Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் அழைப்புரையை புறக்கணித்து வெளியேறினார் கனேடியப் பிரதமர் – சிறிலங்காவுக்கு பேர்த்தில் அவமானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் அழைப்புரையை புறக்கணித்து வெளியேறினார் கனேடியப் பிரதமர் – சிறிலங்காவுக்கு பேர்த்தில் அவமானம்

stephen%20harper%20canada%20president.jpg

சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து உரையாற்றிய போது, கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பேர்த் நகரில் நடைபெற்று வந்த கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டு இன்று மாலை நிறைவடைந்தது.

மாநாட்டின் இறுதியில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச, அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுமாறு 53 நாடுகளினதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

அழைப்புரையாற்ற மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டதும், கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் குறித்து கனேடியப் பிரதமர் ஹாபர், கடந்த வாரம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நேரடியாகப் பேசியிருந்தார்.

அப்போது அடுத்த கொமன்வெல்த் கூட்டத்துக்கு முன்னர் தமது கவலைகளுக்கும் கரிசனைகளுக்கும் சிறிலங்கா உரிய வகையில் பதிலளிக்க வேண்டும் என்று கனேடியப் பிரதமர் உறுதிபடக் கூறியுள்ளார்.

அவர்கள் அதைச் செய்யாது போனால் நாங்கள் புறக்கணிப்போம் என்று அவர் குறிப்பிட்டதாகவும் கனேடிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.eeladhesa...ndex.php?option

 

[size=4]சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து உரையாற்றிய போது, கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]பேர்த் நகரில் நடைபெற்று வந்த கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டு இன்று மாலை நிறைவடைந்தது.[/size]



இதேபோல் எல்லா நாடுகளும் புறக்கணிக்கும் காலம் தூரத்தில் இல்லை

மகிந்தவின் அழைப்புரையை புறக்கணித்து வெளியேறினார் கனேடியப் பிரதமர் – சிறிலங்காவுக்கு பேர்த்தில் அவமானம்

பரவாயில்லை. நன்னாதானிருக்கு. எதற்கும் நியூஸ்சை கொண்டுவந்தவரையும்(தமிழ் அரசு) கவனிச்சுட்டேன்.

Edited by மல்லையூரான்

கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மற்றும் பிரித்தானியா பிரதமர் டேவிற் கமறோன் ஆகியோரின் நிலைப்பாடு சிறிலங்காவுக்கு எரிச்சல் ஊட்டும் என்பதில் ஐயம் இல்லை

Edited by நவரத்தினம்

பிரதமர் ஹார்ப்பர் சொன்னால் செய்யக்கூடிய ஒரு ஆள். நம்பிக்கை உள்ளது இவர் சிங்கள அழைப்பை நிராகரிப்பார் என. இவர் நிராகரித்தால், மேலும் பல நாடுகள் அதை தொடரும்.

முள்ளிவாய்க்காலின் பின்னராக ஒரு சிறு தமிழர்கள் ஆளும் பழைமைவாத கட்சியுடன் சேர்ந்து செயல்பட தொடங்கினர். இதற்கு எமது மக்கள் மத்தியில் இன்றும் நியாயமான எதிர்ப்பு உள்ளது. ஆனால் இது அரசியல், இங்கே கோபங்கள், வெறுப்புக்கள் .. இவற்றை தாண்டி நாம் பயணிக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

எல்லா நாட்டு புலம்பெயர் தமிழர்களும் தம்தம் நாடுகளில் தமக்கு ஏற்ற அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்படல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.