Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ.ஆர்.ரகுமான் அவர்களே உங்களுக்கு ஈழத்தமிழினத்தின் வலிகள் புரியும்..

Featured Replies

ஏ.ஆர்.ரகுமான் அவர்களே உங்களுக்கு ஈழத்தமிழினத்தின் வலிகள் புரியும்..

rahman-with-oscars-150x150.jpgதமிழனித்தின் இசைச் சாம்ராஜ்யத்தின் வலிமையை உலகறியச் செய்த இசைப் புயல் ரகுமான் அவர்களுக்கு வணக்கம், ஈழத்தமிழினம் சுமந்த இன்னல்கள் ஏராளம், ஈழத்தமிழர்கள் உடலில் வலிசுமக்கும் போது தாய்த் தமிழகத்தின் உறவுகளின் கண்களில் இருந்து இரத்த ஆறு ஓடும் அளவிற்கு தமிழகத்திற்கும் ஈழத்திற்குமான உறவின் வலிமை அளப்பெரியது.

பிறந்தோம்,வாழ்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல், இசை உலகில் புதிய புரட்சி படைக்கும் உங்களை தமிழின அழிப்பின் பிரதான சக்திகள் இலங்கைக்கு குறிப்பாக தமிழ் உலகிற்கு முகவரி சொல்லும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்திருப்பது வேதனை தருகிறது.

உயிர்கள் பிய்த்தெறியப்பட்டு இரத்த வாடை மாறுவதற்கு முன்பாக உங்களை வைத்து எங்கள் மண்ணில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைக்கிறார்கள் என்று காட்டுவதற்கு தமிழின அழிப்பு சக்திகள் முனைப்புக்கொண்டிருக்கின்றன.

போரால் தந்தையை, தாயை, தாய் தந்தை இருவரையும் இழந்தவர்கள் தாரங்களை இழந்தவர்கள் பிள்ளைகளை இழந்தவர்கள் இன்னும் ஏராளம் ஏராளமாய் ஈழ தேசத்தில் விரவிக்கிடக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரது வாழ்விலும் வறுமை, சோகம், ஆற்றாமை, வெப்பியாரம் இன்னும் ஏராளம் அளவிட முடியாத துயரங்கள் வாட்டிவதைக்கின்றன.

இந்த நிலையில் எமது தமிழினத்தின் தீர்க்க முடியாத சோகத்தை நிகழ்த்தியவர்களும், அதற்குத் துணை நின்றவர்களும் நடத்தும் இசை நிகழ்ச்சிக்காக நீங்கள் அழைக்கப்பட்டிருப்பது தமிழ் உள்ளங்களை வெகுவாக வாட்டி வதைக்கிறது.

தமிழர் ஒருவர் முதலில் பெற்ற மிகப்பெரிய விருதான “ஒஸ்கார்” விருது பெற்றவர் நீங்கள் அதற்கும் அப்பால் அந்த விருதைப் பெற்றவுடன் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தாய் தமிழில் முதலில் உச்சரித்த தமிழ் வார்த்தை இன்னமும் ஈழத்தமிழர்களின் காதுகளில் ஒலிக்கிறது.

கலைஞனால் குறிப்பாக இசைக் கலைஞனால் சாதாரண மனித மனங்களின் கனபரிமாணத்தை ஊடுருவி அறிந்து கொள்ளமுடியும். மென்மையான மனங்கொண்டவர்களே கலைஞர்களாக இருக்கமுடியும். ஆக, ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் தாயத் தமிழகத்தின் உணர்வுகளை உங்கள் ஆழ்மனம் ஊடுருவி முடிவெடுத்திருக்கும் என நம்புகிறோம்.

வரலாற்றில் இசைத் துறை சார்ந்தவர்களின் பதிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட முடியாததாகவிட்ட இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் வரலாற்றின் கறுப்புப்பங்களின் பெயர்களிலும் இடம்பெற்றுவிடக்கூடாது என்ற விருப்பார்வம் ஈழத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரது மனங்களிலும் இருக்கிறது.

இசை ஜாம்பவான்களில் ஒருவராக விளங்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையையோ, அவர் மீதான பெரு மதிப்பையோ ஈழத்தமிழர் மனங்களில் இருந்து எவராலும் பிரித்துவிடமுடியாது. உங்கள் வருகையை நாங்கள் பெருவிருப்போடு வரவேற்போம். நீங்கள் எங்கள் மண்ணுக்கு வரும் பொது நாங்கள் நிமிர்வோடு வரவேற்போம்.

ஆனால் தற்போது நீங்கள் வரும்போது உங்களை அழைத்துவருபவர்களின் கைகள் அசுத்தமானவை. இந்தியத் தூதரக கலாசார மண்டபத் திறப்பு நிகழ்விற்கு நீங்கள் வருவதில் என்ன தவறு? என்று நீங்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் தமிழின அழிப்பிற்கு துணை நின்ற ஈபிடிபி என்கின்ற கட்சியும் உங்கள் வருகைக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதனை பார்க்கும் போது தான் உங்கள் மீதான கவலையுடன் கூடிய அதிர்ப்தி நிலை எங்கள் மனங்களில் புரையோடுகிறது.

உலகம் புகழும், உலகம் வியக்கும் தமிழினத்தின் இசைச் சாம்ராஜ்யமான உங்களுக்கு எங்கள் வலிகள் புரியும்.. அவற்றின் காத்திரம் புரியும்..

என்ற நம்பிக்கையுடன்…

- நன்றி : சரிதம் ஆசிரியர் பீடம் -

யாழில் ஈபிடிபியின் ஏற்பாட்டில் இந்தியக் கலாச்சார மையம் நிகழ்சியில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்சியா?

ரகுமானின் சம்பளம் கனடாவுக்கு 20 லட்சம் கனடிய டொலர்கள். அத்தோடு பாதுகாப்பு அதிகாரிகள் குழு.அப்போ யாழில்.......

பணத்திற்கும் புகழிற்கும் குறியாயிருப்பவர்களுக்கு வலிகள் புரியாது. எல்லா வலிகளும் இறைவனுக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

அமிதாப்பச்சனிலிருந்து, தமிழ்த்திரையுலகின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் எல்லாம்....

ஸ்ரீலங்காவில் இடம் பெறும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்புக்களை நிராகரிக்கும் போது... ரஹ்மானும் நிராகரிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.