Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல் விவகாரம் ஐ.நாவில் விவாதத்துக்கு வருமா?

Featured Replies

மனித உரிமை மீறல் விவகாரம் ஐ.நாவில் விவாதத்துக்கு வருமா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள, நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கையையும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஒரேசமயத்தில் விவாதத்துக்கு எடுப்படுவதை தான் ஆதரிக்கிறார் என்று நவிப்பிள்ளை (நவனீதம்பிள்ளை) தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தொடர்பான செய்திகளை வெளியிடும் "இன்னர் சிற்றி பிரஸ்" இணையத்தின் செய்தியாளரிடம் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான நவிப்பிள்ளை அவ்வாறு கூறியபோதும், அறிக்கைகளை மனித உரிமைகள் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கான பணிகள் அவசரமாக நடப்பதாகத் தெரியவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறுகின்றது.

"மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரான நவிப்பிள்ளை கடந்த வெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு வந்தபோது அவரிடம், இலங்கையில் படுகொலையுண்ட பொதுமக்கள், இலங்கையின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நாவினதும், ஐ.நாவின் முக்கிய உயர் அதிகாரிகளினதும் நடவடிக்கைகள் தொடர்பில் "இன்னர் சிற்றி பிரஸ்' வினவியது. இலங்கையின் இறுதிப் போரில் எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்" என நவிப்பிள்ளை கருதுகிறார் எனவும் கேட்கப்பட்டது.

"நவி பிள்ளை பொதுவாகவே பதிலளித்தார். அதாவது இலங்கை அரசு இது தொடர்பாகப் பொறுப்புக் கூறவேண்டும் எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும்வரை அந்த நாட்டிற்கான தனது பயணத்தைத் தான் பிற்போட்டுள்ளார் என்றும் நவி பிள்ளை தெரவித்தார்" என்று "இன்னர் சிற்றிப் பிரஸ்" கூறியுள்ளது.

இரு அறிக்கைகளையும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விவாதிப்பதற்கு தனது ஆதரவை நவிப்பிள்ளை தெரிவித்தபோதும், இவ்வாறானதொரு விவாதத்திற்கு அழுத்தம் கொடுப்பது முக்கியம் அல்ல என ஜெனீவாவைச் சேர்ந்த வட்டாரத் தகவல்கள் கூறுவதாக "இன்னர் சிற்றிப் பிரஸ்" தெரிவித்துள்ளது.

அதாவது இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்னர் நடத்தப்பட்ட மீளாய்வு போல் தற்போது மேற்கொள்ளப்படும் விவாதம் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் நவி பிள்ளை மற்றும் ஏனையவர்கள் தமது அழுத்தங்களை அதிகளவில் பயன்படுத்துவார்களா? என்று "இன்னர் சிற்றி பிரஸ்' கேள்வி எழுப்பியுள்ளது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=45234693611393001

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Please listen the later part of this video to find out what is that we need to do before the next Human Rights Council meeting, in March 2012.

http://vimeo.com/33391688

Watch Freedom from Torture’s debate on the UK’s role in ending impunity and torture in Sri Lanka

Activists, lawyers and journalists joined Freedom from Torture’s lively public debate on 25 November which was hosted with Channel 4. Find out what the panel, including the Shadow Minister for International Development, the director of Chanel 4’s Sri Lanka’s Killing Fields and representatives from Amnesty International and Tamils Against Genocide and audience members had to say.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.