Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் வாழ்வியல் கருவூலம்

Featured Replies

  • தொடங்கியவர்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவுடையோர், உயிர் வழிவந்த உடலை ஒருபோதும் உண்ணமாட்டார்கள் .

எனது கருத்து:

உங்கடை உடம்பிலை வெட்டுக்காயம் வரேக்கை இல்லாத கடவுளையெல்லாம் கூப்பிட்டு வலியில கத்திறியள் . அதே மாதிரித்தான் வய்பேசாத சீவனுகளை உங்கடை சாப்பிட்டுக்காக வெட்டேக்கை என்ன பாடுபடுங்கள் ??ஒழுங்கான படிச்ச பண்பான ஆக்கள் ஒருக்காலும் இந்த வேலையளைச் செய்து இறைச்சியை சாப்பிடமாட்டினம் .

Whose souls the vision pure and passionless perceive,

Eat not the bodies men of life bereave.

Les sages qui se sont délivrés de l’Illusion et de l’Ignorance ne mangent pas la viande, d’où s’est échappée la vie d’un être.

  • Replies 336
  • Views 26.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று.259

பலவேள்விகளைச் செய்வதால் கிடைக்கும் பலனை விட, புலால் உண்ணுதலைக் கைவிடுவதால் வரும் பலன் மிகவும்உயர்ந்ததாகும் .

எனது கருத்து:

ஆயிரம் அறுபத்தெட்டு வேள்வியள் செய்து சாமியைக் கும்பிடுறதை விட , ஒரு உயிரைக் கொண்டு அதின்ரை இறைச்சியை சாப்பிடாமல் இருக்கிறதே திறமான விசையம் கண்டியளோ .

Than thousand rich oblations, with libations rare,

Better the flesh of slaughtered beings not to share.

Ne pas manger la chair d’un être dont on a enlevé la vie vaut mieux que faire mille sacrifices en ‘répandant du beurre clarifié sur le feu.

  • தொடங்கியவர்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.260

கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

எனது கருத்து:

ஐயன் அந்தக்காலத்தில இருந்த நிலமையில சரியாத்தான் சொல்லியிருக்கிறார் . ஆனால் இண்டைக்கு நிலைமை அப்பிடியே கிடக்கு ?? எத்தின சாமிமார் ? அவையின்ரை வண்டவாளங்களெல்லாம் ஒவ்வண்டாய் வருகிது . இவையளும் தாங்கள் தான் கடவுளின்ர அவதாரம் எண்டெல்லாம் புலுடா விடுகியினம் . இவையளையும் இந்த உயிருகள் எல்லாம் கை எடுத்து கும்பிடுதா எண்டு ஒரு கேள்வி எனுக்குள்ள வருகிது .

Who slays nought,- flesh rejects- his feet before

All living things with clasped hands adore.

Tout être animé vénère, les mains jointes,

celui qui ne tue pas et qui a renoncé à la chair.

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் , துறவறவியல் ( தவம் , Penance ,La penitence ).[/size]

உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு. 261

தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், மற்ற உயிருக்கு துன்பம் செய்யாதிருத்தலும், ஆகிய இவையே தவத்திற்கு இலக்கணமாகும் .

எனது கருத்து:

ஒருத்தர் தனக்கு வாற எந்தக்கஸ்ரத்தையும் தாங்கித்தரிக்கிற குணமும் , முக்கியமாய் மற்றவனுக்கு இடைஞ்சல் செய்யாமல் இருக்கிறது தான் உண்மையான தவம் எண்டு ஐய்யன் சொன்னாலும் , ஒருத்தன் எவ்வளவு தூரத்துக்கு துன்பத்தை தாங்கலாம் எண்டதையும் சொன்னால் நல்லாயிருக்கும் .

To bear due penitential pains, while no offence

He causes others, is the type of 'penitence'.

Le propre de la pénitence, c’est de supporter ses propres douleurs et de ne pas faire souffrir un autre être doué de vie.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

தவமும் தவமுடையார்க்கு ஆகும்; அவம் அதனை

அஃதுஇலார் மேற்கொள் வது. 262

தவநெறிக்கு ஏற்ற வாய்ப்பு உடையவர்க்கே தவமும் கை கூடும் . தவப்பயன் இல்லாதவர்கள் அதனை மேற்கொள்வது வீண் முயற்சியாகும் .

