Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேர்வின் சில்வாவிற்கு எதிராக கோதாபய சுவரொட்டிப் பிரசாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Merivin_Gothapaya.jpg

களனி நகர சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக அந்தத் தொகுதியில் சுவரொட்டி பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமையவே இந்த சுவரொட்டிப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கப்பம் பெற்றக் குற்றச்சாட்டின் பேரில் ”காணாமல் போனோர்” பட்டியலிலுள்ள களணி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது உயிரை பாதுகாத்துத் தருமாறு கோரி, பாதுகாப்புச் செயலாளரிடம் மண்டியிட்டுள்ளனர். இதன்போது அமைச்சர் மேர்வின் சில்வாவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட கப்பம் பெறுதல், ஊழல், மோசடி குறித்த பல சம்பவங்களை பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்த ராகம லொகு சிய்யா என்ற நபரை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்பாளரான அமல் என்ற நபர் கடத்தப்பட்டச் சம்பவத்தை அமைச்சர் கண்டுகொள்ளாத சம்பவம் அவரது சகாக்களை அதிருப்தியடையவைத்துள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட அமல் என்ற நபர், அமைச்சர் மேர்வின் சில்வாவின் கப்பம் பெறுதல், ஊழல் மோசடிகள் குறித்த பல தகவல்களை பாதுகாப்புச் செயலாளரின் ”வெள்ளை வேன்” பிரிவினரிடம் வெளியிட்டிருந்தார்.

அமல் என்ற நபர் ஏராளமான தகவல்களை வழங்கியதால் அவர் விடுவிக்கப்பட்டதுடன், அண்மைக் காலமாக களனி பிரதேச சபை உறுப்பினர்களை வெள்ளை வேன் பிரிவினர் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.

நிலைமைய சுதாரித்துக் கொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலினால் பாதுகாப்புச் செயலாளரிடம் மண்டியிட்டுள்ளனர். இதன்போதே களனி பிரதேசத்தில் அமைச்சர் மேற்கொள்ளும் ஊழல், மோசடிகள் குறித்த இரகசியங்களை பாதுகாப்புச் செயலாளரிடம் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் மேர்வின் சில்வாவையும், களனி பிரதேச சபைத் தலைவரையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அலரி மாளிகைக்கு வருமாறு நேற்று (04) அழைப்பு அனுப்பியுள்ளார்.

http://www.tamilthai...newsite/?p=2869

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.