Jump to content

தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம்

துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று நடந்தேறியது!

தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறையி லான திருமணம் ஒன்று நேற்று நல்லூரில் சிறப்புற நடந்தேறியது.

பேராசிரியர் அ.சண்முகதாஸ்,கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் தம்பதியர் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்ட பத்தில் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தத் திருமணம் நடைபெற்றது.

தமிழ் முறையில் உள்ள பிரதான சம்பிர தாயங்களை உள்ளடக்கியதாக வித்தியாச மான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் அந்தணர்களுடன் கூடிய சமயக் கிரியைகள் எவையும் இடம்பெறவில்லை. மணமகன், தோழன் ஆகியோர் தலைப்பாகை அணிந்துகொள்ளவில்லை.

இந்தத் திருமண நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து திருக்குறள் ஓதுதல் ஆன்றோர்களால் திருக்குறளுக்கு பொருள் கூறல், தலைவரின் முன்னுரை, மணமகன் உறுதியுரை, மணமகள் உறுதியுரை என்பன இடம்பெற்றன.

தொடர்ந்து மங்கல நாண் அவையினரின் ஆசீர்வாதத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தவேளை மங்கல வாழ்த்துப்பா ஓதுதல் இடம் பெற்றது.

பின்னர் திருமணத்தை தலைமை வகித்து ஒப்பேற்றிய பேராசிரியர் சண்முகதாஸ் தம்ப தியர் மாலையை எடுத்து மணமக்களுக்கு வழங்க மணமக்கள் மாறி, மாறி அணிந்து கொண்டனர்.

தொடர்ந்து மங்கல நாண் மணமகனால் பூட்டப்பட்டது.

அடுத்து தலைமை தாங்கும் தம்பதியினர், மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க மணமக்கள் தலைமைக்குரியயோரையும், பெற்றோரையும் வணங்கி ஆசிபெற்றனர்.

தொடர்ந்து அனைவரும் மணமக்களுக்கு ஆசிவழங்கினர். சான்றோர்கள் வாழ்த்துரை களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர் கள், விரிவுரையாளர்கள், வங்கியாளர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதைக் காணமுடிந்தது.

தகவல் மூல்ம்- உதயன்

Link to comment
Share on other sites

இதில என்ன மாற்றம்...புரோகிதரை விட்டம் மந்திரத்துக்குப் பதில் பா ஓதினம்..அவ்வளவும் தான்..!

முக்கியமான மங்கள நாணை மணமகன் மட்டும் தானே பூட்டினார் மணமகளுக்கு..! ஏன் மணமகளுக்கும் மணமகன் கழுத்தில ஒரு நாண் பூட்ட அனுமதிக்கவில்லை..! மாறிமாறி மாலை மாற்றிக் கொள்ளலாம்..மோதிரம் அணிவிக்கலாம்..ஆனால் மங்கள நாண் மட்டும் மணமகள் மட்டுமா தரிக்க வேண்டும்..??! குறிப்பிட்டவரின் துணைவி தானே அவங்க..அவங்க விருப்பத்துக்கு ஒரு நாணை அவர் ஏன் தாங்கக் கூடா..! பா ஓதலாம்..புரோகிதர விடலாம்..அது சபை முடிய மறந்திடும்..ஆனா அணிஞ்ச நாண் இருக்கும் எப்பவும் அடையாளமா...அன்புப் பரிசா..ஆனா இன்னும் மணமகன்கள் அந்தளவுக்கு துணைவியிட்ட ஒரு அன்புப் பரிசை வாங்கிற அளவுக்கு எதிர்பார்ப்பையும் வளர்க்கல்ல...அந்தளவுக்கு அவங்க மனங்கள் உண்மையாக மாறவும் இல்லைப் போல..! நல்ல மாற்றங்கள் வரவேற்கப்படனும்...ஆனா சிலது திட்டமிட்டு மறைக்கப்படுவதும் வெளிப்பட வேண்டும்..! :idea:

