Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமர்சனத்திற்கு அஞ்சமாட்டாராம் - தமக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டுகள் தமக்கு பழக்கப்பட்ட ஒன்று என்கிறார் மகிந்த ராஜபக்ச!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahida-rajapakse-150.jpg

ஆளும் அரசாங்கமானது, பொது மக்களின் விருப்பத்திற்கு எதிரான பாதையில், ஒருபோதும் செல்லாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அரசாங்கம் தவறான பாதையில் செல்லுமானால், சரியான பாதையைக் காட்டுவதற்கான உரிமை மாநாயக்கர்களுக்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறே, மாநாயக்கர்களும் செயல்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அம்பலாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் போது, பல சவால்களுக்கு தாம் முகம் கொடுத்திருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், அனைத்து சவால்களும், தற்போது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், எந்த ஒரு அரசாங்கமும் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலையில், தமக்கு இந்த பதவியில் இருந்து இதைவிட சிறந்த பதவிக்கு செல்ல முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டுகள் தமக்கு பழக்கப்பட்ட ஒன்று எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இதனை தாம் பொருட்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்தார். இதனிடையே சில வெளிநாட்டு தலைவர்களுக்கு நிகழ்ந்தவையே தமக்கு நிகழும் என்று சிலர் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது இதனைத் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=52732&category=TamilNews&language=tamil

அரசாங்கமானது, பொது மக்களின் விருப்பத்திற்கு எதிரான பாதையில், ஒருபோதும் செல்லாது ...... தவறான பாதையில் செல்லுமானால், சரியான பாதையைக் காட்டுவதற்கான உரிமை மாநாயக்கர்களுக்கு உண்டு .......அவ்வாறே, மாநாயக்கர்களும் செயல்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

இதனிடையே சில வெளிநாட்டு தலைவர்களுக்கு நிகழ்ந்தவையே தமக்கு நிகழும் என்று சிலர் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது இதனைத் தெரிவித்தார்.

மோடையாக்களையும் மொட்டைகளையும் தூண்டிவிட்டு, கதாநாயகன் பட்டம் தொடர்ந்து வாங்கி தப்பிக்க நினைக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு பொதுமக்களா ???

யார் அவர்கள் இலங்கையில் அவர்களை பார்த்ததே இல்லை.

 [/size]

[size=4][size=4]இவ்வாறான நிலையில், தமக்கு இந்த பதவியில் இருந்து இதைவிட சிறந்த பதவிக்கு செல்ல முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டுகள் தமக்கு பழக்கப்பட்ட ஒன்று எனவும் குறிப்பிட்டார்[/size][/size]

[size=4]

தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் ஒருவன் தான் செய்யும் குற்றத்தை பற்றி அலட்டுவதில்லை அதுபோலதான் இவரின் கருத்தும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.