Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

Featured Replies

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப் பால் ,[/size][size=5][size=5]துறவறவியல்[/size] , கள்ளாமை . ( The Absence of Fraud ,Ne pas voler[/size] [size=5])[/size].

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281

பிறரிடம் பழிசொல் கேட்க்காமல் உலகில் வாழ விரும்புகின்றவன் பிறர்பொருளைக் கவரும் எண்ணம் உள்ளத்தில் தோன்றாதவாறு தன்னைக்காத்துக் கொள்ள வேண்டும்

எனது கருத்து :

இப்பிடிப் பட்ட ஆக்கள் இண்டைக்கு இல்லையெண்டே சொல்லலாம் உங்களை ஒருத்தர் பிழை சொல்லக்கூடாது எண்டு நீங்கள் விரும்பினால்மற்றவைக்கு சொந்தமான சாமானுகளை மனசாலையும் நீங்கள் களவெடுக்க கூடாது கண்டியளோ

Who seeks heaven's joys, from impious levity secure,

Let him from every fraud preserve his spirit pure.

Que celui qui est considéré de tous, comme désirant son salut et non comme le méprisant garde son cœur contre toute appropriation frauduleuse d’un objet quelconque!

Edited by கோமகன்

  • Replies 336
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளை

கள்ளத்தால் கள்வேம் எனல். 282

குற்றமான செயல்களை மனதால் நினைப்பதும் பாவம் ஆதலால் பிறன் பொருளை அவனுக்குத் தெரியாமல் வஞ்சனையால் கவர்ந்து கொள்வோம் என்று நினைத்தலும் கூடாது

எனது கருத்து :

எனக்கு தெரிஞ்சு சீதையில இராவணனுக்கு ஒரு இது வந்து அவாவைக் கடத்திக் கொண்டு போனதால அவற்றை மானம் மரியாதை எல்லாம் போய் கடைசியில பேராய் புகழாய் இருந்த மனுச்ன்ரை நாடும் இல்லாமல் போட்டுது.

'Tis sin if in the mind man but thought conceive;

'By fraud I will my neighbour of his wealth bereave.'

Penser au péché est un péché. Que l’on ne pense donc pas à s’approprier frauduleusement la propriété d’autrui.

  • தொடங்கியவர்

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து

ஆவது போலக் கெடும். 283

களவால் வரும் பிறர் செலவம் பெருகுவது போல் தோன்றி கடைசியில் உள்ளதையும் சேர்த்து அழித்து விடும்

எனது கருத்து :

மற்றவன்ரை வயித்திலை அடிச்சு தேடிற தேட்டங்கள் முதல் நல்லாய்த் தான் இருக்கும் ஆனால் கடைசியில ஒண்டும் இல்லாமல் நடுறோட்டில பிச்சைக்காறர் மாதிரி திரிவினம் . இதுக்கு கனக்க உதாரணங்களை சொல்லலாம் குறிப்பாய் கள்ள மட்டை அடிக்கிற கோஸ்ரியள்.

The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall go.

La fortune acquise par le vol semble prospérer,

mais elle dépasse les limites et périt.

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளமட்டை போட்டாரே வாழ்வார் மற்றெல்லாம்

நல்லமட்டை தேய்த்து பின்செல்பவர்.. :D

  • தொடங்கியவர்

கள்ளமட்டை போட்டாரே வாழ்வார் மற்றெல்லாம்

நல்லமட்டை தேய்த்து பின்செல்பவர்.. :D

நல்ல பம்பலான குறள் டங்கு :lol: :lol: . கருத்துகளை இங்கை பதிஞ்சால் நல்லதுங்கோ :D . நன்றி வருகைக்கு .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96396

  • தொடங்கியவர்

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும். 284

களவு செய்வதில் உண்டாகும் மிகுந்த விருப்பம் பயன் விளையும்போது அகலாத வருத்தத்தை அளிக்கும்

எனது கருத்து :

இதில எனக்கு ஒரு இடைஞ்சல் இருக்கு . ஐய்யன் சொன்ன இந்த குறள் அவற்றை காலத்தில சரியா இருக்கலாம் . ஏனெண்டால் , அவற்றை காலம் ஒழுக்கத்தை மதிச்ச காலம் . இப்ப மொள்ளமாரிக்கும் முடிச்சவிக்குக்கும் தானே காலமாய் கிடக்கு . நேர்மையா மனச்சாட்சியா நடக்கிறவன் பிச்சைக்காறனை விடக் கேவலாமா அல்லோ இருக்கிறான் ..........

The lust inveterate of fraudful gain,

Yields as its fruit undying pain.

