Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லெப் கேணல் நகுலனை இராணுவ புலனாய்வுப் பிரிவு கொன்றுள்ளதாக கொழும்பு இணையம் தகவல்

Featured Replies

லெப் கேணல் நகுலன் என அழைக்கப்படும் சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி எனும் அம்பாரை மாவட்ட விடுதலைப்புலிகளின் பொறுப்பு நிலை அதிகாரி இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.

.

கேணல் நகுலம் 2009 மே மாதத்தின் பின்னர் திருகோணமலை காடுப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.இவரது கைதினைத்தொடர்ந்து கேணல் ராம் எனப்படும் தளபதியும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் இவர்களை வைத்து சிங்கள இராணுவ புலனாய்வுக்குழு விடுதலைப்புலிகளைப்போல இயங்க வைக்க நடவடிகை எடுத்தது. இதன் மூலம் எஞ்சிய விடுதலைப்புலிகள், தப்பி ஓடி காட்டில் இருந்தோர் ஆகியோரை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

.

அது வெற்றிபெறாமல்போகவே வெளி நாடு மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க இவர்களைப் பயன்படுத்தினர். அதுவும் எதிர்பார்த்தளவு வெற்றிபெறாமல் போகவே இப்போது கேணல் ராம் நகுலன் அவர்களை மின்னேரியா முகாமில் வைத்து கொல்லபப்ட்டுள்ளதாக லங்கா நியூஸ் வெப் எனும் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

.

இதே வேளை கேணல் ராம் அவர்களை ஏற்கனவே இராணுவ புலனாய்வாளர்கள் கொன்றுவிட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் கசிந்தது. கேணல் ராம் அவர்களின் துணைவியார் குருவி அக்கா அவரது பிள்ளைகள் மூவரும் இராணுவ முகாம் ஒன்றில் சிறைவைக்கப்படுள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்தமை குறிப்பிடத்தக்கது. கேணல் நகுலன், கேணல் ராம் ஆகியோர் இராணுவத்திடம் கைதிகளாக இருந்தமைக்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருக்கின்றன. இந்த நிலையில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கின்ரார்கள். மேலும் மின்னேரியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50 இற்கு மேற்பட்ட பொறுப்பு நிலை போராளிகள் இவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேக்க இடமுண்டு.

மூலம்

  • கருத்துக்கள உறவுகள்

மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை-லங்கா நியூஸ் வெப்!

nagulan_01-150x150.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

கேணல் நகுலன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 மே 18ம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்றினது தலைவராக கேணல் நகுலன் செயற்பட்டிருந்தார்.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த இவர், 2007 இல் மட்டக்களப்பின் மீதான கட்டுப்பாட்டை புலிகள் இழந்த பின்னர், மட்டக்களப்புக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

2007 மே 23ம் நாள் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மரணமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங்களுக்கு அருகே கிடந்த கேணல் நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டு விட்டதாக, 2007 ஜுன் 8ம் நாள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த்து.

ஆனால், கேணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம் கொண்டிருந்த தொடர்பாடல் சமிக்ஞையை அடிப்படையாக கொண்டு, திருகோணமலையில் வைத்து கேணல் நகுலனை 2009 பிற்பகுதியில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கேணல் நகுலன் கொல்லப்பட்டு விட்டார் என்று ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும், புலம்பெயர் தமிழர்களுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும், இவரது கைது பற்றி எந்தவொரு ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாகவே வைத்திருந்தது.

ஆனால், புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை கேணல் நகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

சிறிலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால், கேணல் நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெறமுடியவில்லை. இந்தநிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று உணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்து, கேணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர்.

கேணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா தடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

nagulan_03.jpgnagulan_02.jpgnagulan_011.jpg

http://www.saritham.com/?p=42357

Edited by தமிழ் அரசு

எத்தனை காலம் தான் ஏமாற்றவார் இந்த நாட்டிலே... பாவம் நகுலன் இன்னும் எத்தனை தரம் கொல்லப்படப்போpறாரோ தெரியாது... இன்று காலை நகுலனுடன் பேசியவரிற்கு நகுலன் கூறிய வசனம் " நான் கொல்லப்படுவதை தான் புலம் பெயர் சமூகம் எதிர் நோக்குகிறதா?" "நான் இறந்தால் பலர் சந்தோசப்படுவார்கள்".

இந்த படங்கள் 2007 இல் இலங்கை இராணுவ இணையத்தில் வந்தவை....

http://www.defence.lk/new.asp?fname=20070608.

Edited by மொட்டை மனிதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனை காலம் தான் ஏமாற்றவார் இந்த நாட்டிலே... பாவம் நகுலன் இன்னும் எத்தனை தரம் கொல்லப்படப்போpறாரோ தெரியாது... இன்று காலை நகுலனுடன் பேசியவரிற்கு நகுலன் கூறிய வசனம் " நான் கொல்லப்படுவதை தான் புலம் பெயர் சமூகம் எதிர் நோக்குகிறதா?" "நான் இறந்தால் பலர் சந்தோசப்படுவார்கள்".

