Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கின்னஸ் சாதனை படைத்த கோமாளிகளின் கும்மாளம்

Featured Replies

கின்னஸ் சாதனை படைத்த கோமாளிகளின் கும்மாளம்

ச. வி. கிருபாகரன்

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு”

சில நாட்களுக்கு முன் ஓர் பிரபல ஊடகவியாளர் மிக நீண்டகாலத்திற்கு பின்னர் தொடர்பு கொண்டார். அவர் வணக்கம் கூறியதும், வழமைபோல் நன்றாக சிரித்துவிட்டு கூறினார், ‘‘நீPர் ஓர் கின்னஸ் சாதனை படைத்துள்ளீர் என்பது பற்றி உமக்கு தெரியுமோ என்றார்’’. என்ன விடயமென வினவியபொழுது, ‘தமிழீழ மக்கள் இவ்வளவு அழிவுகளை சந்திந்த பொழுதும், போர்குற்றம் பற்றியோ, சிறிலங்காவின் ஜனதிபதி இராணுவம் பற்றியோ இரண்டு மணி நேரம் உலகில் எந்த ஊடகமும் எந்த மொழியிலும் எந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது கிடையாது. ஆனால் உம்மை பற்றி, அதாவது ஒரு தனி மனிதனை பற்றி சேறு பூசுவதற்கு இரண்டு மணி நேரம் செலவழிக்கப்;பட்டதானால் இது நிட்சயம் ஒரு கின்னஸ் சாதனையே!’ என்றார்;. ‘‘சந்திரனை பார்த்து நாய்கள் குலைத்தால்’’ நாய்க்கு தான் நஷ்டம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஊர் பணம் என்பது பொய், யார் பணத்தில் நடைபெறுகின்றது என்பதை வெளிப்படுத்த வைக்க வேண்டுமென்றார்.

சாதரணமாக ஓர் ஊடகத்தில் விளம்பரத்தை பொறுத்து ஐரோப்பாவில் இருபத்தைந்து யூரோ (25.00) வாங்குவது வழக்கம் - சில ஊடகங்கள் நிமிடக்கணக்கு, சில ஊடகங்கள் சொற் கணக்கு. இந்த அடிப்படையில் இரண்டு மணித்தியலங்களை இருபத்தைந்தால் பெருக்கினால், மூவாயிரம் யூரோ (3000) உம்மை பற்றி வசைபாட செலவழிக்கப்பட்டடிருக்கிறது என்றால், உமது எழுத்துக்களை சில்லறையாக கணக்கிட முடியாது, அத்துடன் நீர் எவ்வளவு பெறுமதியானவர் என்பதை இதைச் செய்தவர்களே உணர்ந்துள்ளார்கள். இதே இடத்தில் இது பல பின்ணனிகளுடன் நடந்தெறியது என்பதையும் யாவரும் ஏற்றுக் கொள்ளவேண்டியுள்ளது எனக்கூறினார்.

இதென்ன ஊடகாமோ? ஊரகமோ? இது ஓர் காவல் நிலையம் போன்று மற்றவர்களை விசாரிப்பதிலும், விசாரண வைப்பதிலும், எச்சரிப்பதிலும், தனிநபர்கள் பற்றிய புலனாய்வு செய்வது தான் அங்கு நடக்கிறது. இந்த ஊராகத்திற்கு மட்டும் ஏன் இந்த அக்கறை? “எனக்கு மூக்கு போனாலும் பறவாயில்லை மற்றவர்களுக்கு சகுனம் பிழைத்தால் போதும”; என்ற கதையாகவுள்ளது.

ஒரு நாட்டின் காவல்துறை அதிகாரிகள் கூட இவர்கள் போல் யார் மீதும் பண்பில்லாது நடக்க மாட்டார்கள். சர்வாதிகார போக்கில் மாற்றவர்கள் பற்றி விமர்ச்சிக்க இவர்கள் யார்? இந்த துணிச்சலை கொடுத்தது யார் என்பதை யாவரும் சிந்திக்க வேண்டும். இவர்கள் தமது ‘வாய்னெலியில’; தெருச் சண்டித்தனம் செய்கிறார்கள். அத்துடன் எந்த நேரமும் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மற்றவர்களை மிரட்டுகிறார்கள். நாம் வாழுவது ஜனநாயக நாடுகள். இங்கு சட்டத்தின் முன் சகலரும் சமனானவர்கள். நாம் “சட்டத்தை மதிக்க வேண்டுமே தவிர, சட்டத்திற்கு பயப்பிட வேண்டிய அவசியமில்லை”.

சிறிலங்காவில் தண்ணியும் சிரட்டும் வாங்கி கொடுத்து, அங்கு காவல்துறையினரை தமக்கு பிடிக்கதவர்கள் எதிரிகள் மீது ஏவிவிடுவதுபோல,; இவ் ஜனநாயக நாடுகளில் சன்ட்விச்சும் புரியாணியும் கொடுத்து, வீடுகள் யாரும் மாறும்பொழுது லோறியில் சமான்களை ஏற்றிக்கொடுத்தும், விடுமுறை செல்லும்பொழுது விமான நிலையத்திற்கு வாகன ஒழுங்குகள் செய்து கொடுத்தாலும், இவ் நாடுகளில் யாரையும் யார் மீதும் ஏவிவிட முடியாது. இவ் நாடுகளில் சட்டத்திற்கு நீதி நியாயத்திற்கு முதலுருமை வழங்கப்படுகிறது.

