Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணை: படையினரை பலிக்கடாவாக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இரகசிய திட்டம்!

Featured Replies

போர்க்குற்ற விசாரணை: படையினரை பலிக்கடாவாக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இரகசிய திட்டம்!

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் படுகொலையுடன் தொடர்புடையவர்களையும் இனங்காணுமாறு பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தவிதாரணவும் அவருடைய சிறப்பு பிரிவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவினால் பணிக்கப்பட்டுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவையும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவையும் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மேஜர் தரத்திலான மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தினரைப் பலியிட அரசாங்கம் தயாராகி வருவதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் சர்வதேச அழுத்தங்களையும் விசாரணைகளையும் தளர்த்துவதற்கு ஏதுவாக வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற யுத்தமீறல்களுக்கு காரணமானவர்கள் என சில குறிப்பிட்ட இராணுவத்தினர்மீது குற்றங்களை சுமத்தி, அவர்களை பலிக்கடாவாக்குவதன் மூலம் ராஜபக்ச சகோதரர்கள் தப்பிவிட முயல்வாக செய்திகள் கசிந்துள்ளன.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், அது சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதாக அமையவேண்டும் என்பதில் அரசு அக்கறை கொண்டுள்ளது. அரசின் இந்த விருப்புக்கு மாறாக அறிக்கை பலவீனமாக அமையுமானால், சர்வதேச நாடுகள் ஜனாதிபதி மகிந்த உட்பட அரசாங்க அமைச்சர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது பயணத் தடைகளை விதிக்கலாம் என அரசாங்க மட்டத்தில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. தவிர, அரச மட்டத்தினரின் தனிப்பட்ட சொத்துகளை முடக்குவதற்கும் சர்வதேச நாடுகள் முயலலாம் என அஞ்சப்படுகிறது.

இது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்திய அமைச்சர் Alistair Burt 'சகல வழிமுறைகளிலும்' இவ்விவகாரம் கையாளப்படும் என்று தெரிவித்திருந்ததையும் அமெரிக்க, கனடா மற்றும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக வெளிப்படுத்திய கருத்துகளையும் மேற்படி ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இது தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் படுகொலையுடன் தொடர்புடையவர்களையும் இனங்காணுமாறு பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தவிதாரணவும் அவருடைய சிறப்பு பிரிவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவினால் பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இராணுவத்தினர் உட்பட மேலும் பலர் வன்னியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கும் யுத்தமீறல்களுக்கும் காரணகர்த்தாக்கள் என பாதுகாப்பு அமைச்சால் குற்றம்சாட்டப்பட உள்ளனர். இவர்கள் மீது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டவரையறைகளின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைக்கும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சனல் 4 போன்ற ஊடகங்கள் சிறிலங்காவுக்கு எதிராக தீவிரமாக செயற்படாது என இராஜபக்ச சகோதரர்கள் நம்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவப் பாதுகாப்பில் இருந்து காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு இலவச வீடுகளையும் இழப்பீடுகளையும் வழங்குமாறும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறும் ஆணைக்குழு பரிந்துரைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

அதேவேளை இது தொடர்பாக இராணுவ கடும்போக்காளர்களிடமிருந்து எழக்கூடிய எதிர்ப்புகளை சமாளிக்கும் நோக்குடன் போர்க்காலத்தில் யுத்தபிரதேங்களிலிருந்து மக்களை 'காப்பாற்றுவதில்' இராணுவம் புரிந்த சேவையை பாராட்டும் அம்சங்களும் அறிக்கையில் இடம்பெறும்.

போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அரசினால் பலிக்கடாவாக்கப்படவுள்ள இராணுவத்தினரின் குடும்பங்களை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் எனவும் அவர்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் எனவும் மூன்றாவது தரப்பு ஒன்றின் மூலம் இவ் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாவோரில் பெரும்பகுதியினர் இரண்டு வருடங்களின் பின்னர் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவர் எனவும் ஜனாதிபதி அலுவலகம் வாய்மொழி உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

வன்னியுத்தத்தின் இறுதிநாட்களில் இராணுவத்திடம் சரணடைந்து இரகசிய முகாம்களில் விசாரணையின்றி அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யுமாறும் ஆணைக்குழு பரிந்துரைக்கவுள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கை, அரசாங்கத்தின்மீதும் சில கடுமையற்ற குற்றங்களை முன்வைக்கும் எனவும் வைத்தியசாலைகள் மீதோ அன்றி யுத்த சூனிய பிரதேசங்களில் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்தோ அறிக்கை எவ்வித குற்றங்களையும் சுமத்தாது. யுத்தத்தின்போது மக்களுக்கு போதுமான உணவு அனுப்பப்படாமை குறித்தும் அறிக்கை எவ்வித குற்றச்சாட்டுகளையும் முன்வைக்காது.

