Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Buddhism - A Tamils' Contribution

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கிருபன்.

நிறையத் தகவல்கள். சிங்களவர்களால் மட்டுமல்ல தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய தகவல்கள்

மதுரையில் சமணம்

உலகில் உள்ள தொன்மையான நகரங்களுள் மதுரையும் ஒன்று. மதுரையில் சங்க காலத்திலிருந்து இன்று வரை பல்வகை சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மதுரையை சுற்றியுள்ள மலைகளில் காணப்படும் கல்வெட்டுக்கள் இரண்டாயிரம் ஆண்டு பழமையானவை. அவை சமணர்கள் தங்கியிருந்த மலைகளில் காணப்படுகின்றன என்பதால் சமணர்கள் தமிழகத்திற்கு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே வந்து விட்டனர் என்பதை இக்கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

madurayil-samanam.jpg?w=614&h=383

பள்ளிப்பாடப்புத்தகங்களில் இருந்தெல்லாம் சமணம் மீதான ஆர்வம் வரவில்லை. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய ‘சமணமும் தமிழும்’, தொ.பரமசிவனின் ‘பண்பாட்டு அசைவுகள்’, வெ.வேதாச்சலத்தின் ‘எண்பெருங்குன்றம்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி’ மற்றும் மதுரைப் புத்தகத்திருவிழா, சித்திரைப்பொருள்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சி மூலம் சமணம் மீதான ஆர்வம் அதிகமாகியது. இவர்கள் எழுத்துக்களை மட்டும் வாசிக்காமல் இருந்திருந்தால் இந்தளவுக்காவது சமணம் குறித்து தெரிந்திருக்குமா எனத்தெரியாது. ஏனென்றால் வெகுநாள் வரை மதுரையில் கடைகள் வைத்திருக்கும் ஜைனர்களை முகமதியர்கள் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அதைவிடக் கொடுமை என்னவென்றால் நான் படித்த தொழில்நுட்ப கல்லூரிக்கிட்ட உள்ள குன்னத்தூரில் சமணர்படுகை இருந்திருக்கிறது; நான் போய் பார்த்ததில்லை.

கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே சமணர்கள் தமிழகம் வந்து விட்டனர். மதுரையில் சமணம் கி.பி ஏழாம் நூற்றாண்டு வரை சிறப்பாக இருந்துள்ளது. பௌத்தமதம் சமணம் அளவு மதுரையில் பரவவில்லை. அதற்கு காரணம் உள்ளூர் வணிகர்கள் சமணத்தை ஆதரித்தனர். வெளியூர் வணிகர்கள் பௌத்தத்தை ஆதரித்தனர். எனவே, கடற்கரையோரங்களில் பௌத்தமும், நாட்டிற்குள் சமணமும் அக்காலத்தில் சிறந்திருக்கின்றன. இதனாலேயே, பௌத்தமதம் பலநாடுகளில் இன்றும் பின்பற்றப்படுகிறது. இந்தளவு சமணமதம் மற்ற நாடுகளில் பரவவில்லை. இன்றும் பௌத்த மடாலயங்கள் கடற்கரையோர மாவட்டங்களில் காணப்படுகிறது. சமணர்கள் பெரும்பாலும் குன்றங்களில் தான் வசித்திருந்திருக்கின்றனர். எனவே, சமணத்தின் சுவடுகள் தமிழகத்தில் உள்ள மலைகளில்தான் நிறைய காணப்படுகிறது. பின் தோன்றிய பக்தி இயக்கத்தின் சூழ்ச்சிகளால் சமணம் மெல்ல நசியத் தொடங்கியது. திருஞானசம்மந்தர் காலத்தில் சமணர்களை puthukkottai-painting.jpg?w=614&h=383கழுவேற்றம் செய்திருக்கிறார்கள். இதை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதை கதையாக சொல்கிறார்கள். மதுரைக்கு அருகிலுள்ள சாமநத்தம் என்னும் ஊரில்தான் சமணர்களை கழுவேற்றியிருக்கிறார்கள். இவ்வூரில், திருஞானசம்மந்தருக்கு கோயில் கூட இருக்கிறதாம். புதுக்கோட்டை ஆவுடையார் கோயிலில் இதற்கான சித்திரச்சான்று உள்ளது. இதைக்குறித்த படம், தகவல் நட்பூ.இன் தளத்தில் மணா பக்கத்தில் இருந்து எடுத்தேன். மணாவிற்கு நன்றிகள் பல (மதுரையில் உள்ள கிராமதெய்வங்கள் குறித்தும் இத்தளத்தில் அவர் எழுதியுள்ளார்) ஆனால், சமணம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை சமணத்தின் சுவடுகள் நமக்கு கிடைக்கின்றன.

சமணர்கள் நிறைய பேர் இந்து சமயத்திற்கு மாறினர், மாற்றப்பட்டனர். சமண, பௌத்த தளங்கள் எல்லாம் சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்பட்டன. சமணத் தீர்த்தங்கரர், இயக்கியர் சிலைகள் நிறைய இடங்களில் நாட்டார் தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகிறது. ஐயனார், முனியாண்டி எல்லாம் பெரும்பாலும் சமண, பௌத்த துறவிகளின் சிற்பங்கள்தான்.

தமிழகத்தில் ஆசிவகம் என்ற மதம் இருந்ததாக சிலர் கூறுகின்றனர். ஆசிவகத்தின் அடையாளம் யானையென்றும், ஐயனார் ஆசிவகமுனிவர் என்றும் க.நெடுஞ்செழியன் ‘தமிழரின் அடையாளங்கள்’ என்ற நூலில் கூறுகிறார். எல்லாமே ஆய்வுக்குரியது. இதைக்குறித்தும் வாசிக்க வேண்டும். இன்றும் வடதமிழகத்தில் தமிழ்ச்சமணர்கள் வசிக்கிறார்கள். மதுரையிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த சமணர்கள் வசிக்கிறார்கள்.

