Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை சிறீலங்காவிற்கு திருப்பியனுப்ப வேண்டாம் எனக்கோரி சிறைச்சாலையின் முன் வீதிமறிப்பில் ஈடுபட்டோர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DEPORT_actnow151211uk_150.jpg

தமிழர்களை சிறீலங்காவிற்கு திருப்பியனுப்ப வேண்டாம் எனக்கோரி இன்று (15-12-2011) சிறைச்சாலையின் முன் வீதிமறிப்பில் ஈடுபட்டோரை பிரித்தானியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! இன்று பிரித்தானியாவில் இருந்து 50 இலங்கையர்களை நாடுகடத்துவதற்காக கீத்துறூ விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த வேளையிலேயே ACT NOW அமைப்பினரால் அச்சிறைச்சாலையின் முன் திடீர் வீதிமறிப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது.

9 பேர் மட்டும் துணிச்சலாக மேற்கொண்ட இப்போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி கைத்தொலைபேசி ஊடாக குறும் தகவல் செய்திகள் அனுப்பப்பட்ட போதும் போதிய மக்கள் அவ்விடத்திற்க்கு செல்லாத காரணத்தால் மக்கள் பலமின்றிய போராட்டத்தை இலகுவாக பிரித்தானியக் காவல் தூறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளதோடு, நாடுகடததுவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை பின் வாசல் வளியாக விமான நிலையம் அழைத்துச்செல்லப்பட்டும் உள்ளனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இப் போராட்டம் பலனற்ற நிலையில் பிரித்தானியக் குடிவரவுத் திணைக்களத்தினால் இன்று சிறீலங்காவிற்கு அனுப்பப்படும் 50 பேரில் அடங்கியுள்ள தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அப் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த ACT NOW அமைப்பினர் கடந்தமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான இரண்டு வருடங்களாக தமிழர்களுக்கு நீதிகோரியும், சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீரல்களையும், படுகொலைகளையும் கண்டித்தும், பல போராட்டங்களை நடாத்திவருவதும், இவ் அமைப்பில் ஒரு சில தமிழர்களஇ தவிர ஏனயவர்கள் வேற்றினத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

DEPORT_actnow151211uk_002.jpg

DEPORT_actnow151211uk_003.jpg

DEPORT_actnow151211uk_004.jpg

DEPORT_actnow151211uk_733_001.jpg

DEPORT_actnow151211uk_733_005.jpg

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடியுரிமை பெற்றவர்களும், பெறாதவர்களும் இலங்கைக்குப் போவதை நிறுத்தியிருந்தால் இதெல்லாம் தேவையில்லை. சுயாதீனமாக நீங்கள் போய்வரும்போது அவர்கள் எடுத்த முடிவிற்கு நீங்கள் விடை கொடுத்துவிட்டீர்கள். நாங்கள் ஸ்மார்ட் என்று நினைப்பது தவறு. ஒன்றைச்செய்யும்போது எதிர்காலத்தைக்கருத்திற்கொண்டு செய்யுங்கள். விமான நிலையத்தில் நீங்கள் சென்று வந்த பதிவுகள் துல்லியமாகக் காட்டும். அவர்கள் அட்டவணைப்படுத்திக்காட்டும்போது யாராலும் மறுப்புத்தெரிவிக்கமுடியாது. எங்கள் எதிர்காலம் எங்கள் கையில் தான். நாங்கள் சட்டத்திற்கேற்ப சீர்படுத்திக்கொள்ள வேண்டும். பிழையிருந்தால் மன்னிக்கவும்.

இதுதான் உண்மை நாங்கள் இங்கு ஒரு அமைச்சரை சந்தித்தபோது இதைத்தான் அவர் சொன்னார். நீங்கள் பாதுகாப்பாக போய் வருகிறீர்கள் தானே.அப்படியாயின் அவர்களுக்கும் பாதுகாப்புண்டு