இவர்களை பொறுத்தவரையில், உலகில் இவர்கள் மட்டும் தான் - மிக நேர்மையான, உண்மையான, நீதியான, விசுவாசமான, கௌரவமானவர்கள். வெட்கம், ஒர் தொலைகாட்சி விற்கப்பட்ட பின்னர், மதில்மேலால் உபகரணங்களை களவாடியவர்கள் யார்? அப்பொருட்கள் எங்கு உள்ளது எப்படியாக பாவிக்கப்படுகிறது என்பது தமிழர் சரித்திரத்தில் பதிவாகியுள்ளது. திருட்டுச் செயல்களையும், நாசகார செயல்களையும் செய்;தவர்கள் புதியவர்களுக்கு வேசம் போட்டுக் காட்டுகிறார்கள்.

‘‘கவனம் போற போக்கிலை ஆட்களை வைத்து உம்மை தாக்குவார்கள் போல் தெரிகிறது’’ என்றார். எமது சம்பசனை தொடர்ந்தது. அது சரி புலம்பெயர் தேசத்தில் எத்தனையோ ஊடகங்கள் உண்டு அது ஏன் ஒரு குறிப்பிட்டவருக்கு மாத்திரம் மற்றவர்கள் பற்றிய........? இவை பெரிய பின்ணனியில் நடைபெறுகிறது என்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது. இந்த கோமாளிகளின் கும்மாளத்தில் இவர்களே தங்களை காட்டிக் கொடுத்துவிட்டார்கள்.

யாரும் செலவு பற்றி பேசுவது கணக்கல்லா. எங்கிருந்து வருமானம் வருகிறது என்பது பற்றி கூறுவது தான் கணக்கு என்பதை உமது கணக்கு மாஅதிபர்களுக்கு தெரியாதே, இராணுவ தளபதி டயசும் ஜெர்மனியில் தான் இருந்தவன்;. ஆகையால் இவை பற்றி மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்றார்.

அதுமட்டுமல்லா, “சிறிலங்கா தூதுவராலயத்திலிருந்து ‘தாம் தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் இல்லையென்று’, பெற்று கொடுத்த கடிதம் பற்றிய விடயத்தில், வேறு ஒரு கடிதத்தை பற்றி கதைத்து மற்றவர்களை பயமுறுத்தி “முழுப் பூசனிக்காயை சோற்றில் புதைததுள்ள” கெட்டித்தனத்தை நன்றாக அவதானித்தேன் என்றார்.

உமது கட்டுரையில் என்னவோ உள்ளது, கோமாளிகள் கும்மாளத்தில் என்னவோ நடக்குது. இதை தான் சொல்வார்கள், “ஊர்காவற்துறையிலை குண்டுவிழும் பொழுது, நல்லூரிலை பாங்கருக்குள்ளை பதுங்கிய கதையென்று”.

அப்பெரியவர் இன்னமொரு கருத்தையும் முன்வைத்தார். பல வருடங்களுக்கு முன் ஊரிலை நாங்கள் கேட்ட கோமாளிகள் கும்மாளம் உண்மையான நாடகக் கலைஞார்களால் கேட்பவர்கள் ரசிப்பதற்காக மேடையேற்றப்பட்டவை. ஆனால் உம்மைபற்றி நிறைவேறியதில் சிலர் தமது உளரீதியான பலவீனங்களை கக்கிதள்ளியிருந்;தார்கள், சிலர் நல்ல தண்ணீ, வேறு சிலர் ஏதோ தனோ என்று ‘நக்குன்டார் நாவிளந்தார்’ என்ற அடிப்படையில், எஜமானின் தேவைகளை திருப்திப்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு என்பது தெளிவாகியிருந்தது, அதற்குள் ‘எட்டாப் பழம் புளிப்பது’ என்பதும், உம்மை கண்டால் பிடிச்சு சாப்பிடுவார்கள் போன்ற உணர்ச்சி வசனங்கள் மறுபுறம் என்றார்.

“நீர் ஏன் இவர்களுக்கு சொல்ல முடியாது, நீர் இவர்களை போல் ஊரிலை அன்னதானத்திலும், குளீர்த்தி சோற்றிலையும், செத்தவீட்டு, கலியாணவீட்டு தண்டல் சோற்றிலையும் வாழ்தவர் இல்லையென்று. சொல்லுகிறேன் என்று குறை நினையாதையும், “இவர்கள் பாட்டா றபர் செருப்பு போட்டதும், ஆனையிறவை கடந்ததும் வெளிநாட்டுக்கு வருவதற்காகவே” என்பதும், இவர்கள் ஊரில் சிக்கனமாக அல்லா ஏழ்மையில் வாழ்ந்தார்கள் என்பதையும், இவர்களது அலட்டல்களிலிருந்து நன்றாக தெரிகிறது என்றார்.