நிச்சயமா மங்கள நாண் ( தாலி ) வேணாங்கிற கூட்டமில்லை நாங்கள்..அப்படிச் சொல்லுறது இனத்துவ அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமா இழக்க வழி செய்யும்...ஆனால் ஒரு ஆண் தன் துணைவியிடம் ஒரு மங்கள நாணை எதிர்பார்ப்பது அவளின் அன்புப் பரிசாக அடையாளமாக...ஏன் சாத்தியமில்லை..! நிச்சயம் அவனுக்குள்ளும் அப்படி ஒரு ஆசை இருக்க வேண்டும்..! அது இயல்பாக எழ வேண்டும்...! உண்மை அன்பிருந்தா நிச்சயம் எழும்..! :wink: :idea:

Link to comment
Share on other sites

துணைவி தானே அவங்க..அவங்க விருப்பத்துக்கு ஒரு நாணை அவர் ஏன் தாங்கக் கூடா

நல்ல கேள்வி குருவிகள். இதற்கு முன்னுதாரணமாய் யார் தான் வருவார்கள் ? வேண்டுமென்றால் ஒன்று செய்வோமா பேசாமல் அந்த முன் உதாரனமாக ஏன் நீங்களே இருக்க கூடாது :?: :):):lol::lol:

இன்னும் மணமகன்கள் அந்தளவுக்கு துணைவியிட்ட ஒரு அன்புப் பரிசை வாங்கிற அளவுக்கு எதிர்பார்ப்பையும் வளர்க்கல்ல

எந்த உலகத்தில ஐயா இருக்கிறீர்கள் :lol::lol::lol: அதுதானே ஜாம்பவான்கள் சீதனம் எனும் பெயரில வாங்காம வாங்குகிறாங்களே இது போதாதா :P :P

Link to comment
Share on other sites

நல்ல கேள்வி குருவிகள். இதற்கு முன்னுதாரணமாய் யார் தான் வருவார்கள் ? வேண்டுமென்றால் ஒன்று செய்வோமா பேசாமல் அந்த முன் உதாரனமாக ஏன் நீங்களே இருக்க கூடாது :?: :):):lol::lol:

எந்த உலகத்தில ஐயா இருக்கிறீர்கள் :lol::lol::lol: அதுதானே ஜாம்பவான்கள் சீதனம் எனும் பெயரில வாங்காம வாங்குகிறாங்களே இது போதாதா :P :P

நிச்சயமா முன்னுதாரணத்துக்காக அல்ல..சபை கூட்டி ஆக்களுக்கும் பத்திரிகைக்கும் கொடுக்க அல்ல.. புரட்சி என்று விளம்பரத்துக்கு அல்ல... சாதாரணமாகவே என்னவளின் அன்புப் பரிசா அவளின் அடையாளமா மங்கள நாண் என்ன அவள் எது அணிவித்தாலும் தாங்கிக் கொள்ள நாங்க தயார்தான்...! அது நிச்சயமா மிக மகிழ்ச்சிக்குரிய விடயம்..! அன்புக்குரியவளின் அன்புச்சொத்தொன்றை எம்முடலோடு காலம் முழுக்க சுமப்பதில் எமக்கு மிக இஸ்டம் உண்டு..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் குருவி சொன்னது நூற்றுக்கு நூற்று வீதம் சரி ஆனால் என்னை பொருத்தவரை

1.பொதுவான நகர மண்டபத்தில் திருமணத்தை வைத்திருக்கலாம்?

2.எதற்கு மாப்பிள்ளை தோழன்?

3.எதற்கு மங்கள நாண்?

இறுதியாக தலைவரின் முன்னுரை என்றால்,தேசிய தலைவரின் முன்னுரையா?தேசிய தலைவரின் முன்னுரை என்றால் மிகவும் பாராட்டத்தக்க விடயம்.

தமிழ் சமுகம் இவ்வளவு முன்னேறியதே பெருமை பட வேண்டிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகம் இவ்வளவு முன்னேறிய நிலையைலும் புலம் பெயர் தமிழர்கள் முன்னேறிய நாட்டில் இருந்தும் சமய சடங்குகளிலும்,சம்பிரதாயங்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கடவுளுக்குத் தமிழ் தெரியுமா?" என்ற கேள்வியைத் தமிழனே கேட்கிறான்!