இதேவேளை போர்க்குற்றச்சாட்டுகள் குறித்தும் அதற்குப் பொறுப்பானவர்கள் மீதான விசாரணை குறித்தும் ராஜபக்சே சகோதரர்கள் பெரிதும் அக்கறை செலுத்தாமலே இருந்து வந்தனர். காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் இக்குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை மழுங்கடிக்கலாம் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர், சரணடையும் விடுதலைப் புலிகளை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாய ராஜபக்ச உத்தரவிடும் ஒலிப்பதிவு தம்மிடம் உள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்த பின்னரே அரசாங்கம் இதன் தீவிரத்தை உணரத் தொடங்கியது என இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்தரைகள் நடைமுறைப்படுத்தும் அதேநேரம் இது தொடர்பான அரச ஆதரவுப் பிரச்சாரங்களை அனைத்துலக ரீதியில் மேற்கொள்ள பிரச்சார நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேற்படி ஊடகம் தெரிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=dcb3ad12-70ba-4bdd-a435-7a26559e6048

தொடர்பு செய்தி : கசிந்தது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை? : http://www.yarl.com/forum3/index.php?showtopic=94449

ஆங்கில மூலம்: http://www.lankanewsweb.com/english/index.php?option=com_content&view=article&id=666:leaked-extracts-of-the-notorious-llrc-report&catid=46:exclusive&Itemid=113

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 தொலைக்காட்சியில் அடுத்த காணொளி வரப்போகிறது...

சனல் 4 தொலைக்காட்சியில் அடுத்த காணொளி வரப்போகிறது...

கந்தப்பு: இவை ஆசை காட்டும் செய்திகள். முழுவதாகத்தெரிந்தால் மட்டும் தயவு செய்து எழுதுங்கள். ராசபக்சா உலகத்தை ஏமாற்ற வைத்தியசாலையிலும் ஒருதடவை படுத்துக் காட்டியவர்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு: இவை ஆசை காட்டும் செய்திகள். முழுவதாகத்தெரிந்தால் மட்டும் தயவு செய்து எழுதுங்கள். ராசபக்சா உலகத்தை ஏமாற்ற வைத்தியசாலையிலும் ஒருதடவை படுத்துக் காட்டியவர்.

ஈழப்போர் உக்கிரமாக நடந்த போது... கருணாநிதிக்கும் முதுகுவலி வந்தது.

கொஞ்ச நாளைக்கு முதல் சோனியாவுக்கும் கான்சர் வந்தது.

  • தொடங்கியவர்

இங்கே தமிழர் தரப்பு இந்த மேஜர்களையும் அந்த இராணுவ சிப்பாய்களையும் இனம்கண்டு அவர்களை சனல் நாலுடன் இணைத்துவிடவேண்டும்.

அநேகமாக இவர்கள் பொன்சேகாவின் ஆட்களாக இருப்பார்கள். அதேவேளை இது உண்மையாயின் சிங்கள பேரினவாத பூதங்களின் இடையே நிச்சயம் பிரச்சனை உருவாகும். அந்த நெருப்பில் கொஞ்சம் எண்ணெயை நாம் ஊற்றிவிட வேண்டும்.