மதுரையில் உள்ள சமணம் குறித்த தொல்லிடங்களைத் தேடித்தேடி முடிந்த இடங்களைப் போய் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிறைய இடங்களைப் போய் பார்க்க முடியாதபடி இருக்கிறது. அதைக்குறித்தெல்லாம் நான் எழுதுவதாயில்லை. ஆனால், நாம் இழந்தவைகளை மீண்டும் தேடிப்பெற வேண்டுமானால் அதிக விலை கொடுக்கவேண்டிருக்கும். உதாரணமாக வேதாசலம் மதுரையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர். அவரது ‘எண்பெருங்குன்றம்’ என்னும் நூல் மதுரையில் உள்ள புத்தகக்கடைகளிலேயே தேடி அலைந்தும் கிடைக்கவில்லை. அதை ஒரு நூலகத்தில் இருந்து எடுத்து நகலெடுக்க ஆன செலவு அந்நூலின் விலையான அறுபதைத் தாண்டிவிட்டது. புத்தகத்திற்கே இந்நிலை என்றால் நாம் இழக்கும் தொன்மங்களை மீண்டும் அப்படியே பெற எவ்வளவு செலவழித்தாலும் சிலவற்றை அப்படியே பெற முடியாது. நிறைய சமணர் படுகைகளில் நம்மவர்கள் அவர்களின் சுவடுகளை பதித்து நாசம் செய்கின்றனர். அந்தக் கொடுமையைத்தான் தாங்க முடியவில்லை.

மதுரையில் சமணர்கள் இருந்த இடங்கள்: அழகர்மலை, யானைமலை, மேல்குயில்குடி, கீழ்க்குயில்குடி சமணமலை, கொங்கர் புளியங்குளம், திருப்பரங்குன்றம், திருவாதவூர் மலை, கீழவளவு மலை, அரிட்டாபட்டி, கரடிப்பட்டி பெருமாள் மலை, மாங்குளம் மீனாட்சிபுரம் மலை, விக்கிரமங்கலம், குரண்டி, அணைப்பட்டி சித்தர்மலை, உத்தம்பாளையம் குன்று. குரண்டியிலும் கீழ்குயில்குடி சமணமலையிலும் பெரும்பள்ளிகள் இருந்திருக்கின்றன . ஆனால், சங்க காலத்தில் சிறப்புடன் விளங்கிய குரண்டி திருக்காட்டாம்பள்ளி இருந்த ஊரில் இன்று சமணத்தின் சுவடுகளே இல்லையாம்.

முன்காலங்களில் சமணர்களை அமணர்கள் என்றே மக்கள் அழைத்தனர். சமணதுறவிகள் அம்மணமாக இருந்ததால் அமணர்கள் என்று அழைத்தனர் போலும். திருப்பரங்குன்றத்தில் உள்ள படுகைக்கு போகும் வழியில் அமண் பாழி என்றே பதாகை உள்ளது. சம்மணம் போட்டு அமர்வதையே சமணர்கள் போல் அமர்வதைத்தான் குறிக்குமாம். சைவ உணவுப்பழக்கமே சமணர்களிடமிருந்து நாம் பின்பற்றத் தொடங்கியதுதான். அடிதொழுதலும் (கால்ல விழுந்து வணங்குவது) சமணர்களின் பழக்கம்தான். இப்படி சமணர்களின் பழக்கவழக்கங்கள் நம்மிடம் புகுந்துவிட்டன. அதைக்குறித்தும் தேடிப்புடிச்சு எழுதுவோம். சமணம் குறித்து நான் எழுதுவதெல்லாம் வாசிப்பு மற்றும் செவிவழிச் செய்தியில் இருந்துதான்.

சமணம் தமிழுக்குச் செய்த தொண்டுகள் ஏராளம். சமணர்கள் மதுரை மற்றும் அதைச் சுற்றியிருந்த இடங்கள், சமண முனிவர்கள் இயற்றிய நூல்கள், சமணம் குறித்த நூல்கள் பற்றி “மதுரையில் சமணம்” என்ற தலைப்பின் கீழ் எழுதவிருக்கிறேன். எல்லாம் உருப்படியாக இருக்க மகாவீரர் அருளட்டும். சமணமுனிவர்கள் எல்லோருமே மகாவீரர்கள் தான். ஏனென்றால், இம்மலைகளுக்கு இன்று ஏறிச்சென்று பார்ப்பதற்கே சிரமமாயிருக்கிறதென்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் எப்படி ஏறியிருப்பார்கள் என்றெண்ணும்போது வியப்பாயிருக்கிறது. மயிலை.சீனி.வேங்கடசாமி, தொ.பரமசிவன், வெ.வேதாசலம் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் இந்நால்வருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

http://maduraivaasagan.wordpress.com/

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் கிருபன்....தமிழன் பெளத்தத்தை தழுவியிருந்தான் என்பதை சிங்களவன் நம்பி தமிழனை வாழவிட்டால் சரி......

சமண, பௌத்த தளங்கள் எல்லாம் சைவ, வைணவ கோயில்களாக மாற்றப்பட்டன. சமணத் தீர்த்தங்கரர், இயக்கியர் சிலைகள் நிறைய இடங்களில் நாட்டார் தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகிறது. ஐயனார், முனியாண்டி எல்லாம் பெரும்பாலும் சமண, பௌத்த துறவிகளின் சிற்பங்கள்தான்

அந்த ஆத்திரத்தில்தான் சி ங்களவர்கள் இப்ப தமிழனை அழிக்கிறானோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.