Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் இலாபம் கருதாது முதிர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் இலாபம் கருதாது முதிர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும்!

November 23, 2011-9:18 am

batti3-150x150.jpgபிரித்தானியாவில் இயங்கும் சமாதானமும் நல்லிணக்கமும் என்ற அமைப்பு ‘இந்தியாவின் தமிழ் நண்பர்கள் மற்றும் எடுக்கப்படவிருக்கும் முன்னேற்றப்பாதை ‘என்ற தொனிப்பொருளில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தினுள் போர்ட்குலிஸ் மண்டபத்தில் கடந்த வாரம் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இலங்கைத்தமிழரை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியன குறித்து இந்தியாவுடனான உறவைப்பலப்படுத்த வேண்டும் என்ற விடயங்கள் குறித்து முன்னணி தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முக்கிய பேச்சாளர்களும் உரையாற்றினர்.

பிரென்ட் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் பாரி கார்டினர் தலைமை வகித்தார். தனது ஆரம்ப உரையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஸ்ரீலங்காவில் தாம் மேற்கொண்ட சமாதான முயற்சி பற்றிய நோர்வேயின் அறிக்கையையும் சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று சொன்னார்.

ஒஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு மாநாட்டில் இலங்கை பற்றிய பிரச்சினை குறித்தும் அழுத்தங்கள் குறித்தும் தாம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து வெளிப்படைத் தன்மையானதும் சுதந்திரமானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தான் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது பக்கத்தில் பொருளாதார லாபம் எதனையும் எதிர்பார்க்காது பிரச்சினைகளை ஓரங்கட்டாமலும் அவை குறித்து முதிர்ச்சியுடன் சர்வதேச சமூகம் அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முக்கிய பேச்சாளரான சொலிசிட்டர் என். கிருஷ்ணராசா இந்தியாவிற்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையோன நெருங்கியஉறவுகள் மற்றும் உணர்வுகள் பற்றி விளக்கினார். இலங்கைத்தமிழ் மக்களின் தாய்நாடு இந்தியா என்பதையும் அவர் விவரித்தார்.

தொழில் கட்சி வட்டாரத்தில் நன்கு தெரிந்த அரசியல் பிரமுகரும் சர்வதேச இந்து சமூக ஆர்வலருமான தேவ சமாறு இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையேயான உறவு பற்றியும் விளக்கினார். எண்ணாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்தையும் இராவணன் சரித்திரத்தையும் மேற்கோள்காட்டி அவர் பேசினார்.

இலங்கையின் மூத்த குடிமக்கள் தமிழர்கள் என்றும் இலங்கைக்கு பௌத்த மதம் 600 ஆண்டுகளுக்கு முன்தான் வந்தது என்றும் அவர் தெரிவித்தார். ஆகவே இந்துத்தமிழ் மக்களை இரண்டாம் தரப்பிரசைகளாக கருதுவது இலங்கை வரலாற்றையும் மனித உரிமைகளையும் மீறுவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