பகிடி என்னவெனில், உள்வீட்டு தகவலின்படி, இந்த ‘ஊரகத்தில’; இவர்களது கையாட்கள் பக்கத்து அறையில் இருந்து கைதொலைபேசி மூலம் அழைக்க, ஜேர்மனியிலிருந்து நேயர் ஒருவர் அழைக்கிறாh, வணக்கம்; என்றவுடன், பக்கத்து அறையில் உள்ளவர் தனது பெயர்.......... என்று சொல்லிவிட்டு, இவர்கள் ஏற்கனவே சொல்லிக் கொடுத்தவற்றை கிளிபோல் சொல்லுகிறார்”, இது தான்இவர்களது சில நேயர்கள்.

விழிப்படையுங்கள்

இன்று இரண்டு சகாப்தங்களுக்கு மேலாக மனிதர் உரிமை செயற்பாட்டிலிருக்கிறேன். ஐக்கிய நாடுகள் சபை மட்டுமல்லா, பல சர்வதேச மாகாநாடுகள், உலகின் பல முக்கிய தலைவர்களை சந்தித்து இலங்கைதீவில் தமிழீழ மக்களின் இன்னல்களை கூறிவரும் எனக்கு, இன்று வரை புலம்பெயர் வாழ்வில் பகைவர்கள் என்று யாரும் கிடையாது. சிலருடன் கருத்து வேறுபாடுகள் உள்ளது, இதனால் ‘கெட்ட சாவாசம் பிராணசங்கடமென’ அவர்களை எட்டா வைத்துள்ளேன்.

கடந்த பல ஆண்டுகளாக சிறிலங்கா அரசின் ஊடகங்கள் என்மீது பல சேறு பூசும் செயற்பாடுகளை செய்து வந்துள்ளதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். எனக்கு பல மிரட்டல் தொலைபேசிகளும் வருவது வழக்கம். சிறிலங்கா அரசின் முழு நோக்கம், என்னை மனித உரிமை செயற்பாடுகளிலிருந்து முடக்க வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில் சில மாதங்களுக்கு முன் என்னை ‘‘சர்வதேச காவல்துறை - இன்ரபூல்’’ தேடுவதாக சிறிலங்க அரச ஊடகங்களில் மிக பொய்யான செய்தியை பிரசுரித்தன, சில குறிப்பிட்ட புலம்பெயர் வாழ் இணையதளங்களும் இவற்றை ஈ அடிச்தான் கொப்பி செய்தனா.

இச் செயலை சில இணையதளங்கள் கண்டித்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முயற்சியினாலும் எனது வழமையான மனித உரிமை செயற்பாடுகளை சிறிலங்கா அரசினால் முடக்க முடியவில்லை. ஆகையால் என்மீது தொடர்ந்து சேறு பூசுவதற்கு தற்பொழுது ஐரோப்பாவில் தங்கள் சிபாரிசில் அனுமதி பெற்ற ஊரகத்தை சிறிலங்க அரசு நாடியுள்ளது புதுமையான விடயமல்லா.

அது மட்டுமல்லாது இந்த ஊரகத்திற்கு வேறு யார் யாருடைய பின்ணனிகள் உள்ளது என்பதை சரியான சந்தர்ப்பம் வரும்வேளையில் ஆதாரங்களுக்கு மேல் ஆதராங்களுடன் வெளிப்படுத்;தப்படும்? இங்கு தான் ஏன் இவர்கள் 22 வருடங்களுக்கு முன் துரத்தப்பட்டது மட்டுமல்லா, சமாதான காலத்தில் வன்னியிலிருந்தும் துரத்தப்பட்ட காரணமும் தெளிவாகிறது.

கடந்த 22 வருடங்களாக தமிழீழ விடுதலை போராட்டத்தையும், செயற்பாட்டாளர்களையும் குறை சொல்வது தான் இவர்களது தொழில். தமிழீழ தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பயங்கரவாத பெயர் சுhட்டுவதற்கு இரவு பகலாக ஊழைத்தவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள். என்மீது சேறு பூசிய நிகழ்ச்சிக்கு பின்ணனியில் உள்ள முக்கிய காரணத்தை சகலரும் கூடிய விரைவில் தெரிந்து கொள்வீர்கள்.

கோத்தபாயாவின் தமிழ் ஊடாக ஆலோசகர் யார்?

கோத்தபாயவின் தற்போதைய தமிழ் ஊடாக ஆலோசகராக சிறிலங்காவில் பணிபுரிபவர் இவர்களது ஊரக சகாவும், நண்பனும், ‘மேதகு’ என இவர்களால் கௌரவப் பட்டம் சூட்டப்பட்டவரே. இந்த நபர் தற்பொழுது கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் முக்கிய புள்ளி (ஏஐP) அடையாள அட்டையுடன் சிறிலங்க அரச வாகனத்தில் பவனி வருகிறார். ஆகையால் இவற்றை பொதுமக்கள் ஆழ்ந்து சிந்தித்தால் இவர்களது மூல வேரை அறிந்து கொள்வீர்கள்.

