Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு – அசோக் மேத்தா

Featured Replies

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு – அசோக் மேத்தா

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலுடனான அரசியல் தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. அரசியல் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை புதுடில்லி முன்னெடுக்கத் தவறுமாயின் அது மன்னிக்க முடியாதது என முன்னாள் இந்திய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா தெரிவித்துள்ளார்.

நேற்று Daily pioneer எனும் ஊடகத்தில் அவர் எழுதியுள்ள பத்தியிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

தனது மூலோபாய நலன்களை நன்கு உணர்ந்துள்ள இந்தியா, இலங்கைத் தீவில் இழந்த தனது அரசியல் செல்வாக்கினை சமப்படுத்துவதற்காக இலங்கையுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றது. தமது மூலோபாய நலன்களுக்காக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய தேவை முடிவுக்கு வந்துள்ளதையிட்டு சிறிலங்கா மகிழ்வுறுகின்றது. விடுதலைப்புலிகளை அழிப்பதற்குரிய சீனாவின் இராணுவ மற்றும் அரசியல் ஆதரவு சிறிலங்காவினால் பெரியளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதார முதலீடுகளையும் சீனா பாரிய அளவில் முன்னெடுக்கின்றது. இந்தியாவின் வகிபாகத்திற்கு மாற்றான மூலோபாய பிரசன்னமாகவும் சிறிலங்காவினால் சீனா பார்க்கப்படுகின்றது என அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்கு தொகுத்துத் தருகின்றோம்:

போர் முடிவடைந்து நீண்ட காலமாகியுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் இல்லாத புறநிலையில் தமிழ் மக்களுக்குரிய அரசியல் அதிகாரப் பரவலாக்கலை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் வழங்காதுள்ளது. இது விவகாரத்தில் நிறைவேற்றப்படாத பொறுப்பு ஒன்று இந்தியாவுக்கு உள்ளது.

நிரந்தர பேச்சுவார்த்தைகளுக்கு ஊடாக சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கத்துடனான தீர்வினை ஏற்படுத்தும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. உள்நாட்டுப் போர் முடிவடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் தற்போது இல்லை. இவ்வாறான புறநிலையில் கூட, பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வெளித்தலையீட்டின் மூலமே சாத்தியப்படக்கூடிய புறச்சூழல் நிலவுகின்றது.

அரசியல் தீர்வு விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்தவல்ல பங்கு தனக்கு இருப்பதாக இந்தியா தொடர்ந்தும் கருதுமாயின் விரைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். அரசியல் தீர்வு முயற்சி சார்ந்த இந்தியாவின் வகிபாகத்தினை ஏற்கனவே உள்ளக மற்றும் வெளியக சக்திகளின் கைகளுக்கு நழுவவிட்டதில் அதிக காலவிரயம் ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் இராணுவ வெற்றிக்கு இந்தியா உதவிகளை வழங்கியிருந்தாலும், போருக்குப் பின்னர் இலங்கை மீதான செல்வாக்கினை இந்தியா இழந்துள்ளது.

விடுதலைப் புலிகளை இராணு ரீதியில் ஒடுக்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குத் துணைபோவதென்ற மூலோபாய முடிவினை எடுத்த இந்தியா, மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ உதவிகளை வழங்கியது. ஆயுதங்களை வழங்க இந்தியா பின்னின்றபோது, இராணுவத் தளபாடங்களுக்காக பெய்ஜிங்கிற்கும் இஸ்லாமாபாத்திற்கும் கொழும்பு சென்றதை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் கடிந்துகொண்டார்.

தமிழ் நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கொழும்பினை இந்தியா ஒப்புக்காகக் கேட்டுக்கொண்ட போது, கொலைகளுக்குத் தயாராக சிறிலங்கா படையினர் நின்றனர். விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொண்ட காரணத்தினால் 1987 காலப்பகுதி போல நேரடியாக இந்தியாவினால் தலையீடு செய்ய முடியவில்லை. இதனை இந்தியாவின் 'சிறந்த கையாளுகை' என சிறிலங்காவின் பலம்மிக்க பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் கோத்தபாயவின் குரல் மிகச் செல்வாக்கு மிக்கதாக உள்ளது. அவருடைய நிலைப்பாடு எளிதானது: 'விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு விட்டனர். இனி இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை.' போர் வெற்றியை அடுத்து, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான கொழும்பின் நிலைப்பாட்டினை ஆராய்வது பொருத்தமானது.

2007இல் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றபட்டதை அடுத்து, வடக்கு கிழக்கு பிரிப்பு தொடர்பான தீர்ப்பு சிறிலங்கா நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச 2005இல் பதவிக்கு வந்ததை அடுத்து 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி வந்தார். அபிவிருத்தி, இராணுவப் பிரசன்னத்தை அகற்றுதல், ஜனநாயகம் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் எனும் நான்கு 4 D கள் (Demilitarisation, Development, Democracy and Devolution) பற்றி அடிக்கடி தனது நேர்காணல்களில் குறிப்பிட்டு வந்தார்.

ஆனால் போர் வெற்றியின் பின்னர் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பாக பேசுவதை ராஜபக்ச நிறுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது. ஆனால் தான் கூறியவற்றிற்கு முற்றிலும் மாறாக ஒரு கறணமடித்து வெளித்திணிப்புகள் அற்ற உள்ளக மட்டத்தில் அரசியல தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்தார். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியானால் அமைக்கப்பட்டது. அவர்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட சந்திப்புகளில் ஈடுபட்டபோதும் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை.