குடியுரிமை பெற்றவர்களும், பெறாதவர்களும் இலங்கைக்குப் போவதை நிறுத்தியிருந்தால் இதெல்லாம் தேவையில்லை. சுயாதீனமாக நீங்கள் போய்வரும்போது அவர்கள் எடுத்த முடிவிற்கு நீங்கள் விடை கொடுத்துவிட்டீர்கள். நாங்கள் ஸ்மார்ட் என்று நினைப்பது தவறு. ஒன்றைச்செய்யும்போது எதிர்காலத்தைக்கருத்திற்கொண்டு செய்யுங்கள். விமான நிலையத்தில் நீங்கள் சென்று வந்த பதிவுகள் துல்லியமாகக் காட்டும். அவர்கள் அட்டவணைப்படுத்திக்காட்டும்போது யாராலும் மறுப்புத்தெரிவிக்கமுடியாது. எங்கள் எதிர்காலம் எங்கள் கையில் தான். நாங்கள் சட்டத்திற்கேற்ப சீர்படுத்திக்கொள்ள வேண்டும். பிழையிருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் கருத்தில் உண்மை உள்ளது. நிச்சயம் தாயகத்திற்கு போவதை முடிந்தளவு தவிர்க்கவேண்டும்.

இருந்தாலும், அங்கு நடக்கும் / தொடரும் மனித உரிமை மீறல்கள், தமிழர் அடக்குமுறைகளை அரசுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்த இதை ஒரு சந்தர்ப்பம். அதன் மூலம் உறவுகளை அங்கு அனுப்புவதை தடுக்கவும், தாயக மக்களின் நிலைமையை தெளிவுபடுத்தவும் வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'இருந்தாலும்இ அங்கு நடக்கும் ஃ தொடரும் மனித உரிமை மீறல்கள்இ தமிழர் அடக்குமுறைகளை அரசுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்த இதை ஒரு சந்தர்ப்பம். அதன் மூலம் உறவுகளை அங்கு அனுப்புவதை தடுக்கவும்இ தாயக மக்களின் நிலைமையை தெளிவுபடுத்தவும் வேண்டும்."

எங்களுக்கு வெளியுலகம் கருணைகாட்டவும், சாதகமாக நடக்கவும் நாங்கள் தான் வழிஏற்;படுத்தவேண்டும். புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் போருக்குப்பின் இலங்கை செல்வதை ஒட்டுமொத்தமாக தவிர்த்திருந்தால், இன்று சர்வதேசம் ஒரு முறை திரும்பிப்பார்த்திருக்கும். ஆனால் போருக்குப்பின் நடந்தது என்ன? ஓடிய இரத்தஆறு காயமுன் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குச் சென்றது தான். போராடியவர்கள் பற்றிய தப்பபிப்பிராயம் வலுவடைந்தது. ஓட்டு மொத்தமாகத்தவிர்த்து இருந்தால் தமிழர்கள் அரசின் செயல்பாட்டிற்கு பயப்படுகின்றார்கள். உண்மையில் இலங்கை அரசு கொடிய அரசு என்பதை உணர்ந்திருப்பார்கள். தமிழருக்கு பிரச்சனை உள்ளது என்பதை தெருவில் நின்று போராடாமல் உணர்த்தி இருக்கலாம். நாங்கள் தெரு இறங்கிக் கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வதில் தான் நிற்கின்றோம். தெருவில் இறங்காமல் விடயத்தை எப்படி இவர்களுக்கு உணர்த்துவது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. வெள்ளையன் முதுகில் தடவி கழுத்தில் கத்தியை வைக்கின்றான். நாங்கள் கத்தியை காட்டிக்கொண்டு சென்று குத்தமுன் கைதுக்கு உள்ளாகின்றோம். இதுதான் எங்களுக்கும் வெர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

அவன் உங்களைப்போகவிட்டு அதைச்சான்றாக்கி எங்களைத்திருப்பி அனுப்புகின்றான். நீங்கள் வெளிப்படையாகப்போய்க்காட்டி அவனை அனுப்பவைக்கின்றீர்கள். நாம நம்ம வழிகளை எல்லோருடனும் ஒத்து நமக்கு சாதகமான வழியில் திருப்பக் கற்றுக்கொள்ளவேண்டும். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் மீசையில் கூழ் ஓட்டத்தான் செய்யும். அதுபொல சுதந்திரத்திற்கும் ஆசை நாட்டிற்குப் போய்வருவும் ஆசை என்றால் சுதந்திரம் வராது. ஒன்றை இழந்து தான் ஒன்றைப்பெறமுடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.