Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வேலைத்திட்டங்கள் காலதாமதம் ஏற்படுமானால் நிதி வழங்க முடியாது: உலக வங்கி

Featured Replies

யாழில் வேலைத்திட்டங்கள் காலதாமதம் ஏற்படுமானால் நிதி வழங்க முடியாது: உலக வங்கி

யாழ். மாவட்டத்தில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் காலதாமதம் ஏற்படுமானால் தொடர்ந்து நிதி வழங்க முடியாது என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி தூதுக்குழு தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

உலக வங்கி தூதுக்குழுவினருக்கும் அரச அதிபருக்குமிடையில் யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர், யாழ். மாவட்டத்தில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களில் உள்ளூராட்சி திணைக்களங்கள், யாழ். மாநகர சபை வேலைத்திட்டமிடல் நிதி செலவினங்கள் தொடர்பாக சரியான அறிக்கை சமர்பிக்க வில்லை என குற்றம் சாட்டினர்.

இந்த வருடத்திற்கான உலக வங்கியின் வேலைத்திட்டத்திற்கு என 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அது திருப்தியாக அமையவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

உலக வங்கியின் நிதியில் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் முழுமை பெறவில்லை எனவும் எதிர்காலத்தில் உலக வங்கியின் வேலைத்திட்டத்திற்hக ஒதுக்கீடுகள் யாழில் குறைவடையும் என அவர்கள் எச்சரித்துள்ளதாக யாழ். அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2012ஆம் ஆண்டுக்காக யாழ். மாவட்டத்தில் 2,734 வேலைத்திட்டத்திற்கு 10520.43 மில்லியன் தேவையாக இருப்பதாகவும் உலக வங்கி இத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் தான் உலக வங்கியிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரு வாரங்களில் உயர் பாதுகாப்பு பகுதிகளில் மீளக்குடியமரவுள்ள மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்காக 5 மில்லியம் ரூபா தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் உலக வங்கியின் வடக்கு திட்டமிடல் முகாமையாளர் எஸ் மனோகரன், உலக வங்கியின் அபிவிருத்தித்திட்டமிடல் அதிகாரி நிகால் பெர்னான்டோ, உலக வங்கியின் அதிகாரி எஸ். சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/30651-2011-11-10-12-26-45.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் காலதாமதம் ஏற்படுமானால் தொடர்ந்து நிதி வழங்க முடியாது என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உலக வங்கி தூதுக்குழு தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இதைக்காட்டியே யாழில் ஒன்றுமே செய்யாது விடப்போகின்றது சிங்கள அரசு இதிலும் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான்

  • தொடங்கியவர்

சிங்கள பகுதிகளில் எவ்வாறு உலக வங்கி திட்டங்கள் நடக்கின்றன என்ற கேள்வி எழுகின்றது.

எல்லாமே மகிந்த கூட்டத்தின் அங்கீகாரம் இன்றி நடக்காது. அதிலும் தமிழர் தாயாக பகுதிகளில் ஒன்றுமே நடக்கக்கூடாது.

உதாரணத்திற்கு யாழில் ஒரு கிலோ கப்பல் வாழைப்பழத்தை இருபதுசதத்திற்கு

வாங்கும் 'சிங்களவர்கள்' கொழும்பில் எழுபது சதத்திற்கு விற்கிறனர்.அவர்களை மீறி தமிழர்களால் கொழும்புக்கு எதையும் ஏற்ற முடியாது. அங்கு அதை வாங்கி உண்பவர்களும் அநேகமானோர் தமிழர்கள் தான்.

எல்லா விதமான திட்டங்களும், வர்த்தக வழமைகளும், ஒரே விதமான அடிப்படையிலேயே மீளமைக்கைப் படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது!

அதாவது, தமிழனின் பணத்தை, அல்லது தமிழ்ப்பகுதிகளுக்கு வெளி நாடுகளால் ஒதுக்கப் படும் பணத்தை, சிங்கள பகுதிகளுக்கும், சிங்கள மக்களுக்கும் சென்றடைவதற்கான வகையில்,வழிமுறைகளை மாற்றியமைப்பதே ஆகும்!

இது எமக்கு விட்டுவைக்கப்பட்டுள்ள, விவசாயம், மீன்பிடி எல்லாத் துறைகளிலும் இப்போது அமுல் படுத்தப்படுகின்றது!

மீன்பிடிப்பதற்கான பாஸ் வழங்கலும் இதன் ஒரு பகுதியே ஆகும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.