Le désir effréné du vol a pour effet de causer de cuisantes douleurs.

  • தொடங்கியவர்

அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285

களவாடுவதற்கு தக்க காலத்தை எதிர்நோக்கிஇருப்பவர்களிடம் அருளைக்கருதி அன்புடையவராக இருக்கும் நிலை உண்டாகாது

எனது கருத்து :

இராவணன் ஒழுங்குமுறயா ராமரோடை கேம் கேட்டு படையெடுத்து போய் சீதையை கொண்டுவந்தால் இண்டைக்கும் இராவணன்தான் ஹீரோ . ஆனால் ராமருக்கு அல்வா குடுத்து சீதையை ஆட்டையை போடேக்கை அவனுக்கு ஈன இரக்கமோ ஒண்டும் இருக்கேல . எவ்வளவு பேர் சொல்லி பாத்தினம் எப்பாவது அசைஞ்சு குடுத்தானா ??

'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,Who neighbour's goods desire, and watch for his unguarded hour.

Le désir d’aimer le prochain, parce qu’on connaît le prix de la miséricorde, ne germe pas dans le cœur de Ceux qui convoitent le bien d’autrui et épient son défaut de vigilance.

  • தொடங்கியவர்

அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர். 286

பிறர்பொருளை அபகரித்தலில் கருத்துக் கொண்டவர்கள் தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே ஆவர்

எனது கருத்து :

மனுசனாய் பிறந்தவன் மற்றவனுக்காய் தன்ரை சீவியத்தை கொண்டுபோகாமல் இப்பிடித்தான் இருக்கவேணும் எண்டு கட்டுச்செட்டாய் இருக்கவேணும் பாருங்கோ . அப்பிடி இருக்கேலாத ஆக்கள்தான் மற்றவன்ரை சாமானுகளை ஆட்டையை போடுறதில வலு மும்மரமாய் இருப்பினம் .

They cannot walk restrained in wisdom's measured bound,In whom inveterate lust of fraudful gain is found.

Ceux qui ont l’amour immodéré du vol n’ont pas sens de la mesure et ne se conduisent pas en conséquence.

  • தொடங்கியவர்

களவுஎன்னும் கார் அறிவு ஆண்மை அளவுஎன்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல். 287

களவென்னும் இருள்படர்ந்த அறியாமை அளவறிந்து வாழும் தன்மக்களிடத்தில் ஒருபோதும் இல்லாததாகும்

எனது கருத்து :

ஒருத்தன் உயிருகளில இரக்கம் காட்டி கட்டுச்செட்டாய் சீவியம் நடத்துவன் எண்டால் மற்றவன்ரை சாமானுகளை ஆட்டையை போடமாட்டான் .

Practice of fraud's dark cunning arts they shun,

Who long for power by 'measured wisdom' won.

Ne se rencontre pas chez ceux qui ont le sens de la mesure, l’ignorance crasse appelée vol.

  • தொடங்கியவர்

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்

களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு. 288

அளவறிந்து வாழ்பவரின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கும் அறம்போல, களவுத் தொழில அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சகம் நிலைத்து நிற்கும்.

எனது கருத்து :

அடுத்தவன்ரை பொருளுகளை ஆட்டைய போடுறவன்ரை மனம் சுத்தபத்தமாய் இருக்காது .எல்லாம் நச்சுக்கிருமியள் . ஆனால் நீதி நேர்மை எண்டு கட்டுசெட்டாய் இருக்கிறவையின்ரை மனசு வெள்ளையா சுத்தபத்தமாய் இருக்கும் . நீங்கள் எப்பிடி இருக்கவேணும் எண்டு நீங்கள்தான் முடிவு செய்யவேணும்.

As virtue dwells in heart that 'measured wisdom' gains;Deceit in hearts of fraudful men established reigns.

La fourberie a sa demeure fixe dans la cœur des professionnels du vol, comme la vertu a la sienne, dans le cœur de ceux qui ont le sens de la mesure.

  • தொடங்கியவர்

அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல

மற்றைய தேற்றா தவர். 289

களவைத் தவிர வேறு நல்ல வழிகளைத் தெரியாதவர்கள் அளவற்ற செலவுகளைச் செய்து அழிவர்

எனது கருத்து :

மற்றவன்ரை பொருளுகளை ஆட்டையை போடுறதே தொழிலாய் இருக்கிறவை கடைசியில அதமச் செலுவுகள் செஞ்சு சொறிநாயை விட கேவலமாய் போவினம்.

Who have no lore save that which fraudful arts supply,

Acts of unmeasured vice committing straightway die.

Ceux qui ne connaissent pas autre chose que le vol périssent instantanément, avec leurs mauvaises pensées démesurées.

