Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டு மீனவர்களுக்கு மீண்டும் பாஸ் நடைமுறைக் கெடுபிடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

fish-150x150.jpg

கடற்படை வழங்கும் விசேட அடையாள அட்டையுடனேயே குடாக்கடலில் கடற்றொழில் செய்யமுடியும் என்ற புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒன்றரை மாதங்க ளுக்கு முன்னர் இந்த நடைமுறை கடற்படையினரால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாகக் குருநகர், பாஷை யூர், நாவாந்துறை, காக்கைதீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் மீனவர் தொழில் செய்வதாயின் கடற்படையினால் வழங்கப் படும் விசேட அடையாள அட் டையைப் பெற்றிருக்க வேண் டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

குடாக்கடலில் பல இடங் கள் இராணுவத்தின் வசமி ருந்து தற்போது கடற்படை யின் கட்டுப்பாட்டின் கீழ் கைமாறியதை அடுத்தே கடற் படையினர் இந்தப் புதிய நடை முறையை அமுல்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

கடந்த காலங்களில் கடற் தொழில் செய்வதற்கு இராணுவத் தின் “பாஸ்” அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறை அமுலில் இருந்தது. அவ்வப்போது தேர் தல் நேரங்களில் மட்டும் இந்த “பாஸ்” நடைமுறை தந்திரோபாய மான முறையில் தற்காலிக மாகத் தளர்த்தப்படும். பின்னர் சிறிது காலத்தில் மீண்டும் அந்த நடைமுறை அமுல்படுத்தப்படும்.

யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் கழிந்த போதிலும் சில பகுதிகளில் இராணுவத்தின் ”பாஸ்” நடை முறை இன்னமும் தொடர்கிறது.இந்த நிலையில் தற்போது தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதி களில் மீனவருக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கும் நடைமுறையைக் கடற்படையினர் அமுல்படுத்தியுள்ளனர்.

கடற்படையின் விசேட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே தொழிலில் ஈடுபட முடியும் எனக் கடற்படை உத்தரவிட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ள ஏனைய உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு தொழிலுக்குச் செல்ல வேண்டி ஏற்படும். இதன் காரணமாகக் கடற்தொழி லாளர்களின் குடும்பங்களே ஒட்டுமொத்தமாகஅடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது எனப் பாஷையூர் பகுதி கடற்றொழிலாளி ஒருவர் சினத்துடன் தெரிவித்தார்.

குருநகர், பாஷையூர், காக்கை தீவுக் கடற்பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கடற்படையின் அடையாள அட்டையைப் பெற்றிருக்க வேண்டும் எனக் கடற்படை வலியுறுத்தி வருகிறது. அந்தப் பகுதிகள் கடற் படையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கடந்த ஒன்றரை மாதங் களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டுள்ளன என்றார் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத் தலைவர் எஸ். தவரட்ணம்.

http://www.saritham.com/?p=38156

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த நாட்டிலேயே, எதிரி கடலுக்கே வரி போட்டு நோகடிக்கிறான். எங்கே எமது அரசியல் சிங்கங்கள்?

பல்லு கட்ட டென்டிஸ்ட் இடம் சென்றுவிட்டார்களா?

குடா நாட்டில் சிங்கள கடற்படையினர் மீண்டும் பாஸ் நடைமுரையுனைக்கொண்டு வந்துள்ளனர். குடா நாட்டின் கிழக்கு அரியாலை தொடக்கம் காக்கை தீவு வரையான பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இனிமேல் பாஸ் எடுக்க வேண்டும் என கடற்படையினர் கூறியுள்ளனர்.

.

தேர்தலிற்கு முன்னர் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் நடைமுறைக்கு வருகின்றது. இனி அடுத்து வரவிருக்கும் மாகாண சபை தேர்தலின் போது அரசாங்கத்தினால் பாஸ் நடைமுறை நீக்கம் தேர்தல் கொள்கையாக வைக்கப்பட்டு அது நீக்கப்படும் இதுதான் வழமை இவ்வாறு கூறுகின்றனர் யாழ் மீனவர்கள்.

.

வடக்கு கிழக்குப்பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆயுதப்படையினர் எந்த நாளும் மக்கள் தம்மிடம் கையேந்தி நிற்கவேண்டும். அல்லது தங்களை நம்பியே இருக்கவேண்டும் என்ற ஒரு மன வியாதியில் உள்ளனர். இந்த வியாதியை சிங்கள அரசாங்கம் பரப்பியுள்ளது நன்றாக விதைத்துள்ளது. ஆகவே அவர்கள் நாளாந்தம் தமிழ் மக்களை தங்களிடம் தங்கி இருக்க என்ன செய்யலாம் என திட்டமிட்டு அதனை செயற்படுத்திக்கொண்டே இருப்பார்கள் இவ்வாறு கூறியுள்ளார் ஒரு பங்குத்தந்தை.

மூலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.