Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறோம்! ஊடகவியலாளர் மாநாட்டில் கஜேந்திரகுமார் கருத்து

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறோம்! ஊடகவியலாளர் மாநாட்டில் கஜேந்திரகுமார் கருத்து

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட முடியாததென்று சுட்டிக்காட்டியுள்ள, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த அறிக்கையை அடியோடு நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளது.

கட்சியின் உபதலைவர்களில் ஒருவரும், வெளிவிவகாரகுழு இணைப்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 3 ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (19-12-2011) ஊடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்டது. அம் மாநாட்டில் திருமதி பத்மினி சிதப்பரநாதன், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு.

இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டமை பற்றிய அறிவிப்பு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட போது, 24-10-2010 அன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதே அலுவலகத்தில் நடாத்திய உடகவிலாளர் மாநாட்டில் நல்லிணக்க ஆணை குழு நியமிப்பு நாடகம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமான கண்துடைப்பு நடவடிக்கை என்பதனை சுட்டிக்காட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரிப்பதாக அறிவித்திருந்தது.

கடந்த ஒருவருடத்திற்கு மேலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டி வந்தது போன்று இறுதி யுத்தத்தில் நடந்தவற்றை மூடிமறைத்து முற்றாக புலிகளையும் தமிழ் தரப்புகளையும் குற்றஞ்சாட்டுவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்கழுவின் அறிக்கை வெளி வந்துள்ளது. இந்நிலையில் சர்வதேசம் இனியும் பொறுத்திராது பக்கசார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த முன்வர வேண்டுமென வலியுறுத்தினர்.

மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்தபோது அதனை வரவேற்பது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வரவேற்றனர். ஆனால் இன்றுவரை தமிழ் மக்கள்மீது புரியப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை வேண்டுமென்பதே தமது கட்சியின் கோரிக்கை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்கழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முழுமையாக நிராகரிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் கூட்டமைப்பு கடந்த அறுபது வருடங்களாக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்த வேண்டுமெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக் கொண்டார். மேலும் இனியும் காலத்தை கடத்தாது கூட்டமைப்பினர் இவ்விடயத்தினில் விரைந்து தமது கட்சியின் பொது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேடடுக்கொண்டார்.

சர்வதேசம் இனப்படுகொலை தொடர்பிலான விசாரணையை பொறுப்பேற்கவேண்டும். ஆனால் அது போர் நடந்த இறுதி மூன்று வருடங்களுக்கானதாக மட்டும் இருக்ககூடாது. ஆங்கிலேயர்கள் இலங்கையிலிருந்து விலகிய காலம் முதல் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்படவேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.

இதே வேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் முன்வைத்த பத்து அம்ச கோரிக்கைகள் வரவேற்கத்தக்கவையென தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆனால் கூட்டமைப்பினை திருத்தலாமென்ற தமிழ் சிவில் சமூக அமைப்புக்களது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாதெனவும், கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் நலன்களை கைவிட்டு பிறசக்திகளது நலன்களுக்காக செயற்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் ஒபோதும் திருந்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

சில வேளைகளில் அந்த எண்ணம் நிறைவேறினால் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்களாக நாங்களே இருப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் பின்னணியில் தாங்களே இருப்பதாக கூட்டமைப்பை சேர்ந்த சிலர் கூறுகின்றனரே என எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூட்டமைப்பினருக்கு நோக்கி சிவில் சமூகத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களில் கவனம் செலுத்துவதைவிட்டு, நொண்டிச்சாட்டு தேடுவதே இப்போது அவர்களுக்கு பழக்கமாகிப் போய்விட்டதாகவும் கூறினார்.

புத்திஜீவிகளையும் பொது அமைப்புக்களையும் சேர்ந்த தமிழ் சிவில் சமூக அமைப்பு எமது கட்சியின் பின்னால் இருப்பதாக கூறுவது அவர்களது முயற்சியை கொச்சைப்படுத்துவதனை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. உண்மையில் அவர்கள் எம் பின்னால் இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம் எனவும் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் கூட்டமைப்புத் தலைவர் இறுதி யுத்தத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் என்று கூறிவருகின்றார். ஆனால் இறுதி யுத்தத்தில் நடைபெற்றது என்ன என்பது கூட்டமைப்பினருக்கு மிகவும் நன்றாகவே தெரியும். தெரிந்திருந்தும் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணை ஒன்றை கோராது உண்மைகளை கண்டறிய வேண்டும் எனக் கோருவது இனப்படுகொலையில் ஈடுபட்டுவந்த சிறீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை கிடைக்காமல் தடுத்து நிறுத்துவதுமே கூட்டமைப்பினரது என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சிகள் இடம்பெற்றால் இறுதியில் படுகொலையில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் மனம்வருந்துகின்றோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதுடன் விடயங்கள் முடிந்துவிடும். படுகொலை புரிந்த எவரும் தண்டிக்கப்பட போவதில்லை. அது மட்டுமன்றி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இனத்திற்கு சர்வதேச சட்டங்களின்படி கிடைக்க வேண்டிய அரசியல் ரீதியாக நன்மைகளும் கிடைக்காமலே போய்விடும். இது விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் வழிப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறாயிரம், ஏழாயிரம் மக்கள் இறந்த கணக்கை ஜெனோசைட் என்று காட்டியே பல நாடுகள் தோன்றியுள்ளன.

எரித்திரியா, கொசோவோ தொடக்கம் தோன்றிய பல நாடுகள் ஒரு ஆயுத போராட்ட வரலாற்றை வைத்திருக்கின்றன.

எங்களது ஆயுத போராட்டம், நாம் வாழும் தமிழ் ஈழத்தை உலக அரசியல் செய்தியாக்கிவிட்டது.

முள்ளி வாய்க்கால் ஜெனோசைட் மற்றவை போலல்லாது முறையாக உலகளவில் கையாளப்பட்டது.

நிர்ர்ரைய்ய்ய ஆதாரங்கள் வேறு! தென்னாசியாவில் சில வருடங்களில் வரப்போகும் போர், எங்களுக்கு கை கொடுக்கும்.

நாம் எமது அரசியல் போராட்டத்தை முனைப்பில் வைத்திருக்கவேண்டும்.

தமிழ் அரசியல்வாதிகள் நாடு நாடாக சென்று பல்கலைகழகங்கள், அரசியல் சிந்தனை சாலைகள், மக்கள் சந்திப்புகள் என்று எங்களுக்கு நடந்த / நடக்கும் அநியாயங்களை தெரிவித்தாலே அது தமிழ் ஈழத்திற்கு பெரிய உபகாரமாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.