Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சடலமொன்றுடன் சென்ற 11 பேரை காணவில்லை என புகார்

Featured Replies

(கிரிசன், கவிசுகி)

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி எடுத்துவரப்பட்ட சடலத்தையும் காணவில்லை அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் பொலிஸிலும் புளியங்குளம் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மரணம் அடைந்து மூன்ற பிள்ளைகளி;ன் தந்தையின் சடலமும் அதனை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தவர்களுமே கடந்த பத்து நாட்களாக காணாமல் போயுள்ளவர்களாகும்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

இந்தியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 18 ம் ஆம் திகதி க.தனஞ்செயன் வயது 38 என்பவர் மரணம் அடைந்துள்ளார்.

இவருடைய சடலம் 19ம் திகதி நன்பகல் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு அங்கிருந்து தனியார் வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஏழாலை மேற்கில் உள்ள ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டில் மரணக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் 20 ஆம் திகதி காலை அதிகாலை 1.00 மணியளவில் தாம் பிரேதத்துடன் ஓமந்தைக்கு வந்துவிட்டோம் என்று இறந்தவரின் சகோதரியான மருத்துவர் ஏழாலையில் உள்ள உறவினர்களுக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

பின்னர், பனிக்கம் களத்தில் சடலம் கொண்டுவந்த வாகனத்தின் டயர்கள் காற்று போன நிலையில் நிற்பதாகவும் டயர்களை ஒட்டிக்கொண்டு புறப்பட்டு வருவதாகவும் அவர்; பகல் 11.00 மணியளவில் தெரிவித்துள்ளார்.

இரவு 5.00 மணியளவில் குறிப்பி;ட்ட சகோதரி வாகனத்தின் ரயர்கள் மாற்றி விட்டோம் வாகனம் ஸ்ராட் அகவில்லை அதனைப் பார்த்தக்கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

இரவு முழுவதும் அவர்களிடமிருந்து உறவினர்களுக்கு தொடர்புகள் எவையும் கிடைக்கவில்லை. 21 ஆம் திகதி காலையில் தொடர்புகொண்ட அவர்கள், தம்மை யாரோ சடலத்துடன் கடத்திச்சென்று காட்டில் வைத்திருப்பதாக தெரிவித்தனர். அதன்பின் கையடக்கத் தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏழாலையில் உள்ள உறவினர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தபோது அவர்களை புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்ற முறையிடும்படி சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழுவின்மூலம் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை யாழ்ப்பாணம் பொலிஸ் உதவி அத்தியட்சகரின் கவனத்திற்கு கிராம அலுவலாகள் கொண்டுவந்த நிலையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விடுத்த பணிப்புரையைத் தொடர்ந்து குறிப்பி;ட்ட விடயம் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வாகனத்தில் இறந்தவரின் மனைவியும் பத்து வயதுக்கு உட்பட்ட பிள்ளைளும் திருகோணாமலை செயலகத்தில் அமைந்துள்ள நிக்கொட் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான நிரஞ்சன் மற்றும் மனைவி மூன்று பிள்ளைகள் (பத்து வயதுக்கு உட்பட்டவர்கள்) சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஆகியோரே காணாமல் போயுள்ளவர்களாகும்.

இச்சம்பவம் நடந்து சுமார் பத்து நாட்கள் கடந்த நிலையிலும் கூட குறிப்பி;ட்ட நபர்களுக்கோ அவர்களால் கொண்டுவரப்பட்ட சடலத்திற்கோ வாகனத்திற்கோ சாரதிக்கோ என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் உறவினர்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/33487--11-.html

சடலத்துடன் யாழ். சென்ற பதினொரு பேரைக் காணவில்லை: அதிர்ச்சித் தகவல் _

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தையும் அதனுடன் கூட வந்த பதினொருபேரையும் காணவில்லையென சுன்னாகம் மற்றும் புளியங்குளம் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது.

இச்சம்வம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இந்தியாவில் உள்ள வைத்தியசாலையொன்றில் கடந்த 18 ஆம் திகதி மட்டக்களப்பை வாழ்விடமாகவும் ஏழாலையைப் பிறப்பிடமாகவும் கொண்ட க.தனஞ்சயன் (வயது-38) என்பவர் மரணம் அடைந்துள்ளார்.