எனது கருத்து:

மனம் ஒரு குரங்கு பாருங்கோ . அதை கட்டுக்குள்ளை கொண்டுவந்து , எதிலையும் இரும்பு மாதிரி உறுதியா இருக்கிறவைக்குத்தானாம் தவத்தின்றை பெருமை கிடைக்கும் . இதுகளை செய்யமுடியாதவை தவமே செய்யத்தேவையில்லை எண்டு இப்பத்தையான் சாமிமாரை நினைச்சு அப்பவே ஐயன் சொன்னாரோ தெரியாது .

To 'penitents' sincere avails their 'penitence';

Where that is not, 'tis but a vain pretence.

La pénitence profite à ceux qui l’ont faite (dans les existenses antérieures) et ne réside réellement qu’en eux; l’entreprendre pour la première fois, est un effort inutile.

  • தொடங்கியவர்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி , மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம். 263

சிறந்த தவசிகளுக்கு உணவு அளித்து உதவுவதற்காக இல்லறத்தார்கள் துறவு நெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்

எனது கருத்து:

துறவியளுக்கு உதவி செய்யிறம் எண்டதுக்காக நாங்கள் செய்யவேண்டிய தவ ஒழுக்கத்தை ஒருக்காலும் மறக்க்க் கூடாது எண்டு ஐயன் சொல்லியிருக்கிறார் . ஆனால் இப்ப எங்கடை மதுரை ஆதினம் நித்தியானந்தாக்கு உதவி செய்யிறன் பேர்வளி எண்டு கோமாளிக் கூத்தாடி ஆப்பு இழுத்த குரங்காய் அல்லோ நிக்கிறார் .

Have other men forgotten 'penitence' who strive

To earn for penitents the things by which they live?

Les autres (qui mènent la vie familiale), dans le désir de donner à ceux qui ont renoncé au monde: nourriture, médicaments et hospitalité, semblent avoir oublié de faire eux-mêmes pénitence !

  • தொடங்கியவர்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும். 264

தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவவலிமையினால் கைகூடும்.

எனது கருத்து:

நெஞ்ஞில தில்லும் ஒழுக்கமான ஆக்களாய் இருந்தால் நினைச்ச மாத்திரத்தில எதிரியளை வீழத்தவும் , நட்புகளை காக்கலாம் எண்டு சொன்னால் , இப்பவும் சரி அப்பவும் சரி ஏன் சண்டையில ஆயுதங்கள் வந்தது ??

Destruction to his foes, to friends increase of joy.

The 'penitent' can cause, if this his thoughts employ.

Si les pénitents désirent ruiner leurs ennemies et enrichir leurs amis, ils réalisent leur désir, par la puissance de leur pénitence.

  • தொடங்கியவர்

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால், செய்தவம்

ஈண்டு முயலப் படும். 265

தவத்தினால் வேண்டிய பயன்களை வேண்டியவாறே அடைய முடியுமாகையால் செய்வதற்குரிய தவத்தை செய்ய இல்லறத்தானும் முன் வரலாம்

எனது கருத்து:

தான் நினச்சதை தவத்தால செய்யமுடியும் எண்டதால இல்லறத்தில இருக்கிற ஆக்களும் தவம்செய்ய முன்னுக்குவரவேணும் எண்டு ஐயன் சொல்லுறார் .சரி.... ஒருகதைக்கு ஒருத்தன் தான் நினைச்சதை தவத்தாலை செய்யலாம் எண்டால் , உலகம் பிக்கல்பிடுங்கல் இல்லாமல் சந்தோசமாய் எல்லோ இருக்கவேணும் ?? ஏன் இப்பிடி நாறிப்போய் கிடக்கு ??

That what they wish may, as they wish, be won,

By men on earth are works of painful 'penance' done.

Parce que, si l’on s’y efforce, l’on obtient tous les mérites que l’on désire pour l’autre monde, on doit s’efforcer de faire pénitence, dans ce monde même.

  • தொடங்கியவர்

தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றுஅல்லார்

அவம்செய்வார் ஆசையுள் பட்டு. 266

தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையை செய்கின்றவர் ஆவார் . மற்றையோர் ஆசைகளுக்கு உட்பட்டு வீண்முயற்சி செய்பவர் ஆவார் .