சில வருடங்களுக்கு முன், தலைவர் பிரபாகரன் மட்டுமா “மேதகுவாக” இருக்க முடியும்? எங்கள் ஊரகத் தலைவரும,; சகாவும், நண்பனும், “மேதகுவாக” இருக்க முடியுமென பட்டம் சூட்டியவர் யார் என்பதை இவர்களிடமே கேட்டறியுங்கள்! இந்த போலி மேதாகுவே அதன் சரித்திரத்தையும் அப்பட்டத்தை தனக்கு யார் கொடுத்தார் என்பதை பலரிடம் கூறியுள்ளார்;.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் விடுதலைப் போராளிகளும், புலம் பெயர் வாழ்வில் தமிழ் செயற்பாட்டாளர்களும் இரண்டு மூன்று பிரிவாக பிரிந்து செயற்படுவது என்பது மறைக்க முடியாத உண்மை. இவர்கள் யாவரும் கருணாவை போன்ற செயற்பாடுகளில் இறங்காவில்லையானால், நிட்சயம் விடுதலைப் போராளிகளாக தொடாந்தும் போற்றப்பட வேண்டியவர்கள். விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு இரவு பகலாக உழைத்தவ இவ் கணக்கு மாஅதிபர்கள் தற்பொழுது ஏதோ ஒரு பக்கத்திற்கு தாம் தாமரை வீசினால,; தமது பழைய செயற்பாடுகள் யாவற்றுக்கும் பவமன்னிப்பு பெற்றுவிடலாமென எண்ணுகிறார்கள்.

போராளிகள் பற்றி அவதுறாக கதைத்தால் இது பற்றி கண்காணிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள் உரியவர்கள் உள்ளார்கள். தவறுவிட்டால் கொடுக்கப்படும் தண்டனையை அனுபவிக்க எழுதியவரும் தயாராகவுள்ளார். இயக்கத்தை 20 வருடங்களுக்கு மேலாக தூற்றியவர்களும், துரத்தப்பட்டவாகளும் விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதப்பட்டம் சூட்ட துணைபோனவர்களுடைய நடிப்புக்கள், “ஆடு நனையுதுவென ஓநாய்கள் அழுத” கதையாகவுள்ளது. இவர்களின் மாயா ஜலங்களை நாடகங்களை இவர்களது புதிய நண்பர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

போராளிகள் பற்றி அக்கறை கொள்ளும் இவர்கள் தான் ஒரு முறை தங்கள் வாய்னெலியில், தொலைபேசியில் அழைத்த ஒரு நபர் ‘கெட்டவார்த்தை’ கூறியதற்கு, ‘‘இதை தானோ தலைவர் பிரபாகரன் உங்களுக்கு சொல்லித்தந்தவர்’’ என வினாவியவர். இவர் இப்பொழுது போராட்டம் பற்றியும் தலைவர் பற்றியும் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்;. இதனை தான் சொல்வார்கள், ‘‘கொள்கை உள்ளவனுக்கு ஒரே ஒரு வாழ்க்கை, கொள்கை அற்றவனுக்கு பல வாழ்க்கை’’ என்று.

மனோதத்துவ ரீதியாக

நாம் சில விடயங்களை மனேதத்துவ ரீதியாக ஆராய்ந்தால், ஒருவர் பேசுவது கதைப்பது நகைச்சுவையாக சொல்வது போன்ற விடயங்கள் யாவும், அந்த குறிப்பிட்ட நபரின் சிந்தனையில் மனதில் தொல்லைகளை கொடுக்கும் விடயங்களின் வெளிப்படாகவே அமையும் என்று மனேதத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது சிறுவயதிலிருந்தே நிதி நெருக்கடியில் அயலவரின் உதவியுடன் வாழ்ந்தவர்கள் பணம் பற்றியும், ஏழ்மையில் உணவு உடைக்கு கஷ்டப்பட்டு வாழ்ந்தவர்கள் இவை பற்றியும், பாலியல் சிந்தனைகளில் பாதிக்கப்பட்டு வாழ்பவர்கள் பாலியலுடன் தொடர்புடைய விடயங்களையும், மது மாது பற்றிய சிந்தனைகளில் வாழ்பவர்கள் மது மாது பற்றிய விடயங்களுக்கும், கதைப்பது வழக்கமாக அமையும். இவ் கள்ளுத் தவறணை கோமாளிகள் கும்மாளத்தின் கதாநாயகர்களால் இவ் விடங்கள் பிரதிபலிக்கப்படுவதை நீங்கள் அவதானிக்கலாம். அத்துடன், ‘தாழ்வு மனப்பான்மை’ உள்ளாவர்கள் ஒருபொழுதும் உருப்பட மாட்டார்கள் என்பதும,; மற்றவர்களின் முன்னேற்றத்தில் என்றும் எரிச்சல் பொறாமை கொள்வார்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

“நாய்க்கு நாலு கால், ஆகையால் நாய் நினைக்கிறது என்னவென்றால் நாலு கால் உள்ளதுவெல்லாம் நாயென!” அத்துடன் நாய் நினைக்கிறது தன்னை போல் நாலு கால் உள்ம மற்றவர்களும் தம்மைபோல் எசமான் கொடுக்கும் மிச்ச எலும்பை தின்றுவிட்டு குலைக்க வேண்டுமென்று.

உலகில் உள்ளவர்கள் யாவரும் தங்களைப் போல் சீவிக்க வேண்டும், தாங்கள் சொல்வதை நினைப்பதை செய்ய வேண்டும் அல்லது தங்களுக்கு அறிவித்துவிட்டு வேலை செய்ய வேண்டுமென்று சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இவர்கள் முழு மனநோயாளிகள். இவர்கள் யாருடைய தையிரியத்தில், ஏவுதலில், பின்பலத்தில் இவற்றை செய்கிறார்கள் என்பதை யாவரும் அறியும் காலம் மிக துரத்தில் இல்லை.

