயணம் போவார்கள், ஏழை வறுமையில் சிக்கி பாதாளம் போவான். கடைசியில் இப்போது இருப்பதைவிட இன்னொரு டிப் ஏற்படுவதைத்தவிர உலகம் காணப்போவது எதுவும் இல்லை. தற்போது டபிள் டிப் என்னும் இரண்டாவது பள்ளத்தில் விழுந்த உலகப் பொருளாதாரம் பல டிப்களில் விழுந்து துள்ளப் போகிறது.

இப்போதைய ஆர்பாட்டங்கள் இந்த உண்மையை மக்கள் முன் போடவே உருள ஆரம்பித்துள்ளன. முன்னைய டேனிஸ் அரசு ஏழை மக்களுக்கு வழங்கும் உதவியை கொன்ரன்ற் ஜெல்ப் என்று பெயரிட்டு வழங்கியது தெரியலாம். கைக்காசு கொடுப்பனவு அல்லது பிச்சைக்காசு என்று இதை மொழி பெயர்க்கலாம். இன்று அமெரிக்கா முதல் ஐரோப்பாவரை அறிமுகமாகும் பொருளாதார மீட்பு திட்டங்கள் ஏழைகளுக்கு பிச்சை சம்பளத்தையும் பணக்காரருக்கும், ஆளும் கட்சியினருக்கும் மாடல் அழகிகளுடன் மல்யோக்கா தீவு பயணத்தையுயே தரப்போகிறது என்ற மக்கள் கோபம் வீதிக்கு வந்துள்ளது.

occu3.gif

நடைபெறும் நிகழ்வுகளை பார்த்தால் உலகத்தில் யாரும் எதிர்பாராத புதிய புரட்சிகர மாற்றங்கள் நிகழக்கூடிய விசைகளையே இந்த ஆர்பாட்டங்களால் உணர முடிகிறது.

சந்திரிகா குடும்பமும், ராஜபக்ஷ குடும்பமும், சோனியா குடும்பமும் சமாதானத்திற்காக வன்னியில் போர் நடாத்தியது போன்ற ஒரு கூத்தாட்டம் போன்றதே இதுவென்றால் நம்மால் கொஞ்சம் இலகுவாக விளங்க முடியுமல்லவா..?

http://www.alaikal.com/news/?p=85289

தொடர்புபட்ட செய்தி: அமெரிக்காவின் பொருளாதார மையத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்:

http://www.yarl.com/...showtopic=92467

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அகோதா வேண்டாம்

ஏற்கனவே

சாதி

மதம்

பிரதேசம்

.............. என்று பிரிந்துநின்று அடிபடும்நாம்

இனி புலம்பெயர்தேசங்களிலும்

பிரெஞ்சுக்காறன்

கிரேக்கன்

பிரித்தானியன்

டொச்சுக்காறன்.....??? என்று அடிபடவேண்டிவரும்.... :lol::D :D

  • தொடங்கியவர்

அகோதா வேண்டாம்

ஏற்கனவே

சாதி

மதம்

பிரதேசம்

.............. என்று பிரிந்துநின்று அடிபடும்நாம்

இனி புலம்பெயர்தேசங்களிலும்

பிரெஞ்சுக்காறன்

கிரேக்கன்

பிரித்தானியன்

டொச்சுக்காறன்.....??? என்று அடிபடவேண்டிவரும்.... :lol::D :D

நாங்கள் எங்கே அடிபடப்போறம், வேறு எங்காவது 'அசுல்' அடிக்க போய்விடுவோம். அது சீனாவோ இல்லை செவ்வாய் கிரகமோ பரவாயில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.