அளவுல்ல செய்தாங்கே வீவர் களல்ல

மற்றைய தேற்றா தவர். 289

களவைத் தவிர வேறு நல்ல வழிகளைத் தெரியாதவர்கள் அளவற்ற செலவுகளைச் செய்து அழிவர்

தேசியம் பேசி சேர்த்த சொத்துக்களை வைத்து வாழ்பவர்கள் இப்படி ஆவார்களா ?

  • தொடங்கியவர்

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு. 290

களவு செய்வார்க்கு உயிர் வாழ்வதும் அரிதாய் விடும் களவு செய்யாதவர்க்கு தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது

எனது கருத்து :

களவெடுக்கிறவனை மற்றவை மதிக்கிறது மாதிரி வெளியில தெரிஞ்சாலும் அவன்ரை உயிரே மதிக்காது . களவே எடுக்காதவனை உலகமே கொண்டாடும் .

The fraudful forfeit life and being here below;

Who fraud eschew the bliss of heavenly beings know.

Le corps des habituels du vol périt; le monde des dieux ne manque pas à ceux qui ne volent pas.

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப் பால் ,[/size][size=5][size=5]துறவறவியல்[/size] , வாய்மை . ( [/size] [size=5]Veracity , La Véracité[/size] [size=5])[/size][size=5].[/size]

வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்

தீமை இலாத சொலல். 291

உண்மையென்று கூறப்படுவது எது என்றால், மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை தராத சொற்களைக் கூறுதலேயாகும்

எனது கருத்து:

மற்றவைக்கு ஒரெப்பனும் தீமை செயாத மாதிரி ஒரு சொல்லை சொல்லுறது தான் உண்மையான உண்மையாம் . இது இந்தக்காலத்தில நடக்கிற காரியமோ ?? மற்ற ஆக்களுக்கு தீமை வராத சொல்லை சொல்லிறது தான் உண்மையெண்டால் ஊமையாத்தான் இருக்கவேணும் .

You ask, in lips of men what 'truth' may be;

'Tis speech from every taint of evil free.

Qu’est ce que la véracité? C’est proférer des paroles qui ne puissent causer aucun mal.

  • தொடங்கியவர்

பொய்ம்மையும் வாய்மை யிடத்த; புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின். 292

பொய்மைச் சொற்களும் குற்றமற்ற நன்மையைப் பிறர்க்குத் தருமாயின்,வாய்மைச் சொற்கள் நல்வழி பெறும்

எனது கருத்து:

எனக்கு இதில உடன்பாடில்லை . ஒருகதைக்கு ஆளாளுக்கு தான் சொல்லுற பொய்யால நன்மை வரும் எண்டு பொய்சொல்ல வெளிக்கிட்டால் என்ன செய்யிறது??

Falsehood may take the place of truthful word,

If blessing, free from fault, it can afford.

S’il a pour effet de causer du bien sans le moindre mal, le vaut mensonge la vertu.

  • தொடங்கியவர்

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293

ஒருவன் தன்மனம் அறிந்த ஒன்றை பிறர் அறியார் என மறைத்து பொய் கூறுதல் கூடாது . அங்கனம் பொய் கூறுவாயின் அவன் மனமே அக்குற்றத்திற்குச் சாட்சியாய் இருந்து அவனை வருத்தும்.

எனது கருத்து:

இதெல்லாம் நடக்கிற காரியமாய் எனக்குத் தெரியேலை . நாக்கு கூசாமல் பொய் சொல்லுறவைக்குத் தான் இப்ப காலம் கண்டியளோ . ஆரும் தெரிஞ்சும் தெரியாமல் உண்மையை சொல்லி சீவிச்சால் , அவன் எடுக்கிற பட்ம் ஒண்டில் துரோகி இல்லாட்டி வாழத்தெரியாத சேமணைப்பயல் எண்டு சொல்லுவினம் .

Speak not a word which false thy own heart knows

Self-kindled fire within the false one's spirit glows.

Ne dites jamais un mensonge que votre conscience sait être un mensonge, car lorsque vous avez menti, votre conscience se constitue témoin de votre mensonge et vous fait souffrir.

  • தொடங்கியவர்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன். 294

ஒருவன் தன் மனதுக்கு நீதியாய் பொய் பேசாமல் ஒழுகுவானாயின், அவன் உலகில் வாழும் எல்லோராலும் நல்லவன் என்று போற்றப்படுவான்.