காகம் திட்டி மாடு சகாது

‘‘காகம் திட்டி மாடு சகாது’’. ஏதோ ஒரு விதத்தில் அங்கீகாரம் பிரபலியம் தேடுகிறார்கள், தேடட்டும்;. ‘குதிரையின்ரை குணம் அறிந்து தான் குதிரைக்கு கொம்பு கொடுக்கப்படவில்லை’. ஒரு விடயத்தில் மிகவும் அவதானமாக உள்ளேன், ‘‘எய்தவன் இருக்க ஒருபொழுதும் அம்பை நோகமாட்டேன்’’. இந்த கள்ளுத் தவறணை காடையர்களின் கோமாளிகள் கும்மாளத்தில் விரும்பியதை கதைக்கட்டும். எமக்கு பல உருப்படியான வேளைகள் உண்டு.

சிலர் தமது பொழுது போக்கிற்காக மலைநேரத்தில் மது அருந்தியிருக்கும் சந்தர்ப்பத்தை பாவித்து, மற்றவர்கள் மீது வசைப்பாடுமாறு ஏவப்படுவதாக கூறுகிறார். ஆகையால் அவ் நபர் மீது கோபிப்பது மிகத் தவறு.

பலருடைய கருத்து, இவர்கள் வாங்கிய பணத்திற்காக மற்றவர்களுடைய சிந்தனைகள் நோக்கங்களை, குழப்புவதற்கும் திசை திருப்புவதற்கும் பலதை சொல்வார்கள் செய்வார்கள், இவர்களது நீண்டகாலத் தொழிலே குலைப்பது தானே. ஆகையால் இவர்களை அலட்சியம் பண்ணவேண்டும் என்பதே.

விடயங்கள் விளங்காதவர்களுக்கு ஒன்றை மட்டும் அறிந்துகொள்ள வேண்டும். “முழுப் பூசனிக்காயை இவர்கள் சோற்றில் புதைக்கிறர்கள”;. நீங்கள் அப்பாவிகள,; விடயங்களை அரைகுறைய அறிந்து விட்டு அலட்டுகிறீர்கள். 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியின் பின்னர் சிலர் வாவுனிவிலிந்து சென்று யார் வீட்டில் தங்கினார்கள்? யார் இவர்களை கட்டுநாயக்காவில் வழி அனுப்பி வைத்தார்கள்? இன்றும் அதே பெயர்வழியுடன் ஏன் இவர்கள்; யாவரும் தொடர்பில் உள்ளார்கள், என்பது பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது, முதலில் இவற்றை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்;. காலம் வரும்பொழுது நீங்கள் உண்மைகளை அறிவீர்கள்.

அது மட்டுமல்லா, பத்திரிகை செவ்வி பற்றி கதைப்பதனால் அதன் உண்மையான மொழிபெயர்ப்பை நீங்களே செய்து வாசியுங்கள். இச் செவ்வி மூலம் விடுதலைப் போராட்டத்திற்கு கரி பூசப்பட்டதை நீங்கள் அறியவில்லை போலும். ஏற்கனவே பிரசுரமான இச் செவ்வியுனுடைய தமிழ், ஆங்கில மொழிபெயர்பு மிகப் பொய்யானவை. அதில் பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.

அத்துடன், விடுதலை போராட்டத்தில் 20 வருடங்களுக்கு முன் நடந்த ‘மாத்தையா’ என்ற பெயர்வழியின் சம்பவத்தை, இது முழு பொய்யாக சித்தரிக்கப்பட்ட சம்பவமென இப்பொழுது விடுதலைப்போராட்டத்திற்கு கரி பூசுவது நியாயமானதா? இப்படியாக கரி பூசுவது மூலம் யாரை இவாக்ள் குறை சொல்கிறார்கள்? இவற்றை செய்பவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பீர்கள்?

என்னுடன் கதைத்த பெரியவர் மேலும் கூறிதவாது, கணக்கு மா அதிபர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு காற்றுக் குடித்து தண்ணீர் குடித்து பல அர்ப்பணிப்புக்கள் செய்த பெயர்வழிகளானால், நீர் கூறியது போல் அதுவும் அன்று மனிதவலு குறைந்த நேரத்தில் இவர்கள் ஏன் துரத்தப்பட்டார்கள் என நேயர்கள் சிந்திக்கமாட்டார்களா? அது மட்டுமல்லாது இவர்கள் வன்னிக்கு பல தடவை சென்று, இறுதியில் இவர்கள் கற்பனை கதைகளினால் கோபம் கொண்டவர்கள் இவர் வன்னியிலிருந்து கலைக்கப்பட்டவர் என்ற உண்மையை எந்த நேயரும் அறிய வாய்ப்பில்லை.