எனது கருத்து:

மனசை அடக்கினவன் உலகத்தை ஆளுவான் எண்டு பெரிசுகள் சொல்லுவினம் . இதுக்கு மாறா நடக்கிறவை தேவையில்லாத வேலையள் பாத்து தங்கடை சீவியத்தை முடிப்பினம் .

Who works of 'penance' do, their end attain,

Others in passion's net enshared, toil but in vain.

Ceux qui font pénitence font leur devoir; les autres se laissent prendre dans le piège des désires et font leur propre malheur.

  • தொடங்கியவர்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவர்களைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும் .

எனது கருத்து:

இதுக்கு எங்களைத்தான் சொல்லவேணும் . எங்கட இனம் விடுதலையாகவேணும் எண்ட ஒரு லட்சியத்துக்காக ஒரு போராட்டத்தை தொடங்கினம் . எங்கடை சனங்களை போலையோ எங்கடை போராளியளைப் போலையோ ஆரும் துனபத்தை அனுபவிச்சிருக்க மாட்டினம் . இண்டைக்கும் எங்கடை நோக்கம் சுட்ட பொன் மாதிரி மினுங்க காரணமே நாங்கள் அனுபவிச்ச துன்பங்களும் வேதனையளும்தான் .

The hotter glows the fining fire, the gold the brighter shines;

The pain of penitence, like fire, the soul of man refines.

Plus la flamme du feu est violente, plus brillant devient l’éclat de l’or qui y est fondu. De même, plus aigues sont les souffrances causées par les austérités, plus brillante devient la sagesse des pénitents.

  • தொடங்கியவர்

தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்உயிர் எல்லாம் தொழும். 268

தவ வலிமையினால் " தான் "என்னும் பற்று நீங்கப் பெற்றவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும் .

எனது கருத்து:

எவன் ஒருத்தன் தன்ரை உயிரிலை பாசம் வைக்காமலும் நான் எண்ட மண்டைக்கனம் கூடாமலும் இருக்கிறானோ , அவனை உலமே கையெடுத்து கும்பிடும் . அப்பிடி பாத்தால் இண்டைக்கு ஒருத்தரையும் சொல்லேலாது .

Who gains himself in utter self-control,

Him worships every other living soul.

Tous les autres êtres vénèrent celui qui a réussi à faire de sa vie, son propre bien, grâce à sa pénitence.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கருத்து:

எவன் ஒருத்தன் தன்ரை உயிரிலை பாசம் வைக்காமலும் நான் எண்ட மண்டைக்கனம் கூடாமலும் இருக்கிறானோ , அவனை உலமே கையெடுத்து கும்பிடும் . அப்பிடி பாத்தால் இண்டைக்கு ஒருத்தரையும் சொல்லேலாது .

பொறுங்கோ நாளைய வரலாறு என்னைச்சொல்லும். :lol: :lol: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_idea:

[size=3](திரிக்கு இடைஞ்சலா இருந்தால் வேறு இடத்தில் போடுங்கோ)[/size]

  • தொடங்கியவர்

பொறுங்கோ நாளைய வரலாறு என்னைச்சொல்லும். :lol: :lol: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_idea:

(திரிக்கு இடைஞ்சலா இருந்தால் வேறு இடத்தில் போடுங்கோ)

பெரிசா இடைஞ்சல் இல்லை :):D . இனி ஏதாவது கருத்துகள் போடுறது எண்டால் இந்த லிங்கில வந்து போடுங்கோ :D . உங்கடை கருத்துகளுக்கு நன்றியள் :D .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96396

  • தொடங்கியவர்

கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. 269

தவத்தின் மூலமாக ஆத்ம வலிமை பெற்றவர்களுக்கு யமனை வெல்லுதலும் கைகூடும் .