2/3 பெரும்பான்மை இல்லாத காரணத்தால் 13வது திருத்தச்சட்டத்தினை முன்னைய அரசாங்கங்களால் அமுல்படுத்த முடியாமல் போனதாக வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக 10 சுற்றுப் பேச்சுகளை அரசாங்கத்துடன் நடாத்தியுள்ளது. இறுதியாக அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பான தெளிவுபடுத்தலைக் கோரியுள்ளது. முன்னைய உள்ளகப் பொறிமுறைகளைப் போல, காலத்தைக் கடத்துவதற்கு இந்தியாவையும் அனைத்துலக சமூகத்தையும் மகிழ்விப்பதற்குமான போர்வையாகவே தற்போது அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.

சிறிலங்காவின் போர் வெற்றியின் பின்னர் அதிகாரப் பரவலாக்கல் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்பார்ப்பு நலிவடைந்துள்ளது. ஆயுத உதவிகளுக்காக சீனா மற்றும் ஈரான் பக்கம் சிறிலங்கா அதிகம் சாய்ந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கொழும்பிற்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கு இந்தியா தயங்குவதாக வீக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது. தனது மூலோபாய நலன்களை நன்கு உணர்ந்துள்ள இந்தியா, இலங்கைத் தீவில் இழந்த தனது அரசியல் செல்வாக்கினை சமப்படுத்துவதற்காக இலங்கையுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றது. தமது மூலோபாய நலன்களுக்காக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய தேவை முடிவுக்கு வந்துள்ளதையிட்டு சிறிலங்கா மகிழ்வுறுகின்றது.

விடுதலைப்புலிகளை அழிப்பதற்குரிய சீனாவின் இராணுவ மற்றும் அரசியல் ஆதரவு சிறிலங்காவினால் பெரியளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதார முதலீடுகளையும் சீனா பாரிய அளவில் முன்னெடுக்கின்றது. இந்தியாவின் வகிபாகத்திற்கு மாற்றான மூலோபாய பிரசன்னமாகவும் சிறிலங்காவினால் சீனா பார்க்கப்படுகின்றது. அம்பாந்தோட்ட துறைமுக கட்டுமானம், கொழும்புத் துறைமுக நவீனப்படுத்தல், கொழும்பிலிருந்து காலிக்கான முதலாவது அதிவிரைவுப் பாதை உட்பட்ட இன்னபிற அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக சிறிலங்காவில் சீனாவின் கை ஓங்கியுள்ளது. ஆனாலும் சீனா தமது நண்பன் என்றும் இந்தியா தமது சகோதரன் என்றும் ராஜபக்ச கூறிவருகின்றார்!

ஏனையவர்கள் கனிகளைப் பறித்துச் சென்ற போது இந்தியா தூக்கத்தில் ஆழ்ந்திருந்ததாக சிறிலங்கா ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார். அத்தோடு இராணுவத் தீர்வு என்ற சிறிலங்காவின் போக்கிற்கு ஆட்சேபனை தெரிவிக்காதது மட்டுமல்ல, அதற்குரிய ஆதரவினையும் இந்தியா வழங்கியிருந்தமை மோசமான செயல் ஆகும். இலங்கைத் தமிழர்களுக்குரிய அரசியல் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான நடவடிக்கைகளை புதுடில்லி முன்னெடுக்கத் தவறுமாயின் அது மன்னிக்க முடியாதது என அக்கட்டுரையில் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=26a4f64c-ef2e-4847-8db1-45ed035b3392

  • தொடங்கியவர்

சீனாவின் அதிபர் : கடல்சண்டைக்கு தயாராகுங்கள்

Hu Jintao tells China navy: Prepare for warfare

_56809598__48951920_south_china-sea_1_466-1.jpg

China's navy should speed up its development and prepare for warfare, President Hu Jintao has said. He told military personnel they should "make extended preparations for warfare".

China is locked in territorial disputes with several other nations in the South China Sea. Political tension is also growing with the US, which is seeking to boost its presence in the region.

After Mr Hu's comments, the US said China was entitled to defend itself.

"Nobody's looking for a scrap here," said Pentagon spokesman Admiral John Kirby in quotes carried by the AFP news agency.

"Certainly we wouldn't begrudge any other nation the opportunity to develop naval forces."

Senior US and Chinese officials are currently holding talks on military issues.

The one-day meeting takes place every year, with the stated aim of ensuring there are no misunderstandings between the two nations.

'Sovereignty dispute'

China has recently acquired its first aircraft carrier and has been vocal about its naval ambitions.

But its military remains primarily a land-based force, and its naval capabilities are still dwarfed by the US.

Mr Hu told a meeting of military officials that the navy should "accelerate its transformation and modernisation in a sturdy way, and make extended preparations for warfare in order to make greater contributions to safeguard national security".

The word "warfare" was used in official media, but other translations used "military combat" and "military struggle".

Analysts say Mr Hu's comments are unusually blunt, and are likely to be aimed at the US and Beijing's rivals in the South China Sea.

Both the Philippines and Vietnam have repeatedly accused China of overt aggression in the region.They are among the nations claiming sovereignty over islands in the sea in the hope that there could be oil and gas deposits there.

And US President Barack Obama announced last month that the US was boosting its presence in the region, and will base a full Marine task force in northern Australia.

Analysts say the US move is a direct challenge to China's attempts to dominate the area, and is likely to bolster US allies in the South China Sea dispute.

http://www.bbc.co.uk/news/world-asia-china-16063607

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியனை விட சீனாக்காரன் வலுகெட்டிக்காரங்கள் எண்டு ஐரோப்பாச்சனம் கதைக்குதுகள்.......அது சரி இந்தியனுக்கு கொலைவெறி பாட்டை ஆராய்ச்சி செய்யவே நேரம் காணாது.... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.