வேடிக்கை என்னவெனில் அண்மைக் காலங்களில் கடைத்தெருவில் மாலை நேரங்களில் தகவல் சேகரிப்பு வேலையில் ஈடுபடும் செல்லாக்காசாக கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் முன்னிலையில் நடமாடும் ‘தவக்களை’ கிரமத்துப் பெண்கள் பாணியில் விடுப்பு கதைக்கிறார் - யார் கலியாணம் முடிக்கிறார்கள்? யார் வாந்தி எடுக்கிறார்கள்? யார் கர்பிணியாக இருக்கிறார்கள்? யார் பிள்ளை பெறுகிறார்கள்? யார் பெரிதாகியுள்ளார்கள்? யார் யார் பஞ்சாபியா உடுக்கிறார்கள் என்பதுடன் இறந்தவர்களையும் தமது வாய்க்கு வந்த விதமாக திட்டித் தள்ளுகிறார் தவக்களை.

வேடிக்கை என்னவெனில் கடை முதலாளிகளிடம் கதைத்து கெட்டித்தனமாக விளம்பரங்களை நிறத்திய கொடுக்கமல் செய்த ‘தவக்களையும்;’ சந்தர்ப்பத்தை பாவித்து, மீண்டும் தன்னை இந்த இதில் இணைத்துக் கொண்டு தனது உளரீதியான பிரச்சனைகளை கக்கி தள்ளுகிறார்.

20 வருடங்களுக்கு முன்பே இயக்கத்தால் துரத்தப்பட்டவர்கள், இன்று மற்றர்களுடைய போராட்திற்கான அர்பணிப்புக்களை அளவிட முற்படுவது மிக வெடிக்கையானது. இதை தான் சொல்வார்கள் தீ கோழியின் தேற்றம் என்று. கூடிய விரைவில் யாவும் சந்தைக்கு வரப்போகிறது.

‘பொய் சொல்லும் வாய்க்கு பொரியும் கிடையாது’, ‘தெய்வம் நின்டறுக்கும்’ என்பது முதுமொழி. இது உண்மையா பொய்யா, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தாங்கள் யாரையும் குறைசொல்லலாம் ஆனால்.....

கற்பனை கதைகளின் அடிப்படையில் தாங்கள் யாரையும் குறைசொல்லலாம், யாரையும் திட்டலாம், தாம் யாhருடைய தனிப்பட்ட விடயங்களுக்குள் மூக்கை துழைக்கலாம், தாம் சகலருக்கும் கணக்கு மாஅதிபர் வேலை பார்க்கலாம்;, ஓர் நாட்டின் காவல் துறையினர் ஒரு தனிநபரிடம் கேட்க செய்ய நினைக்காத விடயங்களை கூட இவர்கள் மற்றவர்களுக்கு செய்யலாம்;, ஆனால் தங்களை பற்றிய உண்மை கதைகளை யாரும் கூறினால், தம்முடன் சேர்ந்தவர்களுக்கு ‘விஸ்கியும’; வாங்கி கொடுத்து தமது கள்ளுத் தவறணையில் காவலிகளின் கோமாளிகள் கும்மாளம் தொடங்கிவிடுவார்கள்;.

இவர்கள் அனுமான் கூட்டம். தமக்கு ஏதும் பிழைத்தால் தமது வாலில் நெருப்பை கட்டி முழு பிரதேசத்திற்கு நெருப்பு வைக்கும் மனநோயாளிகள். இவர்களுக்கு தவணை முறையில் யாருடனாவது பிரச்சனைபடுவதுதான் தொழில். இன்னும் சில வாரங்களிலோ, மாதங்களிலோ இவர்களது நாசகார வேலைக்கு இலக்கப் போகும் அடுத்தவர் யார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

தற்பொழுது எனது தொலைபேசி உட்பட பலருடைய தொலைபேசிகள் இனத் தெரியாத தமிழரினால் நன்றாக ஒட்டுக் கேட்கப்படுகிறது. இவர்கள் சிலரின் குரலை எமது தொலைபேசிகளில், நாம் வேறு ஆட்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் வேளைகளில் எம்மில் பலர் கேட்டுள்ளோம். அப்பாவித் மக்களே! இவர்களுடன் மிக எச்சரிக்கையாக பழகுங்கள்.

மிக அண்மையில் ஓர் தமிழர் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினருக்கு நடந்த கதி உங்களுக்கு நடக்கப்படாது. இவ் அப்பாவி பாரளுமன்ற உறுப்பினர் இவர்களால் ஏமாற்றப்பட்டு தனது சொந்த சகோதரர் பற்றி கூறப்பட்டவை யாவுற்றையும் இவர்களது இலையான் கலைக்கும் இணையதளங்களின் பிரசுரித்து சகோதரர்களுக்கிடையில் நாரதர் வேலை பார்த்தவர்கள் இவர்கள்.

இச் சந்தர்பந்தில் ஒன்றை மட்டும் தெளிவாக ஒன்றை கூறவிரும்புகிறேன். என்மீது யாரும் எதிர்காலத்தில் எந்தவித சரீர ரீதியான தாக்குதல் நடந்தினால் இவ் மனநோயாளிக் கூட்டமே முழுப் பொறுப்பானவர்கள் என்பதை உங்களுக்கு இப்பொழுதுதே அறியத் தருகிறேன்.

