Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் இயக்கத்தின் வாகனம் யாழில் தாக்குதல்

Featured Replies

மக்கள் போராட்ட இயக்கத்தின் வாகனம் யாழில் இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல்

மக்கள் போராட்ட இயக்கம்யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகளின் வாகனம் இனம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித்குமார தெரிவித்துள்ளார்.

தாங்கள் யாழ். பஸ் நிலையத்தில் போராட்டத்தை முடித்துக் கொண்டு தமது போராட்டம் தொடர்பாக உள்ளூர் ஊடகங்களுக்கு விளக்கி கூறச்சென்று வேளையிலேயே யாழ். கஸ்தூரியார் வீதியில் வைத்து தமது வாகனம் தாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இத் தாக்குதலின் காரணமாக வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/32825-2011-12-17-12-31-46.html

  • தொடங்கியவர்

லலித், குகன் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம்

மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டமைக்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தலமையில் நடைபெற்றது. சுமார் 300 மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்.

சுமர் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்காக யாழ். பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/32811-2011-12-17-07-24-21.html

  • தொடங்கியவர்

யுத்த நாள்களைப் போன்று நேற்று குடாநாட்டில் சோதனை கெடுபிடிகள்

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தைப் போன்று நேற்று குடாநாட்டில் பல இடங்களிலும் சோதனைக் கெடுபிடிகள் இருந்தன. குறிப்பாக யாழ். நகரில் பொலிஸாரின் கெடுபிடிகள் அதிகரித்திருந்தன.

மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழ். நகரில் நேற்று காணாமற்போனவர்களைத் தேடியறியும் குழுவின் பேரணி ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே வழமைக்கு மாறான இந்தத் திடீர் நடவடிக்கை பரவலாக இருந்தது.

குடாநாடு எங்கும் படையினரும் பொலிஸாரும் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கை முழு மூச்சாக இடம் பெற்றதால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது.

யாழ். குடாநாட்டின் முக்கிய வீதிகள் எங்கும் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போர் இடம் பெற்ற காலகட்டத்தில் செயற்பட்டது போன்று நடந்தனர்.

வடமராட்சியிலிருந்து வல்லையூடாக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் மற்றும் போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணம் செய்த பயணிகள் வல்லைச் சோதனைச் சாவடிப்பகுதியில் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வாகனங்களில் சென்றவர்களும் மறிக்கப்பட்டு அவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. இது தொடர்பாக வல்லை சோதனைச்சாவடியில் நின்ற படையினர் தெரிவிக்கும் போது ""இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் களவுகள் அதிகமாக நடக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தவே இந்தச் சோதனைகள். இது மேலிடத்து உத்தரவு.'' எனத் தெரிவித்தனர்.

வல்லையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயணிகள் மீண்டும் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு முன்னாலும் இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அடுத்து இருபாலையிலும் அதே போன்று கெடுபிடி.

வாகனங்களில் பயணித்தவர்களின் வாகன இலக்கங்களும் பதிவு செய்யப்பட்டு சோதனையும் நடந்தது.

இவ்வாறு அடுத்தடுத்து பல இடங்களில் இறக்கப்பட்டு சோதனைகள் தொடர்ந்தன. இதேவேளை, நேற்றைய பேரணிக்கு வந்திருந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு, விரட்டப்பட்டனர் என்றும் பெண்கள் தள்ளி வீழ்த்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தென்னிலங்கையில் இருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகள் 38 பேரை பேரணியில் கலந்து கொள்ள விடாது பொலிஸார் சுமார் 2 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர் என்றும், அவர்கள் எடுத்து வந்திருந்த பதாகைகள், பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்.

இந்த அராஜகங்கள் குறித்து சர்வதேச மனித உரிமை அலுவலகத்திலும் பொலிஸ் தலைமையகத்திலும் தாங்கள் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=43418693717396191

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.