எனது கருத்து:

உண்மை!!!!!!!! சத்தியமான சொல்லு ........ தமிழருக்கு , அதுவும் இலங்கையில எவ்வளவோ துன்பங்கள் துயரங்கள் , இனி வாழ்க்கையில இழக்கிறதுக்கு ஒண்டுமே இல்லை எண்ட நிலமையில ஒருத்தர் தமிழர் படைக்கு தாங்கினார் . எவ்வளவுபேர் ஆட்டி பாத்தினம் ?? போக்கிலியள் மாதிரி கிட்டமுட்ட 25 பேருக்கு கிட்ட ரவுண்டப் பண்ணிச்சினம் . கடைசிவரைக்கும் அவர் கொண்ட கொள்கையில மாறாமல் நிண்ட படியாலதான் உலகத்தில இருக்கிற தமிழ் சனங்களின்ரை மனசில சாவையும் வெண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

E'en over death the victory he may gain, If power by penance won his soul obtain.

Celui qui excelle dans la puissance, qui provient de la pénitence peut même réussir à triompher de Y aman (dieu de la mort).

  • தொடங்கியவர்

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர். 270

உலகில் ஆற்றல் இல்லாதவர்கள் பலராக இருக்கக் காரணம் யாதெனில் தவம் செய்பவர் சிலராகவும் , தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பது தான் .

எனது கருத்து:

பொறுத்தார் பூமியாழ்வார் எண்டு சொல்லுவினம் . ஆனா ஒருத்தரும் பூமி ஆளேலை . ஏன் எண்டால் சனத்திட்டை பொறுமை குறைஞ்சாக்கள் கூடவாயும் பொறுமை கூடினாக்கள் குறைவாயும் இருந்தால் எப்பிடியுங்கோ பூமியாழ்வினம் ???

The many all things lack! The cause is plain,

The 'penitents' are few. The many shun such pain.

La cause de l’augmentation du nombre des nécéssiteux est le petit nombre de ceux qui font pénitence et le grand nombre des non pénitents.

  • தொடங்கியவர்

[size=5]அறத்துப்பால் , துறவறவியல் ( கூடா ஒழுக்கம் , Inconsistent Conduct , Bonne conduite (De la conduite qu’on de doit pas tenir) .[/size]

வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும். 271

வஞ்சகனுடைய தீயொழுகத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்சபூதங்களும் தமக்குள் ஏளனமாய் சிரிக்கும் .

எனது கருத்து :

ஊரை அடிச்சு உலையிலபோடுறவை அந்த நேரத்திலை நினைக்கலாம் தாங்கள் வெண்டிட்டினம் எண்டு ஆனால் எண்டைக்காவது ஒருநாள் அவையின்ர உடம்பு பஞ்சபூதங்கள் அவையைப் பாத்து சிரிக்கும் .

Who with deceitful mind in false way walks of covert sin,The five-fold elements his frame compose, decide within.

Les cinq sens se rient interieurement de la feinte moralité de l’hypocrite.

  • தொடங்கியவர்

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்

தான்அறி குற்றம் படின். 272

தன் நெஞ்சம் தான் அறிந்து செய்யும் குற்றத்தில் ஈடுபடுமானால் வானளாவிய அவனது தவத் தோற்றம் என்ன செய்யும் ?

எனது கருத்து :

தனக்கு பிழை எண்டு தெரிஞ்சும் ஒருத்தர் பிழை விடுகிறார் எண்டால் அவர் எப்பிடியான தவக்கோலங்கள் போட்டும் வேலையள் இல்லை .

What gain, though virtue's semblance high as heaven his fame exalt,If heart dies down through sense of self-detected fault?

De quelle utilité est l’apparence de pénitent sublime comme le ciel, à celui qui conscient de ses péchés, y persiste.

  • தொடங்கியவர்

வலிஇல் நிலைமையான் வல் உருவம், பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந்து அற்று.273

மனக்கட்டுப்பாடு என்னும் வலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம் பசு புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு பயிரை மேய்ந்தாற் போன்றதாகும் .

எனது கருத்து :

இதுக்கு எங்கடை இந்தியாவை சொல்லலாம் . ஆன்மீகம் , இந்துமதக்கலாச்சாரத்தை கட்டயாழுகிறம் எண்டெல்லாம் சொல்லி ,ஒரு இனத்தையே வேரோடை அழிச்ச வேலை .அதாவது பசுத்தோல் போத்தின புலி .

As if a steer should graze wrapped round with tiger's skin,Is show of virtuous might when weakness lurks within.