இவருடைய சடலம் 19ஆம் திகதி நண்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு அங்கிருந்து தனியார் வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஏழாலை மேற்கில் உள்ள ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டில் மரணக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உறவினர்களுக்கும் மரண அறிவித்தல் தெரிவிக்கப்பட்டு பந்தல் போடப்பட்டு உரிய நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

இந் நிலையில் 20ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் தாம் பிரேதத்துடன் ஓமந்தைக்கு வந்துவிட்டோம் என்று இறந்தவரின் சகோதரியும் கொழும்பு ஜயவர்த்;தனபுர வைத்தியசாலை வைத்தியருமான திருமதி. விமலச்சந்திரா குமுதா ஏழாலையில் உள்ள உறவினர்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

பின்னர் பகல் 11 மணியளவில் பனிக்கம் களத்தில் சடலம் கொண்டு வந்த வாகனத்தின் நான்கு சில்லுகளின் காற்றும் போன நிலையில் நிற்பதாகவும் வாகனத்தின் சில்லுகள் நான்கையும் ஒட்டிக்கொண்டு புறப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட நபர் தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் சடலமும் உறவுகளும் வருவார்கள் என்று காத்திருந்த வேளையில் மீண்டும் பிற்பகல் 5 மணியளவில் குறிப்பிட்ட சகோதரி வாகனத்தின் ரயர்கள் மாற்றி விட்டோம் வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. அதனைப் பார்த்துக்கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

இரவு முழுவதும் தொடர்புகள் எவையும் கிடைக்காத நிலையில் 21 ஆம் திகதி காலையில் தம்மை யாரோ சடலத்துடன் கடத்திச்சென்று காட்டில் வைத்திருப்பதாகத் தெரிவித்ததுடன் கையடக்கத் தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏழாலையில் உள்ள உறவினர்கள் எடுத்த முயற்சிகள் எவையும் கைகூடாத நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று தமது முறைப்பாட்டைத் தெரிவிக்க முற்பட்டுள்ளார்கள்.

சுன்னாகம் பொலிஸார் குறிப்பி;ட்ட முறைப்பாட்டை எடுக்க மறுத்ததுடன் அவர்களை புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்று முறையிடும் படியும் தெரிவித்துள்ளார்கள். இந் நிலையில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் குறிப்பிட்ட விடயம் உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூலம் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்ட விடயம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் உதவி அத்தியட்சரின் கவனத்திற்கு கிராம அலுவலர்கள் கொண்டு வந்த நிலையில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் விடுத்த பணிப்புரையைத் தொடர்ந்து குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உரியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பி;ட்ட வாகனத்தில் இறந்தவரின் மனைவியும் பத்து வயதுக்கு உட்பட்ட மூன்று பிள்ளைகள் திருகோணாமலை செயலகத்தில் அமைந்துள்ள நிக்கொட் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலரான நிரஞ்சன் மற்றும் மனைவி மூன்று பிள்ளைகள் (பத்து வயதுக்கு உட்பட்டவர்கள்) சகோதரி உட்பட மற்றும் உறவினர் ஆகியோரே காணாமல் போயுள்ளவர்களாவர்.

சுமார் பத்து நாட்கள் கடந்த நிலையிலும் கூட குறிப்பிட்ட நபர்களுக்கோ அன்றி கொண்டுவரப்பட்ட சடலத்துக்கோ வாகனத்துக்கோ சாரதிக்கோ என்ன நடந்தது என்று தெரியாத நிலைமை உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் துன்பமாகவும் அமைந்துள்ளது. குறிப்பிட்ட வைத்தியரின் கணவர் இறந்தவரை கடந்த சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் வெட்டி படுகாயப்படுத்தியதன் தாக்கத்தினால் ஏற்பு வலி வந்த நிலையில் இந்தியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் இறந்தவரின் சகோதரியும் கணவரும் வைத்தியர்களாக இருந்த போதிலும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் இறந்தவர் தனது சகோதரியானவருக்கு உதவியாக இருப்பது கணவருக்குப் பிடிக்காத நிலையில் ஏற்கனவே தாக்கப்பட்டதாகவும் இதன் பின்புலத்தில் இந்த சடலமும் உறவினர்களும் கடத்தப்பட்டதா என்ற சந்தேகமும் தற்போது உறவினர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இறந்தவரை வெட்டிக் காயப்படுத்திய வைத்தியர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவரின் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவங்கள் இடம் பெற்று இருக்கலாம் என்ற பாரிய சந்தேகம் தற்போது உறவினர்களிடையே ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். _

http://www.virakesar...asp?key_c=35846

மொட்டை,

ஏன் இதை இங்கிணைத்தீர்??

