Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அவசரமாக வெளியிட வேண்டிய அவசியமில்லை – அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Heheliyarambukwella_CI.jpg

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அவசரமாக வெளியிட வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் வேண்டுமென்றே தமதப்படுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையை அவசர அவசரமாக பகிரங்கப்படுத்தப்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அறிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும், உரிய நேரத்தில் ஜனாதிபதி இந்த அறி;க்கையை பாராளுமன்றில் சமர்ப்பிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு அமெரிக்கா ஐந்து ஆண்டு காலம் எடுத்துக் கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதியடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த மாத ஆரம்பத்தில் அறிக்கையை ஜனாதிபதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

http://www.globaltam...IN/article.aspx

செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு அமெரிக்கா ஐந்து ஆண்டு காலம் எடுத்துக் கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழரின் உண்மையான விடுதலை போராட்டத்தை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அங்கீகரிப்பதே இப்படியான குதர்க்கங்களுக்கு பதிலாக அமையும்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை திருத்தமில்லாமல் சமர்ப்பிக்கப்படும்: அரசு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போது வாசிக்கப்பட்டு வருகி றது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் எந்தவித கூட்டலோ கழித்தலோ இன்றி ஜனாதிபதியால் அப்படியே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு, உலக நாடுகளில் உள்ள எந்தவொரு விடயத்துக்கும் காண்பிக்கப்படாதளவு அக்கறையும் ஆர்வமும் காட்டப்படுகிறது. இது விடயத்தில் இலங்கை மீது வேற்றுமை காட்டப்படுவதாகவே நாம் உணர்கின்றோம். எமது நாடு சிறிய நாடு, நாம் சிறியவர்கள் என்பதனாலா இந்த வேற்றுமை? என்றும் அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் கெஹெலியவிடம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் செப்டெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கை, தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் கடந்த நிலையிலேயே சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் அந்த அறிக்கை தொடர்பில் எவரும் கேள்வி எழுப்பவில்லை. அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் குறித்தும் வெளியாகவில்லை.

சத்தியத்துக்கு கட்டுப்பட்ட விடயங்கள்

அப்படியிருக்கும் போது, பயங்கரவாதம் எனும் கொடிய நோயினால் சிக்கித் தவித்த எமது மக்களைக் காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அந்த நடவடிக்கைகளின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. நாம் அனைத்து விடயங்களையும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டே முன்னெடுத்தோம்.

அதனால் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பது தொடர்பான உண்மை விடயங்களை வெளிப்படுத்துவதில் நாம் தயக்கம் காட்டவில்லை. அதேசமயம், எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை நாமே விசாரித்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்வோம். அதற்கு வெளியாரின் தலையீடோ அல்லது ஒத்துழைப்போ எக்காலத்திலும் எமக்கு தேவைப்படாது.

அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை

இதேவேளை, யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அவசியம் என்ற சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தோ அல்லது வற்புறுத்தல்களுக்கு பயந்தோ நாம் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவினை நியமிக்கவில்லை. விசாரணையினை நடத்தவும் இல்லை. இது எமது நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை. இதற்கு தீர்வு காணும் பொறுப்பு ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்த அரசாங்கத்துக்கும் உள்ளது. அதனாலேயே இந்த விசாரணையினை நடத்தியுள்ளோம்.

அறிக்கையின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும்

இந்நிலையில், ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் எவ்வித மாற்றங்களும் இன்றி நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கையைப் பொறுத்தவரையில் இது முக்கியமான விடயம். அதனால் அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் உன்னிப்பாக வாசிக்க வேண்டும். அவை தொடர்பில் கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே அதற்கு கால அவகாசம் தேவை. இது அவசரப்பட்டு எடுக்கப்படக்கூடிய முடிவுகள் அல்ல. சிந்தித்து நிதானமாக நிறைவேற்றப்பட வேண்டியவை.

இலங்கைக்கு எதிரான சதியில் முக்கிய சக்தி

இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இதன் வெளிப்படையான உண்மை என்னவெனில், இலங்கைக்கு எதிராக ஒரு சக்தி இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதேயாகும். அந்த சக்தியை முறியடித்து இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகளை தோற்கடிப்பதற்கான வேலைத்திட்டங்களுக்கு சத்தியத்துக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கப்படும் என்றார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/32230-2011-12-08-10-20-55.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.