Sans avoir le pouvoir de maitriser sa volonté, celui qui adopte l’apparence des pénitences (qui ont ce pouvoir) ressemble à la vache qui broute les cultures, recouverte d’une peau de tigre (pour n’être pas chassée par les cultivateurs).

  • தொடங்கியவர்

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் துஅற்று. 274

தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாதவற்றை செய்ய விரும்புதல் வேடன் புதரில் மறைந்து பறவைகளைப் பிடிப்பதற்குச் சமமாகும் .

எனது கருத்து :

ஆனானப்பட்ட இந்திரனே கள்ளப்பூனைபோலை கௌசிகமுனிவற்ற வேசம் போட்டுத்தான் அகலிகையை தன்ரைபக்கம் எடுத்தவன் எண்டால் பாருங்கோ . இது எப்பிடி எண்டால் இந்தியாவும் அவையின்ரை கூட்டாளியளும் புலி பிடிச்ச கதையைப்போலை கிடக்கு .

'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.When, clad in stern ascetic garb, one secret evil works.

Commettre les actes non péniteuts, sous le masque de l’habit du pénitent est pareil à l’agissement de l’oiseleur qui prend les oiseaux,

caché dans les brouissailles.

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று

ஏதம் பலவும் தரும். 275

'பற்றுக்களைத் துறந்தோம் ' என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பத்தையே உண்டாக்கும் .

எனது கருத்து :

இதுக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதியை உதாரணமாய் எடுக்கலாம் . ஒருகாலத்தில காஞ்சி சங்கர மடம் ஒரு புண்ணியமான , ஒழுக்கசீலர்களாக இந்துக்களின்ரை மனசில இருந்திது . சிறீ ஜெயேந்திர் எண்ட மடபீடாதிபதி செய்த வேலையளாலை ,அவர் எப்பிடி நொந்தார் ?? அந்த மதபீடம் என்ன பாடு பட்டிது ?? எண்டு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை .

'Our souls are free,' who say, yet practise evil secretly,'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.

La conduite cachée de ceux qui crient: ‘‘Nous sommes détachés de ce monde’’ leur cause maintes douleurs, de nature à leur faire crier:

‘‘Qu’avons-nous fait? Qu’avons nous fait?’’

  • தொடங்கியவர்

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல். 276

மனதில் பற்றுக்களைத் துறக்காமல் , துறந்தவர் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவரைப் போலக் கொடியவர் எவரும் இலர் .

எனது கருத்து :

மனசிலை எதையமே வைக்காமல் முகத்துக்கு நேராய் சண்டைபிடிக்கிறாக்கள் எவ்வளவோ திறம் . ஆனால் நெஞ்சுமுட்ட விசத்தைக்கொண்டு பல்லுக்காட்டிற ஆக்கள் இருக்கினமல்லோ ?? கெட்ட கிருமியள் . இவையள் தரவளியைத்தான் மறந்தும் கிட்டவும் அடுக்கக்கூடாது எண்டு ஐயன் சொல்லுறார் .

In mind renouncing nought, in speech renouncing every tie,Who guileful live,- no men are found than these of 'harder eye'.

Il n’y a pas de plus durs de coeur que ceux qui n’ont pas renoncé dans leur for intérieur et qui vivent, à l’instar des pénitents, en trompant les hommes charitables.

  • தொடங்கியவர்

புறங்குன்றி கண்டுஅனைய ரேனும் அகம்குன்றி

முக்கில் கரியார் உடைத்து. 277

புறத்தோற்றத்தில் குன்றிமணியின் செம்மையான நிறம்போல் தோற்றம் உடையவர் என்றாலும் , உள்ளத்தில் குன்றி மணியின் மூக்குப் போலச் கருத்திருப்பவர் உலகில் பலர் .

எனது கருத்து :

நீங்கள் சிலபேரை பாத்தியள் எண்டால் இந்தப்பூனையும் பால்குடிக்குமோ எண்ட கணக்காய் பக்கா ஜென்ரில்மன் ரைப்பில இருப்பினம் . ஆனால் , பழகிப் பாத்தியள் எண்டால் நாக்கிலையும் நெஞ்சிலையும் விசத்தை வைச்சிருப்பினம் . இப்பிடிப்பட்ட குண்டுமணி ஆக்களின்ரை தொகை இப்ப கூடிக்கொண்டே போகுது .

