Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றவாளிகளின் காப்பகமாக ஐ. நா. இருக்கக் கூடாது.

Featured Replies

இராஜதந்திர உரிமைகள் பற்றி வியன்னா பிரகடனம் என்ன கூறுகின்றது என்றால் ”the purpose of such previleges and immunities is not to benefit individuals but ensure the efficient performance of the functions of diplomatic missions of state" இதன்படி போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா உண்மையில் சலுகைகளை வைத்து நன்மையடையக்கூடாது என்பது புலனாகின்றது. அதே வேளை இராஜதந்திரிகளின் பணிவினைத்திறனை இந்த சலுகைகள் வலுவாக்கும் என்பதும் ஆகும் அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது அல்ல.

.

ஐக்கிய நாடுகள் சபையின் துணை தூதராக பணியாற்றும் சவேந்திர சில்வா என்பவர் ஒரு போர்க்குற்றவாளி.இந்த நபரை ஐக்கிய நாடுகள் சபை தனது சேவையில் வைத்திருப்பது மனித உரிமை அமைப்பான ஐக்கிய நாடுகள் சபைக்கே சரியல்ல என . இவ்வாறு கூறியுள்ளார் அலி பேடவுன் எனும் அமெரிக்கன் பல்கலைக்கழக சட்டவியல் பீட இயக்குனராகவும் மனித உரிமைக்கழகத்தின் பகுதி பொறுப்பாளராகவும் இருக்கும் அலி பேடவுன். (Ali Beydoun, director at American University Washington College of Law’s UNROW Human Rights Impact Litigation Clinic and a Senior Partner at SPEAK Human Rights & Environmental Initiative.).

.

இவர்தான் கேணர் ரமேஸ் அவர்களின் துணைவியார் சார்பாக சவேந்திரசில்வா மீது போர்க்குற்ற வழக்கினை தாக்கல் செய்தவர். இவர் செய்த வழக்குத்தாக்கலுக்கு எதிராக சவேந்திரசில்வாவும் சிங்கள அரசாங்கமும் சவேந்திர சில்வாவின் இராஜதந்திர சலுகைகள் அவரைப்பாதுகாக்கும் என வாதிட்டனர். கூடவே அந்த சலுகைகளை உறுதிப்படுத்தி தன் மீதான வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு மனுத்தாக்கல் செய்திருந்தார் போர்க்குற்றவாளி சில்வா.

.

ஆனால் இந்த நடவடிக்கையானது போர்க்குற்றவாளி ஒருவரை பாதுகாக்கும் செயல் ஆகவே ஐக்கிய நாடுகள் சபை சவேந்திர சில்வாவிற்கான உரிமைகளை இரத்து செய்யவேண்டும் எனவும் வாதிடுகின்றார் அலி பேடவுன். நேற்றுமுன் தினம் சவேந்திர சில்வாவின் இராஜ தந்திர உரிமைகளை இரத்து செய்யுமாறு கோரி முறைப்படியான மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் அலி பேடவுன். அதன் முழு வடிவத்தினையும் காண இங்கே அழுத்துங்கள்.

.

மேலும் European Center for Constitutional and Human Rights, Human Rights USA, World Organisation Against Torture (OMCT), Center for Constitutional Rights, TRIAL, the Yale Law School’s Allard K. Lowenstein International Human Rights Clinic, the Campaign Against Criminalising Communities and the Society for Threatened Peoples ஆகிய அமைப்புக்கள் உட்பட 10 அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர். அதில் சவேந்திர சில்வா மீதான குற்றத்தினை ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்கவேண்டும் எனவும், சவேந்திர சில்வாவிற்கான இராஜ தந்திர உரிமைகளை விலக்கிக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

.

போர்க்குற்றவாளி சவேந்திரசில்வா போன்று கிட்டத்தட்ட 22 இராணுவ அதிகாரிகளை அதாவது போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை சிறிலங்கா அரசாங்கம் இராஜதந்திரிகளாக நியமித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன இந்த அமைப்புக்கள். சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றவாளிகளின் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இராஜதந்திரிகளுக்கான உரிமைகளை பயன்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

.

