Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி அதிகாரங்களை பகிர்வதில் இழுபறி! இன்றும் சந்திக்கிறது அரசு -கூட்டமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suresh-150x150.jpg

காணி அதிகாரமானது அதிகாரப் பகிர்வின் மையமாக இருக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத் தூதுக்குழுவை நேற்று திங்கட்கிழமைசந்தித்தபோது த.தே.கூட்டமைப்பு இக்கோரிக்கையை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இது தொடர்பாக கூறுகையில், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் காணி அதிகாரம் பகிரப்படுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தநிலையிலும் 1995 அம் ஆண்டு தமிழ்க்கட்சிகள்அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழக் கட்சிகளின் பிரதான கோரிக்கையாக இது இருந்த நிலையிலும் இக்கோரிக்கை தமது கட்சி வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

எனினும் காணி அதிகாரத்தைப் பகிர்வதற்கு அரசாங்கத் தூதுக்குழுவினர் மறுப்புத் தெரிவித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையான முந்தைய அரசாங்கங்களின் கொள்கைகளைப் போன்றதல்ல என அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகளிலும் காணி அதிகாரப் பகிர்வு தெரிவிக்கப்பட்டிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

எனினும் இது தொடர்பான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படாமல் கலந்துரையாடல்கள் முடிவுற்றன. அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக இருதரப்பினரும் இன்று சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்றைய கலந்துரையாடலில் அரசாங்கத் தூதுக்குழுவுக்கு அமைச்சர் நிமயல் சிறிபால டி சில்வா தலைமை தாங்கினார். அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் இதில் அங்கம் வங்கித்தனர்.

ஆர். சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்அங்கம் வகித்தனர்.

http://www.saritham.com/?p=44561

முக்கியம் :

நிலங்கள் முக்கியம்-மண்

இடங்கள் முக்கியம் -திசை

தளங்கள் முக்கியம் -நிலை

கலங்கள் முக்கியம் -பாதகாப்பு

சனங்கள் முக்கியம் -மக்கள்

பணங்கள் முக்கியம் -பொருள்

பண்பாடுகள் முக்கியம் -நன்முறை

வினாக்கள் முக்கியம் -கேள்வி

விடைகள் முக்கியம் -பதில்

விமர்சனங்கள் முக்கியம் -சீர்தூக்கல்

க லைகள் முக்கியம் -அழகு

கதைகள் முக்கியம் -வரலாறு

பதிவுகள் முக்கியம் -அடையாளம்

எதிர்ப்புகள் முக்கியம் -வளர்ச்சி

பலங்கள் முக்கியம்-பாராட்டு

சிந்தனைகளில் முக்கியம் -முன்னேற்றம்

செயற்பாடுகள் முக்கியம் -வெற்றி

உழைப்பாளிகள் முக்கியம் -நிறைவு

ம.இரமேசு

19 -12 -2011

கூட்டமைப்பு கேட்கும் மூன்று முக்கிய நிர்வாக அலகுகளில் காணியே முதன்மையானது. காணி அதிகாரத்தை பெறாவிட்டால், இல்லை அவர்கள் தராவிட்டால், பேசுவதில் பலனில்லை. அதேவேளை, சர்வதேசம் கூட்டமைப்பின் பக்கம் முழுமையாக ஆதரவு தரும் வரைக்கும் பேசியவண்ணம் நிலைமைகளை கூறியவண்ணம் இருக்கவேண்டும். ஒரு கட்டத்தில் சர்வதேசம் தீர்க்கமான முடிவை எடுக்க நேரிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.