Outward, they shine as 'kunri' berry's scarlet bright;

Inward, like tip of 'kunri' bead, as black as night.

Le monde a des hommes qui, ont un brillant dehors, comme la graine à reglisse, mais dont le cœur est noir comme le bec de la graine à reglisse.

  • தொடங்கியவர்

மனத்தது மாசாக மாண்டார் நீ ர்ஆடி

மறைந்துஒழுகும் மாந்தர் பலர். 278

மனதில் மாசு இருக்கத் , தவத்தால் மாண்பு பெற்றவரப் போல் நீராடி மறைவாக வாழ்கை நடத்தும் வஞ்சனையாளர் பலர் உள்ளனர் .

எனது கருத்து :

இந்தக்காலத்தில ஆக்களை மட்டுக்கட்டுறதே பெரிய கஸ்ரம் .ஆரைப்பாத்தாலும் வெளியால நடைஉடைபாவனையில வெள்ளையாத் தான் இருப்பினம் . ஆனால் மனம் முட்ட நஞ்சு . இவையள் கூட இருந்தால் கலி முத்தீட்டுது எண்டு அர்த்தம் .

Many wash in hollowed waters, living lives of hidden shame;Foul in heart, yet high upraised of men in virtuous fame.

Nombreux sont ceux qui ont le coeur impur mais qui lavent seulement leur corps; comme ceux qui ont acquis les réputations de pénitents et qui vivent sous un faux dehors.

  • தொடங்கியவர்

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் குஅன்ன

வினைபடு பாலால் கொளல். 279

நேராகத் தோன்றினாலும் அம்பு கொடியது ; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு இன்னிசை தரக்கூடியது ; ஆகவே , மக்களின் பண்புகளை செயல்வகையில் அறியவேண்டும் .

எனது கருத்து :

ஒருத்தரையும் வெளித்தோற்றத்தை வைச்சு மட்டுக்கட்டக்கூடாது . சிலபேரைப் பாத்தியள் எண்டால் எதையும் நேரை கதைக்கிறம் எண்டபேர்வழியிலை , மற்றவனை சொல்லாலை கொல்லுறதுதான் வேலை ,நேரான அம்பு மாதிரி . இன்னும் சிலபேரைப் பாத்தியள் எண்டால் அவையோட எந்தநேரமும் கதைச்சுக் கொண்டிருக்கவேணும் போலை கிடக்கும் . அவையின்ரை கதை தேனிலை குழைச்ச பிலாப்பழம் மாதிரி இருக்கும் . அவை வழைஞ்ச யாழ் மாதிரி இருந்தாலும் இனிமையாய் இருந்து மற்றவனை கொல்லாமல் இருப்பினம் . இந்த ரெண்டு வகையான பார்ட்டியளை அம்புக்கும் யாழுக்கும் ஐயன் உதாரணம் காட்டி அவயளின்ரை செயலைப் பாத்து பழகுங்கோ எண்டு சொல்லுறார் .

Cruel is the arrow straight, the crooked lute is sweet,Judge by their deeds the many forms of men you meet.

La flèche est cruelle (bien que droite), le luth est doux bien que courbe. Il faut donne juger les pénitents d’après leurs œuvres.

  • தொடங்கியவர்

மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்

பழித்தது ஒழித்து விடின். 280

உலகம் பழிக்கும் தீய செயல்களை விட்டுவிட்டால் , மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம் .

எனது கருத்து :

இந்தக் குறளைப் பாத்த உடனை எனக்கு பிறேமானந்தா , ஜெயேந்திரர் ஆக்கள்தான் ஞாபகத்தில் வருகினம் . இவையளைப்பாத்தால் முற்றும் துறந்த துறவியிளைப்போலை இருப்பினம் . ஆனால் செய்தது முழுக்கசுத்துமாத்தும் ,மொள்ளமாரி வேலையளும் . மனசிலை ஊத்தையளை வைச்சுக்கொண்டு வெளியில வேசம்போடுறது , உலகத்தை ஏமாத்திற வேலை கண்டியளோ .

What's the worth of shaven head or tresses long,

If you shun what all the world condemns as wrong?

Il n’est pas nécessaire d’avoir la tête rasée ou de laisser croitre les cheveux, si l’on s’abstient de ce que le monde condamne.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.