Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின்போது சிறிலங்கா படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் – கோத்தாபய ஒப்புதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gota%20colombo.jpg

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அத்தகைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறித்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கொழும்பில் அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், சிறிலங்கா அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கம் தொடர்பான தேசிய கருத்தரங்கில் இன்று காலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ போரின் இறுதிக்கட்டத்தில் 10 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிலர் சொல்கின்றனர். வேறு சிலர் 40ஆயிரம் பேர் மரணமானதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் அதைவிட அதிகம் என்கின்றனர்.

ஆனால் நான் உறுதியாகக் கூறுகிறேன், இவையெல்லாம் உண்மையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் இறந்த அல்லது காணாமற்போனவர்களின் எண்ணிக்கையை கண்டறிவதற்காக கணக்கெடுப்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நடத்தவுள்ளது.

வடக்கிலுள்ள அரசாங்க அதிகாரிகள் இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டு கொல்லப்பட்ட அல்லது காணாமற் போன தனிநபர்களின் பெயர்களை அடையாளம் காணவுள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பு முடிந்ததும், புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வுக்குப் பின்னர், அதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

இயற்கை மரணம், விபத்து மரணம், விடுதலைப் புலிகளுக்காக போராடி ஏற்பட்ட மரணம், விடுதலைப் புலிகளால் கட்டாயமாக இணைக்கப்பட்டு போராடி மரணம், விடுதலைப் புலிகளுடன் போராடி மரணம், நாட்டை விட்டு சட்டவிரோதமாக படகுகளில் தப்பிச் சென்ற போது மரணம், சிறிலங்கா படையினரால் மரணம் என்று இந்த மரணங்கள் இடம்பெற்ற முறையை பிரிக்க வேண்டியுள்ளது.

இவர்களில் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானது. அத்தகைய மரணங்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா இராணுவம் பதிலளிக்கும்.

போரின் இறுதிக்கட்டத்தில் மரணமானவர்களின் சரியான எண்ணிக்கையை கண்டறியும் நோக்கிலேயே இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்கான முதலாவது நடவடிக்கையாக, கொல்லப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கும், சிறிலங்காப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இந்த கணக்கெடுப்பு உதவியாக அமையும்.

சிறிலங்கா படையினரால் எத்தகைய குற்றங்கள் புரியப்பட்டிருந்தாலும், அவை நிரூபிக்கப்ட்டால் கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்படுவர்.

போரின் இறுதிக்கட்டத்தில் சில மரணங்களுக்கு சிறிலங்காப் படையினர் பொறுப்பாக இருந்திருக்கக் கூடும்.

பொதுமக்களுக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படக் கூடாது என்ற கொள்கையை அரசாங்கம் கடைப்பிடித்தது.

ஆனால், பொதுமக்களை மனித கேடயங்களாக வைத்திருந்த தீவிரவாதிகளுடனான போரின்போது பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

இராணுவத்தின் மீறல்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் கூறும் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது.

சிறிலங்கா நாகரீகமானதும், பெருமைவாய்ந்த வரலாற்றைக் கொண்டதுமான ஒரு இறைமையுள்ள நாடு.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எப்படி என்று எந்தவொரு வெளிநாட்டு வழிகாட்டுதலும் எமக்குத் தேவையில்லை.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20111124105094

அப்போது சொன்ன சிரோ கசுவல்றி(யாரும் கொள்ளப்படவில்லை) என்னாச்சு........ ? இராணுவத்தினருக்கு தண்டணை வழங்குவது சரி அவர்களுக்கு பொறுப்பாக இருந்த உனக்கும் உன் அண்ணனுக்கும் மற்ற அல்ல கைகளுக்கும் என்ன தண்டணை ?????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட...அட.... எப்படி எல்லாம் பொய் சொல்லுறாங்கள். கோட்டு சூட்டு போட்டு டை கட்டி புத்தரிண்ட பேர்ல முகத்தில சலனமில்லாமல் பொய் சொல்றான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

An attempt to short-circuit calls for an intetnational investigation" ?? http://www.nytimes.com/aponline/2011/11/24/world/asia/AP-AS-Sri-Lanka-War-Crimes.html?_r=1&ref=asia

Sri Lanka Takes First Count of Civilian War Deaths

www.nytimes.com

Sri Lanka said Thursday that it was counting on its own how many civilians were slain at the end of its bloody civil war to counter claims that tens of thousands were killed and fend off international calls for a war crimes probe.

------------------------

"United States, India and other countries have said credible action based on the findings of the local inquiry, along with political concessions to minorities including Tamils, would obviate the need for an outside probe".

http://www.reuters.com/article/2011/11/24/us-srilanka-warcrimes-idUSTRE7AN13920111124?feedType=RSS&feedName=worldNews&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+reuters%2FworldNews+%28News+%2F+US+%2F+International%29

Sri Lanka will act on evidence of atrocities by troopswww.reuters.com

COLOMBO (Reuters) - Sri Lanka's military will act against any soldiers who may have committed war crimes or other excesses in the last months of its 25-year civil war, the island nation's influential defense

இவ்வளவு தூரம் கோத்தா இறங்கி வந்துள்ளார். காரணம் என்ன?

சர்வதேசம் ( இந்தியா , சீனா, உருசியா தவிர்த்து ) ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதே காரணமாக இருக்கலாம் என ஊகிக்கலாம். அதிலும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நேரத்துக்கு வெளியிடல், அதன் நம்பகத்தன்மை, அதன் சார்பாக அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள். ...

நிச்சயம் சிங்களம் வழமைபோல காதில் பூ சுற்ற முயலும். யார் அதை முறியடிப்பது???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.