  • தொடங்கியவர்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டு விடக்கூடாது - இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது கடந்த கால ஆணைக்குழுக்களின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது போல் அமையக் கூடதென இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள நிப்போன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்;

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் யுத்தத்தின் முடிவில் இலங்கை வந்த நிலையில் அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்த முடிவின் விளைவாகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் தேசிய பொறிமுறையில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் உருவாக்கிய நிலையில் இதன் அறிக்கை எதிர்வரும் நாட்களில் கையளிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெளிநாடுகளின் அழுத்தம் மனித உரிமை விடயம் தொடர்பில் இருந்து வந்தது. இதற்கு முதலாவதாக தேசிய பொறிமுறையின் விசாரணை செய்து நடவடிக்கையெடுக்க முடியும்.இரண்டாவதாக சர்வதேச விசாரணை இடம்பெற முடியும். இந்நிலையில் இலங்கைக்கு தேசிய பொறிமுறையின் கீழான விசாரணையை சிறப்பாக முன்னெடுக்கும் திறமையும் வலிமையும் உண்டு. இந்நிலையில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு நாட்டின் இறைமை இனங்களுக்கிடையேயான ஐக்கியம் நல்லிணக்கம் என்பவற்றை எதிர்காலத்திலும் நிலைத்து நிற்க கூடிய விதத்திலும் இலங்கையின் பெயர் கெட்டுப்போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொழும்பைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வின் போது தடுத்து வைக்கப்பட்டிருப்போர்,காணாமல் போனோர், காணிவிடயம், மீள்குடியேற்றம், நிதியுதவி தொர்டர்பிலேயே அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டுமென்பதுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும்.

மேலும், அமர்வுகள் இடம்பெற்ற வேளையில் சாட்சியமளித்தவர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றதை கவனத்தில் கொள்வது அவசியம். மொத்தத்தில் மூவின மக்களும் ஐக்கியத்துடனும் அந்நியோன்னியத்துடனும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தற்போதைய நிலையில் தேவையென காணப்படும். நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமையுமென நம்புகின்றோம்.

அதேவேளை கடந்த காலங்களில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் வந்த நிலையில் கிடப்பில் போடப்படுவது போல் இந்த அறிக்கையும் அமையாது என நம்புகின்றோம் என்றார்.

http://www.thinakkural.com/news/all-news/local/9648-2011-11-18-02-43-50.html

  • தொடங்கியவர்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கையில் சில பரிந்துரைகள்?

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் முழு சர்வதேச சமூகமும் எதிர்பார்த்து, அது குறித்து கூடிய கவனம் செலுத்தி வரும் நிலையில், அந்த அறிக்கை அரசாங்கத்திற்கு சார்பான தளர்வான ஒன்றாக இருக்குமாயின் இலங்கை ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் உயர் இராணுவ அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்படும் என்ற சந்தேகம் காரணமாக, முற்போற்க்கான நடவடிக்கை எனக் கருதி, தனது இறுதி அறிக்கையில் பரிந்துரைகளை செய்ய உள்ளது.

ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் வகையில், அதற்கு தேவையான திட்டங்களை வகுப்பதற்காக பாதுகாப்புஅமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தாவித்தாரனவின் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்றை நியமித்து, சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை கைதுசெய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்படும் இராணுவத்தினர் மீது மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும் குற்றம்சுமத்தப்பட உள்ளதுடன், அவர்களுக்கு எதிராக இலங்கை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட உள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலம் செனல் 4 தொலைக்காட்சி இலங்கைக்கு எதிராக முன்னெடுத்து வரும் பிரசாரங்களை ஒரளவுக்கேனும் கட்டுப்படுத்தலாம் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதேவேளை காணாமல் போன நபர்கள் தொடர்பாக முறைப்பாடுகளை செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், அல்லது காணாமல் போன நபருக்காக இலவசமாக வீடொன்றை வழங்குவது தொடர்பிலும் ஆணைக்குழு பரிந்துரைகளை செய்யவுள்ளதுடன், காணாமல் போனவர்கள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்யவுள்ளது.

பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டமை குறித்து, இலங்கை படையினருக்கு நன்றி தெரிவித்துள்ள ஆணைக்குழு, இதன் மூலம் போர் மனநிலையில், இருப்போரை மேலும் தம்வசப்படுத்தாலம் என கருதியுள்ளது. இந்த நிலையில், கைதுசெய்யப்பட உள்ள இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்ப உறவினர்களின் மன தைரியம் சிதையும் என்பதால், மூன்றாம் தரப்பினர் ஊடாக அவர்களையும், அவர்களின் குடும்பங்களை அரசாங்கம், பராமரிக்கும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் கைதுசெய்யப்பட உள்ள அனைத்து இராணுவத்தினருக்கும் தலா ஒரு வீடு இலவசமாக வழங்கப்பட உள்ளது. அத்துடன் கைதுசெய்யப்படும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்குள் பொதுமன்னிப்பு வழங்குவார் என ஜனாதிபதியின் செயலகம் ஊடாக உறவினர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர தற்போது ரகசியமான முகாம்களில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக பகிரங்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைக்க உள்ளது. ஜனாதிபதி ஊடாக இவர்களில் ஒரு பகுதியினருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைக்க உள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்க இதன் மூலம் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