--------------------------------------------------------------------------------

இதுதான் எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது

தமிழ்முறைத் திருமணவிழாவில் திரு. ஈழவேந்தன் உரை

"தமிழ் அன்னையின் இனிய உயிர் நிலையாம்" திருக்குறளை ஓதி தமிழ் மணம் கமழும் திருமணத்தை சென்ற சனிக்கிழமை 21.01.2006 இல் கொழும்பில் நடாத்தி வைத்த ஈழவேந்தன் அவர்கள்; கவலை தோய்ந்த நிலையில் மேற்குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் " என்ற வள்ளுவர் வாய்மொழியையும் மற்றைய குறட்பாக்களையும் மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார்.

சென்ற சனிக்கிழமை கணனிப்பொறியியலாளர் நளின் அவர்களுக்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பட்டதாரி தனுஜா அவர்களுக்கும் திருக்குறள் ஓதி தமிழ்மணம் கமழும் திருமணத்தை மிக்க சிறப்புடன் ஈழவேந்தன் நடாத்தி வைத்தாக். இத் திருமணத்தில் நூற்றுக்கணக்கில் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கல்வி உதவி இயக்குநர் சிவநிர்தானந்த அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஈழவேந்தன் தன் தலைமை உரையில் புரட்சி பூக்கின்ற நிலையில் திருக்குறள் ஓதி வழிபடும் தமிழ் மணம் கமழும் இத்;திருமணத்திற்கு தலைமை தாங்கி உரையை நிகழ்த்துவது தமக்குப்; பெருமிதத்தையும் பேருவகையையும் தருகின்றது என்று குறிப்பிட்ட அவர் 1962 ஆம் ஆண்டிலேயே தந்தை செல்வாவின் தலைமையில் தனது திருமணம் தமிழில் நடைபெற்றது என்று குறிப்பிட்ட அவர் பின்பு 1986ல் தனது மகள் யாழினியின் திருமணம் தமிழகத்தில் திருமுறைகள் ஓதி கலைஞர் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் முன்னிலையில் சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறைத்தலைவர் திரு.இரத்தினசபாபதி அவர்கள் நடாத்திவைத்தார்;. இவ்விழாவில் பழநெடுமாறன்ää வைகோää வீரமணிää தமிழ்க்குடிமகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எனினும் நீண்ட கால இடைவெளிக்குப் பின் 2006 இல் நான் பெறாத செல்வங்கள் நளின் தனுஜா அவர்களுடைய திருமணம் பல அறிஞர் முன்னிலையில் தமிழில் இங்கு சிறப்பாக நடைபெறுவது காலத்தின் கருத்தோட்ட வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. மணமக்கள் இருவரும் வௌ;வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் மொழி பண்பாடு நாகரிகம் வாழ்வியல் முறை ஆகியவை அவர்களை இணைத்துள்ளது. ஈழவேந்தன் அவர்கள் தன் உரையில்; சங்ககாலமää; சங்கமருவிய காலம் ஆகிய காலப்பகுதிகளில் தமிழில் வழிபாடும் தமிழ்த் திருமணங்களும் நடைபெற்றதற்குச் சான்றுகள் உண்டு. பின்பு களப்பிரர் மற்றும் பல்லவர் காலத்தில் வீழ்ச்சியுற்ற தமிழன் வாழ்வு "தமிழால் ஞாலம் அளந்த ஞானசம்பந்தராலும் " "தமிழோடு இசை பாடிய அப்பராலும் " தமிழ் மீண்டும் தலைதூக்கியது. பின்பு "அர்ச்சனை" பாட்டே ஆகும்ää ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழில் பாடுக என்று 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆளுடைய நம்பிக்கு – சுந்தரருக்கு இறைவன் இட்ட கட்டளையை நினைவுபடுத்திய ஈழவேந்தன் அவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செந்தமிழ் காப்பியம் தந்த சேக்கிழார் இதனை வலியுறித்திச் சென்றதையும் நினைவுபடுத்தனார். 12 நூற்றாண்டுகள் உருண்டோடிய நிலையில் தமிழ் வழிபாட்டினை 20 ஆம் நூற்றாண்டில் கலைஞர் சட்டமாக்க முனைந்தபோது அங்குள்ள பார்ப்பனீயம் நீதிமன்றம் ஏறித் தமிழ் வழிபாட்டினைத் தடுத்து வடமொழி வல்லாண்மை தலைதூக்க வழி வகுத்தது. எனினும் 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் மீண்டும் மறுமலர்ச்சி காண்கின்ற முறையில் தமிழ் வழிபாடும் தமிழ்த் திருமணங்களும் புத்துயிர் பெற்றிருப்பது வீழ்ந்த தமிழன் மீண்டும் எழுச்சி பெற்றதற்கு சான்றாக விளங்குகிறது. இந்நிலையிலும் கடவுளுக்குத் தமிழ் தெரியுமா? என்று தமிழன் கேட்பானாயின் தமிழ் தெரியாத கடவுளுக்குத் தமிழ் நாட்டிலும் சரி தமிழீழத்திலும் சரி இடமில்லை. 18 ஆயிரம் தமிழ் உயிர்களை களத்தில் இழந்துள்ள நாம்ää ஏறக்குறைய 70 ஆயிரம் உயிர்களை போரின் விளைவினால் இழந்துள்ள நாம் எப்படி எமக்கு உயிரூட்டும் தமிழை மறந்து வாழ்விழந்த வடமொழிக்கு வாழ்வு கொடுக்க முடியும்?