எனது கருத்து:

இண்டையான் திகதியில ஆர் பொய்புரட்டு சொல்லி சீவிக்கினமோ அவையளைத்தான் சனம் தூக்கி பிடிக்குது . ஆனானப்பட்ட தருமரே பொய் பேசாதவர் . ஆனால் அவரே ஒருக்கா சண்டையில " ஒழிந்தான் அசுவத்தாமன் " எண்டு சொல்லித்தான் தன்ரை குரு துரோணரை அவர் அசந்த நேரம் பாத்து போட்டுத் தள்ளினவர் . ஆனால் சனம் என்ன சொல்லுது தருமர் பொய்யே பேசாதவர் எண்டு .

True to his inmost soul who lives,- enshrined

He lives in souls of all mankind.

Celui qui se conduit sans mentir selon sa conscience,

vit dans le cœur de tous les hommes.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை. 295

ஒருவன் மனத்தோடு பொருந்தி , உண்மையயே பேசுவானாயின் தவமும் தானமும் ஒருங்கே செய்பவர்களைக் காட்டிலும் சிறந்தவனாவான்.

எனது கருத்து:

ஆராவது மனசார மனச்சாட்சிப்படி உள்ளதை உள்ளபடி கதைச்சு சீவியம் நடத்திச்சினம் எண்டால் அவை தானதருமஞ் செய்யிறவையை விடவும் தவசீலர்களை விடவும் மேலானவை எண்டு ஐயன் சொன்னாலும் , நான் இப்பிடிபட்ட ஆக்களை காணேலை .

Greater is he who speaks the truth with full consenting mind. Than men whose lives have penitence and charity combined.

Celui qui dit la vérité selon sa conscience est le premier d’entre ceux qui joignent la charité à la pénitence.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எய்யாமை

எல்லா அறமும் தரும். 296

பொய்யாமை போலப் பெகழ் தருவது வேறு இல்லை அதில் தளராமல் உறுதியாய் இருப்பது ,ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.

எனது கருத்து:

பொய் சொல்லாமல் இருக்கிறது நல்ல விசயம்தான் . அப்பிடி இருக்கிறதே அவனை புகழ் எண்ட உச்சாணிக்கொம்பிலை கொண்டுபோய் ஏத்திவிடும் . அவைனை அறியாமலே எல்லா புண்ணியங்களையும் அவனுக்கு சேத்துவிடும் . ஆனால் , இப்பிடி எல்லாத்துக்கும் உதாரணமாய் இருந்த தருமனே பொய் சொல்லிப்போட்டார் . அவருக்கு முன்னால நாங்கள் நாங்கள் எந்தளவுக்கு சரியாய் இருப்பம் ??

No praise like that of words from falsehood free;

This every virtue yields spontaneously.

L n’y a pas de gloire égale à ne pas mentir. Ceci donne toutes les vertus, sans qu’on ait besoin de mortifier le corps.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று. 297

பொய் கூறாமை என்னும் நன்மையையே ஒருவன் இடைவிடாமல் செய்து வருவானாயின் அவன் வேறு அறங்களைச் செய்ய வேண்டாம்.

எனது கருத்து:

நீங்கள் உங்கடை வாழ்க்கையில ஒண்டும் வெட்டி கிழிக்க வேண்டாம் . பொய் சொல்லாமல் இருந்தாலே வேறை ஒண்டும் செய்யத்தேவையில்லை . இந்த பொய் சொல்லுறதாலைதான் ஒருத்தனுக்கு வில்லங்கமும் பிடரியில வந்து ஒட்டிக்கொண்டிருக்கிது எண்டிறது என்ரை அபிப்பிராயம் .

If all your life be utter truth, the truth alone,

'Tis well, though other virtuous acts be left undone.

Si l’on a la maîtriser de ne pas mentir, il est bon de ne pas pratiquer, de ne pas pratiquer les autres vertus.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

புறந்தூய்மை நீரால் அமையும்; அகம்தூய்மை

வாய்மையால் காணப் படும். 298

உடலின் புறத் தோல் நீரால் தூய்மை அடைகின்றது. அதேபோல அகத்தேயுள்ள மனம் வாய்மையால் தூய்மை அடைகின்றது.

எனது கருத்து:

நல்லாய் சவுக்காரம் போட்டு தேச்சு ஒரு நாளைக்கு ஒருதரமாவது குளிக்கிறம் , உடம்பிலை இருக்கிற ஊத்தை போறதுக்கு . ( சிலது குளிக்காமலே இருக்கிறது வேறை விசையம் ) . ஆனால் மனசிலை இருக்கிற ஊத்தையை உரஞ்சி கழுவ பொய்யே பேசாத உண்மை எண்ட சவுக்காரம் தேள்வை கண்டியளோ . ஆனால் இந்த சவுக்காரம் அவுட் ஒஃப் ஓடறாய் போய் கனகாலமாய் போச்சு பாருங்கோ .