இதனால் பிழையான தகவல்கள் பரவப்போகின்றது??

ஏதோ தமிழ் மக்கள் சந்தோசமாக இலங்கையில் வாழவில்லை என்பது போல??

இனியும் இப்படியான பிழையான தகவல்களை பரப்பாதீர்??

இப்படியான பொய்த்தகவல்களை பரப்ப உம் தான்தோன்றித்தலைவர் இடமளித்தாரா??

இப்படியான பொய்ச்செய்திகளை பரப்புவதனால், ஆடுத்த முறை இங்கிலாந்தில் உள்ள சிங்கள தூதரகத்துக்கு விருந்துக்கு அழைக்க மாட்டார்கள் அல்லவா??

அடிக்கடி உமது இலவச இலங்கை ப்யணத்துக்கு இடையூறு வராதா??

இனியாவது நாலுதரம் யோசியும், இப்படிய்யான வதந்திகலை பரப்புவது பற்றி??

... உண்மையில் நடந்தது என்ன ... தமிழர்கள் சுபீட்சத்துடன் வாழும் இலங்கை தாய்த்திருநாட்டில் ....

alien-abduction-main.png

கடந்த சில வருடங்களாக ஏலியன்கள் வந்து, தமிழ் மக்களை இலங்கையில் கடத்தி/காணாமல் போனார்கள்!! அது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது! ... இப்படி நடந்ததை/உண்மையை சொல்ல பழகும்! :icon_mrgreen:

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

அண்ணை நல்லாதான் புசத்திறீர்.... கவனம் மண்டை சூடேறி வெடிச்சா பிறவு இஞ்சை வந்து இப்பிடி பிசத்தேலாது! யாரையே நினைத்து யாருக்கோ கல்லெறிந்து எறிஞ்ச கல்லு திரும்ப தலையிலை வந்து மண்டையை உடைச்சுப்போடும். டாக்குத்தரிட்டை போய் விசர் முத்த முந்தி காட்டும். இல்லாட்டி நடந்த படி பிசத்த வெளிக்கிட பிறவு விசர் ஆசுப்பத்திரியிலை தான் சீவிக்க வேண்டி வரும்!

சடலத்துடன் யாழ். சென்ற 11 பேரைக் காணவில்லை : உரிய பதிவு இல்லையெனத் தெரிவிப்பு

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தையும் அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் மற்றும் புளியங்குளம் பொலிஸ் நிலையங்களிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தியொன்று இன்றுகாலை எமது இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதன் பின்னணியில் எமது அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்புகளையடுத்து இவ்விடயம் தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டோம்.

மேற்படி சம்பவம் தொடர்பில் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக தாம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜா வீரகேசரி இணைய தளத்துக்குத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்தபோது,

'சம்பவ தினத்தில் குறிப்பிட்ட பெயர் கொண்ட எந்தவொரு சடலமும் இலங்கைக்கு வந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவுகள் எதுவும் இல்லை.

ஓமந்தை பொலிஸ் சோதனைச் சாவடியிலும் எந்தவொரு பதிவுகள் இல்லை. மேலும் காணாமல் போன பதினொரு பேரில் ஒருவரான திருகோணமலை செயலக நிக்கொட் நிறுவனத்தில் பணிபுரியும் நிரஞ்சன் எமது அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் அழைப்பு ஏற்படுத்தி, இந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை எனத் தெரிவித்தார். இது குறித்து எமது திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்திடம் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

டாக்டர் விமலச்சந்திரா குமுதா தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவரது மின்னஞ்சல் முகவரி கிடைக்கபெற்றுள்ளதாகவும் நாம் அறிந்து கொண்டோம். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நாளை நடத்த உள்ளோம்" என்று கூறினார்.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அதிகாரியொருவர் தகவல் தருகையில்>

"குறிப்பிட்ட தினத்தில் சம்பந்தப்பட்ட சடலம் தொடர்பில் எவ்வித பதிவும் இல்லை" என வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். __

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35851

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.