சொலிசிட்டராகத் தொழில் புரியும் ஆர்.மனோகரன் உரையாற்றுகையில் தமிழர்களின் வரலாற்று பாரம்பரிய தாயகங்களான இலங்கையின் வடக்கு கிழக்கு இந்தியாவின் ஒரு பகுதியாக வருவதில் தான் இலங்கைத்தமிழர் உயிர்வாழ்வது தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதைத்தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார். இந்தியாவின் சமஷ்டியுடன் இலங்கையின் தமிழ் மக்கள் வாழுகின்ற வடக்கு கிழக்கை இணைப்பதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாரதிய ஜனதா கட்சியின் தீவிர உறுப்பினரும் அதன் வெளிநாட்டு நண்பர்களின் அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் மதுகர் அம்பேக்கர் பேசும்போது இலங்கையில் தமிழர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்று சொன்னார். சர்வதேச சமூகம் இதனைக் கருத்தில் எடுத்து செயல்படவேண்டும் என்றார். தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கெல்லாம் இந்தியா ஆதரவாக இருந்துள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஐரோப்பிய யூனியனில் தெற்காசிய நாடுகள் தொடர்பான உறவுகள் தூதுக்குழுவின் தலைவராக இருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரொபர்ட் ஈவான்ஸ் இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஆன்டி லவ் பேசும்போது பிரச்சினைக்கு நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உலக தமிழப் பேரவையின் சார்பில் வி.குகேந்திரன் பேசினார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான குணாளன் பேசுகையில் தமிழ் மக்களுக்கு நீதியான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுவதில் இந்தியா சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடத்தப்படும் கூட்டம் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கலந்துரையாடலை தலைமை வகித்த பாரி கார்டினர் தொடக்கி வைத்தார். கூட்டுத்தலைவரான ஆர்.ஜெயதேவன் கூட்டத்திற்கு வந்திருந்த லண்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தின் செயலாளர் செல்வராசா பத்மநாதனை கூட்டம் பற்றிய விவரங்களை சாதகமான முறையில் கொழும்பு அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பீர்களா என்று கேட்டார். தாம் ஒரு பார்வையாளராகத்தான் கலந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்தும் நிகழ்த்தப்பட்ட பேச்சு குறித்தும் தாம் கருத்துச்சொல்ல முடியாது என்றும் செல்வராசா பத்மநாதன் பதிலளித்தார்.batti4.jpg

share_save_171_16.png

நன்றி - தினக்கதிர்

இப்படியான சந்திப்புக்கள் , கருத்தரங்குகள் பல மட்டங்களிலும் எம்மால் தொடர்ச்சியாக நடத்தப்படவேண்டும். நன்றி இணைப்புக்கு.

கலந்துரையாடலை தலைமை வகித்த பாரி கார்டினர் தொடக்கி வைத்தார். கூட்டுத்தலைவரான ஆர்.ஜெயதேவன் கூட்டத்திற்கு வந்திருந்த லண்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தின் செயலாளர் செல்வராசா பத்மநாதனை கூட்டம் பற்றிய விவரங்களை சாதகமான முறையில் கொழும்பு அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பீர்களா என்று கேட்டார். தாம் ஒரு பார்வையாளராகத்தான் கலந்து கொண்டிருப்பதாகவும் இது குறித்தும் நிகழ்த்தப்பட்ட பேச்சு குறித்தும் தாம் கருத்துச்சொல்ல முடியாது என்றும் செல்வராசா பத்மநாதன் பதிலளித்தார்.

வாழ்க செல்வராசா பத்மநாதனின் சேவைகள் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சொலிசிட்டராகத் தொழில் புரியும் ஆர்.மனோகரன் உரையாற்றுகையில் தமிழர்களின் வரலாற்று பாரம்பரிய தாயகங்களான இலங்கையின் வடக்கு கிழக்கு இந்தியாவின் ஒரு பகுதியாக வருவதில் தான் இலங்கைத்தமிழர் உயிர்வாழ்வது தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதைத்தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார். இந்தியாவின் சமஷ்டியுடன் இலங்கையின் தமிழ் மக்கள் வாழுகின்ற வடக்கு கிழக்கை இணைப்பதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்".-

இந்தியாவுக்கு இப்படியான அழுத்தம் கொடுப்பது நல்லது. ஸ்ரீ லங்காவுக்கும் முறையான சாட்டை அடி!தமிழருக்கு,இந்தியா கட்டாயம் பதில் சொல்ல வேண்டிய .காலம் நெருங்குகிறது. .

இந்தியாவில் மாற்றங்களை கொண்டுவருவதில் தமிழர் தரப்பு இன்றுவரை முன்னேற்றங்களை காணவில்லை. தமிழக தலைவர்களாலும் கூட்டமைப்பின் சந்திப்புக்களும், ஏன் சீனாவின் சிங்களத்துடனான நெருக்கமும் கூட இதுவரை பெரிதாக பயனளிக்கவில்லை.

இந்த முடிச்சை வெற்றிகரமாக அவிழ்க்க, இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியாலும் தொடர்ந்து முயற்சிக்கவேண்டும்.

சரியான தெரிவு அகூதா. அதைவிடுத்து தூற்றுவதில் எந்தப் பயனுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.