மேற்கூறப்பட்ட அமைப்புக்கள் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மக்களினதும், உலகத்தில் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற எண்பது மில்லியன் தமிழ் மக்களின் கருத்தும் இதுதான். மனிதாபிமானத்திற்காகவும் நீதிக்காகவும் போராடும் மில்லியன் கணக்கான பிற இன மக்களின் வேண்டுகோளும் இதுதான் அதாவது குற்றவாளிகளின் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை இருக்க கூடாது. குற்றவாளிகள் இராஜதந்திர சலுகைகளால் கப்பாற்றப்படக்கூடாது என்பதுவே.

.

பிரிட்டனின் வெளிவிவகார செயலர் வில்லியம் ஹாக் சில மாதங்களுக்கு முன்னர் கூறி இருந்தார் பிரிட்டனில் இராஜ தந்திரிகளுக்கு சலுகைகள் இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட குற்றங்களுக்கு தண்டிக்கப்படலாம் என்று இதில் பாலியல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளடங்கலாக 17 குற்றங்கள் அடங்கும். இதைவிட அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச நணைய நிதிய தலைவர் கைது செய்யபப்டும்போது அவரை இராஜ தந்திரிகளுக்கான சலுகைகள் பாதுகாகவில்லையே அதே போல சியராலையோன் நாட்டில் ஐரோப்பிய ஒன்றிய இராஜ தந்திரிகள் மீது அந்த நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது. இப்படி இராஜ தந்திர நடைமுறைகளை, சலுகைகளை கடந்து ஒருவர் செய்த குற்றங்களுக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

.

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவின் குற்றங்கள் மேற்கூறப்பட்டவற்றை விட பாரதூரமானது. சவேந்திர சில்வா எனும் போர்க்குற்றவாளி இராஜ தந்திர சலுகைகளை வைத்து நன்மையடையக்கூடாது.

.

இராஜதந்திர உரிமைகள் பற்றி வியன்னா பிரகடனம் என்ன கூறுகின்றது என்றால் ”the purpose of such previleges and immunities is not to benefit individuals but ensure the efficient performance of the functions of diplomatic missions of state" இதன்படி போர்க்குற்றவாளி ஒன்று உண்மையில் சலுகைகளை வைத்து நன்மையடையக்கூடாது என்பது புலனாகின்றது. அடுத்ததாக இராஜதந்திரிகளின் பணிவினைத்திறனை இந்த சலுகைகள் வலுவாக்கும் என்பதும் ஆகும் அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது அல்ல.

.

கூடவே வியன்னாவின் இராஜதந்திரிகளுக்கான சலுகைகள் தொடர்பிலான வரையறைகளில் புதிய பல மாற்றங்களும் நடந்துள்ளன. இதில் இராஜதந்திரிகள் தங்கள் சலுகைகளை வைத்து தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பக்கூடாது என்றும் அத்துடன் இவ்வாறான முயற்சிகளுக்கு எதிராக ஒரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுத்தால் குறித்த இராஜதந்திரிகளை அனுப்பிய நாடு அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன. மேற்கண்டவியத்தினை Statue பல்கலைக்கழக அனைத்துலக சட்டவியல் விரிவுரையாளர் Rene Vark என்பவர் தனது Personal Inviolability and Diplomatic Immunity in Respect of Serious Crimes ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

.

உண்மையில் இந்த ஒரு கருத்தினைத்தான் அனைத்து மனித உரிமை அமைப்புக்களும் போர்க்குற்றவாளி சவேந்திரசில்வாவின் வழக்கு தொடர்பில் கொண்டிருக்கின்றார்கள்.

.

மூலம்

.

Edited by உமை

முடிந்தால் சில மாற்றங்களுடன் இந்த அமைப்புக்களுக்கு நன்றி சொல்லி இல்லை ஐ.நா.வுக்கு இவர்கள் கோரிக்கையை ஏற்க கோரி ஒரு கடிதம் எழுதுங்கள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=94176

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.