Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு முன்னாள் போராளியின் மரணச்சடங்கிற்கும் உதவியில்லாத அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறையிலிருந்து விடுதலையாகிய முன்னாள் போராளியான சந்தனமூர்த்தி தீபன் (27வயது) 29.10.2011 அன்று மரணமடைந்துள்ளார். இவர் கடைசி யுத்தத்தில் சரணடைந்தார். சரணடைவின் பின்னர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்படடு அண்மையில் விடுதலை செய்யப்பட்டவர்.

திடீரென நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீபனின் தந்தையார் சந்தானமூர்த்தியும் மற்றும் இரு சகோதரர்களும் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார்கள்.

தீபன் மட்டுமே தாயாருக்கான ஆறுதலாக இருந்தவர். தடுப்பிலிருந்து வெளிவந்து ஒன்றரை மாதத்தில் இறந்து போயுள்ள மகனின் மரணச்சடங்கினைச் செய்யக்கூட உதவியற்ற நிலமையில் இருக்கிறார் தீபனின் தாயார்.

தீபனின் மரணச்சடங்கிற்கும் அவரது தாயாரின் வாழ்வாதாரத்துக்குமான உதவியினை தீபனின் மாமனாரான கமலேஸ்வரன்(29வயது) எம்மிடம் வேண்டி நிற்கிறார். கமலேஸ்வரனும் 16.05.2009அன்று கைது செய்யப்பட்டு தற்போது மகசீன் சிறையில் இருக்கிறார்.

கமலேஸ்வரனும் சிறையில் இருக்கிற நிலமையில் தனது குடும்பத்திற்கு எவ்வித உதவியினையும் செய்ய முடியாது துயரத்தோடு இருக்கிறார். மருமகனின் மரணச்சடங்கினை செய்வதற்குக்கூட ஆதரவற்ற நிலமையில் தவிக்கிற அக்காவிற்கு உதவுமாறு கமலேஸ்வரன்(29வயது) புலம்பெயர் உறவுகளிடம் உதவிகோரி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

கமலேஸ்வரன் எழுதிய கடிதம் வருமாறு :-

30102011064.jpg

ஒரு முன்னாள் போராளியின் இறுதிக்கிரியைகள் கூட செய்வதற்கு வசதியற்றுள்ள இக்குடும்பத்திற்கு உதவுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகிறோம்.

உதவிகளை வழங்க விரும்புவோர் நேரடியாகவே உதவிகளை வழங்க முடியும். கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள். விபரங்கள் வழங்கப்படும்.

இக்குடும்பத்திற்கான உதவி அவசரமாக செய்ய வேண்டியிருப்பதால் உங்கள் உதவிகளை உடனடியாக வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க தொடர்பு கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முன்னாள் போராளியின் மரணச்சடங்கிறகு கள உறவு ஒருவர் 100கனடியடொலர்களை வழங்கியுள்ளார்.

அவசரமான உதவியைப் புரிந்து உடனடியாக உதவியமைக்கு உதவிய உறவே உங்களுக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவன் பிள்ளைகள் யாவரையும் இழந்து போன தீபனின் தாயாருக்கு ஆறுதலாக யாருமில்லை. இந்தத்தாயின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ வைக்க யாதேனும் இயன்ற உதவியை உறவுகள் முன்வந்து உதவுமர்று வேண்டுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.