தமிழ் ஈழத்தைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்துவிக்கின்ற திருமணங்கள் தலைவர் பிரபாகரன் தலைமையில் அல்லது அவரை அடுத்த நிலைத்தலைவர்கள் தலைமையில் தமிழில் நஇபெறுகின்றது. புலிச்சின்னத்தோடு கணையாழிகள் மாற்றப்படுகின்றன. மலர் மாலைகளும் மணமக்களிடையே அணியப்படுகின்றன. வாழ்விலும் தாழ்விலும் நாம் இருவரும் ஒன்றுபட்டே வாழ்வோம் என மணமக்கள் தமிழில் எடுக்கின்ற உறுதிமொழி தமிழரிடையே காணப்படுகின்ற வந்தனைக்குரிய சிந்தனைப் புரட்சிக்கு எடுத்துக்காட்டாகும்.

ஈழத்தமிழ் மக்கள் விரைவில் அரசியல் விடுதலை பெறுவது உறுதி. அத்தோடு தமிழீழம் மலர்வதை எவரும் தடுக்க முடியாது. ஆனால் சமுதாயத்திலும் சமயத்திலும் பொருளியல் வாழ்விலும் புரட்சி பூத்தால்த்தான் எம் அரசியல் விடுதலை ஆக்கம் தரும். 2003 ஆம் ஆண்டு ஒக்தோபர் திங்கள் 12 ஆம் நாள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து உரையாடிய போது அவர் சொல்லிய அரிய கருத்துக்களுள் ஒன்று "ஆரிய மாயையில் இருந்து தமிழன் விடுபட்டாற்றான் தமிழினத்திற்கு மீட்சியும் வாழ்வும் உண்டு " என்று அவர் கூறியதைத் தாம் இங்கு நினைவுபடுத்துவதாகக் கூறினார்.

இறுதியில்; மணமக்களை அவர் விளித்து ஆண்குழந்தையோ பெண்குழந்தையோ எமக்குக் கவலையில்லை ஆனால் "புலிக்குட்டிகளைப்" பெற்று எம் இனத்தின் வாழ்வுக்கும் வளத்திற்கு துணைநிற்க வேண்டும்” என்று அவர் கூறியபோது அவையோரிடம் இருந்து பெருங்கையொலி எழும்பியது

தகவல் மூலம்- சூரியன்.கொம்

Link to comment
Share on other sites

முக்கியமான மங்கள நாணை மணமகன் மட்டும் தானே பூட்டினார் மணமகளுக்கு..! ஏன் மணமகளுக்கும் மணமகன் கழுத்தில ஒரு நாண் பூட்ட அனுமதிக்கவில்லை..!

