Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் செல்வந்தர்களை தனக்கு அறிமுகப்படுத்தி தருமாறு லியாம் பொக்ஸ் கேட்டார்.: டாக்டர் சிறிவாசன்

Featured Replies

2007-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரம் நான் பிரித்தானியாவின் முன் நாள் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ்( அந்த நேரம் அவர் நிழல் அமைச்சராக இருந்தார்) அவர்களை சந்தித்து சிறிலங்காவில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கூறுவேன்.

.

2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின்னரும் நான் அவரைச் சந்தித்தேன். அந்த நேரம் போர் முடிவடைந்துவிட்டதாகவும் இனிமேல் சிறிலங்காவில் அபிவிருத்தியினை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஃபொக்ஸ் கூறி இருந்தார். மட்டுமன்றி தன்னால் உருவாக்கப்பட்ட சிறிலங்காவை கட்டியெழுப்பும் நிதியத்திற்கு பலம் சேர்க்க பிரித்தானியாவில் உள்ள தமிழ் செல்வந்தர்களை தனக்கு அறிமுகப்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டார்.

.

மேற்கண்டவாறு கூறியுள்ளார் பிரித்தானியாவில் வதியும் தமிழர் டாக்டர் ரோஜர் சிறிவாசன்.

.

லியாம் ஃபொக்ஸ் அவர்க்ளுடனான சந்திப்பில் அவரது செயலராக அடம் வெறிற்றி என்பவரும் கூட்டாகவே இருப்பார் என்றும் கூறியுள்ளார் சிறிவாசன். ஒரு முறை சிறிலங்காவின் ஐக்கிய தேசியக்கட்சியினர் வைத்துள்ள ஒரு கூட்டத்தில் லியாம் ஃபொக்ஸ் மற்றும் அவரது செயலர் அடம் வெரிற்றியும் கலந்துகொண்டதனையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

.

மட்டுமன்றி ஒருதடவை தன்னிடம் தமிழ் வர்த்தக புள்ளிகளை அறிமுகம் செய்து தருமாறு வற்புறுத்துகையில்; சிறிலங்கா ஒரு அழகான ஊர் என்றும் அழகான கடற்கரைகளைக்கொண்டுள்ள அந்த ஊரில் ஒரு ஆடம்பர வீடு ஒன்றை வாங்கப்போவதாகவும் கூறினார். மேலும் சிறிலங்காவிபை கட்டி எழுப்பும் நிதியம் தொடர்ப்பில் தனது செயலர் அடம் வெரிற்றியை தொடர்பு கொள்ளூமாறும் கூறினார் என லியாம் ஃபொக்ஸ் பற்றி போட்டுடைத்துள்ளார் டாக்டர் சிறிவாசன்.

மூலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாட்டு தமிழர்கள் எல்லா நெளிவு சுளிவுகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீ லங்காவின் கோடிகளை கொட்டி செய்யும் பிரச்சாரம் எல்லாவற்றையும் பிசு பிசுக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வர்த்தகர்களை அறிமுகப்படுத்தி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்த லியம் பொக்ஸ்!

Published on October 19, 2011-4:18 am

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய லியம் பொக்ஸ் செல்வந்த தமிழ் வர்த்தகர்களை அறிமுகப்படுத்தி வைக்குமாறு தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானிய கிளையின் முன்னாள் தலைவர் ரொஜர் ஸ்ரீனிவாஸ் பீ.பீ.சி சிங்கள சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டிற்கும் 2009 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்டகாலத்தில் பல தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் லியம் பொக்ஸை சந்தித்த போது அவரால் இந்த வேண்டுகோள் விடுக்கப்படடதாக ரொஜர் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ கடமையின்றி தனது நண்பரான எடம் வெரட்டுடன் பேணிவந்த தொடர்புகள் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியம்பொக்ஸ் அண்மையில் தனது பதவியில் இருந்து இராஜனாமா செய்தார்.

இந்த இராஜனாமா இலங்கையுடன் தொடர்புபட்டிருப்பதே பிரச்சனையாகும் என இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

லொடி பெல் கூறியுள்ள விடயங்களுக்கு ஏற்ப அவரும் அவரது நண்பரான என்ட் வெரிட்டும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுணர் அஜித் நிவாட் கப்ராலுடன் கலந்துரையாடியுள்ளனர் எனக் குறிப்பிட்ட ஹர்ஷ டி சில்வா SRI LANKA DEVELOPMENT TRUST என்ற அரசசார்பற்ற நிறுவனத்தை நிறுவுவது தொடர்பாகவே அவர்கள் கலந்துரையாடியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைத் திரட்டி இலங்கையில் வீதிகளையும் ஏனைய அடிப்படை வசதிகளையும் அபிவிருத்தி செய்ய அவர்கள் இதன் மூலம் எதிர்பார்த்துள்ளனர், எனினும் எவ்வளவு பணம் திரட்டியுள்ளார்கள் என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும் என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

லோட் பெல் என்பவர் அஜித் நிவாட் கப்ராலுடன் இணைந்து நடாத்தும் பெல் பொமடிங் என்ற நிறுவனத்தின் ஆளுநராவார் என சுட்டிக்காட்டிய இவர் அது இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாகவும், ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேசத்திற்கு விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு அமைக்கப்பட்ட பொதுத் தொடர்புகள் நிறுவனம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்ற வகையில் தாம் மத்திய வங்கி ஆளுநரிடம் இது குறித்து வினவுவதாகவும் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

http://www.saritham.com/?p=38181

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.