“உன்னை நீ திருத்திக்கொள் உலகம் தானக திருந்தும்” – மாகத்மா காந்தி

“வாழ்க்கை போனால் போகட்டும், வாழ்வையோ சாவையோ எதிர்கொள்ள தாயாராகவுள்ளேன்”

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள சில பேரை போட்டுத் தாக்கின மாதிரி இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

மனோதத்துவ ரீதியாக

நாம் சில விடயங்களை மனேதத்துவ ரீதியாக ஆராய்ந்தால், ஒருவர் பேசுவது கதைப்பது நகைச்சுவையாக சொல்வது போன்ற விடயங்கள் யாவும், அந்த குறிப்பிட்ட நபரின் சிந்தனையில் மனதில் தொல்லைகளை கொடுக்கும் விடயங்களின் வெளிப்படாகவே அமையும் என்று மனேதத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது சிறுவயதிலிருந்தே நிதி நெருக்கடியில் அயலவரின் உதவியுடன் வாழ்ந்தவர்கள் பணம் பற்றியும், ஏழ்மையில் உணவு உடைக்கு கஷ்டப்பட்டு வாழ்ந்தவர்கள் இவை பற்றியும், பாலியல் சிந்தனைகளில் பாதிக்கப்பட்டு வாழ்பவர்கள் பாலியலுடன் தொடர்புடைய விடயங்களையும், மது மாது பற்றிய சிந்தனைகளில் வாழ்பவர்கள் மது மாது பற்றிய விடயங்களுக்கும், கதைப்பது வழக்கமாக அமையும். இவ் கள்ளுத் தவறணை கோமாளிகள் கும்மாளத்தின் கதாநாயகர்களால் இவ் விடங்கள் பிரதிபலிக்கப்படுவதை நீங்கள் அவதானிக்கலாம். அத்துடன், ‘தாழ்வு மனப்பான்மை’ உள்ளாவர்கள் ஒருபொழுதும் உருப்பட மாட்டார்கள் என்பதும,; மற்றவர்களின் முன்னேற்றத்தில் என்றும் எரிச்சல் பொறாமை கொள்வார்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இந்தக் கட்டுரையாளர் கண்டுபிடித்துள்ள இந்த மனோதத்துவத்தின் படி.. அவர் இதில் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளாரோ.. என்றும் கேட்கத் தோன்றுதே..??!

மேலும் இவரின் மனோதத்துவ சுட்டிக்காட்டுதலின் படி.. கோமாளிகளுக்கு பதிலிறுக்கும் இவரும் ஒரு கோமாளியா...???! :lol::D

மனோதத்துவத்தை பாடமா படிச்ச மாணவர்களுக்கே தெரியாத மனோதத்துவமா இது இருக்குது. சில விடயங்கள் மூளையில் அதிகம் தாக்கம் செய்வனவாக அமைந்து விடுவது இயல்பு. ஒருவர் வறுமையில் வாடினார் என்பதற்காக அவர் வறுமை பற்றியே பேசிக் கொண்டிருப்பார் என்பது தவறு. எத்தனையோ இளமையில் வறுமையில் வாடியோர்.. பின்னாளில் பெரும் பண முதலைகளாக மக்களைச் சுரண்டும் மனநிலையில் இருந்துள்ளனர்.

பாலியல் என்பது வயசு வந்த எல்லா மனிதருக்குள்ளும் எழும் ஒரு இயல்பான சிந்தனை. சமூகப் பிறழ்வுகளை கதைப்பவன்.. சமூகப் பிறழ்வாக நடக்கிறவன் என்ற இவரின் மனோதத்துவமே மிகத் தவறானது. ஒருவேளை அவர் தனது பிறழ்வுகளை மறைக்க இதனை இங்கு முன்னிறுத்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவன் விஞ்ஞானத்தைப் பற்றி கதைக்கிறான் என்றால் அவன் அதனை தெரிந்திருப்பதால் கதைக்கிறான். ஒருவன் சமூகப் பிறழ்வை பற்றி கதைக்கிறான் என்றால்.. அவன் அதை கண்டிருக்கலாம்.. அல்லது கேள்விப்பட்டிருக்கலாம்.. இவற்றின் அடிப்படையிலும் அவனுக்குள் எழும் இயல்பான சமூக அக்கறையின் பாலும் அது வெளிப்படலாம். அவன் அதற்காக சமூகத்தால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உதாரணத்துக்கு இன்று நாம் எல்லாம் முள்ளிவாய்க்கால் பற்றி கதைக்கிறோம் என்றால்.. நாங்கள் முள்ளிவாய்க்காலில் நின்று அனுபவித்துவிட்டு வந்தல்ல எழுதுகிறோம். அங்கு மக்களாகிய எமது சமூகத்தவர்கள் அனுபவித்த துன்பங்களில் உணரக் கூடியவற்றை உணர்ந்து எழுதுகிறோமே தவிர.. அனுபவித்து அல்ல.. என்பதை.. இந்த மனோதத்துவ ஆராய்ச்சியாளர் உணர்ந்து கொண்டு அல்லது.. general psychology ( http://www.apa.org/p.../gpr/index.aspx ) போன்ற தரமான நூல்களையாவது வாசித்துவிட்டு வந்து எழுத வேண்டும். சும்மா சும்மா.. அந்த மனதத்துவ நிபுணர் அப்படிச் சொன்னார் இவர் இப்படி சொன்னார் என்று எந்த references.. citations இல்லாமல் கட்டுரை எழுதி ஊரை ஏய்க்கிறதை முதலில் நிப்பாட்டுங்கோ.