Outward purity the water will bestow;

Inward purity from truth alone will flow.

La purete du corps s’obtient par l’eau,

la pureté du cœur se forme par la véracité.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

எல்லா விளக்கும் விளக்குஅல்ல; சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு. 299

அறிவு ஒழுக்கம் நிறைந்த பெரியவர்களுக்குப் புற இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; பொய் கூறாமல் உண்மை பேசுதலாகிய விளக்கே சிறந்த விளக்காகும்.

எனது கருத்து:

சிலபேரை பாத்தியள் எண்டால் உலகத்தை கரைச்சு குடிச்சமாதிரி மற்றவைக்கு ஆலோசனையள் சொல்லுவினம் . சனமும் வாயைப் பிளந்து கொண்டு கேப்பினம் . ஆனால் கொஞ்சம் இவையளை வடிவாய் பாத்தால் தொட்டதுக்கெல்லாம் பொய் பேசிற ஆக்களாய் இருப்பினம் . இப்பிடி நல்லா படிச்ச பொய் பேசிற ஆக்கள் உண்மையில அறப் படிச்ச பல்லியள் . இவையள் பொய் பேசிறதாலை இவைளின்ரை படிப்புகள் , அந்தஸ்த்துகள் எல்லாம் என்னைப் பொறுத்தவரையிலை வீண் . படிச்சாக்கள் ஒருக்காலும் பொய் கதைக்கக் கூடாது .

Every lamp is not a lamp in wise men's sight;

That's the lamp with truth's pure radiance bright.

Toute lumière qui chasse l’obscurité n’est pas lumière; pour les vertueux, est la seule lumière, la vérité qui jugule l’obscurité du coeur.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்

வாய்மையின் நல்ல பிற. 300

வாய்மையைவிட எந்த வகையாலும் சிறந்த வேறு ஒரு பொருளைக் காணமுடியாது .

எனது கருத்து:

உலகத்தில ஒருத்தன் எப்பிடிபட்ட நிலமையில இருந்தாலும் பொய் பேசாமல் இருக்கிறதைப் போல ஒரு மேலான தகுதி வேறை ஒண்டும் இல்லை எண்டது என்ரை அபிப்பிராயம் .

Of all good things we've scanned with studious care,

There's nought that can with truthfulness compare.

D’après mes investigations personnelles, il n’y a rien de plus grand que la vérité.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5] அறத்துப்பால். துறவறவியல் வெகுளாமை ( The not being Angry , Ne pas s’emporter ) .[/size]

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்.301

மெலியார் இடத்து சினம் வராமல் காப்பவனே அருள் காப்பவன் . பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

எனது கருத்து:

ஒருத்தனை விட குறைஞ்ச தகுதி தராதரத்தில இருக்கிறவையிட்டை கோபப் படமால் இருக்கிறவன் தான் கண்டியளோ உண்மையில கோபத்தை அடக்கிறவன் . பருப்பு அவியாத இடத்தில் கோபப்பட்டாலும் ஒண்டுதான் கோபப்படாட்டிலும் ஒண்டுதான் .

Where thou hast power thy angry will to work, thy wrath restrain;Where power is none, what matter if thou check or give it rein?

Se garder de la colère, là où elle peut produire effet est méritoire. Qu’importe de prendre ou de perde patience, là où la colère doit échouer?

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

செல்லா இடத்துச் சினந்தீது செல்இடத்தும்

இல்அதனின் தீய பிற.302

வலியாரிடத்தில் சினம் கொள்வது தீமையில் முடியும் . மெலியவரிடத்தில் சினம் கொள்வது இம்மையில் பழியும் மறுமையில் பாவமும் பயக்கும் .

எனது கருத்து:

உங்கடை பருப்பு அவியாத இடத்திலை உங்கடை கோபத்தை காட்டினியள் எண்டால் சேதாரம் உங்களுக்குத்தான் . உதாரணம் சதாமும் ஜோர்ஜ் புஷ் . அதேமாதிரி அவியிற இடத்திலை உங்கடை கோபத்தை காட்டினியள் எண்டால் அதாலை வாற பாவம் பழி சொல்லி மாளேலாது . உதாரணம் சதாம் குவைத்தை பிடிச்சது .

Where power is none to wreak thy wrath, wrath importent is ill;Where thou hast power thy will to work, 'tis greater, evil still.

Là où la colère doit échouer (contre les puissants), s’emporter c’est se faire du mal; là où elle peut produire effet (contre les faibles), il n’est pas de mal pire que la colère.

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.