எதிர்க்கட்சியினரின் பெருபாலானவர்களை தமக்கு தேவையான வகையில் அடக்கி வரும், ஜனாதிபதிக்கு, புலம்பெயர் தமிழர்களே பெரும் தலைவலியாக இருந்து வருகின்றனர். அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அரசாங்கத்திற்கும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட உள்ளதுடன், ஜனாதிபதி அந்த தவறை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதுடன், இதன் மூலம் தாமும், தமது அரசாங்கமும் பாடங்களை கற்றுக்கொண்டதாக வெளிகாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ஆணைக்குழுவின் அறிக்கையில், எந்த இடத்திலும், வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாவோ, பாதுகாப்பு வலயங்களில் இருந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தோ எதுவும் குறிப்பிடப்பட மாட்டாது. அதேபோல், அத்தியவசிய பொருட்கள் மற்றும் மருந்து என்பவற்றை அனுப்புவதை அரசாங்கம், வேண்டுமென்றே தவிர்த்து வந்தமை தொடர்பில், நல்லிணக்க ஆணைக்குழு மௌனித்துள்ளது.

மூலம்: உலகத் தமிழ் செய்திகள்

பிரசுரித்த நாள்: Nov 18, 2011 13:24:08 GMT

தப்ப கூடிய இள நிலை அதிகாரிகள் தப்பி வந்து Channel - 4 உடன் சேர்ந்து உழைத்து ராசபக்சாகளின் திருதாளங்களை வெளியில் கொண்டுவர வேண்டும். பொன்சேக்கா மேலும் மேலும் மாட்டு பட வேண்டும்.

  • தொடங்கியவர்

மகிந்தாவின் முதல் நோக்கம் தானும் தனது சகாக்களும் போர்குற்ற விசாரணைகளில் இருந்து தப்புவது. தொடர் அழுத்தத்தால் கொஞ்சம் இறங்கி வர, அதாவது சிலரை பிடிப்பது போல பிடித்து தண்டனை வழங்குவது போல காட்ட முனைகிறார்.

சர்வதேசம், புலம்பெயர் தமிழர்கள், சிங்கள பேரினவாதிகள் - எல்லோரையும் ஒரே 'மாங்காய்' மூல விழுத்த எண்ணுகிறார். சாத்தியமாகுமா? தமிழர் தரப்பு மகிந்தஅவிழ்க்க நினைக்கும் இந்த முடிச்சை எவ்வாறு இறுக்கலாம்?

Edited by akootha

  • தொடங்கியவர்

- ஒரு 'சர்வாதிகாரியின்' ஆட்சியிலேயே இது நடக்கும் என நீதிமன்றத்தில் சத்தமிட்டார் பொன்சேகா

- ' மக்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக கிளர்ந்து எழுவார்கள் ' - பொன்சேகா

- மூன்று வருடத்திற்கு கடுமையான வேலைகளுக்கு உள்ளாக்கப்படுவார்

- தீர்ப்பு மகிந்தாவின் 66 பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்டது

- இவர் மீது இன்னும் ஒரு வழக்கு உள்ளது

Fonseka verdict signals trend to come out of LLRC

Colombo High Court Bench on Friday convicted Sri Lanka’s former military commander Lt. Gen. Sarath Fonseka to three years rigorous imprisonment for him alleging that the SL President’s brother and defence secretary Gotabhaya Rajapaksa had ordered the execution of surrendering LTTE officials in the white flag incident.

Fonseka was found guilty of “spreading rumours and causing public disorder.” His rigorous imprisonment may mean that he should perform manual labour in prison. Fonseka’s conviction signals what directions the LLRC findings and following actions might take, commented political observers in Colombo. “This conviction happens under a dictatorship,” Fonseka told the court rejecting the verdict. "People will rise against this judgement and only then will the independence of the judiciary be restored," he added.

http://tamilnet.com/art.html?catid=13&artid=34621

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.