இந்த படங்கள் 2007 இல் இலங்கை இராணுவ இணையத்தில் வந்தவை....

http://www.defence.lk/new.asp?fname=20070608.

இராணுவத்தின் பிடியில் இருக்கும் நகுலனுடயே டொலைபேசியில் பேசும் அளவுக்கு நீங்கள் பவரான ஆளா?? :rolleyes: :rolleyes: :rolleyes: உனக்ட பவரை யூஸ் பண்ணி அவரை கொஞ்சம் வெளியால எடுக்க எலாதா? :unsure: :unsure: :unsure:

Edited by சித்தன்

அவர் ராணுவத்துடன் இருக்கிறார் என்பதற்கு மேல் கண்ட ஆதரங்கள் என்ன சொல்கிறது? நீங்கள் அவர் ராணுவத்துடன் உள்ளார் என்பதை முதலில் நிரூபியுங்கள். பிறகு நான் பதில் கூறுகிறேன்!

Colonel Nagulan killed while in military custody

After the LTTE was militarily defeated on May 18, 2009, Colonel Nagulan became the leader of one of the two remaining groups of the organization. A resident of Jaffna, Colonel Nagulan was the Commanding Officer of the Charles Anthony brigade.

While Colonel Ram has become a puppet of the military, Colonel Nagulan had defied the military and had therefore been tortured for not revealing any information. The military intelligence units after realizing Colonel Nagulan was not going to serve any purpose had then killed him following orders received from a higher office.

சிறிலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால், கேணல் நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெறமுடியவில்லை.

Several other former LTTE leaders are held in the secret camp in Minneriya where Colonel Nagulan was held. Colonel Ram has been assigned the task of getting their support for the government. The intelligence unit of the Sri Lanka Army has therefore provided Colonel Ram with all the required facilities and had given him a mobile phone bearing number +94777140637 to keep in touch with the Tamil Diaspora.

இந்தநிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று உணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்து, கேணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர்.

கேணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா தடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்தத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

http://www.lankanewsweb.com/english/index.php?option=com_content&view=article&id=749:colonel-nagulan-killed-while-in-military-custody&catid=46:exclusive&Itemid=113

http://www.lankanewsweb.com/tamil/index.php?option=com_content&view=article&id=420:2011-11-29-06-39-56&catid=46:exclusive&Itemid=113

இராணுவத்தின் பிடியில் இருக்கும் நகுலனுடயே டொலைபேசியில் பேசும் அளவுக்கு நீங்கள் பவரான ஆளா?? :rolleyes: :rolleyes: :rolleyes: உனக்ட பவரை யூஸ் பண்ணி அவரை கொஞ்சம் வெளியால எடுக்க எலாதா? :unsure: :unsure: :unsure:

ஈழத்தமிழன் புலம்பெயர் தமிழனாலேயே கெட்டுடொழிந்து பலயிழப்புகளை கொடுத்து தலையெடுக்க முற்படுகிறான்.. இங்கு வரும் மடத்தடி கருத்துக்களோ திரும்பவும் அவர்களை சகதிக்குள் தள்ளிவீழ்த்துவதே!.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழன் புலம்பெயர் தமிழனாலேயே கெட்டுடொழிந்து பலயிழப்புகளை கொடுத்து தலையெடுக்க முற்படுகிறான்.. இங்கு வரும் மடத்தடி கருத்துக்களோ திரும்பவும் அவர்களை சகதிக்குள் தள்ளிவீழ்த்துவதே!.

புலத்தமிழர் மீது சாபம் போடும் நெருப்பை மடியில் சுமப்பது கருணாக்களும், டக்ளஸ்களும்தான். இதை வாலாட்டும் மகிந்தா விசுவாசம் என்பதை ஒப்புக் கொள்ளாமல் மக்களின் மீதான விசுவாசம் என்றுதான் சொல்லிக் கொள்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'நகுலன், உயிருடன் இருன்கின்றார் என்ற செய்தி' ஒரு வேளை உண்மயாய் இருக்கின்ற போது அவர் இறந்துவிட்டார் அரசபயங்கரவாதத்தால் என்ற செய்தி அவரது போராளி என்ற அந்தப் பணிக்கு எந்த பாதகமான விளைவையும் தராது, ஆனால் அப்பா குதிருக்குள் இல்லை என்ற பாணியில் வந்த இந்தச் செய்தி அரசபயங்கரவாதத்திற்கு மட்டும்தான் பயன் கொடுக்க முடியும்! இதை நம்ப, நாமம் போட்ட மொட்டைகள்தான் வேண்டும்!

புலத்தமிழர் மீது சாபம் போடும் நெருப்பை மடியில் சுமப்பது கருணாக்களும், டக்ளஸ்களும்தான். இதை வாலாட்டும் மகிந்தா விசுவாசம் என்பதை ஒப்புக் கொள்ளாமல் மக்களின் மீதான விசுவாசம் என்றுதான் சொல்லிக் கொள்கின்றார்கள்!

இதுதான் எனது கருத்தும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.