ஜயா குருவிகளே..............சனத்துக்கை பப்பிளிக்காக செய்யிற ஒரு காரியம் எண்டால் இந்த தாலிகட்டுற விளையாட்டு மாத்திரம்தான் பிறகு வீட்டை வந்தாப்பிறகு இந்த பெம்பிளைகள் பெரிய கயிறு போட்டெல்லோ ஆம்பிளைகளை கட்டி வைச்சிருக்கிற விசயம் உங்களுக்கு தெரியாமப் போனது ஆச்சரியமாக்கிடக்கு.......(எல்லார

பின்ன நீங்க கட்டிட்டு கட்டுக்கடங்காம இருந்தா கட்டிவைக்காம என்ன செய்ய முடியும் அவையும்..! கட்டினவங்க கூட எல்லாத்தையும் அன்பால கட்டிப்பாருங்க..சொர்க்கமே காலடில இருக்கும்..இதுவும் உண்மை..! :wink: :P :idea:

ஜயா நீங்கள் சொல்லுற கயிறு எந்த கடையிலை விக்குது கிலோ கணக்கிலை வாங்கி வைக்கப்போறன் பிறகெண்டாலும் ஒரு விடிவு வருகுதோ பாப்பம் ...........

Link to comment
Share on other sites

ஜயா நீங்கள் சொல்லுற கயிறு எந்த கடையிலை விக்குது கிலோ கணக்கிலை வாங்கி வைக்கப்போறன் பிறகெண்டாலும் ஒரு விடிவு வருகுதோ பாப்பம் ...........

எங்கையும் தேடத் தேவையில்லை முகத்தார். உங்களுக்கையே இருக்கு என்ன கொஞ்சம் நிதானமா சிந்திச்சு இயல்பா பொன்னம்மாக்காவ புரிஞ்சு கொண்டு நடந்தீங்கள் என்றால் எல்லாம் சுபம்..! :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம்

துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று நடந்தேறியது!

தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறையி லான திருமணம் ஒன்று நேற்று நல்லூரில் சிறப்புற நடந்தேறியது.

பேராசிரியர் அ.சண்முகதாஸ்,கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் தம்பதியர் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்ட பத்தில் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தத் திருமணம் நடைபெற்றது.

தமிழ் முறையில் உள்ள பிரதான சம்பிர தாயங்களை உள்ளடக்கியதாக வித்தியாச மான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் அந்தணர்களுடன் கூடிய சமயக் கிரியைகள் எவையும் இடம்பெறவில்லை. மணமகன், தோழன் ஆகியோர் தலைப்பாகை அணிந்துகொள்ளவில்லை.

இந்தத் திருமண நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து திருக்குறள் ஓதுதல் ஆன்றோர்களால் திருக்குறளுக்கு பொருள் கூறல், தலைவரின் முன்னுரை, மணமகன் உறுதியுரை, மணமகள் உறுதியுரை என்பன இடம்பெற்றன.

தொடர்ந்து மங்கல நாண் அவையினரின் ஆசீர்வாதத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தவேளை மங்கல வாழ்த்துப்பா ஓதுதல் இடம் பெற்றது.

பின்னர் திருமணத்தை தலைமை வகித்து ஒப்பேற்றிய பேராசிரியர் சண்முகதாஸ் தம்ப தியர் மாலையை எடுத்து மணமக்களுக்கு வழங்க மணமக்கள் மாறி, மாறி அணிந்து கொண்டனர்.

தொடர்ந்து மங்கல நாண் மணமகனால் பூட்டப்பட்டது.

அடுத்து தலைமை தாங்கும் தம்பதியினர், மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க மணமக்கள் தலைமைக்குரியயோரையும், பெற்றோரையும் வணங்கி ஆசிபெற்றனர்.

தொடர்ந்து அனைவரும் மணமக்களுக்கு ஆசிவழங்கினர். சான்றோர்கள் வாழ்த்துரை களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர் கள், விரிவுரையாளர்கள், வங்கியாளர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதைக் காணமுடிந்தது.

தகவல் மூல்ம்- உதயன்

இதில புதுசா ஒண்டும் காணேல...............எல்லாம் வழமையா நடக்கிறது தானே.............ஒண்டே ஒண்டு மாறியிருக்கு.....................சமஸ்கிர

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.