Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைக்கு எதிராக வாஷிங்டனில் ஆர்ப்பாட்டம் செய்ய சிங்களவர்கள் திட்டம்

Featured Replies

அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாஷிங்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

சிறிலங்கா அரசின் உத்தரவுக்கமைய அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அமெரிக்காவில் வாழும் இலங்கைச் சிங்களவர்களையும் சிறிலங்கா அரசு சார்புத் தமிழர்களையும் ஒன்றிணைத்து இந்த ஆர்பப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால், இவ்வாறாதொரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க வாழ் சிங்களவர்களில் பெரும்பாலானோர் விருப்பம் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்ரது.

.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, எம்.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளமை தெரிந்ததே. இவர்கள் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பானராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் உட்பட பலரைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

மூலம்

ஆனால், இவ்வாறாதொரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க வாழ் சிங்களவர்களில் பெரும்பாலானோர் விருப்பம் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்ரது.

ஆனால் அரசு சார்புள்ள தமிழர்கள் போவார்களாம்.இம்முறை கொடுப்பனவுத்தொகை அதிகமாம்.............

:icon_mrgreen::D:icon_idea:

ஒபாமா தலையிலான அமெரிக்க தலைவர்கள் உலகில் தாம் மனிதஉரிமைகளை மிகவும் மதிப்பவர்கள் என்ற செய்தியை பகிரங்கமாக வெளியுறவு கொள்கையில் முன்னெடுப்பவர்கள். ஆனால், அதிலும் அவர்களின் தேசிய நலன்களுக்கே முன்னுரிமை கொடுப்பர் என்பது எமக்குத்தெரியும். எனவே:

- கூட்டமைப்பு பகிரங்கமாக போர்குற்ற சாட்டுக்கள், தொடரும் இனவழிப்பு கொள்கைகளை முன்னெடுக்கவேண்டும்

- பூட்டிய அறைக்குள்: திருகோணமலை உங்களுக்கு காங்கேசன்துறை இந்தியர்களுக்கு, ஆனால் எங்களுக்கு குறைந்தது வெளியுரிமையுடன் கூடிய சுய நிர்ணய (external right to self determination) உரிமை தர வேண்டும்

என்று சீன - சிங்கள உறவை மேற்கோள் காட்டி அவர்கள் மேல் பாரத்தை போட்டுவிடவேண்டும்.

அமெரிக்கா இலங்கைக்குள் வருவதனால் தமிழீழம் மலர்ந்தால் மட்டுமே முடியும். தான்னால் சீனாவை இலங்கையிலிருந்து வெளியேற்றிவிட முடியுமென்று அமெரிக்காவுக்கு பகல் கனவு காட்டியது இந்தியா. இந்த வார்த்தைகளை பயன் படுத்தி அமெரிக்கவின் தலையீட்டை இலங்கையில் தடுத்து நிறுத்தியிருந்தது. அதே நேரம் தங்கபாலு, சிதம்பரம், நாராயணன், நிரூபம்மா மனமோகன் சிங் எல்லோருமே தங்களால் இலகையை கட்டு படுத்த முடியாமல் போவிட்டதாக பேசிய பேச்சுகளையும் நாம் யாழில் படித்திருகிறோம். இந்த விடயங்களில் மனமோகன் சிங், பிரதமாரக தனது அதிகாரம், மட்டுபடுத்தபட்டதே என்றும் பேசியிருக்கிறார். இவற்றை அமெரிக்க இந்திய தூதுவர்கள் ராசாங்க அமைச்சுக்கு தெரியவைத்திருப்பார்கள். அமெரிக்கவின் மிகப்பெரிய தோல்வி இந்தியாவில் அதன் அணு உலை வியாபாரம், பாரிய கஸ்டங்களுக்கு பிறகு அமெரிக்கா செனெட், கொங்கிரஸ், புஸ் என்றெல்லாம் கையெழுத்துகள் வாங்கிவர கடைசி நேரத்தில் மனமோகன் சிங் கையை விட்டு விட்டார். ஆனால் பிரான்ஸ் அதை விட இரண்டு மடங்கு ஆலைகளை குறுகிய நேரத்திற்குள் பேரம் பேசி இந்தியாவிற்கு விற்று விட்டது. இந்தியாவிற்கு இலங்கையில்த்தான் தோல்வி. அமெரிக்கவிற்கு இந்தியாவிலும் கணிசமான அளவு தோல்வி. அமெரிக்கா இந்தியாவில் பின்வாங்க இயலாதளவிற்கு முதலீடுகளை செய்திருக்கிறது. எனவே அமெரிக்கா இந்தியாவிற்கு நல்ல ஒரு பிரதமர் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. அது நடந்தால் அமெரிக்க இந்தியாவிற்காக தான் இலங்கையில் முன் வைத்த காலை மீண்டும் பின் வைக்கலாம்.

