Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தையும் கூட்டமைப்பையும் திருப்திப் படுத்துவதாக அதிகாரப் பகிர்வு இருக்கக் கூடாது - நெடியவன், விநாயகம் போன்ற புலிச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? சம்பிக்க ரணவக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ChampikaRanawaka_150MM.jpg

சர்வதேசத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ளக் கூடாது என மின்வலு எரிசக்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஏதேனும் அதிகாரப்பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் அது மக்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தமது எல்லையை மீறி பரிந்துரை செய்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதிகாரப் பகிர்வு என்பது அரசியல் விவகாரம் என்றும், அது குறித்து உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கருத்து வெளியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு பக்கச் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் பற்றி குறிப்பிட்டுள்ள போதிலும் சிங்கள மக்கள் பற்றி எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு சமாதானத்திற்கு எவ்வாறான தடைகளை ஏற்படுத்தி வருகின்றது என்பது குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தத் தவறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெடியவன், விநாயகம் போன்ற சர்வதேசத்தில் செயற்படும் விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விதி மீறல்களில் ஈடுபட்ட அரசாங்கப் படையினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு அல்லது சர்வதேச சட்டங்களின் கீழ் அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

ChampikaRanawaka_150MM.jpg

சர்வதேசத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் அதிகாரப்பகிர்வினை மேற்கொள்ளக் கூடாது என மின்வலு எரிசக்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் பற்றி குறிப்பிட்டுள்ள போதிலும் சிங்கள மக்கள் பற்றி எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

2000 ஆண்டுகளாக தமிழரின் சொத்துக்களைக் கொள்ளையடித்து, சந்ததிகளைப் பெருக்கி வாழும் கேவலமான சிங்கள இனத்துக்கு இதில் எதற்கு இடம் வேண்டும்? கொள்ளைக்காரனுக்கும், கொலைகாரனுக்கும், பாலியல் வன்முறையாளனுக்கும் நிவாரணம் வழங்குவதுதான் சிங்களக் காடையர்களின் பௌத்த தர்மம் என்பதை சம்பிக்க கூறுகிறான்.

இந்த சிங்களப் பயங்கரவாத அரசின் ஆணைக்குழுவின் தலைவர் சி. ஆர். டி. சில்வா என்ற சிங்களப் பயங்கரவாதி ஹெல உறுமையவின் உறுப்பினர் என்பது எல்லாருக்கும் தெரியும். சம்பிக்க-மகிந்த கும்பல் போடும் நாடகங்களும் எடுபடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.