எங்கட சமூகம் எனிக் கட்டுரைகள் பற்றி நம்பனும் என்றால்.. சரியான references.. citations.. sources கையாளப்பட்டு அவை இனங்காட்டப்பட்டிருக்கா அல்லது பட்டியலிடப்பட்டிருக்கா என்று அறிந்தே அவற்றின் reliability யை உறுதி செய்து கொள்ள வேண்டும். வெறுமனவே மனோதத்துவம் என்ற வார்த்தையை வைச்சுக் கொண்டு.. கட்டுரை வரைவது எல்லாம் மனோதத்துவத்தை சரியாக கையாண்டிருக்கிறது என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது.

எமது சமூகத்தின் நுண்ணறிவு இவ்வாறான விடயங்களில் அதிகரிக்கும் போது மட்டுமே இப்படியான மேதாவித்தனக் கட்டுரையாளர்களின் கட்டுரை எழுதும் பாணியிலும் நவீன மாற்றங்கள் உள்வாங்கப்பட செய்யப்படும்... claim க்கு சரியான ஆதாரங்களை முன் வைக்க செய்யப்படுவார்கள்.

நாம் யாழ் களம் சார்ந்து இவர்களுக்கு சவால் விடுகிறோம்.. முடிந்தால்.. இந்தக் கட்டுரையாளர் யாழ் களத்தில் இந்தக் கட்டுரை தொடர்பில் ஒரு பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா..??! (இப்படி கேட்பதனால்.. நாங்கள் இவர் இனங்காட்ட விளையும் கோமாளிகளோ அல்லது அந்தக் கோமாளிகளுக்கு பதிலிறுக்கும் இவரைப் போன்ற இன்னொரு கோமாளிகளோ அல்ல.) நாம் (இப்படியான கட்டுரைகளை வாசிக்கச் செய்யப்படும் பொதுமக்கள்.) முன் வைக்கும் கேள்விகளுக்கு விடை தர முடியுமா..???! இந்தக் கட்டுரையை யாழில் இணைத்திருக்கிற படியால்.. இதனை முன் வைக்கிறோம்.

நன்றி.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நாம் யாழ் களம் சார்ந்து இவர்களுக்கு சவால் விடுகிறோம்.. முடிந்தால்.. இந்தக் கட்டுரையாளர் யாழ் களத்தில் இந்தக் கட்டுரை தொடர்பில் ஒரு பகிரங்க விவாதத்திற்கு வர முடியுமா..??! ........... நாம் முன் வைக்கும் கேள்விகளுக்கு விடை தர முடியுமா..???! இந்தக் கட்டுரையை யாழில் இணைத்திருக்கிற படியால்.. இதனை முன் வைக்கிறோம்.

நன்றி.

.....ம்ம்ம்ம்ம்ம் .... இங்கு இதுவரை பல பல கட்டுரைகள் இணைக்கப்ப்ட்டுள்லன!! ... எத்தனை கேள்விகள் எத்தனை பேர் பற்றி எழுப்பி இருப்போம்!! ... எல்லோரும் ஓடோடு ஓடி வந்து இங்கு விவாதித்து தமது பெயர்களை கிளியர் பண்ணி சென்றுள்ளார்கள், இப்ப இவர் மட்டும் தான் மிச்சம்!!!???

இங்கு கிருபாகரனை நியாயப்படுத்த முற்படவில்லை ... என்னைப் பொறுத்தவரை கிருபாகரன் போன்றோர் பல புலம்பெயர் மனித உரிமைகள் அமைப்புகளை ஒருங்கிணைத்து, புலத்தில் எவ்வளவோ செய்திருக்கலாம்??? ஆனால் செய்யவில்லை! ... ஏதோ ஒவ்வொரு மாநாட்டுக்கும் போவதோடு சரி என்று நிற்கிறார்கள் போலுள்ளது????

ஆனால் ...

இங்கு கிருபாகரன் எழுப்பிய பல சந்தேகங்களுக்கு விடைகள் தேட வேண்டியுள்ளது!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கிருபாகரனை நியாயப்படுத்த முற்படவில்லை ... என்னைப் பொறுத்தவரை கிருபாகரன் போன்றோர் பல புலம்பெயர் மனித உரிமைகள் அமைப்புகளை ஒருங்கிணைத்து, புலத்தில் எவ்வளவோ செய்திருக்கலாம்??? ஆனால் செய்யவில்லை! ... ஏதோ ஒவ்வொரு மாநாட்டுக்கும் போவதோடு சரி என்று நிற்கிறார்கள் போலுள்ளது????

ஆம் நெல்லையன் அண்ணா, எனது மைத்துனி சட்டவல்லுனராக படித்துக் கொல்டிருக்கிறாள். கிருபாகரன் அவர்களிடம் றெயினிங் செய்ய முயற்சித்தாள். ஆனால் அவனை வேறு வேலையை பார்க்குமாறு விட்டார். மனிதவுரிமை அமைப்புகளில் இளையவர்கள் போனால் தனது பதவி போய்விடுமென இளையவர்களை ஓரம்கட்டுகிறார்கள் இவர்களை நம்பி என்னண்ணா நடக்கும். தங்கள் பதவிக்காக தமிழினத்தையே அழிக்கும் கோடாரிக்காம்பு கிருபாகரன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.