இந்தியாவில் இந்த அரசாங்கம் நிலைத்தால் அமெரிக்கா தமிழீழத்தை அமைத்து திருகோணமலையை கையடக்க பார்ப்பதன் மூலமே இந்து சமுத்திரத்தில் சீனாவுடன் சமநிலை அடையலாம். எல்லாவற்றிகும் பதில் எவ்வளவு தூரம் சீனா இரகசியமாக அம்பாந்தோட்டையை கையடக்குவதில் முன்னேறியிருக்கிறது என்பதிலும் இருக்கிறது. ஆனாலும் லிபியாவிலிருந்தது எந்த எதிர்ப்பும் இன்று பெட்டிகளைக்கட்டி கொண்டு கப்பல்களில் 32,000 சீனர்களை வெளியேற்றியது போன்று இலங்கயில் சீனா நடந்து கொள்ளாது.

அம்பாந்தோட்டை ஏற்கனவே சீனாவின் கைகளில் இருகிறதாயின், ஐ.நா மூலம் இலங்கை பிரச்சனைக்கு ஈழம் ஒரு தீர்வாக அமெரிக்கா கொண்டுவருவதை சீனா இலகுவில் அனுமதியாது. அப்படியாயின் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு உதவாது. அமெரிக்கா புலிகளை ஆதரிக்க வேண்டும்.

எனவே கூட்டமைப்பு இனியும் காலம் தாழ்த விடாமல் பகீரதபிரயத்தனம் செய்து அமெரிக்கவை களத்திலிறக்க வேண்டும். அமெரிக்கவிற்கு துணிசலாக இலங்கையில் அதன் தோல்விகளையும் இந்தியாவின் தோல்விகளையும் எடுத்து விளக்க வேண்டும். நாடு பிரிவதன் மூலமே சீனாவைக்கட்டு படுத்தலாம் என்பதை ஆணிதரமாக வாதாட வேண்டும். நாடு பிரிந்தால் ஐக்கிய சுதந்திர முண்ணனி தெற்கில் சிலகாலம் வர முடியாது. இது சீனாவை நிரந்தரமாக பின்வாங்கவைக்கலாம்.

காங்கேயந்துறையை இந்தியாவிற்கு கொடுத்தால் நாமக்கென்று அதன் பிறகு ஒரு துறைமுகமும் இருக்காது. அதேநேரம் அது சீனாவின் நேரடி தாக்குதலிற்கும் இலக்காகும். இந்தியாவால் அதை காபாற்றவும் முடியாது.

Edited by மல்லையூரான்

முதலில் இப்படி பல விடயங்களை ஆழமாக கைநுனியில் வைத்துள்ள உங்களால் நாமும் பல விடயங்களை மீளசைவு போடக்கூடியதாக உள்ளது.

அம்பாந்தோட்டை ஏற்கனவே சீனாவின் கைகளில் இருகிறதாயின், ஐ.நா மூலம் இலங்கை பிரச்சனைக்கு ஈழம் ஒரு தீர்வாக அமெரிக்கா கொண்டுவருவதை சீனா இலகுவில் அனுமதியாது. அப்படியாயின் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு உதவாது. அமெரிக்கா புலிகளை ஆதரிக்க வேண்டும்.

எனவே கூட்டமைப்பு இனியும் காலம் தாழ்த விடாமல் பகீரதபிரயத்தனம் செய்து அமெரிக்கவை களத்திலிறக்க வேண்டும். அமெரிக்கவிற்கு துணிசலாக இலங்கையில் அதன் தோல்விகளையும் இந்தியாவின் தோல்விகளையும் எடுத்து விளக்க வேண்டும். நாடு பிரிவதன் மூலமே சீனாவைக்கட்டு படுத்தலாம் என்பதை ஆணிதரமாக வாதாட வேண்டும். நாடு பிரிந்தால் ஐக்கிய சுதந்திர முண்ணனி தெற்கில் சிலகாலம் வர முடியாது. இது சீனாவை நிரந்தரமாக பின்வாங்கவைக்கலாம்.

அம்பாந்துறையை கொடுத்த சிங்களம் ஏன் அதற்கு பதிலாக திருகோணமலையை கொடுக்க விரும்பவில்லை?

அரசியல் இராசதந்திரம் ஒரு சதுரங்கம். அந்தவகையில் உலகபொருளாதார மையமாக ஆசியா மாறி வருகின்றது. இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவை அந்த இடத்தில் வைக்க அமேரிக்கா தலைமையிலான மேற்குலகமும் இந்தியாவும் ஜப்பானும் விரும்பும் என நம்பலாம். இதை மையமாக வைத்தே இவர்கள் நகர்த்தும் சதுரங்ககத்தில் இலங்கைத்தீவில் இராணி திருகோணமலையே. அதுவே கூட்டமைப்பின் துரும்பாக (தமிழர் வாழ்வில் திருப்புமுனையாக அமையப்போகும் சந்திப்பு) இருக்கவேண்டும் உரிமைகளை வென்றெடுக்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.